வெள்ளி, 25 டிசம்பர், 2015
செவ்வாய், 22 டிசம்பர், 2015
அனைத்து ஒப்பந்த தொழிலாள தோழர்களுக்கும் வெள்ள நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி
BSNL ஊழியர் சங்கம்
தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
கடலூர்
மாவட்டம்
அன்பார்ந்த தோழர்களே!
வணக்கம். நமது மாவட்ட சங்கத்தின் முயற்சியால் வரும் 24.12.2015. வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒப்பந்த
தொழிலாள தோழர்களுக்கும் வெள்ள நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் சங்க
அலுவலகத்தில் நடைபெற உள்ளது . தோழர்கள் தோழியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து
கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்
M.பாரதிதாசன் K.T. சம்பந்தம்
மாவட்ட
செயலாளர் மாவட்ட
செயலாளர்
TNTCWU BSNLEU
திங்கள், 21 டிசம்பர், 2015
இரங்கல் செய்தி
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
நம்முடன் சிதம்பரத்தில் பணிபுரியும் தோழர். A.வேல்முருகன் , TM அவர்கள் நேற்று மாலை (20.12.2015) உடல் நல குறைவால் காலமானார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அவரைப் பிரிந்துவாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், பரிவினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி ஊர்வலம் இன்று 21.12.2015) மாலை 3.00 மணிக்கு, புதுச்சத்திரம் அருகில் உள்ள வில்லியனூர் கிராமத்தில் அவரது இல்லத்தில் இருந்து நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரண உதவி
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது தமிழ் மாநிலச்சங்கம் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான நிவாரண உதவிகளை செய்து வருகிறது. அதுபோல் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நமது ஒப்பந்த ஊழியர்களுக்கும் நிவாரண உதவிகளைச் செய்துள்ளது.17.12.2015 அன்று சென்னை கிரீம்ஸ்ரோடு நமது மாநிலச்சங்க அலுவலகத்தில் அதற்கான விழா நடைபெற்றது.நமது கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த 16 தோழர்கள் நிவாரண உதவிகளைப் பெற்றுள்ளனர். இது குறித்து நமது தமிழ் மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>புகைப்படங்கள்காண <<<Read>>>,<<<Read>>>
தூய்மை பணியில் BSNL ஊழியர் சங்கமும் தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும்...
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது தமிழ் மாநிலச்சங்கம் தொடர்ந்து வெள்ளநிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.அதுபோல் மனிதநேய மிக்க தூய்மை பணியிலும் தன்னை இணைத்துக் கொண்டுளது. 17.12.2015 அன்று சென்னை அரும்பாக்கம்,MMDA காலனியில் உள்ள தெருக்கள் முழுவதையும் சுத்தம் செய்தது. இத் தூய்மைப் பணியில் நமது மாவட்ட தோழர்கள் 68 பேர்கள் கலந்துகொண்டு வெற்றி பெறச்செய்துள்ளனர். இது குறித்து நமது தமிழ் மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும்.<<<Read >>>>
புகைப்படங்கள்
புதன், 16 டிசம்பர், 2015
22.12.2015 அன்று FORUM அறைகூவலின்படி ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
ஓய்வூதியதாரர்களுக்கு 78.2% பஞ்சப்படி இணைப்பை வலியுறுத்தி 22.12.2015 அன்று ஆர்ப்பாட்டம் மற்றும் BSNLஐ பலப்படுத்த "SERVICE WITH SMILE" என்கின்ற 100 நாட்கள் திட்டம்- அகில இந்திய FORUM முடிவு செய்துள்ளது.இதுகுறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>
தூய்மை பணியில் BSNL ஊழியர் சங்கமும், ஒப்பந்த ஊழியர் சங்கமும்..
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
கடந்த ஒரு மாதமாக பெய்த கன மழையில் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். பாதிக்க பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டுவது நமது கடமை என்ற அடிப்படையில், நமது மாநில சங்கம் தமிழகம் முழுவதும் நமது தோழர்களிடம் நிதி வசூலித்து பாதிக்கப்பட்ட சென்னை,கடலூர், புதுவை,மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட தமிழக மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியது.
