திங்கள், 28 அக்டோபர், 2013

ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் பட்டுவாடா

அன்பார்ந்த தோழர்களே !!

நமது மாவட்டத்தில் பணியாற்றிவரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிட நமது இரண்டு சங்கங்களின் சார்பில் (BSNLEU & TNTCWU ) கோரிக்கை வைத்து மாவட்ட நிர்வாகத்துடனும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். நமது கோரிக்கையை தீர்த்துவைப்பதற்கு நமது மாவட்ட நிர்வாகமும் தொழிலாளர் நலத்துறையும் மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக, குறைந்தபட்ச போனஸ் 8.33% அனைவருக்கும் வழங்கிட இன்னோவைட்டி நிறுவனம் ஒத்துகொண்டுள்ளது. அதன்படி முழு நேர ஊழியர்களுக்கு ரூ.3600ம்  பகுதி நேர ஊழியர்களுக்கு அவர் அவர் வாங்கும் ஊதியத்தின் அடிப்படையிலும் போனஸ் வழங்கப்படும். 29.10.2013 முதல் தொடங்கி தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அனைத்து பகுதி ஊழியர்களுக்கும் போனஸ் பட்டுவாடா செய்யப்படும். நமது ஒப்பந்த தொழிலாளர்கள் நியாயமான போனஸ் பெற்றிட உரிய நடவடிக்கை மேற்கொண்ட நமது மாவட்ட நிர்வாகத்திற்கும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கேபிள் பகுதியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நியாயமான போனஸ் பெற்றிட நாம்  தொடர் முயற்சி செய்து வருகிறோம். தொழிலாளர் நலத்துறை அதிகாரி (LEO) அவர்கள் தனது முதற்கட்ட விசாரணையை இன்று 28.10.2013 நடத்தி உள்ளார். மேலும் ஒப்பந்ததாரர் திரு.R.சீனுவாசன் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக போனஸ் வழங்க அறிவுறுத்தி உள்ளார். கேபிள் பகுதி ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கும் வரை நமது முயற்சி தொடரும்.

கருத்துகள் இல்லை: