வெள்ளி, 11 அக்டோபர், 2013

செயலக கூட்ட முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே!

    10.10.2013 அன்று மாலை நமது மாவட்ட தலைவர் தோழர் V.குமார் தலைமையில் மாவட்ட செயலக கூட்டம் நடைபெற்றது.கள்ளகுறிச்சி TM சுழல்மாற்றல் பிரச்சினையில் மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டது.மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய  திட்டமிட்ட இழுத்தடிக்கும் போக்கு, BSNLஊழியர் சங்கத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறையில் மாற்றம் காணவும், கள்ளக்குறிச்சி சுழல்மாற்றல் இதுவரையில் கடைபிடித்த நடைமுறையில் அமுல்படுத்திடவும், கடலூர் ஒப்பந்த ஊழியர் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டபடி நிறைவேற்றிட வலியுறுத்தியும்  சக்திமிக்க தொடர்போராட்டம் நடத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

  முடிவுகள்

1. 17.10.2013ற்குள்  அனைத்து கிளைகளிலும் போராட்ட விளக்க கூட்டம்.        


2.    18.10.2013 அன்று  அனைத்து கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

3.  23.10.2013 அன்று கடலூர் GM அலுவலகம் முன்பாக தர்ணாபோராட்டம்

        மேற்கண்ட போராட்டங்களை  வெற்றிகரமாக நடத்திட அனைத்து கிளை நிர்வாகிகளும், மாவட்ட சங்க பொறுப்பாளர்களும் இணைந்து பணியாற்றிடு மாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை: