புதன், 21 மார்ச், 2018

மாவட்ட செயற்குழு முடிவுகள்


BSNL ஊழியர் சங்கம்
கடலூர் மாவட்டம்

செயற்குழு முடிவுகள்

தோழர்களே தோழியர்களே!!
வணக்கம் , நமது சங்கத்தின் மாவட்ட செயற்குழு 13.03.2018 அன்று கடலூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் மதியம் 2.00 மணிக்கு மிக சிறப்பாக நடைபெற்றது  8 வது மாவட்ட மாநாட்டிற்கு பிறகு  நடைபெற்ற முதல்  செயற்குழுவிற்கு நமது மாவட்ட தலைவர் தோழர். P.ரத்தினம் தலைமை தாங்கினார். . செயற்குழுவிற்கு வந்த அனைவரையும் கடலூர் வெளிபகுதி கிளைச்செயலர் தோழர் K.விஜய் ஆனந்த் வரவேற்றார். மாவட்ட உதவி செயலர் தோழர். S. பழனி  அஞ்சலி உரை நிகழ்த்திய பின் நமது  மாவட்ட செயலர் தோழர் .K.T.சம்பந்தம் செயற்குழுவின் நோக்கங்கள் பற்றியும் செயற்குழுவிற்கான விவாத குறிப்புகளையும் அறிமுகபடுத்தி பேசினார்.  அதனை தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் 16 மாவட்ட சங்க நிர்வாகிகளும் 9 கிளைச்செயலர்களும்   (விழுப்புரம் கிளை செயலர் பங்கேற்கவில்லை) கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். நமது மாநில செயலர். தோழர். A.பாபுராதாகிருஷ்ணன் இறுதியாக நிறைவுரையாற்றினார். தோழர்களின் உணர்வு மிக்க  ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு பின் கீழ்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன .
1. Aircel நிறுவனம் மூடபட்ட சூழ்நிலையில்  வாடிக்கையாளர்களை     BSNL நிறுவனத்தில் இணைத்திட நமது தோழர்கள் அதிகாரிகளுடன் இணைந்து கூடுதல் கவனத்துடன் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பணியாற்றிட வேண்டும். நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் நமது தோழர்கள் உறுதுணையாக செயலாற்றிட வேண்டுமென அனைவறையும் இச் செயற்குழு கேட்டுகொள்கிறது. அது போல் கூடுதல் சந்தாதாரர்கள் இணைவதின் காரனமாக ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை உடனடியாக சரி செய்திடவும் MNP மூலம்  இணையும் வாடிக்கையாளர்கக்கு விரைவாக சேவை வழங்கிடத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு  கேட்டுக்கொள்கிறது.
2. BSNL அலுவலகங்கள் , தொலைபேசி நிலையங்கள் செல் கோபுரங்கள் போன்றவற்றை பராமரிக்கவும் மின் கட்டணங்கள் மற்றும் வாடகை செலுத்துவதற்கும் தேவையான நிதியினை காலதாமதமின்றி ஒதுக்கீடு செய்திட மத்திய, மாநில சங்கங்கள் முயற்சித்திட வேண்டு மென இச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது .
3. நமது கடலூர் மாவட்ட சங்கத்தின் 8 வது மாநாட்டை கள்ளகுறிச்சியில் இதுவரை நடைபெற்றிடாத  வகையில்  அனைவரும் பாராட்டும் படி மிக அற்புதமாக நடத்தி கொடுத்த கள்ளக்குறிச்சி கிளைச்சங்க தோழர்களை இச்செயற்குழு வெகுவாக பாராட்டுகிறது .
4. நமது கடலூர் மாவட்டத்தில் 10 கிளைச்சங்கங்களும் தங்களது கிளை மாநாட்டினை மேமாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஒவ்வொரு மாநாட்டிற்கும் அனைத்து பகுதிகளிலுமிருந்து தோழர்கள் கலந்து கொள்வதை உறுதிசெய்திட வேண்டும் .  
5.  மாவட்ட அளவிலான ஊழியர் பிரச்சனைகளை குறிப்பாக ஊழியர்களுக்கு 01.01.2017 முதல் வழங்கப்படவேண்டிய  NEPP , TT  சுழல் மாற்றலில் ஏற்பட்ட பாதிப்புகளை களைதல், நமது மாவட்டத்தில்  உள்ள அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்கள்,TRAஉள்ளிட்ட அலுவலகங்கள்(BSNLEU சங்க அலுவலகம் உட்பட)  கணினிகளை சரி செய்வதில் ஏற்படும் காலதாமதத்தை களைந்திடக் கோரியும் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வது .
6. கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 2009-2010 க்கான நிலுவைத்தொகை வழங்கிடவும், , திறனுக்கேற்ற ஊதியம் வழங்கிடவும் மாநில நிர்வாகத்தின் உத்திரவுகள் , நினைவூட்டும் கடிதங்கள் பல பிறப்பிக்கபட்டும் கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்திரவை அமுல் படுத்தபட வில்லை என்பதை இம்மாவட்ட செயற்குழு கவலையுடன் பார்க்கிறது  . மேற்கண்ட உத்திரவுகளை உடனடியாக அமுல்படுத்திட வேண்டி ஒப்பந்த தொழிலாளர்   சங்கத்துடன் இணைந்து இயக்கம் நடத்துவது .
7. BSNL ஊழியர் சங்கத்தின் 18 வது அமைப்பு தினத்தை அனைத்து  கிளைகளிலும் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடிட இச் செயற்குழு அறைகூவல் விடுக்கிறது .
8. பின்வரும் தோழர்கள் தலமட்ட குழுவிற்கு (LJCM) ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .

தோழர் .  K.T.சம்பந்தம்,   TT, CSC, கடலூர்                செயலர் LJCM
தோழர் . P. ரத்தினம் TT , KAC                                                                     Member
தோழர் . G.கலியமூர்த்தி AOS(TG), CSC, Temple ,CDM                         Member
தோழர் . S. சதீஷ் குமார் JE Cuddalore Port ,                                           Member
தோழர் . E.கவிதா  JE , Block 20, NTS                                                          Member
தோழர் . N. ஜெயராஜ் TT ,Udaan, Cuddalore                                             Member
தோழர் . V.S. கார்த்திகேயன் AOS(TG) CSC,VLU                                   Member
தோழர் . D. மனோகரன்  TT ,TNV                                                             Member
தோழர் . D. பொன்னம்பலம் TT ,ARA                                                                      Member
Welfare Committee  
தோழர். G. நாகராஜ் OS (TG) Villupuram   
தோழர்களின் பணிச்சிறக்க மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.மேலும் மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட மேற்கண்ட முடிவுகளை வெற்றிகரமாக அமுல்படுத்திட மாவட்டசங்க,கிளைச்சங்க நிர்வாகிகள் முழுவீச்சுடன்  பணியாற்றிடவும் மாவட்ட சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.   
தோழமையுடன்
K.T. சம்பந்தம்
மாவட்ட செயலர்


கருத்துகள் இல்லை: