சனி, 13 டிசம்பர், 2014

கடலூர் மாவட்ட FORUM முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!

12.12.2014 அன்று மாலை, கடலூர் FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS கூட்டம் BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில்  நடைபெற்றது. FORUM தலைவர் தோழர் R.ஸ்ரீதர் தலைமையேற்றார்.கன்வீனர் தோழர் K.T.சம்பந்தம் FORUM விடுத்துள்ள அறைகூவலின்படி கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கோரிக்கைதின ஆர்ப்பாட்டங்கள் பற்றியும் அடுத்து நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு இயக்கங்கள் குறித்தும் மேலும் மாநில அளவிலான கருத்தரங்கம் கடலூரில் நடத்துவது சம்பந்தமாகவும் தனது கருத்துக்களை  FORUM சார்பாக  முன்வைத்தார். இதில் பங்கேற்ற SNEA(I) மாவட்ட செயலர் தோழர் C.பாண்டுரங்கன், AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் P.வெங்கடேசன், தோழர்கள் பால்கி, R.அசோகன்  SNEA(I), A.அண்ணாமலை S.பரதன்,E பாலு  BSNLEU V.முத்துவேல், R.பன்னீர்செல்வம் NFTE ஆகியோர் தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை சிறப்பாக எடுத்துரைத்தனர். இறுதியாக  பின்வரும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் சந்திப்பு இயக்கங்களை டிசம்பர் 20 -ல் கடலூரில் துவங்கி ஜனவரி இறுதிக்குள் முடிப்பது 

அனைத்து தொழிற்சங்கங்கள்,மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தக அமைப்புகள்,பொதுநல அமைப்புகளிடம் ஆதரவு கேட்டு FORUM சார்பாக கடிதங்கள் கொடுப்பது.

பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி கடலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு இயக்கங்களின் விபரங்கள் மற்றும் நோக்கங்கள் பற்றி செய்தி வெளியிட வேண்டுகோள் விடுப்பது.

மாநில அளவிலான கருத்தரங்கத்தை கடலூரில் மிகுந்த எழுச்சியோடு மாநில FORUM இறுதி செய்யும் நாளில்    நடத்துவது.

11 மையங்களில் மக்கள் சந்திப்பு இயக்கங்களை மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றஉறுப்பினர்கள்,நகர்மன்றதலைவர்களை அழைத்து கையெழுத்து இயக்கத்தை துவக்குவது.

11 மையங்களுக்கும்   FORUM சார்பாக கன்வீனர்கள்களும், மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவதற்கான  கால அட்டவணையும் பின்வருமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வுசெய்யப்பட்ட கன்வீனர்கள்,  11 மையங்களிலும் வரும் 20.12.2014 க்குள் தலமட்டத்திலுள்ள   அனைத்து சங்க கிளை, மாவட்ட நிர்வாகிகளை பங்கேற்கச் செய்து FORUMகூட்டங்களை நடத்தவேண்டும்.

உத்தேச கால அட்டவணை  மற்றும் கன்வீனர்கள் 

கடலூர் :              20.12.2014                                  தோழர் P. வெங்கடேசன் 
பண்ருட்டி :               24.12.2014                                 தோழர் G. ரங்கராஜ் 
சிதம்பரம்                  26.12.2014                                 தோழர் V. கிருஷ்ணமூர்த்தி
விழுப்புரம்                30.12.2014                                தோழர் N.மேகநாதன் 
கள்ளக்குறிச்சி         06.01.2015                                  தோழர் N. பாலகிருஷ்ணன்
உளுந்தூர்பேட்டை  10.01.2015                                  தோழர் K.அன்பாயிரம் 
நெய்வேலி                 17.01.2015                                  தோழர் V. லோகநாதன் 
விருத்தாச்சலம்         20.01.2015                                தோழர் R. ராமலிங்கம் 
திருக்கோயிலூர்        27.01.2015                                 தோழர் R. ராஜேந்திரன் 
திண்டிவனம்               28.01.2015                                 தோழர் S. நடராஜன் 
செஞ்சி                          30.01.2015                                  தோழர் N. சுந்தரம்

மேற்கண்ட முடிவுகளை வெற்றிகரமாக்கிட இணைந்து பணியாற்றுமாறு அனைத்து தோழர்களையும் FORUM சார்பில்  வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
                                  தோழமையுள்ள  
             FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS                  கடலூர்மாவட்டம் 


                                     












வெள்ளி, 12 டிசம்பர், 2014

FORUM சார்பாக பிரதம மந்திரிக்கு சமர்பிக்க உள்ள கோரிக்கை மனு

 கோரிக்கை மனு  தமிழில்  படிக்க ,பதிவிறக்கம் செய்ய   :-Click Here
கோரிக்கை மனு   ஆங்கிலத்தில் படிக்க   :-Click Here

டெல்லி செய்திகள்

மத்திய சங்க செய்திகள் குறித்து தமிழ் மாநிலச்சங்கத்தின் சுற்றறிக்கை  படிக்க, பதிவிறக்கம் செய்ய :-Click Here

தோழர் K.G.போஸ் நினைவு நாள்- டிசம்ப்ர் 11

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

செவ்வாய், 9 டிசம்பர், 2014

டிசம்பர் 11நாடு தழுவிய கோரிக்கை நாள்

     மத்திய அரசே! BSNL நிர்வாகமே!!                                                    

  · காலியாக உள்ள இயக்குனர் காலியிடங்களை நிரப்பு 

· கோபுர பராமரிப்புக்காக துணை நிறுவனம் ஏற்படுத்தாதே..

· கிராமப்புறங்களில் சேவை வழங்குவதற்கான சன்மானம் வழங்கு.. 

· BSNL வளர்ச்சிக்கான உரிய உபகரணங்கள் வழங்கு..

· அனைத்து சொத்துக்களையும் BSNLக்கு மாற்று..

· BSNL - MTNL இணைப்பை நிறுத்து..

· அநியாயமாக பெறப்பட்ட SPECTRUM கட்டணத்தை திருப்பி வழங்கு 

· வாங்கும் சம்பள அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பை நிர்ணயம் செய்..

· அலைவரிசை ஒதுக்கீட்டை BSNLக்கு கட்டணமின்றி வழங்கு..

· அலைவரிசை விவாகாரத்தில் தனியாருக்கு துணை போகும் TRAI முடிவை ரத்து செய்..

· ஊழியர் விரோத DELOITTEE குழு பரிந்துரையை தூக்கி ஏறி..

· BSNL வளர்ச்சிக்கு உரிய நிதி ஆதாரம் வழங்கு...

· BBNL - அகன்ற அலைவரிசை பரமரிப்பு நிறுவனத்தை BSNL உடன் இணை..

· 4G தொழில் நுட்பம் வழங்கும் வசதியை BSNLக்கு கட்டணமின்றி வழங்கு..

·அலைவரிசை வசதி திருப்பி ஒப்படைக்கப்பட்ட பகுதிகளுக்கான கட்டணத்தை உடனே வழங்கு..

· ஓய்வூதியர்களுக்கு 78.2 % IDA இணைப்பை உடனே அமுல்படுத்து..

· ஊதிய மாற்றம் ஏற்படும்போது ஓய்வூதிய மாற்றம் ஏற்படுத்திட உத்திரவிடு..

· புதிய ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் பணியில் அமர்த்து...

· மத்திய மாநில பொதுத்துறை அரசு நிறுவனங்களில் BSNL சேவையைக் கட்டாய சேவையாக்கு..

· ITI நிறுவனம் மூலம் உபகரணங்கள் வாங்குவதை கட்டயமாக்காதே...

நமது கடலூர் மாவட்டத்தில் BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் 11-12-2014 அன்று காலை அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்.தோழர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டுகின்றோம்………                                                                                          
                                                        தோழமையுடன்

இரா.ஸ்ரீதர்    K.T.சம்பந்தம்  C.பாண்டுரங்கன்    P.வெங்கடேசன்  R.ஜெயபாலன் 
மாவட்டச்செயலர்       மாவட்டச்செயலர்               மாவட்டச்செயலர்                 மாவட்டச்செயலர்               மாவட்டச்செயலர்
     NFTE                 BSNLEU                     SNEA                       AIBSNLEA                   FNTO
 







மாறுதல் கொள்கை

24-11-14 வரை மேம்படுத்தப்பட்ட மாறுதல் கொள்கை படிக்க :-Click Here

தமிழ் மாநில Forum விடுத்துள்ள அறைகூவல்

தமிழ் மாநில Forum முடிவுகள் பார்க்க :-Click Here

கடலூர் மாவட்ட FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே !!
     8.12.2014 அன்று மாலை, கடலூர் FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS கூட்டம் BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில்  நடைபெற்றது. FORUM தலைவர் தோழர் R.ஸ்ரீதர் தலைமையேற்றார்.கன்வீனர் தோழர் K.T.சம்பந்தம் FORUM விடுத்துள்ள அறைகூவல்களை எடுத்துரைத்தார்.இதில் பங்கேற்ற SNEA(I) மாவட்ட செயலர் தோழர் C.பாண்டுரங்கன், AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் P.வெங்கடேசன், தோழர் பால்கி SNEA(I), தோழர்கள் A.அண்ணாமலை,R.V.ஜெயராமன்,S.பரதன் BSNLEU ஆகியோர் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். இறுதியாக  பின்வரும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

11.12.2014 அன்று அனைத்து கிளைகளிலும் இணைந்த ஆர்ப்பாட்டம் நடத்துவது.

11.12.2014 அன்று காலை விழுப்புரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாவட்ட செயலர்களும் பங்கேற்பது.

11.12.2014 அன்று மதியம் கடலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட சங்கங்களின் சார்பில் அழைப்பு விடுப்பது.

மக்கள் சந்திப்பு இயக்கத்தினை திட்டமிட மீண்டும் FORUM கூட்டத்தினை கூட்டுவது.

தோழர்களே மேற்கண்ட முடிவுகளை வெற்றிகரமாக்கிட அனைத்து சங்க கிளை,மாவட்ட நிவாகிகள் இணைந்து பணியாற்றுமாறு தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
                                                    தோழமையுள்ள 

   K.T.சம்பந்தம்      R.ஸ்ரீதர்       R.ஜெயபாலன்   C.பாண்டுரங்கன்  P.வெங்கடேசன் 
        BSNLEU           NFTE(BSNL)            FNTO                     SNEA(I)              AIBSNLEA

திங்கள், 8 டிசம்பர், 2014

மத்திய சங்க செய்திகள்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
     05-12-2014 அன்று நடைபெற்ற FORUM OF BSNL UNIONS / ASSOCIATONS  கூட்டத்தில் நமது BSNL  நிறுவன புத்தாக்கத்திற்கு ஆதரவாக ஏற்கனவே அறிவித்திருந்த போராட்ட அறைகூவலில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி

1) 11-12-2014 அன்று கோரிக்கை தினம் மற்றும் ஆர்பாட்டம் நடத்துவது.

2) 11-12-2014 அன்று முதல் பொது மக்களிடம் ஆதரவு கோரி ஒரு  கோடி கையெழுத்து வாங்கும் இயக்கத்தைதொடர்ந்து நடத்துவது.

3) 25-02-2015 அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்துவது.மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களிடம் கையெழுத்து பிரதிகளை சமர்ப்பிப்பது.

4) காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு  17-03-2015 தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது .

5) வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வதற்கு அனைத்து மாநிலங்களிலும் பெரும் அளவில் ஊழியர்களை திரட்டி கருத்தரங்கம் நடத்தபடவேண்டும் என FORUM முடிவு செய்துள்ளது.
 மத்திய சங்க முடிவு மற்றும் செய்திகள் 
 கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியில் நமது BSNLEU சங்கம் சார்பாக தோழர்கள் அபிமன்யு ,பொது செயலர் ,தோழர் பல்பீர் சிங், தலைவர் ,தோழர் அனிமேஷ் மித்ரா,துணை தலைவர் ஆகியோர் இடம் பெறுவர்.
கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டி கூட்டம் வரும் 09-12-2014 அன்று நடைபெறும்.
PLI கமிட்டி கூட்டம் 10-12-2014 அன்று நடைபெற உள்ளது.
தோழர்களே ! மேற்கண்ட முடிவுகளை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக்கிட அனைத்து சங்கங்களுடன் இணைந்து பணியாற்றுவோம் வெற்றிபெறச் செய்வோம்.
தோழமையுள்ள
K.T.சம்பந்தம் 
மாவட்டசெயலர்

வெள்ளி, 5 டிசம்பர், 2014

தனியுடமை அல்ல இலாக்கா வாகனங்கள்

அன்பார்ந்த தோழர்களே!  தோழியர்களே!!


      கன்வேயன்ஸ் அலவன்ஸ் வாங்கும் பெரும்பாலான அதிகாரிகள் காலை வீட்டிலிருந்து அலுவகத்திற்கும்,பின்னர் மதிய உணவருந்த  வீட்டிற்கும் பிறகு அலுவகத்திற்கும் , திரும்ப வீட்டிற்கும் தினசரி பயன்படுத்துவது இலாக்கா வாகனமே. இது தவிர பால், காய்கறி, இறைச்சி வாங்க , முடிவெட்ட , நண்பர்கள்,,, உறவினர்கள், வீட்டு விசேஷங்களுக்கு சென்று வர , பள்ளி, கல்லூரிகளுக்கு குழந்தைகளை அழைத்து  செல்ல உரிமையோடு சொந்த வாகனங்களை போல் பயன்படுத்தி வருகின்றனர் என்பது நமக்கு தெரியும். மேலும் நிர்வாகத்தின் GOOD BOOK-ல் இருக்கும் ஒருசில அதிகாரிகள் சொந்த காரியங்களுக்காக எல்லைகளை கடந்து   நாட்கணக்கில்  இலக்கா வாகனங்களை எடுத்து செல்வதும் நமக்கு தெரியும். அவ்வாறு எல்லை கடந்து போனபோது வாகனம் விபத்துக்குள்ளான சம்பவங்களும் நடைபெற்றுள்ளது  என்பதும்  நமக்கு தெரியும்.
     இவ்வளவு உரிமைகளை எடுத்து கொள்வதும் அல்லது  அள்ளி கொடுக்கும் மாவட்ட நிர்வாகம் இலாக்கா ஊழியர் மரணமுற்றால் கூட  தமது ஆறுதலும், பரிவினையும்  தெரிவிக்க அவ்விடத்திற்கு சென்றுவர தொழிற்சங்கம் வாகனம் கேட்டால் பல நேரங்களில் மறுப்பதும் கிலோ மீட்டார் கணக்கு சொல்வதும் கண்டனத்திற்குரியது. இலாக்கா வேலைகளுக்கு மட்டும் தான் இலாக்கா வாகனம் என்பதை தொழிசங்கங்கள் நன்கு அறியும். இதுவரையில் இவ்வாகன விஷயத்தில் தொழிற்சங்கங்களின்  தலையீடோ , விமர்சனங்களோ இருந்ததில்லை என்பதும் மாவட்ட நிர்வகத்திற்கு தெரியும். தற்போது இப்போக்கினை இனியும் தொடர வேண்டுமா? என்கின்ற சிந்தனையை நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. தொழிற்சங்கத்திடம் காட்டுகின்ற இந்த கறார் தன்மையை அத்துமீறும் அதிகாரிகள் மீது இனியாவது மாவட்ட நிர்வாகம் காட்டுமா???...  தொழிற்சங்கம் கண்காணிக்கும்...............  
                                                    
                                                     BSNL ஊழியர்சங்கம்,
                                                            கடலூர் மாவட்டம். 

இரங்கல் செய்தி

தோழர்களே!
    
நம்முடன் பணியாற்றிய தோழர் A.திருமால் TM/அரகண்டநல்லூர், அவர்கள் இன்று (05-12-2014) காலை 11:30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதினை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம் .

அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் பரிவினையும் உரித்தாக்கிக் கொள்கின்றோம். இறுதி சடங்கு நாளை மாலை 3:30 மணியளவில் அரகண்டநல்லூர் அருகிலுள்ள (3கிலோ மீட்டர் ) புத்தூர் கிராமத்தில்  நடைபெறும்.


                                          வருத்தத்துடன்
                            மாவட்டச் சங்கம்,கடலூர்  

மோடி பிரதமர் ஆகிவிட்டால் நாடே தலைகீழாக மாறிவிடும் என்று தேர்தல் சமயத்தில் ஆளாளுக்கு அடித்துவிட்டனர் அவரது கட்சியில். ஆனால் அவரோ பதவி ஏற்றதும் இந்தியர்கள் கையில் துடைப்பத்தைக் கொடுத்துவிட்டு, நாளுக்கு ஒரு நாடு என விமானம் ஏறிக்கொண்டிருக்கிறார்.ஆனால் அந்த பயணங்களுக்காக அரசால் சொல்லப்படும் காரணங்கள்’ மட்டுமே லேசாக இடிக்கிறது.சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றார் பிரதமர். அவருடன் அவரது நெருங்கிய நண்பரும், தொழிலதிபருமான அடானி குழுமத் தலைவர் கௌதம் அடானியும் சென்றார். இதற்கு சில மாதங்களுக்கு முன்புதான், ஆஸ்திரேலியாவில் பிரமாண்டமான நிலக்கரி சுரங்கம் அமைக்கும் குத்தகை ஒன்றை அடானி பெற்றிருந்தார் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. அந்நாட்டின் மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்த நிலக்கரி சுரங்கத்தை எதிர்த்து இப்போது வரை கடுமையாகப் போராடி வருகிறார்கள். எந்த நாடுதான் மக்கள் போராட்டங்களை மதித்தது? வழக்கம்போல ஆஸ்திரேலியாவும் மக்கள் போராட்டங்களுக்கு காதை கொடுக்காமல் அடானிக்கு அனுமதி வழங்கி அங்கு சுரங்கப் பணிகளும் தொடங்கிவிட்டன. 



இந்நிலையில்தான் மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்தில் அடானியும் இடம் பிடித்தார். இந்த பின்னணி குறித்து ஊடகங்களில் அரசல் புரசலாக செய்திகள் அடிபட்டன. என்றாலும் இன்னும் மோடிமேனியா முழுமையாக தீர்ந்துவிடவில்லை என்பதால் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்படவில்லை. ஆனால் இப்போது அடானி விஜயத்துக்கான உண்மையான காரணம் இதுதான் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டது. 



ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனம், அடானி நிறுவனத்தின் ஆஸ்திரேலிய சுரங்கப் பணிகளுக்காக சுமார் 6,100 கோடி ரூபாய் கடன் அளிக்கும் முடிவை அறிவித்துள்ளது. மோடி அரசு பொறுப்பேற்றப் பிறகு வழங்கப்படும் முதல் பிரமாண்ட கடன் தொகை இது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மற்ற வங்கிகள் அனைத்தும் அடானிக்கு கடன் தருவதை தவிர்த்து ஒதுங்கி இருக்கின்றன. காரணம் அதன் ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கத்தின் திட்ட மதிப்பு, அங்கு எதிர்கொள்ளும் சிக்கல்கள், சர்வதேச விலை நிலவரம் போன்றவற்றை வைத்து கணக்கிடும்போது இது சிக்கலானது என்பதை அவை திடமாக நம்புகின்றன. 



பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் இத்தகைய எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன என்றபோதிலும் இந்திய அரசோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவோ இதைப்பற்றி எந்தக் கவலையும் கொள்ளவில்லை. ஏனென்றால் அடானி, பிரதமர் மோடியின் அத்யந்த நண்பர். பிரதமரின் நண்பர் கேட்கும்போது தரமுடியாது எனச் சொல்லலாமா..அல்லது இவ்வளவு பெரிய தொகையை கடனாக பெற பிரதமரின் நண்பரைத் தவிர வேறு யாருக்கு தகுதி இருக்கிறது. 
ஆப் கே பார் மோடி சர்க்கார்!
நன்றி :-விகடன் செய்திகள் 

இரங்கல் செய்தி

இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி ஆர் கிருஷ்ணய்யர் தனது 100 வது வயதில் காலமானார்.மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் இந்திய அரசியல் சாசனம் குறித்து இவர் வழங்கிய பல தீர்ப்புகள் இன்றைக்கும் இந்திய நீதிமன்றங்களில் சுட்டிக் காட்டப்படுகின்றன.கேரளாவில் ஈ எம் எஸ் நம்பூத்ரிபாட் தலைமையில், 1957 ஆம் ஆண்டு இந்தியாவில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட்  அமைச்சரவையில் இடம்பெற்றவர் திரு .கிருஷ்ணய்யர், இவரது பதவிக்காலம் நீதித்துறையின் பொற்காலமாக விளங்கியது. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கோர்ட் கதவுகளை தட்டலாம் என்ற நம்பிக்கை விதை, மக்கள் மனதில் இவரின் தீர்ப்புகளால் விதைக்கப்பட்டது. பொதுநல வழக்காடுதலை இந்திய நீதித்துறையில் பரவலாக அறிய செய்தவர் கிருஷ்ணய்யர். கடலூர்  மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் அவரது மறைவிற்கு தன் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது .

செவ்வாய், 2 டிசம்பர், 2014

தொழிலாளர்களுக்கு துரோகம் செய்கிறது மோடி அரசு மாநிலங்களவையில் தபன்சென் பேச்சு




மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மணிக்கு 2000 ரூபாய் அளவிற்குப் பங்களிப்பினைச் செய்திடும் தொழிலாளிக்கு மாதத்திற்கு 6000 ரூபாய்க்கு மேல் ஊதியம் கிடைப்பதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தபன் சென் கூறினார்.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் 2011ஆம் ஆண்டு சட்டங்கள் (சில நிறுவனங்கள் மாதாந்திர அறிக்கைகள் அனுப்புவது மற்றும் பதிவேடுகள் பராமரிப்பதற்கு விலக்கு) திருத்தச் சட்டமுன்வடிவு மீது தபன்சென் பேசியதாவது: தற்போதைய தொழிலாளர் துறை அமைச்சர் இந்த அமைச்சகத்திற்கே புதியவராவார்.
இந்தச் சட்டமுன்வடிவு குறித்து அமைச்சர் கூறுகையில் இது தொழிற்சங்கங்களுடன் கலந்துபேசி கருத்தொருமித்து தாக்கல் செய்யப்படுவதாக அறிக்கை அளித்திருக்கிறார். இது முற்றிலும் தவறான ஒன்று. எனவே அது பதிவேடுகளில் இருக்கக்கூடாது. தயவுசெய்து அதை நீக்கிவிடுங்கள். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இந்தச் சட்டமுன்வடிவைக் கொண்டுவருகிறீர்கள் என்றால் தொழிற்சங்கங்களின் ஒப்புதலுடன் இதுவரவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். முத்தரப்பு மாநாட்டிலும் ஒத்த கருத்து ஏற்படவில்லை.நான் தொழிற்சங்க இயக்கத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்ட நபர். நான் சிஐடியு-வின் பொதுச்செயலாளராக இருக்கிறேன்.
தொழிலாளர்கள் சம்பந்தமாக ஏராளமான சட்டமுன்வடிவுகள் ஏற்கனவே நிலுவையில் இருக்கின்றன. மக்களவையிலும் ஏராளமான சட்டமுன்வடிவுகள் நிலுவையில் இருக்கின்றன. இந்தச் சட்டமுன்வடிவு கொண்டு வருவதற்குப் பின்னேயிருக்கும் ஒட்டுமொத்த காரணங்கள் என்ன? நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சிறந்த முறையில் சேவை செய்துவரும் தொழிலாளர்களின் நலன் காக்கவா இதனைக் கொண்டு வருகிறீர்கள்? நிச்சயமாக தொழிலாளர்களுக்காக இல்லை. மாறாக, முதலாளிகளின் சார்பாகத்தான் இதனை நீங்கள் கொண்டு வருகிறீர்கள். தொழிலாளர்களை முதலாளிகளின் கிடிக்கிப்பிடியில் வைக்கக்கூடிய விதத்தில் நீங்கள் இதனைக் கொண்டு வருகிறீர்கள்.
முதலாளிகளின் தயவில் வாழக்கூடிய விதத்தில் நீங்கள் தொழிலாளர்களை மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இதே சட்டமுன்வடிவு ஐமுகூ அரசாங்கத்தின் காலத்திலும் கொண்டு வரப்பட்டது. அப்போதும் இதுகுறித்து நாங்கள் தொழிலாளர் அமைச்சருடன் பேசியிருக்கிறோம். எங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவித்திருக்கிறோம். எனவே கருத்தொற்றுமை என்பது கிடையாது. நீங்கள் அமைச்சகத்திற்குப் புதியவராக இருப்பதால் உங்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை. இந்தச் சட்டமுன்வடிவு முதலில் 2005ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. தொழிலாளர் சட்டங்களை மீறும் வேலை அளிப்பவர்கள் (முதலாளிகள்) தண்டனையை அதிகரிக்கும் விதத்தில் அது இருந்தது. அப்போதிருந்த நாடாளுமன்ற நிலைக்குழு இதனை ஒருமனதாகப் பரிந்துரைத்தது.
