வெள்ளி, 14 நவம்பர், 2014
வியாழன், 13 நவம்பர், 2014
பாஜகவின் இரட்டை நாக்கு அரசியல்
இறுதியாக, தில்லி சட்டமன்றத்திற்கான தேர்தல்கள்
அடுத்த ஆண்டின் துவக்கத் தில் நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுவிட்டன.
நவம்பர் 4 அன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின்
சிறப்புக் கூட்டம் தில்லி சட்டமன்றத்தைக் கலைத்திடக் கோரி தில்லிதுணைநிலை
ஆளுநர் அளித்த பரிந்துரையை உடனடியாக ஏற்றுக் கொண்டதை அடுத்துநாட்டின்
தலைநகரில் மீண்டும் புதிதாக தேர்தல் நடத்துவதற்கான நடைமுறை தொடங்கிவிட்டது.
இதன்மூலம், நவம்பர்25 அன்று காலியாக இருந்த மூன்று இடங்களுக்காக
நடைபெறவிருந்த இடைத் தேர்தல்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. (இந்த மூன்று
தொகுதிகளிலும் தேர்வு பெற்ற பாஜக உறுப்பினர்கள் மக்களவைக்குத்
தேர்ந்தெடுக்கப் பட்டதால் இந்த இடங்கள் காலியாயின.) தில்லி சட்டமன்றத்தில்
காங்கிரஸ் கட்சிஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த
ஆம் ஆத்மி கட்சி யின் அரசாங்கம், ராஜினாமா செய்துவிட்டதால், அது 2014
பிப்ரவரியிலிருந்து செயல்படா நிலையிலிருந்தது.
சட்டமன்றம் கலைக்கப்
பட்டதிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் மீண்டும் புதிதாகத் தேர்தல்கள்
நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தேர்தல்கள் நடந்து, புதிய ஆட்சி
அமையும்வரை, மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் தற்போதைய குடியரசுத் தலைவர்
ஆட்சி தொடரும் என்பது உறுதி. தில்லி சட்டமன்றத்தில் பெரும்பான்மை யைப்
பெறுவதற்காக பாஜக மேற்கொண்ட அனைத்துத் தில்லுமுல்லு வேலைகளும்
தோல்வியடைந்ததை அடுத்தே, இத்தகைய முடிவிற்கு அக்கட்சி வந்துள்ளது. பாஜக,
தில்லி சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக, எல்லாவிதமான
குதிரைபேரங் களிலும் ஈடுபட்டதாக, ஏஏபி கட்சியும் முன் னாள் தில்லி
முதல்வரான அதன் தலைவரும் குற்றம்சாட்டி இருந்தார்கள்.
மகாராஷ்ட்ராவில்
தேர்தல் வெற்றி மற்றும் ஹரியானாவில் தனிப்பெரும் கட்சி அந்தஸ்தைப்
பெற்றதைத் தொடர்ந்து, பாஜக பெரும்பான்மையைப் பெற்றிடுவதற்காக இத்தகைய
தில்லுமுல்லு வேலைகள் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதுபோல்
தோன்றுகிறது. இப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் களில், வெற்றிகளைப்
பெற்றிருந்தபோதிலும், 2014 பொதுத் தேர்தல்களுக்குப்பின் நடைபெற்ற பல்வேறு
சட்டமன்றங்களில் நடைபெற்ற பல்வேறு இடைத் தேர்தல்களிலும் பாஜக
வெற்றிபெறவில்லை. உத்தரப்பிரதேசம், குஜ ராத், ராஜஸ்தான் மாநிலங்களில்
சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கு முன்பு, நாட்டின் பல மாநிலங்களில்
50 சட்டமன்ற இடங்களுக்காக இடைத் தேர்தல்கள் நடந்துள்ளன.
இவற்றில்
2014 பொதுத் தேர்தல்களுக்கு முன் 35 இடங்களில் பாஜக குறிப்பிடத்தக்க அளவில்
முன்னணியில் இருந்தது. ஆயினும் பாஜக தலைமையிலான தேஜகூட்டணி இவற்றில் 18
இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இம் மாநிலங்களில் இதற்கு முன் நடைபெற்ற
சட்டமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிட்டால்கூட, கூர்மையான அளவிற்கு வீழ்ச்சியே
ஏற்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில்
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில் 71 இடங்களை பாஜககைப்பற்றி
இருந்தது. ஆனால் அதன் பின்னர் அது மத்தியில் ஆட்சிஅமைத்து சுமார்100
நாட்கள் முடிந்துள்ள நிலையில் மீண்டும் இம்மாநிலத்தில் நடைபெற்ற இடைத்
தேர்தல்களில் சட்டமன்றத்தில் அது பெற்றி ருந்த 8 இடங்களை இழந்து விட்டது.
குஜராத்திலும் பாஜக 3 இடங்களை இழந்துள்ளது.
அதேபோன்றே ராஜஸ்தானிலும்
3 இடங்களை இழந்துவிட்டது. இப்போது ஒன்பது மாநிலங் களில் 32 சட்டப்பேரவை
இடங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பாஜக வெறும் 12 இடங் களை மட்டுமே
வென்றிருக்கிறது. சமீபத்தில் மகாராஷ்ட்ராவிலும், ஹரியானா விலும் நடைபெற்ற
தேர்தல் வெற்றிகளில்கூட, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தங்களுடைய மிகவும்
அரக்கத்தனமான நிகழ்ச்சி நிரலாக விளங்கும் `இரட்டை நாக்கு’ அரசிய லைப்
பிரயோகிப்பதில் தவறவில்லை என்று ஊடகங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. ஒரு
பக்கத்தில் `வளர்ச்சி’ என்றும், `குஜராத் மாடல்’ என்றும், `நல்ல நாள்
வருகுது’ என்றும் சொல்லிக்கொண்டே, மறுபக்கத்தில் தேர்தல் ஆதாயங்களை அறுவடை
செய்வதற்காக மதவெறித் தீயை விசிறி, வன்முறைகளில் ஈடுபடும் தங்கள் உண்மையான
உத்தியைக் கடைப்பிடித்ததையும் பார்த்தோம்.
தில்லியில்
நடைபெறவிருக்கும் தேர்தலின்போதும் இதேபோன்று தேர்தல் உத்திகளைப் பின்பற்றிட
முடிவு செய்திருப்பதை, இடைத்தேர்தல்களில் பாஜக பின்னடைவை சந்தித்த
பின்னர் அதன் மூத்த தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களிலிருந்து நன்கு
உணர்ந்து கொள்ளமுடிகிறது. `ஜிகாத் காதல்’ போன்ற முழக்கங் களை
முன்னெடுத்துச் செல்லாததும், முசாபர்நகர், சகாரன்புர் மற்றும் மொராதாபாத்
ஆகியஇடங்களில் நடைபெற்ற வகுப்புக் கலவரங் களை பெரிய அளவிற்குத் தேர்தல்
பிரச்சனை யாக எடுத்துப் போகாததும்தான் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜக பல
இடங்களை இழந்ததற்கு முக்கிய காரணம் என்று அவர்கள்கூறத் தொடங்கியுள்ளனர்.
“2014
மக்கள வைத் தேர்தல்களின்போது நாம் அதிக வாக்குகளைப் பெற்றதற்கு நம்
இந்துத்துவா நிகழ்ச்சிநிரலே காரணமாகும். இப்போது இடைத் தேர்தலின்போது தான்
நம்முடைய உண்மையான அடையாளத்தை மறந்ததும், உள்ளார்ந்த அரசி
யலைப்பின்பற்றியதும்தான் நம் தோல்விக்குக் காரணம்,’’ என்றும்
குறிப்பிட்டிருக்கிறது. (மெயில் டுடே, செப்டம்பர் 17, 2014) மகாராஷ்ட்ரா
மற்றும் ஹரியானா வெற்றி களைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ்/பாஜக தங்களுடைய
மதவெறித் தீயை தில்லியில் பலபகுதிகளில் விசிறிவிடத் தொடங்கி இருக்கிறது.
பவானா, நந்னகிரி, திரிலோக்புரி, சமய்பூர் பத்லி மற்றும் பல இடங்களில்
இவ்வாறு அவர்கள் தங்கள் மதவெறி நடவடிக்கை களைத் தொடங்கியுள்ளனர்.
வடக்கு
தில்லி யில் பவானா பகுதியில் நவம்பர் 2 அன்று ஒரு`மகா பஞ்சாயத்து’
நடந்திருக்கிறது. அதில் நவம்பர் 4 அன்று நடைபெறவுள்ள முகரம் ஊர்வலத்தை
எதிர்த்திட வேண்டும் என்று கோரியுள்ளனர். இக்கூட்டத்தில் அப்பகுதி யைச்
சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் மிகவும் வெறித்தனமாகப் பேசியிருக்கிறார்.
வரவிருக்கும் தேர்தல்களை மனதில்கொண்டுதான் இப்பகுதிகளில் பதற்றநிலைமை
உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்ப தாக, அப்பகுதி மக்கள் என்டிடிவி போன்ற
ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். இங்கேயுள்ள ஒரு சிறிய வாய்க்கால்
இந்து மற்றும் முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளைப் பிரிக்கிறது. மதப்பதற்ற
நிலைமையைத் தணிப் பதற்காக, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக முகர்ரம்
ஊர்வலம் வரும் பாதையை மாற்றி அமைத்திட முஸ்லிம் சிறுபான்மையினர்
ஒப்புக்கொண்ட போதிலும், அங்கே பதற்ற நிலைமைகள் தொடர்கின்றன.
கிழக்கு
தில்லியில் உள்ள திரிலோக் புரியிலிருந்து மிக அருகில், வடகிழக்குத்
தில்லியில் உள்ள நந்னாகிரிப் பகுதியில், சென்ற வாரம்இரு பிரிவினருக்கு
இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வகுப்பு மோதல்கள் நடைபெற்றுள்ளன. மீண்டும்
இங்கே கலகத் தைத் தூண்டி விட்டது பாஜக தலைவர்கள்தான் என்பது ஊடகங்களில்
வந்துள்ளசெய்திகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது. தீபாவளியன்று பட்டாசு
வெடிப்பதை சாக் காக வைத்துக்கொண்டு சமய்பூர் பத்லி மற்றும் மஜ்னு கா திலா
ஆகியஇடங்களில் வகுப்புவாதப் பதற்ற நிலைமைகள் உருவாக்கப்பட் டிருக்கின்றன.
ஐம்பது வயது மூதாட்டி ஒரு வர் இதில் பலியாகிவிட்டார். நாற்பதுக்கும் மேற்
பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தேசிய
அரசியலில் தொடர்ந்து நீடிக்க வேண்டு மானால் அதற்கு வெறிபிடித்த இந்துத்துவா
நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதும், மதவெறித் தீயை விசிறி
விடுவதும்தான் அடிப் படை என்கிற விதத்தில் பிரதமரே இவற்றை முன்னெடுத்துச்
சென்று கொண்டிருக்கிறார். மும்பையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இதனை
விரிவாகவே ஊடகங்கள் தெரிவித் தன.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இணைய
தளத்தில் காணப்பட்ட ஓர் உரைக்கு, ஓர் அரசியல் விமர்சகர் கீழ்க்கண்டவாறு
கருத்து தெரிவித் திருக்கிறார்: “ஈடிணையற்ற வகையில் புத் தெழுச்சி பெற்ற
இந்துயிசத்தின் தாயத்தாக தற்போதைய இந்தியப் பிரதமர் மீளவும் புதி தாய்
கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார் என்பதை யார் மறுக்க முடியும்?’’ இந்த
“ஈடிணையற்ற வகை’’ என்பது பிரதமரே பீற்றிக் கொள்வதைப்போல, இந்தியாவில் ஆண்
டாண்டு காலமாய் இருந்து வரும் புராணக் கதைகளையெல்லாம் எவ்வித சிரமமுமின்றி
நாட்டின் வரலாறாக மாற்றுவதும், தத்துவ சாஸ்திரத்தை, மத சாஸ்திரத்துடன்
இணைப்பதுமேயாகும்.
இத்தகைய இவர்களின் அரக்கத்தனமான நிகழ்ச்சிநிரலை
இரக்கமற்ற முறையில் பின்பற்ற இவர்கள் முயற்சிப்பது, இந்தியாவின் நவீன
மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்குப் பேரழிவினை ஏற்படுத்திடும். நம்முடைய
மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை ஆர்எஸ் எஸ் பரிவாரங்கள் தங்களுடைய
வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றிட
முயலும் இவர்களின் கொள்கையை முழுமையாக நிராகரித்து, மதவெறி சக்திகளுக்கு
தோல்வியை ஏற்படுத்து வதன் மூலம் நாட்டுமக்கள் இத்தகைய ஆபத்தை முழுமையாக
முறியடித்திட வேண்டும். ஒன்றுபட்ட மதச்சார்பற்ற ஜனநாயக இந்தி யாவின்
அடித்தளங்களைப் பாதுகாப்பதன் மூலமாக மட்டுமே நாட்டு மக்கள் அனை வருக்கும்
சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்கான போராட்டத்தை தீர்மானகரமான முறையில்
முன்னெடுத்துச் செல்ல முடியும்.
- தமிழில்: ச.வீரமணி
ஆர்எஸ்எஸ்/பாஜக
பரிவாரங்கள் தேசிய அரசியலில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் அதற்கு
வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதும்,
மதவெறித் தீயை விசிறி விடுவதும்தான் அடிப்படை என்கிற விதத்தில் பிரதமரே
இவற்றை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.
நன்றி தீக்கதிர் 13.11.2014
புதன், 12 நவம்பர், 2014
வெகு
சிறப்புடன் நடைபெற்ற கொல்கத்தா அகில இந்திய மாநாடு
தோழர்களே!
நமது BSNLEU சங்கத்தின் அகில இந்திய மாநாடு கொல்கத்தா
நகரில் வெகு சிறப்புடன் 6,7,8 மற்றும் 9/11/2014 தேதிகளில் நடைபெற்றது. ஆளும் கட்சியின்
இடையூற்றினால் இரண்டு நாட்களில் மாநாட்டை வேறு ஒரு இடத்தில் நடத்த வேண்டிய கட்டாயம்
ஏற்பட்ட போதும்,சூழலை சவாலாக எடுத்துக் கொண்டு மேற்கு வங்க தோழர்கள் அருமையாக நடத்தினர்.
நமது கடலூர் மாவட்டத்தில் இருந்து 3 பிரதிநிதிகள் மற்றும் 2 பார்வையாளர்கள் கலந்துகொண்டோம்.
தோழர்கள்
K.T.சம்பந்தம், A.அண்ணாமலை,V.குமார் ஆகியோர் பிரதிநிதிகளாகவும் தோழர்கள் K.சாரங்கபாணி
மற்றும் ராஜசேகர் (சிதம்பரம்) ஆகியோர் பார்வையாளர்களாக கலந்து கொன்டோம்..
மாநாட்டு
காட்சிகள்
செவ்வாய், 11 நவம்பர், 2014
அகில இந்திய மாநாட்டில்...
Patron : V.A.N.நம்பூதிரி
தலைவர்
:
தோழர் பல்பீர் சிங், (பஞ்சாப்)
உப தலைவர்கள் : தோழர் அசோக் பாபு (ஆந்திரா)
தோழர் அனிமேஷ் மித்ரா (மே.வ)
தோழர் அனிமேஷ் மித்ரா (மே.வ)
தோழர் கே.ஆர். யாதவ் (உ.பி)
தோழர் பி.நாராயண் (ஜார்கண்ட்)
தோழர் ஜகதீஷ் சிங் (ம.பி)
தோழர் ஓம் பிரகாஷ் சிங் (கொல்கத்தா)
பொதுச் செயலர் : தோழர் பி.அபிமன்யு (தமிழ்நாடு)
துணைப் பொதுச் செயலர்கள் : தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி (NE-1)
உதவி பொதுச் செயலர்கள் : தோழர் கே.சம்பத் ராவ் (ஆந்திரா)
தோழர் ஜான் மார்கஸ் (மகாராஷ்ட்ரா)
தோழர் எஸ். பிரதாப் குமார் (கேரளா)
தோழர் எம்.சி.பாலகிருஷ்ணா (கர்னாடகா)
தோழர் எஸ்.செல்லப்பா (தமிழ்நாடு)
பொருளாளர் : தோழர் சைபல் சென்குப்தா (கல்கத்தா)
உதவி பொருளாளர் : தோழர் குல்தீப் சிங் (ஹரியானா)
அமைப்புச் செயலர்கள் : தோழர் ஆர்.எஸ். சௌகான் (NTR)
தோழர் சுனிதி சௌத்ரி (பீகார்)
தோழர் சுகவீர் சிங் (உ.பி)
தோழர் விஜய் சிங் (ராஜஸ்தான்)
தோழர் டி.கே.பகோத்ரா (குஜராத்)
தோழர் சண்ட்யா காட்கில் (மகாராஸ்ட்ரா)
தோழர் எம்.விஜயகுமார் (கேரளா)
தோழர் கோகுல் போரா (அஸ்ஸாம்)
தோழர் G.Q.டாண்ட்ரூ (J&K)
தோழர் கோகுல் போரா (அஸ்ஸாம்)
தோழர் G.Q.டாண்ட்ரூ (J&K)
தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள் அனைவருக்கும் கடலூர் மாவட்டச் சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துகள்
ஞாயிறு, 9 நவம்பர், 2014
மத்திய சங்க நிர்வாகிகளுக்கு BSNLEU கடலூர் மாவட்ட சங்கம்வாழ்த்து.
அருமைத் தோழர்களே! நமது BSNLEU-7வது அகில இந்திய மாநாடு கொல்கொத்தாவில் தலைவர், செயலர், பொருளர் பதவிகளுக்கு முறையே, தோழர். பல்பீர் சிங், தோழர்.பி. அபிமன்யு, தோழர்.சைபால் மற்றும் நமது தமிழ் மாநிலத்தில் தோழர். எஸ்.செல்லப்பா உதவிச்செயலர் உள்ளிட்ட அனைத்து மத்திய சங்க நிர்வாகிகளுக்கும் நமது கடலூர் மாவட்ட சங்கம் தனது உளப் பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
என்றும் தோழமையுடன்
தோழர்.K.T.சம்பந்தம்
ஞாயிறு, 2 நவம்பர், 2014
ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மத்திய அமைச்சருடன் சந்திப்பு கல்வி முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்திட நிர்ப்பந்தம்
ஆர்எஸ்எஸ்
அமைப்பின் மூத்த தலைவர்கள் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்
ஸ்மிருதி இரானியை சந்தித்தனர். அந்த சமயத்தில் அவர்கள் இந்தியக் கல்வி
முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தியதாகத்
தெரிகிறது.தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக-வின் தலைமை அமைப்பாக
விளங்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்கள், சுரேஷ் சோனி மற்றும்
தத்தத்ரேயா ஹோஷாபாலே ஆகிய இருவரும் மத்திய அமைச்சர் இரானியுடன் தற்போதைய
கல்வி முறை குறித்து விவாதித்து, இதனை மாற்றி அமைத்திட வேண்டும் என்கிற
தங்கள் பரிந்துரைகளையும் அளித்துள்ளார்கள் என்று தெரிகிறது. ஆர்எஸ்எஸ்
இயக்கம் எவ்வாறு இந்துத்துவா என்னும் மதவெறிக் கொள்கையை முன்னெடுத்துச்
செல்வதற்கு உதவிடும் வகையில் கல்வி அமைப்பின் கீழ் மத்திய அரசு மற்றும்
மாநில அரசுகளின் வரலாறு மற்றும் பாடத் திட்டங்களில் இந்துத்துவாக்
கருத்துக்களைத் திணித்திடத் துணிந்துள்ளத
சமீபத்தில் மத்திய
அரசின் மூத்த அமைச்சர்களுடன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்கள்
சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்எஸ்எஸ்-க்கும் அரசாங்கத்திற்கும்
இடையே மிகவும் சிறந்த முறையில் ஒருங்கிணைப்பினை மேற்கொள்வதற்கான ஆலோசனைகள்
முன்வைக்கப்பட்டன.ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் தீனனாத் பத்ரா தலைமையில்
இயங்கிவரும் சிக்ஷா பச்சாவோ அந்தோலான் சமிதி, “இந்தியாவின் மாண்புகளை’’ப்
பிரதிபலிக்கும் வகையில் பள்ளிப் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதற்கான
ஆலோசனைகளை அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டிருந்தது. மோடி முதலமைச்சராக இருந்த
குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே தீனனாத் பத்ராவின் புத்தகங்கள்
கட்டாயமாக்கப்பட்டுவிட்டன. இதற்கு எதிராக நாடு முழுதும் உள்ள கல்வியாளர்கள்
மற்றும் அறிஞர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில்
ஆர்எஸ்எஸ் இயக்கத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்புள்ள யோகா குரு ராம்தேவ்
என்று அழைக்கப்படும் சாமியாரும் கல்வி அமைப்பை “இந்தியமயமாக்கும்’’
விதத்தில் ஒரு புதிய தேசியப் பள்ளி ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் என்று
கோரியிருக்கிறார். இத்திட்டத்திற்கு மோடியின் ஆதரவு கிடைக்கும் என்று
நம்பப்படுகிறது. இவர்கள் அளிக்க இருக்கும் பாரதிய இடைநிலைக் கல்வி ஆணைக்
குழுவின் பாடத்திட்டங்கள், பண்டைக் காலத்துக் குருகுலக் கல்வி முறையுடன்
நவீனக் கல்வி முறையைக் கலந்து போதிப்பதைக் குறிக்கோளாகக்
கொண்டிருக்கின்றனவாம்.
நன்றி தீக்கதிர் 02.11.2014 பரங்கிப்பேட்டையில் தனியார் நிறுவனம் அமைவதால் மக்களுக்கு பாதிப்பு தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ கடிதம்
சிதம்பரம்
சட்ட மன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:கடலூர்
மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஐ.எல் - எப்.எஸ் என்ற தனியார்
நிறுவனம் அமைந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் ``மக்களுக்காகத்தான்
திட்டங்களே தவிர - திட்டங்களுக்காக மக்கள் இல்லை' என்ற முதலமைச்சரின்
அறிவிப்புக்கு விரோதமாக இத்தொழிற்சாலைக்கு பல சலுகைகள் அளித்து வருவது
வேதனையளிக்கிறது.இந்தத் தொழிற்சாலை கனரக வாகனங்கள் கிராம சாலைகள் வழியே
சென்றதால் கரிகுப்பம் - புதுகுப்பம் சாலை, கரிகுப்பம் கிராம சாலைகள்,
கரிகுப்பம் மற்றும் பஞ்சங்குப்பம் பாலம், பஞ்சங்குப்பம் - புதுகுப்பம்
சாலை, பெரியபட்டு - புதுச்சத்திரம் கடற்கரை சாலைகள் அனைத்தும் சேதமடைந்து
மக்கள் வாகனங்களில் செல்லமுடியவில்லை.
புதுகுப்பம் - கரிகுப்பம்
சாலையை அடைத்து காம்பவுண்டு சுவர் எழுப்புவதால் புதுகுப்பம் மக்கள் 4 கி.மீ
சுற்றிவரவேண்டியுள்ளது. மேலும் கடல் அலைகள் எழும்பும் நேரத்தில்
ஊரிலிருந்து வெளியேற முடியாமல் கிராமமே அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கரிகுப்பம், பஞ்சங்குப்பம், புதுகுப்பம் ஆகிய கிராமங்களின் சுடுகாடும்
சுடுகாட்டு பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.ராட்சச குழாய்க்
கிணறுகளால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் இப்பகுதியில் சுமார் 50
கிராமங்களில் குடிநீர் பாதித்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறும் நிலை
ஏற்பட்டுள்ளது.கரிகுப்பம் கிராமத்தை சுற்றிலும் முள்வேலி அமைந்துள்ளதால்
கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் கழிப்பிட வசதியின்றி சொல்லொண்ணா
கொடுமைக்குள்ளாகியுள்ளனர். மேலும் அனல் மின்நிலையம் செயல்படும் போது
நிலக்கரி துகள்கள் குடிசை வீடுகளில் படிந்து மக்களின் உணவு மற்றும்
குடிநீர் போன்றவற்றை பாதிப்பதோடு சுகாதார கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பலதலைமுறைகளாக
விவசாயிகள் அனுபவித்து சாகுபடி செய்துவரும் அரசு புறம்போக்கு நிலங்களை
விவசாயிகளுக்கு தெரியாமலேயே கம்பெனிக்கு தாரைவார்த்திட மாவட்ட நிர்வாகம்
ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறிகிறோம். சாதாரண ஏழை விவசாயிகள் வாழ்விழந்து
தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.விவசாயத்தையும் விவசாய கூலி வேலையையும்
இழந்துள்ள கிராமங்களுக்கு கம்பெனி நிர்வாகம் கட்டுமான பணிகளில்கூட வேலை தர
மறுத்து வருகிறது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள தனியார்
நிர்வாகத்திற்கு அனைத்து சலுகைகளையும் வழங்கி வரும் தமிழக அரசு சுமார்
15க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த ஏழை மக்களின் வேதனைகளை செவிமடுக்க
மறுத்து வருகிறது. மேற்கண்ட பிரச்சனை குறித்து மூன்று முறை தமிழக மின்துறை
அமைச்சரின் முன்நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பொதுமக்களின்
நியாயமான கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தது.
ஆனால் ஏற்றுக்கொண்ட ஒன்றைக்கூட நிர்வாகம் நிறைவேற்றி தர
மறுத்துவிட்டது.மீண்டும் அமைச்சர் தலையிட்டு தீர்வுகாண பலமுறை
வலியுறுத்தியும் இப்போதுவரை நடைபெறவில்லை.
எனவே கீழ்கண்ட
கோரிக்கைகளை நிறைவேற்றி கிராமப்புற ஏழை மக்களது வாழ்வை பாதுகாத்திடுமாறு
கேட்டுக்கொள்கிறேன்.கரிகுப்பம் கிராமத்தில் குடிசை வீடுகளை மாற்றி அரசு
மற்றும் கம்பெனி நிர்வாகத்தின் பங்களிப்போடு தரமான வீடுகளை - பசுமை
வீடுகளுக்கு நிகரான வீடுகளாக கட்டிக்கொடுக்க வேண்டும். தற்போது அரசின்
மானியம் மற்றும் கம்பெனியின் பங்களிப்போடு தரகுறைவாக கட்டப்படும் கழிவறைகளை
தரமானதாக கட்டித்தர வேண்டும். மிலி-திஷி தமிழ்நாடு பவர் கம்பெனி
லிமிடெட் அமைந்து வரும் இடத்தில் விவசாய தினக்கூலி வேலைசெய்து பிழைத்து
வந்த கிராம மக்கள் தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும்
இழந்துவிட்டனர். ஆகவே இந்த கிராமங்களில் உள்ள அனைத்து
குடும்பத்தினருக்கும் தற்போது நடைபெறும் கட்டுமான பணிகளில் வேலையளிக்க
வேண்டும்.மேற்கண்ட நிறுவனத்திற்கு நிரந்தர பணியாளர்களை தேர்வு செய்யும்
போது இப்பகுதிகளில் உள்ள படித்து பட்டம் பெற்ற தகுதியான இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
இக்கிராமங்களை சேர்ந்த
பெண்கள் நிறுவனம் அமைந்துள்ள இடங்களிலிருந்து முன்பு சவுக்கை, முந்திரி,
பனை மற்றும் இதர மரங்களிலிருந்து கிடைக்கும் விறகுகளை கொண்டு உணவு சமைத்து
வந்தனர். தற்போது விறகுகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே அனைத்து
குடும்பங்களுக்கும் இலவச எரிவாயு சிலிண்டருடன் கூடிய அடுப்புகள் வழங்க
வேண்டும்.பள்ளி மாணவர்கள் படிப்புக்கு உதவிடும் வகையில் கரிகுப்பம்,
பஞ்சங்குப்பம், கொத்தட்டை கிராமங்களில் பள்ளி கட்டிடங்கள் கட்டித்தர
வேண்டும். கொத்தட்டையில் மேல்நிலைப்பள்ளி அமைவதற்கு தேவைப்படும் கோவில்
நிலத்திற்கான கிரய தொகையை நிறுவனம் அரசுக்கு செலுத்தி நிலத்தை பெற்றுத்
தரவேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்துவந்த
விவசாயிகளுக்கு உரிய நட்ட ஈட்டை நிறுவனத்திடம் பெற்றுத்தர
வேண்டும்.நிறுவனத்தின் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு கடல்நீரை
நல்லநீராக மாற்றி தொழிற்சாலைக்கு பயன்படுத்த வேண்டும். மாறாக ஆழ்குழாய்
அமைத்து நிலத்தடிநீரை உறிஞ்சுவது தடைசெய்யப்பட வேண்டும். புதுகுப்பம்
பிரதான சாலையை அடைப்பதும் சுடுகாடுகளை ஆக்கிரமிப்பதும் தடைசெய்யப்பட
வேண்டும்.நிறுவனம் வரும் பகுதிகளில் உள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரம்
அடியோடு பாதிக்கப்படுகிறது.
அவர்களின் மீன்பிடி உரிமை பறிக்கப்படும்
அபாயம் எழுந்துள்ளது. அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை உறுதி செய்திட
கீழ்காணும் ஏற்பாடுகள் அவசியமாகிறது. 1. கடற்கரையோரம் எந்த கட்டுமான
பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. 2. குளிர்சாதன வசதியுடன் கூடிய மீன்
பதப்படுத்தும் நிறுவனம் துவங்குதல். 3. புதுகுப்பம், புதுப்பேட்டை,
வேளங்கிப்பட்டு, சின்னூர் ஆகிய கிராமங்களிலிருந்து நகர்புறங்களுக்கு செல்ல
பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்திட வேண்டும்.நீதிமன்ற வழக்குகள் உள்ள
நிலங்கள் சம்பந்தமாக நியாயமான தீர்வுகளை காணவேண்டும்.இப்பகுதி
கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு குடிநீர்
மேல்நிலைத் தொட்டி மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைத்துத்
தரவேண்டும்.இக்கிராமங்களை சேர்ந்த பெண்கள் தங்களுடைய தினக்கூலியை நம்பி
அவர்கள் நடத்திவந்த சுயஉதவி குழுக்களின் வழியாக பல வங்கிகள் மற்றும் அரசு
சாரா தொண்டு நிறுவனங்களில் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தி வந்தனர்.
தற்போது
அது முழுமையாக முடங்கி உள்ளது. எனவே இப்பகுதி பெண்கள் முன்னேற்றத்திற்கு
தேவையான கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மற்றும் சிறுதொழில்
அமைப்பதற்கு பயிற்சிகள் அரசுடன் இணைந்து மானிய கடன் வசதி ஏற்படுத்தி
தரவேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தாங்கள் அனல் மின்நிலைய நிறுவனத்துடன்
உரியமுறையில் பேசி நிறைவேற்றி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க
வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தீக்கதிர் 02.11.2014
மோடியின் இரண்டு முகங்கள்
விஞ்ஞானத்திற்குப்
புறம்பாக ஒரு பிரதமரே பேசுகிறார்; அதை எந்தவொரு விஞ்ஞானியும் மறுத்துப்
பேசவில்லை. இவர்களது மவுனம் எனக்கு புரியாத புதிராகவே உள்ளது. ஊடகங்களின்
மவுனம் என்னை ஆழமாக தொந்தரவு செய்கிறது என்கிறார் பிரபல தொலைக்காட்சி
வர்ணனையாளரும், `ஹெட்லைன்ஸ் டூடே’செய்திச்சேனலின் நிகழ்ச்சித்
தொகுப்பாளருமான இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் கரன் தாப்பர்.
வரலாற்றுக்கு
முந்தைய புராண காலங்களிலேயே இந்தியா மரபணு விஞ்ஞானத்திலும், பிளாஸ்டிக்
அறுவை சிகிச்சையிலும் சிறந்து விளங்கியது என்று பிரதமர் மோடி பேசியிருப்பது
அறிவுக்கு புறம்பானது.நாம் நமது பிரதமரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம்?
இது வியந்தோதும் அலங்கார, ஆச்சரியக் கேள்வியல்ல. நேர்மை, அர்ப்பணிப்பு,
கடமை தவறாமை, நிர்வாகத் திறமை, ஓரளவுக்கு அறிவுகூர்மை ஆகியவற்றை ஒரு
பிரதமரிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் இவை
மட்டும்தானா எல்லாம்?மற்ற அனைத்து குணங்களுக்கு ஈடாக முக்கியத்துவம்
வாய்ந்தது பகுத்தறிவு. இதையும் ஒரு பிரதமரிடம் நாம் எதிர்பார்க்கிறோம்.
நம் பிரதமர் சொல்வது, அல்லது செய்ய நினைப்பது பற்றி நாம் எப்போதும்
ஒப்புக் கொள்ளப் போவதில்லை. ஆனாலும் அவரின் சிந்தனைகள், செயல்கள்
அறிவுப்பூர்வமானதாகவும், நன்கு பரிசீலிக்கப்பட்டதாகவும், நம்பகத் தன்மை
வாய்ந்த தாகவும் நாம் அனுமானித்துக்கொள்கிறோம். அவர்களது முடிவு தவறாகப்
போகும் போது கூட (பெரும்பாலும் அப்படித்தான்), பொது அறிவுக்கு குந்தகம்
விளைவிக்கும் வகையில் அவர்கள் எதுவும் செய்து விட மாட்டார்கள் என்றே நாம்
நம்புகிறோம்.இந்த இடத்தில்தான் நரேந்திர மோடியிடம் சில கேள்விகள் எனக்கு
உள்ளது.
சர் எச்.என்.ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை மற்றும்
ஆய்வு மையம் ஒன்றை கடந்த சனிக்கிழமை அவர் திறந்து வைத்தார். அப்போது அவர்,
“மகாபாரதத்தில் கர்ணன் தாயின் கருவறையிலிருந்து பிறந்தவரல்ல என்று
கூறப்பட்டுள்ளது. அதாவது இதிகாசம்எழுதப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் மரபணு
விஞ்ஞானம் இருந்து வந்துள்ளதை இது காட்டுகிறது. நாம் விநாயகரை
வணங்குகிறோம். அவரது மனித உடலில் யானையின் தலையைப் பொருத்திய பிளாஸ்டிக்
சர்ஜன்கள் அப்போது இருந்திருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.மோடியின்
இந்த நம்பிக்கையை பல இந்துக்களும் நிச்சயம்பகிர்ந்து கொள்வர் என்பதில்
சந்தேகமேயில்லை. ஒவ்வொருவரும் எதை நம்புவது என்பது அவரவர்களின்
தனிப்பட்டசுதந்திரத் தெரிவு.
ஆனால் ஒரு பிரதமர் புராணக் காலத் தில்
மரபணு விஞ்ஞானம் இருந்ததற்கு கர்ணனின் பிறப்பையும், விநாயகர் உருவத்திற்கு
பிளாஸ்டிக் சர்ஜன்கள் அக் காலத்தில் இருந்தனர் என்றும் நம்பிக்கையை
உண்மையாகக் கூறுவதில், அதுவும் ஒரு மருத்துவமனையின் தொடக்க விழாவில்,
இவ்வாறு கூறுவது - முற்றிலும் வேறு விஷயம்.ஏன்?விஞ்ஞானச் சாதனைகளுக்கு
புராணங்களை இப்படிப் பயன்படுத்துவது அறிவுக்குப் புறம்பானது. முதலில்,
புராணம் உண்மை என்பதன் மீதான நமது நம்பிக் கையைத் தவிர இதற்கு வேறு
நிரூபணங்கள் இல்லை.இரண்டாவதாக, நீங்கள் உயர்த்திப் பிடிக்கும் இத்தகைய
விஞ்ஞான அறிவு மற்றும் சாதனைகள் இருந்து பிறகு தொலைந்தது என்பதற்கோ, அல்லது
நீண்டகாலத்திற்கு முன்பே இது மறக்கப்பட்டுவிட்டது என்பதற்கோ, இவை
எப்போதாவது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதற்கான ஆதாரப்பூர்வ
பதிவுகளின் சுவடுகள் கூட இல்லை எனும்போது அதற்கு எப்படி நியாயம் கற்பிக்கப்
போகிறீர்கள்?அனைத்தையும் விட மோசமானது, மோடியின் இத்தகைய பார்வைகள்
தீனநாத் பத்ரா என்பவரின் பார்வை களை எதிரொலிப்பதே.
இவரது
புத்தகங்கள் தற்போது குஜராத் மாநிலத்தில் 42,000 பள்ளிகளில் பாடத்
திட்டத்தில்சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்ட நூல்களில் குந்தி
மற்றும் கவுரவர்கள் காலத்திலேயே `ஸ்டெம் செல்’ ஆராய்ச்சி இருந்தது என்றும்,
மகாபாரதக் காலக்கட்டத்திலேயே தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டது என்றும்,
வேதகாலத்திலேயே மோட்டார் வாகனம் இருந்தது என்றும்கூறப்பட்டுள்ளது.
வெகுசிலரே இது அறிவுகெட்டத்தன மானது என்று மறுப்பார்கள். ஆனால் இதே போன்ற
வாதத்தை புராணக் காலத்தில் மரபணு விஞ்ஞானம் இருந்தது என்றும் பிளாஸ்டிக்
சர்ஜரி இருந்தது என்றும் ஏன் வைக்க வேண்டும்? அப்படி வைக்கும் போது
இதனையும் அறிவுகெட்டத் தனமானது என்று ஏன் கூறக்கூடாது? இதற்கு மேலும்
என்னிடம் கூறுவதற்கு 2 விஷயங்கள் உள்ளன.பிரதமர் மோடி ஸ்மார்ட் சிட்டிகளை
உருவாக்க வேண்டும் என்கிறார், கல்விக்கான தேவையை வலியுறுத்துகிறார்.
செவ்வாய்
கிரக சாதனை கண்டு பெருமை கொள்கிறார். டிஜிட்டல் இந்தியா மேல் அவருக்கு
நம்பிக்கை இருக்கிறது, புல்லட் ரயில்களை இறக்குமதி செய்யவேண்டும்
என்கிறார். அதி தொழில்நுட்ப ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும்
என்கிறார். இவையெல்லாம் 21ம் நூற்றாண்டு லட்சியங்கள்.இவையெல்லாம் அவர்
வியந்து போற்றுகிற, விஞ்ஞானப்பூர்வ மாக சரி பார்க்க முடியாத, புராணக்
கதைகளுடன் எப்படி ஒத்துப் போகும்? இது முரண்பாடல்லவா?இரண்டாவதாக, கிரேக்க
புராணங்களில் மனித-குதிரை வடிவ புராண உயிரிகளும், மனித உடலில் எருதின் தலை
உள்ள புராண உயிரிகளும், பெர்சியர்களிடத்தில் உடல், வால், பின்கால்கள்
ஆகியவை சிங்கத்துடையதாகவும், தலையும், இறகுகளும் பருந்தினுடையதாகவும் உள்ள
கற்பனை உருவம் உள்ளது.
பிரித்தானியர்களிடத்தில் யூனிகார்ன் உள்ளது.
மேலும் தேவதைக் கதைகளில் கடற்கன்னி, மனித உருவத்திலிருந்து ஓநாய்
உருவத்திற்கும் பின்பு மனித உருவத்திற்கும் மாறும் உயிரிகள் இருக்கின்றன.
மோடியின் நம்பிக்கை அளவுகோல்களின் படி பார்த்தால் மேற்கூறியவையும்
உண்மையில் இருந்தனவென்றே ஆகும். ஆனால் யாராவது ஒருவர் இதனை நம்ப முடியுமா?
அல்லது நம் கனவுகளில் இருக்கிறதோ? அல்லது நாம் குழந்தைகளாக இருக்கும் போது
இந்த நம்பிக்கை இருக்குமோ என்னவோ?பிரதமர் மோடியின் இத்தகைய கருத்திற்கு
என்னுடைய எதிர்வினை மேலும் ஒரு புள்ளி நகர்கிறது. இதுதான் நான் அவர்
கருத்தின் மீது வைக்கும் மிக முக்கியமான விமர்சனம் ஆகும். அரசியல் சாசனச்
சட்டம் 51 ஹ(h) பிரிவின் படி, ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை விஞ்ஞான
அறிவை வளர்ப்பதாகும். ஆனால் ஒரு பிரதமரே விஞ்ஞானத்திற்கு புறம்பான
விஷயங்களை எப்படி ஒரு கருத்தாக முன் வைக்க முடிகிறது.எனவே பிரதமரின்
மருத்துவமனை திறப்பு விழாப் பேச்சு தெளிவாக, மறுப்பதற்கிடமின்றி அரசியல்
சாசனத் தேவைகளுடன் முரண்படுகிறது.
உண்மையில், மோடி இதனை ஏற்க
மறுக்கமாட்டார் என்று நான் நம்புகிறேன். இவையெல்லாம் தொந்தரவு செய்யும்
சந்தேகங்கள், இதற்குக் காரணமாக ஒரு பிரதமரே இருப்பது மேலும்
கவலையளிப்பதாகும். இறுதியாக, பிரதமரின் இந்தப் பேச்சு ஊடக கவனம் பெறவில்லை
என்பது எனக்கு சோர்வளிக்கிறது. அதைவிட எந்த ஒரு விஞ்ஞானியும் மோடியின்
இத்தகைய கருத்துகளை மறுக்கவில்லை என்பது. இவர்களது மவுனம் எனக்கு புரியாத
புதிராகவே உள்ளது. ஊடகங்களின் மவுனம் என்னை ஆழமாகத் தொந்தரவு செய்கிறது.
வேண்டுமென்றே இந்த விவகாரம் ஒன்றுமில்லாமல் செய்யப்பட்டதோ என்று கூட
எனக்குத் தோன்றுகிறது.
(இந்து நாளிதழில் நவம்பர் 1 அன்று வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம்)
வியாழன், 30 அக்டோபர், 2014
“மேக் இன் இந்தியா” யாருக்காக?
சமீபத்தில்
இந்தியப் பிரதமர் திரு வாளர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக
“மேக் இன் இந்தியா” என்ற முழக்கத்தை முன் வைத்து 500 இந்திய பெரு நிறுவன
அதிபர்களின் மத்தியில் உரையாற்றியுள்ளார். “மேக் இன் இந்தியா” கவர்ச்சியான
முழக் கந்தான். எதை உருவாக்கப் போகி றோம்?யாருக்காக உருவாக்க போகிறோம்?
என்பதெல்லாம் மிகப் பெரும் கேள்விகள்தாம். வெற்று முழக்கங்களை கனஜோராக
உருவாக்குவதில் உள்ள பெரிய அனு கூலம், அம்முழக்கங்களின் ஊடேபாதகமான
உண்மைகளை முழுக்கமறைத்து, ஒரு மாய பிம்பத்தை கட்டமைத்து விடுவது என்பது
தான்.உடல் முழுவதும் இயந்திர பாகங்கள் சுழலும் சிங்கத்தின் படத்தை “மேக்
இன் இந்தியா” கொள்கைக்கு சின்னமாக அறி முகப்படுத்திய மோடி “இது சிங்
கத்தின் முதல் அடி” என்றார்.
அதாவது இந்தியா எனும் சிங்கம்
இப்போதுதான் தன்னை சிங்கமாக பாவித்து, முதல் அடியை எடுத்து வைத்திருக்
கிறது என்று அவருக்கே உரிய பாணியில் நீட்டி முழக்கி, நுட்பமான உடல்
மொழியால் பிரஸ் தாபித்தார். உண்மையில் பெரு முதலாளிகளின் உலகம் இவரைஎந்த
நோக்கத்திற்காக முன்னிலைப் படுத்தி பிரதமர் ஆக்கியதோ, அந்தநோக்கத்தை
நிறைவேற்ற மோடிஎடுத்து வைக்கும் முதல் தப்படி தான் இது.இந்நிகழ்ச்சியில்
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத்தலைவர் சைரஸ்
மிஸ்ரி, பிர்லா குழுமத் தலைவர் குமாரமங்கலம் பிர்லா, உள்ளிட்ட இந்தியாவின்
500 பெருநிறுவன முதலாளிகள் பங்கேற்றனர்.
இந்தியத் தொழில் துறையின்
எதிர்காலம் இந்த 500 முதலாளிமார்களிடம்தான் உள்ளது. என்ற தோற்றத்தை உரு
வாக்குவதே இதன் நோக்கம், “இந்த நாடு உங்களுடையது, நமது நிறுவனங்கள்
பன்னாட்டு நிறுவனங்களாக மாறவேண்டும், நீங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள்
உலகம் முழுக்க வலம் வரவேண்டும், நம் தேசம்இறக்குமதிகளை நிறுத்திவிட்டு,
ஏற்றுமதிகளை பெருமளவில் மேற்கொள்ள வேண்டும். இதற்கு தடை யாக உள்ள எல்லா
விசயங்களும் அடித்து நொறுக்கப்படும்”என்றும் முழங்கியுள்ளார் மோடி.
அமெரிக்காவில்
இவ்விசயம் குறித்து மிக வெளிப்படையாகவே உரை நிகழ்த்தியுள்ளார் மோடி. “இனி
அரசுகள் தொழில் செய்ய முயற்சிக்கக் கூடாது, அரசுகளின் வேலை தொழில்களுக்கு
உறு துணையாக இருப்பது மட்டுமே” இப்படி உறுதுணையாக இருக்க தற்போதுள்ள
சட்டங்கள் தடை யாக இருக்குமானால் அவற்றை தூக்கியெறியவும் தயாராக இருக்
கிறேன். எனவே தொழில் துவங்க இந்தியா வாருங்கள் , உங்களுக்கு தோதான இந்தியா
தயாராக இருக் குமென உரையாற்றியுள்ளார்.
இந்தியாவில் தேவையற்ற
சட்டங்களாக மோடி கருதுவது, சட்ட புத்தங்களிலாவது இன்னும்உயிரோடு இருக்கும்,
சுரண்டலுக்கு எதிரான சட்டங்கள் நீர், நிலம், வனம், சுற்றுச் சூழல்
பாதுகாப்பு சார்ந்தும், தொழிலாளர் நலன் சார்ந்தும் இருப்பவைதான். பெரு
நிறுவனங்களின் எல்லையற்ற கொள்ளைக்கு தடையாக இருக்கும் இச்சட்டங்களைத்தான்
நீக்குவது, அல்லது திருத்தி நீர்த்துப் போக செய்வதற்கான
உத்தரவாதங்களைத்தான் மோடி அமெரிக்காவில் வழங்கியுள்ளார்.மோடி அரசின் தொழில்
மற்றும் ஊக்குவிப்புத்துறை செயலாளர் அமிதாப் காந்த், குழுவின் கையில்
இப்படி தூக்கியெறியக் கூடியவை என்ற பட்டியலில் 22 தொழிலாளர் நலச்சட்ட
விதிகள் உள்ளன.
இந்திய தொழிலாளர் நலச்சட்டங்களின் வரலாறு என்பது
வங்கம், சென்னை மற்றும் மும்பை மாகாணத்தைச் சேர்ந்த உழைப்பாளி மக்களின்
ஒன்று பட்ட இயக்கங்களின் பயனாக உருவானது. நிரந்தர ஊழியர்கள் 100 பேருக்கு
மேல் பணியாற்றும் ஒரு ஆலையை மூட தீர்மானிக்கும் முன் தொழிலாளர் துறையின்
அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதி தற்போது உள்ளது. இந்த விதியை 1000
பேருக்கு மேல் பணியாற்றும் ஆலைக்குத்தான் என திருத்த மோடி அரசு முயல்கிறது.
அதாவது
நோக்கியா போன்ற ஆலையில் 999 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியிருக்கும் நிலை
யில் எந்த அறிவிப்பும் அனுமதியும் இன்றி மூடிவிடலாம் என்பதுதான். தற்போது
அந்த ஆலை மூடப்பட்டு விட்டது.இந்த படுபாதக சட்டத் திருத்தங்களை இந்தியாவில்
நடைமுறைப் படுத்த பாஜக ஆளும் மாநிலமான இராஜஸ் தானில் முன்னோட்டம் பார்க்க
முயன்றுள்ளது மோடி அரசு.இம் மாநிலத்தில் மத்திய தொழிலாளர் சட்டங்களான,
தொழில்துறை தகராறு சட்டம் 1947, ஒப்பந்தத் தொழிலாளர் கட்டுபாடு சட்டம்
மற்றும் தொழிற்சாலை சட்டம் 1948 ஆகிய மூன்று முக்கிய சட்டங்களிலும்
திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. தொழில்துறை யினை தாராளமய மாக்கும்
நோக் கிலேயே இச் சட்டங் களை திருத்தம் செய்துள்ளது இராஜஸ்தான் மாநில அரசு
மேலும் பிரநிதித்துவபடுத்தும் தொழிற்சங்கமாக பதிவு செய்யப்பட வேண்டுமெனில்
தொழிலாளர்கள் 15 சதவீதம் வாக்களித் தால் போதுமென்ற தற்போதைய விதி 50
சதவீதமாக மாற்றப்பட் டுள்ளது.
இதே போல ஒரு நிறு வனத்தில் ஒப்பந்த
தொழிலாளர் சட்டம் அமல்படுத்த வேண்டு மெனில் ஒப்பந்த தொழிலாளர் களின்
எண்ணிக்கை 20 இருந்தால்போதுமென்ற தற்போதைய விதி 100 என்ற அளவில்
உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல தொழிற் சாலை சட்ட அமலாக்கத்திற்கான
தொழிற்கூடங்களின் வரையறை களையும், ஷரத்துக்களையும் மிக மோசமான வகையில்,
தொழிலாளர்களை பாதிக்கும் விதத்தில் திருத்தம் செய்துள்ளது இராஜஸ்தான் மாநில
அரசு.
இதே போல சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான நிலங்களை
கையகப்படுத்தும் சட்ட விதிகளிலும், விவசாயிகளை பாதிக்கும் விதத்திலேயே
திருத் தங்களை செய்துள்ளது இம்மாநில அரசு இவை யாவும் தனியார் அந்நிய
முதலாளிகளின் நலன்களுக்காக தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் அப்பட்டமான
வெளிப்பாடாகும். இந்த நிகழ்ச்சி நிரலைத்தான் நாடு முழுவதும் விஸ்தரிக்க
முயலுகிறது மோடியின் பாஜக அரசு.
- என்.பகத்சிங் ......நன்றி தீக்கதிர் 30.10.2014.
புதன், 29 அக்டோபர், 2014
போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாப்போம்!
ஒப்பந்தத்
தொழிலாளர்களை நியமிப்பதில் பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்கள்
தற்போது போட்டிபோட்டு வருகின்றன. தற்சமயம் அநேகமாக அனைத்துத் தொழிற்
பிரிவுகளிலுமே 50 சதவீதத்திற்கும் அதிக மானவர்கள் ஒப்பந்த மற்றும் கேசுவல்
தொழிலாளர்கள்தான். நவரத்தினா பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி
பழுப்புநிலக்கரிக் கார்ப்பரேஷனில் சென்ற செப்டம்பர் 3லிருந்து கடந்த 45
நாட்களுக்கும்மேலாக 14 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர் கள் காலவரையற்ற
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இங்கே 12 ஆயிரம் பேர்கள்
மட்டுமே நிரந்தரத்தொழிலாளர்கள். இவ்வாறு ஒப்பந்தமுறை யில் வேலைபார்க்கும்
தொழிலாளர்களில் பலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாகபணியாற்றி வருகிறார்கள்.
உச்சநீதிமன்றத் தின் கட்டளைப்படி ஊதிய உயர்வு மற்றும் முறைப்படுத்தல்
கோரியே இவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு நாட்டில்
சுரண்டல் என்பது மிகவும் மூர்க்கத்தனமாக உள்ள நிலையில்தான்,
வேலையளிப்பவர்களும் அவர்களின் ஊதுகுழல்களும் தொழிலாளர் சட்டங்களில் மேலும்
சலுகைகள் வேண்டும் என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நெய்வேலி
ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத் தத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில்
முந்தைய பிரதமர் அவர்கள் அத்தகைய சுரண்டலை நியாயப்படுத்தியதானது வெட்கக்
கேடானதாகும். ஒப்பந்தத்தொழி லாளர்கள் நவரத்தனா கம்பெனியில் பயன் பாடுகள்
மறுக்கப்படுவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று அவரிடம்
சுட்டிக்காட்டியபோது, அவர், அவ்வாறு இருப்பதால்தான் அது நவரத்தனா
நிறுவனமாக வளர்ந்திருக்கிறது என்று கூறினார். தற்போதைய அரசாங்கம் இதில்
மேலும் அரக்கத்தனமாக இருந்திட விரும் புகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களில்
திருத்தங்களைக் கொண்டுவர நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுவிட்டன. 40 தொழிலாளர் களுக்கு மேல் பணிசெய்தால்தான் சிறு
தொழில்கள் என்ற அமைப்பின்கீழ் வரும்என்பதுபோன்று புதிய சட்டம் கொண்டுவரப்பட
விருக்கிறது.
மேலும் இத்தொழில் பிரிவுகளுக்கு தொழிற்சாலை
சட்டம்,தொழில் தகராறுகள் சட்டம், இஎஸ்ஐ,இபிஎப் மற்றும் மகப்பேறு மருத்துவப்
பயன்பாடு சட்டம் போன்று 14 தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு
அளிக்கப்பட இருக்கின்றது. இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் அநேகமாக
அனைத்துத் தொழில் பிரிவுகளுமே இச்சட்டத்தின்கீழ் தப்பித்துக் கொள்ள
வழியுண்டு. இவ்வாறு நாட்டிலுள்ள தொழிலாளர்களில் பெரும்பாலான வர்களை
தொழிலாளர்நலச் சட்டங்களின் அதிகார வரம்பெல்லைக்குள்ளிருந்து விலக்கி
வைப்பதற்கே அரசாங்கம் இந்த வேலைகளில் இறங்கி இருக்கிறது. மாறாக இத்தகைய
`சிறிய’ தொழிற்பிரிவுகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சில அற்பப்
பயன்களே அளிக்கப்பட இருக்கின்றன.