அடுத்த கட்டமாக சின்னாபின்னமான சென்னை மாநகரத்தில் ஒரு பகுதியில் சுத்தம் செய்திடவும் முடிவு செய்துள்ளது.அந்தநிகழ்வு நாளை17.12.2015 காலை 8.00 மணிக்கு சென்னை MMDA காலனியில் நடைபெறவுள்ளது.நமது தலைமைப் பொதுமேலாளர் திருமதி பூங்குழலி ITS அவர்கள் நிகழ்வினை துவக்கிவைக்க உள்ளார். இவ்வியக்கத்தில் நமது மாவட்ட தோழர்கள் மிகக்கணிசமாக கலந்துகொண்டு தூய்மைப்பணி இயக்கம் வெற்றிபெற உதவிடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் 17.12.2015 அன்று மாலை மணியளவில் க்ரீம்ஸ் சாலையில் உள்ள நமது மாநிலச்சங்க அலுவலகத்தில், கன மழையால் பாதிக்கப்பட்ட கடலூர்,புதுவை மற்றும் சென்னை ஒப்பந்த ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.நமது மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தோழர்களை கிளைச்செயலர்கள் அழைத்துவர வேண்டுகிறோம்.இது பற்றிய மாநிலச்சங்கத்தின் சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிச்செய்யவும் <<<Read >>>
செவ்வாய், 15 டிசம்பர், 2015
கேடர் பெயர் மாற்றம்- போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி !
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது BSNL நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களின் கேடர் பெயர்களின் மாற்றம் குறித்து நாம் எடுத்துவந்த தொடர்முயற்சியின் பலனாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கேடர்களின் பெயர்களை மாற்றிட நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதுகுறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>
10.12.2015 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற FORUM கூட்டத்தின் முடிவுகள்
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
10.12.2015 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற FORUM கூட்டத்தின் முடிவுகள் குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>
புதுடில்லியில் 24-25, நவம்பர் 2015-ல் நடைபெற்ற நமது மத்திய செயற்குழு கூட்ட முடிவுகள்
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நவம்பர் 24முதல் 25 வரை புதுடில்லியில் நடைபெற்ற நமது மத்திய செயற்குழு கூட்ட முடிவுகள் குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையினைக் காண இங்கே கிளிக் செய்யவும்.<<<Read>>>
14.12.2015 அன்று நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டம், அரசூர் நல்லாளக்குப்பம் மற்றும் குமாரமங்கலம் பகுதி வாழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
14.12.2015 அன்று நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டம், அரசூர் நல்லாளக்குப்பம் மற்றும் குமாரமங்கலம் பகுதி வாழ் மக்களுக்கு பாய், போர்வை, புடவை, லுங்கி மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ் மாநிலச் செயலர் தோழர் A.பாபுராதாக்கிருஷ்ணன், மாநில பொருளர் தோழர் K.சீனுவாசன், CGM அலுவலக மாவட்ட செயலர் தோழர் K.V.சிவக்குமரன் மாவட்ட தலைவர் தோழர் S.அன்புமணி CGM அலுவலக தோழர்கள் M.சிவகுமரன் மற்றும் S.குணசேகரன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
நமது மாவட்டத்தின் சார்பில் தோழர்கள் K.T.சம்பந்தம், A.அண்ணாமலை, R.V.ஜெயராமன் மற்றும் கள்ளக்குறிச்சி கிளை செயலர் P.ரத்தினம் நமது மாவட்ட அமைப்புச் செயலர் S.பிரபு கல்லை தோழர்கள் S.V.விஸ்வநாதன், ரமேஷ் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் கல்லை கிளைச் செயலர் தோழர் ரத்தினம் ஆகியோர் பங்கேற்று நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






