பின்னர் அரசுக்கு இதனைத் திருப்பி அனுப்பியது. முத்தரப்பு அளவில் குறிப்பாக தொழிற்சங்கங்களின் ஒப்புதல் பெற்று இதனை சட்ட முன்வடிவாகக் கொண்டுவர வேண்டும் என்ற குறிப்புடன் திருப்பி அனுப்பியது. அந்த அறிக்கை 2005 டிசம்பர் 25 அன்று அவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 2005ஆம் ஆண்டு சட்டமுன்வடிவு விலக்கிக் கொள்ளப்பட்டு இப்போது 2011ஆம் ஆண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் அப்போதிருந்த தண்டனைப்பிரிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சட்ட முன்வடிவு குறித்தும் தொழிற்சங்கங்களுடன் கருத்தொற்றுமை எதுவும் ஏற்படவில்லை. ஆனால் கருத்தொற்றுமை ஏற்பட்டதாக அமைச்சர் அறிக்கை அளித்திருப்பது உண்மையல்ல. தொழிலாளர் அமைச்சகத்தின் ஆண்டறிக்கை இந்தியத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் அடையாளம் கண்டு பதிவு செய்திருக்கிறது. அதன்படி இந்தியத் தொழிலாளி ஒரு மணி நேரத்திற்கு 4.17 அமெரிக்க டாலர் ஈட்டித்தருகிறார்.
அதாவது மணிக்கு 250 ரூபாய் அல்லது ஒரு நாளைக்கு 2000 ரூபாய் ஈட்டித்தருகிறார். ஆனால் அவருக்கு அளிக்கும் குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு? அதிகபட்சம் மாதத்திற்கு 5000 ரூபாயிலிருந்து 6000 ரூபாய் மட்டுமே. ஒரு நாளைக்கு 2000 ரூபாய் அளவிற்கு உற்பத்தி செய்து தரும் தொழிலாளிக்கு இதுதான் ஊதியம். இந்த விவரங்களை நான் அளிக்கவில்லை. மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் ஆண்டறிக்கை அளித்துள்ள தகவலாகும். நீங்கள் தில்லியைச் சுற்றியுள்ள எந்தவொரு தொழிற்சாலைக்கு வேண்டுமானாலும் போய் பாருங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் பதிவேடுகளில் 20 பேர் மட்டுமே வேலை செய்வதாக இருக்கும். இதுகுறித்து அரசுக்கு முறையீடுகள் எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதான் இன்றைய நிலைமை. இப்போது அரசாங்கமானது அத்தகைய சட்டத்தையும் நீர்த்துப்போகச் செய்யக்கூடிய விதத்தில் இந்தச் சட்டமுன்வடிவைக் கொண்டு வந்திருக்கிறது. இவ்வாறு திருத்தங்களைத் தொழிலாளர்களின் நலன்களுக்காகக் கொண்டு வருகிறீர்களா? உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காகக் கொண்டு வருகிறீர்களா? அரசாங்கத்தின் விவரங்கள் காட்டுவது என்ன? நிறுவனங்கள் ஆண்டு அறிக்கைகள் அனுப்புவதும், பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் குறித்த பதிவேடுகளைப் பராமரிப்பதும் சட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டியவைகளாகும். இவற்றை நிர்வகிக்க எவரேனும் தவறினால், அவர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்க வேண்டியவர்கள். ஆனால் நீங்கள் அதனைச் செய்யவில்லை. மொத்தம் செயல்படும் நிறுவனங்களில் எத்தனை நிறுவனங்கள் இவ்வாறு ஆண்டு அறிக்கைகள் அனுப்புகின்றன. அரசாங்கத்தின் அறிக்கையின்படி சுமார் 25.9 சதவிகித அளவிற்குத்தான் இவ்வாறு அறிக்கைகள் அனுப்புகின்றன. 75 சதவிகித தொழில் நிறுவனங்கள் அவ்வாறு அனுப்புவதில்லை. இதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. எப்போதுமே இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம் இருந்ததில்லை. முதலாளி வர்க்கத்தை தாஜா செய்வதற்காகத்தான் இவ்வாறு கூறப்படுகிறது. 75 சதவிகித நிறுவனங்கள் எவ்வித அறிக்கையும் அனுப்புவதில்லை. இதுதான் எதார்த்தநிலை. இப்போது நீங்கள் விதிவிலக்கு அளிக்கிறோம் என்ற பெயரில் இருக்கும் சட்டத்தை மேலும் நீர்த்துப்போக வைத்திருக்கிறீர்கள். யாருக்காக? நாட்டிலுள்ள இதர தொழிலாளர் சட்டங்கள் அனைத்திற்கும் எதிரான சட்டமுன்வடிவாக இது இருக்கிறது. இந்தச் சட்ட முன்வடிவு உங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகம். எனவே, இதனை நாங்கள் எதிர்க்கிறோம். இதற்கு ஒரு துல்லியமான திருத்தத்தை நான் அளித்திருக்கிறேன். அதனைஅரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு தபன்சென் கூறினார
நன்றி:தீக்கதிர் 2.12.2௦14

தொழிலாளர் நலச் சட்டங்களா? முதலாளிகள் நலச் சட்டங்களா? மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் காட்டமான கேள்வி





தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தும் முதலாளிகள் நலச் சட்டங்களாக மாற்றப்பட்டு வருகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் குற்றம் சாட்டினார்.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.மாநிலங்களவையில் அப்ரண்டிஸ் சட்டத்தில் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
அப்போது நடைபெற்ற விவாதத்தின்போது டி.கே.ரங்கராஜன் பேசியதாவது:“தொழிலாளர்களுக்கான அப் ரண்டிஸ் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான இச்சட்ட முன்வடிவைப் படித்துப் பார்க்கையில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் என்னவென்றால், இத்திருத்தங்கள் தொழிலாளர்நல அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டதா அல்லது முதலாளிகளின் அமைப்பால் உருவாக்கப் பட்டதா என்பதாகும். இத்தகைய திருத்தங்களை தொழிலாளர் நல அமைச்சகம் செய்திருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்தத் திருத்தச் சட்டமுன்வடிவை நான் படித்துப் பார்க்கும் இத்தருணத்தில் நமது பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.
அந்த நாட்டின் அப்ரண்டிஸ் சட் டத்தைப் படித்துப் பார்த்தேன். அதுமிகவும் தெளிவாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் அவற்றில் இருக்கின்றன. அது 250 அப்ரண்டிஸ்சிப்புகளை சட்டரீதியாக அங்கீகரித்திருக்கிறது. பின்னர் அவற்றிற்கு வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது. எவரொரு வரையும் நீங்கள் விரும்பியதுபோல அப்ரண்டிஸ்ஸாக நீண்ட காலத் திற்கு வைத்திருக்க முடியாது. சில பகுதிகளில் ஓராண்டு, சில பகுதிகளில் ஈராண்டுகள் அல்லது மூன்றாண்டு கள். அப்படித்தான் அச்சட்டம் இருக் கிறது.
இப்போது கொண்டுவரப்பட விருக்கும் திருத்தச் சட்டமுன்வடிவின் பிரதான நோக்கம் என்ன? நிரந்தரத் தொழிலாளர்களுக்குப் பதிலாக அப்ரண்டிஸ் தொழிலாளர்களையே வைத்து உதவித்தொகை என்ற பெயரில் மிகவும் குறைந்த ஊதியத் தைக் கொடுத்து தொழிற்சாலைகளை நடத்திட வழிவகுப்பதாகவே தெரி கிறது. இச்சட்டத்திருத்தத்தின் பொருள் இதுதான். இன்றையதினம் நாம் எந்தத் தொழிற்சாலைக்குப்போனாலும் தற் காலிகத் தொழிலாளர்கள், கேசுவல் தொழிலாளர்கள், அப்ரண்டிஸ்சுகள், பயிற்சிபெறுபவர்கள் என நிறைய பேரைப் பார்க்கலாம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருப்பார்கள்.
அதே சமயத்தில் நிரந்தரத் தொழி லாளர்கள் என்பவர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள். இதுதான் இன்றைய நிலை.நாங்கள் தொழிற்சங்கத்தில் பணியாற்றுவதால் இது எங்களுக்கு நன்கு தெரியும். இவ்வாறு இந்தஅரசு தொழிலாளர்கள் மத்தியில்பிரச்சனைகளை உருவாக்கிக் கொண் டிருக்கிறது. இத்தகைய நடைமுறை சட்டவிரோதமானது. இவ்வாறு சட்டவிரோதமான நிலையை சட்டரீதியாக மாற்றுவதற்காக இந்தச்சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட் டிருக்கிறது. அதனால்தான் இச்சட்டமுன்வடிவு தொழிலாளர்அமைச்சகத்தால் கொண்டுவரப்பட வில்லை மாறாக முதலாளிகளின் சங்கங்களால் கொண்டுவரப்பட்டது என்று கூறுகிறேன்.ஹரியானா மாநிலத்தில் மானேசர் என்னுமிடத்தில் இயங்கிவரும் மாருதி சுசுகி தொழிற்சாலைக்குச் சென்று பார்த்தோமானால் இதனை நன்கு தெரிந்துகொள்ள முடியும். அங்கே ஆயிரக்கணக்கான அப்ரண்டிஸ் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களின் பணிகளை பல ஆண்டுகாலமாக செய்து கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். உதவித்தொகை என்ற பெயரில் மிகவும் குறைந்த ஊதியமே அவர்கள் பெற்றுக் கொண் டிருக் கிறார்கள்.
குறைந்தபட்ச ஊதியம் கிடையாது. சேமநல நிதி கிடையாது. நிரந்தரத் தொழிலாளர்கள் செய்யும் வேலையைச் செய்யும் இவர்கள் அவர்கள் பெறும் ஊதியத்தில் நான்கில்ஒரு பங்கினைக் கூட பெறுவதில்லை. தமிழ்நாட்டில் செயல் படும் டெக்ஸ்டைல் தொழிற்சாலை களிலும் இதேபோன்ற நிலைமை கள்தான். அங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் 90 சதவீதத்தினர் அப்ரண்டிஸ் மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள்தான். இவ்வாறு சட்ட விரோதமாக தொழிற்சாலைகள் இயங்கிவருவதை சட்டரீதி யாக மாற்றிடத்தான் இத்திருத்தச் சட்டமுன்வடிவு கொண்டுவரப் பட்டிருக்கிறது.இந்தத் திருத்தச் சட்டமுன்வடிவு முதலாளிகளுக்குத் தங்கள் இஷ்டம் போல் செயல்பட அனுமதி அளிக் கிறது. தொழிலாளர்கள் எத்தனை மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது இனி முதலாளிகளின் விருப்ப மாக இருக்கும்.
ஒரு தொழிலாளர் திருமணம் செய்துகொள்ள விரும் பினாலும் விடுப்பு கிடையாது, அவர்வீட்டில் ஒரு துக்க சம்பவம் என்றா லும் விடுப்பு கிடையாது. தற்போது அமலில் உள்ள சட்டத்தில் விதிமுறைகளை மீறும் முதலாளிகளுக்குத் தண்டனை பெறும் ஷரத்துக் கள் உண்டு. அவர்களைக் கைது செய்துசிறையில் அடைக்க முடியும். இப் போது கொண்டுவரப்பட்டுள்ள திருத்தச் சட்டமுன்வடிவில் அது நீக்கப் பட்டுவிட்டது. கைது செய்ய முடி யாது, எதுவும் செய்ய முடியாது. மாறாக அவர்களுக்கு இந்த அரசு பத்மபூஷன் விருது வழங்கும்போல் தெரிகிறது. சட்டத்தை மீறினால் அவர்களுக்கு பத்மபூஷன் விருது. இச்சட்டத்திருத்தத்தில் உள்ள தொழிலாளர் விரோத அம்சங்களை திமுக மற்றும் அதிமுக நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். 2008ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அப்ரண்டிஸ்கள் குறித்து ஒரு சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாக அதற்குக்குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காமல் கிடப்பில் போடப் பட்டுக் கிடக்கிறது. அச்சட்டத்தில் அப்ரண்டிஸ் தொழிலாளர்கள் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கு மேல்இருக்கக்கூடாது என்று வரையறுக்கப் பட்டது. அதற்கு இன்னமும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க வில்லை. இதுதான் மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் முறை. அப்ரண்டிஸ்சுகள் நிரந்தரத் தொழில்களைச் செய்யப் பணிக்கப் பட்டால் அவர்களுக்கு முழு ஊதியம்வழங்கப்பட வேண்டும். ஸ்டைபண்ட் என்னும் உதவிப் பணத்தைக்கொடுத்து வேலையை முடித்துக் கொள்ளக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அப்ரண்டிசுகள் பணியாற் றக் கூடாது. எனவேதான் நாங்கள் இந்தத் திருத்தச் சட்டமுன்வடிவை எதிர்க்கிறோம்.நான் சில திருத்தங்களை இச்சட்டமுன்வடிவிற்குக் கொண்டுவந்திருக் கிறேன். அவற்றை நிறைவேற்ற வேண் டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசி னார். எனினும் பின்னர் நடந்த வாக்கெடுப்பில் இத்திருத்தச் சட்டமுன் வடிவு நிறைவேறியது. வாக்கெடுப்பு நடைபெற்ற சமயத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் எவரும் அவையில் இல்லை. (ந.நி.)
நன்றி:தீக்கதிர் 2.12.2௦14