இபிஎப் மற்றும் இஎஸ்ஐ போன்ற
திட்டங்கள் கூட ஐஆர்டிஏ முறைப்படுத்தியுள்ள பங்களிப்பு ஓய்வூதிய மற்றும்
நலத் திட்டங்களின் (உடிவேசiரெவடிசல யீநளேiடிn யனே hநயடவா ளஉhநஅநள)கீழ்
மாற்றப்பட்டிருக்கின்றன. ஒரு விஷயம் மிகவும் தெளிவாகத்தெரிகிறது. மோடி
அரசாங்கம் தற்போ திருந்து வரும் வேலையளிப்பவர்களை மட்டும் அல்ல, இனி
முதலீடு செய்ய விருக்கும் முதலீட்டாளர்களையும் முகஸ்துதி செய்வதற்காகவும்
அவர்களின்கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய விதத்திலும், அனைத்துவிதமான `தடை
களை’யும் அகற்றிடவும், `முதலீட்டை’ எளிமையாக ஈடுபடுத்துவதற்கான
நடவடிக்கைகளிலும் இறங்கி இருக் கிறது. தங்கள் குறிக்கோளை எய்து வதற்காக
தான் மேற்கொள்ளும் தொழி லாளர் விரோத நடவடிக்கைகள் அனைத்தையும், வஞ்சகமான
வார்த்தை ஜாலங்களால் மூடி மறைத்திடவும், அவற்றை தங்களுடைய ஊடகங்களின்
வாயிலாக சந்தைப் படுத்திடவும் இறங்கியுள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்களில்
சிற்சில திருத்தங்கள் போதாது, மாறாக அனைத்துத் தொழிலா ளர் நலச்
சட்டங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கார்ப்பரேட் ஊடகங்க ளில்
ஒருசில ஏற்கனவே கோரத் தொடங்கிவிட்டன.
செயலில் நவீன தாராளமயம்
நாட்டின்
தொழிலாளர் வர்க்கம் நவீன தாராளமயக் கொள்கைகளின் நாசகர விளைவுகளை கடந்த 24
ஆண்டு காலமாகவே அனுபவித்து வருகின்றனர். நவீன தாராளமய யுகத்தில் ஒப்பந்தத்
தொழிலாளர் மற்றும் கேசுவல் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் விளைவாக
பல்வேறு துறைகளிலும் நடந்துவரும் சுரண்டலின் தன்மை குறித்து பலரால்
இன்னமும் சரியானமுறையில் புரிந்துகொள்ள முடியவில்லை. மத்திய-மாநில
அரசாங்கங்களின் பல் வேறு திட்டங்களின் கீழ் கோடிக் கணக்கான தொழிலாளர்கள்,
இவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள்,தாங்கள் தொழிலாளர்கள் என்ற அங்கீகாரம்
இல்லாமலேயே, வாழ்க்கைக் கான பிழைப்பூதியம் கூட அளிக்கப் படாமல், வேலை
செய்திட நிர்ப்பந்திக் கப்பட்டிருக்கிறார்கள். கல்வியாளர்கள் நடத்திடும்
விவாதங்களில் எல்லாம், நாட்டில் உள்ள தொழிலாளர்களில் 94-95 சதவீதத்தினர்
முறைசாராத் தொழிலாளர்களாக இருப் பது குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கப்
படுகிறது.
விவாதங்களின் முடிவில் முறைசாராத் தொழிலாளர்கள் அனைவரும்
நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்றப்பட வேண்டும் என்றுதான் எப்போதுமே
தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே சர்வ தேச
தொழிலாளர் ஸ்தாபனமும் இப்பிரச்சனை தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கிறது.
2015இல் நடைபெறவிருக்கும் தன்னுடைய வருடாந்திர மாநாட்டில் இதுதொடர்பாக சில
முடிவுகளும் எடுக்க இருக்கிறது. ஆனாலும் எதார்த்த நிலை என்னவெனில், நம்
நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளில் முறை சாராத் தொழிலாளர்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதேயாகும். இதற்கு ஒரே விதிவிலக்காக
லத்தீன்அமெரிக்க நாடுகள் இருந்து வரு கின்றன.
இவை ஏகாதிபத்தியத்தின்
கட்டளைக்கிணங்க நடைமுறைப்படுத்தப் பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கைகளை
எதிர்த்துப் போராடிக் கொண்டிருக் கின்றன. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம்
அக்டோபர் 16 அன்று வெளியிட் டுள்ள ஓர் அறிக்கையின்படி, லத்தீன்
அமெரிக்காவில், `2009க்கும் 2013க்கும் இடையே முறைசாராத் தொழிலாளர்
எண்ணிக்கை வெறும் 2.6 சதவீதம் மட்டுமே (மொத்த வேலைவாய்ப்பில் 46.6 சதவீதம்)
அதிகரித்துள்ள அதே சமயத் தில், நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை 12.7
சதவீதம் (மொத்த வேலைவாய்ப்பில் 53.4 சதவீதம்) வளர்ந்திருக்கிறது என்று
குறிப்பிட்டிருக்கிறது. நம் நாட்டுடன் ஒப்பிடுகையில் என்னே
வித்தியாசம்!மாபெரும் நம் ஜனநாயக நாட்டில்இன்னமும் ஸ்தாபனம்
அமைத்துக்கொள்வதற்கான உரிமையும், கூட்டுபேர சக்தியுமே உத்தரவாதப்படுத்தப்பட
வில்லை. இத்தகைய நம் நாட்டில்`உழைப்பே வெல்லும்’ போன்ற
வஞ்சகத்திட்டங்கள் நாட்டிலுள்ள தொழிலாளர் களுக்கு உதவப் போவதில்லை.
உண்மையில், ஸ்தாபனம் அமைத்துக்கொள்வதற் கான உரிமைக்காவும், கூட்டு பேர
சக்திக்காகவும் நம் அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்காக சர்வதேச தொழிலாளர்
ஸ்தாபனம் 87 மற்றும் 98 கன்வென்ஷன்களை நிறைவேற்ற வலியுறுத்தி நாம் நடத்தும்
போராட்டங்களுடன் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும் தன்னைஇணைத்துக்
கொண்டிருக்கிறது.
தொழிலாளர்களின் நலன் காத்திட,நாட்டில் ஏராளமான
சட்டங்கள் இருந்த போதிலும்கூட, தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது கட்டாயம்
என்ற முறையில் நாட்டில் எந்தச் சட்டமும் கிடையாது. பின் எப்படி உலகின்
மாபெரும் ஜனநாயக நாடு என்று நம்மை நாம் பீற்றிக் கொள்கிறோம்? நாட்டில்
வெறும் 31 சதவீத வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு
வந்துள்ளவர்களின் ஆட்சியில், தொழிலாளர்கள் தங்களுக்கென்று ஒரு ஸ்தாபனத்தை
ஏற்படுத்திக்கொள்ள முடியாத நிலையும், ரகசிய வாக்கெடுப்பு மூலம் தங்கள்
ஸ்தாபனத்தை அங்கீ கரிக்கும் நிலையும் இல்லாதிருப்பது ஏன்? இத்தகு கேள்விகள்
அனைத்தும் எழுப்பப்பட்டு விரைவில் விடைகள் காணப்பட வேண்டியிருக்கின்றன.
இன் றைய தினம் ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்து விட்டுள்ள தாக்குதலின் உண்மையான
குணத்தைப் புரிந்துகொள்ள இத்தகைய கேள்விகளை நாம் எழுப்பி அவற்றிற்கு விடை
காண வேண்டியதும் நம் பணியாகும்.
தொழிலாளர்கள் எதிர்த்திட வேண்டும்
ஆட்சியாளர்களின்
தாக்குதல்களை தொழிலாளர் வர்க்கம் எதிர்த்திட வேண்டும், எதிர்த்திடும்.
அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் மற்றும் தேசிய மட்டத்திலான
சம்மேளனங்களும், பல்வேறு மத்திய-மாநில ஊழியர் அமைப்புகளின் கூட்டுமேடை,
தங்கள் பத்து அம்சக் கோரிக்கைகளுக்காகப் போராடுவதுடன், ஆட்சியாளர்கள்
தொழிலாளர் நலச் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு விரோதமான திருத்தங் கள்
கொண்டுவந்திருக்கும் பிரச்சனையையும் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டுள்ளது.
செப்டம்பர் 15 அன்று நடைபெற்ற தேசியசிறப்பு மாநாட்டின் அறைகூவலுக்
கிணங்க, அனைத்து மாநிலங்களிலும் மாநில அளவிலான, பிராந்திய அளவி லான
மற்றும் உள்ளூர் வடிவிலான பிரச் சாரங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வரு
கின்றன. டிசம்பர் 5 அன்று அனைத்து மாநிலத் தலைநகர்களிலும் தில்லியிலும்
நடைபெறவிருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களுக்காகத் தயாரிப்புப் பணிகளும்
நடைபெற்று வருகின்றன. தொழிலாளர் வர்க்கம் தங்களின் ஒன்றுபட்ட
போராட்டங்களின் மூலம் வென்றெடுத்த கோரிக்கைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக
ஒன்றுபட்டபோராட்டங்களைத் தீவிரப்படுத்தி யுள்ளனர். வரவிருக்கும் நாட்கள்
போராட்ட நாட்களாக இருக்கப் போகின்றன.
கட்டுரையாளர் தோழர் ஏ.கே. பத்மநாபன் அ.இ.தலைவர், சிஐடியு
செவ்வாய், 28 அக்டோபர், 2014
உழைப்பே வெல்லும்’ : வஞ்சிக்கும் முழக்கம்
தற்போது
மத்தியில் ஆட்சியி லிருக்கும் அரசாங்கமானது மக்களை வார்த்தை ஜாலங்களால்
ஏமாற்றுவதில் கைதேர்ந்தது போன்றே தோன்றுகிறது. இவர்கள் தங்கள்
வாய்களிலிருந்து கொட்டுகின்ற வார்த்தைகளின்படியே இவர்கள் நடக்கிறார்கள்
என்று இதற்கு அர்த்தம் அல்ல. ஒரு திசையில் போவதாகச் சொல்லிக்கொண்டே
எதிர்திசை யில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.`உழைப்பே வெல்லும்’ என்கிற
அரசின் திட்டம் குறித்து கார்ப்பரேட் நாளேடு களில் பல வண்ணங்கள்
வெளியாகியுள்ள விளம்பரங்கள் இதனையே உறுதி செய்கிறது.
இந்துத்துவா
சித்தாந்தத்தை முன்மொழிந்தவர்களில் ஒருவரின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள
இத்திட்டம், `நாட்டில் உழைக்கும் மக்களுக்காக’ புதிய அரசாங்கத்தால்
முக்கியமானதொரு திட்டமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டமானது
தொழிலாளர்களுக்கு ஏராளமான நன்கொடைகளை அளித் திருப்பதாக அரசாங்கத்தின்
சார்பில் அறி விப்புகள் அள்ளித் தெளிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே
சமயத்தில், கார்ப்பரேட் ஊடகங்களோ `வர்த்தக நடை முறைகளை’ மிகவும்
எளிமைப்படுத்தி விட்டதாகவும், வேலையளிப்பவர்களை `இன்ஸ்பெக்டர்களின் ஆட்சியி
லிருந்து’ (‘iளேயீநஉவடிச சயத’) விடுவித்திருப்பதாகவும், பாராட்டுக்களைத்
தெரிவித்திருக்கின்றன. தொழிலாளர் மற்றும் தொழில்துறைப் பிரச்சனைகளில்
ஆர்வம் உள்ளோர் இந்த முரண்பாட்டைக் காணாமல் இருக்க மாட்டார்கள்.
உண்மையானசாராம்சங்கள் என்ன?
இத்திட்டத்தின்கீழ்
அறிவிக்கப்பட் டுள்ள பல அம்சங்கள் குறித்து உண்மை நிலை என்ன?
தொழிலாளர்களைத் திசைதிருப்பும் விதத்தில் `உழைப்பே வெல் லும்’ என்று
பெயரிடப்பட்டுள்ள இத்திட் டத்தின் கீழ் தொழிலாளர்களுக்குப் பயன்
அளிக்கக்கூடிய ஒரேயொரு அறி விப்பு, ஊழியர் வைப்பு நிதிக் கணக்கு
வைத்திருப்போருக்கு பொதுவான கணக்கு எண் கொடுக் கப்பட்டிருப்பதுதான்.
தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுகையில்,
தன் னுடைய ஊழியர் வைப்பு நிதிக் கணக் கையும் பிரச்சனை எதுவும் இல்லாமல்
மாற்றிக் கொள்ள இது வகை செய்கிறது. ஆயினும் இது இப்புதிய அரசாங்கத்தால்
உருவாக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. நாட்டில் ஊழியர் வைப்புநிதிக் கணக்கு
வைத்திருக்கும் நாலு கோடி பேருக்கும் பொதுவான கணக்கு எண் தரப்பட வேண்டும்
என்று தொழிற்சங்கங்கள் நீண்டகாலமாகப் போராடிவந்ததன் விளைவாக த்தான் இவ்வாறு
முடிவுமேற்கொள்ளப்பட்டிருக் கிறது.
ஒரு சில மாதங் களுக்குள்
இதற்கான நடைமுறை முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. புதிய
அரசாங்கம், இதுதொடர்பாக ஒரு சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடாத நிலையில்,
தற்போதைய பிரதமர் இத்திட்டத்தினைத் துவக்கி வைத்ததன் மூலம் இது
தங்களால்தான் கொண்டு வரப்பட்டது என்பது போன்ற தோற்றத்தை மிகவும் எளிதாக
ஏற்படுத்திக் கொண்டுவிட்டது. உண்மையில், இவ்வாறு இத்திட்டத்தைத்
தொடங்குகையில், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட முக்கியமானதொரு
அறிவிப்புதான், வேலையளிப்பவர்கள் மத்தியில் கொண் டாட்டத்தையும்
மகிழ்ச்சியையும் உருவாக்கி இருக்கிறது. அதாவது அரசாங் கம் `இன்ஸ்பெக்டர்
ஆட்சி’க்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டம்தான் அவ் வாறான மகிழ்ச்சியை
அவர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.
உண்மை யில் தற்போது
இ.பி.எப்., இ.எஸ்.ஐ., சுரங்கத் தொழில்களில் பாது காப்பு, தொழிலாளர் நலன்
ஆகியவற்றுக்கு எதிராக முறைகேடுகள் நடைபெறுகையில் அவற்றின் மீதுபெயரளவிலாவது
நடவடிக்கை எடுத்து வரும் ஆய்வாளர்கள் நடவடிக்கைகளை முற்றிலுமாக
ஒழித்துக்கட்டும் திட்டத்திற்குத்தான் இத்தகைய வரவேற் பினை வேலையளிப்போர்
அளித்திருக் கிறார்கள்.இவ்வாறு நடவடிக்கைகள் எடுத்துவந்த ஆய்வாளர்களுக்கு,
நம்முடையபிரதமர் புதியதாக ஒரு `வேலை கலாச்சாரத்தை’ப் பிரகடனம்
செய்திருக்கிறார். ஆய்வாளர்கள் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகுறித்த
விதிகள் பிரதமர் அலுவல கத்திலிருந்து அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிய
வருகிறது. வேலையளிப்பவர்கள் இனிவருங்காலங்களில் தாங்கள் ஆய் வாளர்களுக்கு
அனுப்ப வேண்டிய 16 விதமான தொழிலாளர்நல சட்டங்களின் கீழான அறிக்கைகள் அனைத்
தையும் அவர்களே `சுயமாக சான்றிட்டு’ (‘selfcertification’), இணைய
வழியாகவே அனுப்பிவிட அனுமதிக்கப்பட்டிருக்கிறார் களாம். எனவே தொழிற்சாலை
ஆய்வாளர்களோ (Inspector of Factories) அல்லது தொழிலாளர்நல ஆய் வாளர்களோ
(Inspectors of Labour) மேற்படி வேலை யளிப்போரின் இடங்களுக்குச் சென்று
ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லையாம். இப்போது இபிஎப், இஎஸ்ஐபோன்றவை
தொடர்பாக சட்டங்கள் இருக்கும் காலத்திலேயே நாட்டில் பெரும்பான்மை
தொழிலாளர்கள் இவற்றின்கீழ் பதிவு செய்யப்பட்டு, அவர் களுக்கு சமூகப்
பாதுகாப்புத் திட்டங் கள் அமல்படுத்தப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த
உண்மை.
இந்நிலையில் தொழிற்சாலைகளையோ அல்லது தொழிலாளர்நல ஸ்தாபனங்
களை எதையுமோ ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டியதில்லை என்ற நிலை வரும்போது
நிலைமைகள் மேலும் மோசமாகும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. அதுமட்டுமல்ல,
தொழிலாளர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண் டிய மேலும் பல ஆதாயங்கள் இப்புதிய
திட்டத்தின்கீழ் மறுக்கப்பட்டிருக் கின்றன. தொழிலாளர்நல அமைச்சகத்தின்
அறிக்கையை மேற்கோள் காட்டி, அக்டோபர் 18ஆம் தேதிய தி இந்து பிசினஸ்லைன்
நாளேடு குறிப்பிட்டிருப்பதாவது: “அர சாங்கம் தொழிலாளர் களின் சில
பிரிவினருக்கு சமூகப் பாதுகாப்பு நடவடிக் கைகள் சிலவற்றை அமல் படுத்திக்
கொண்டிருக் கிறது. ஆயினும் அவற்றால் பயனடையும் தொழிலாளர்களின் எண்ணிக்கை
மிகமிகக் குறை வானதாகும்.’’ தற்போதைய அரசின் நடவடிக்கை இந்நிலைமையை மேலும்
மோசமான தாகவே மாற்றிடும்.`தொழில்கல்வி’க்குப் பயிற்சிஅளிப்பது போன்ற இதர
திட்டங்கள் தொடர்பாகவும், அப்ரண்டிஸ் திட்டங் களில் மாற்றங்கள் கொண்டு
வருவது தொடர்பாகவும் அரசாங்கத்தால் முன்பு சில முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் அவையும் அமல்படுத்தப்பட வில்லை.
அரசாங்கமானது
மிகவும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் `ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா
யோஜனா’ (RSBY-Rashtriya Swasthya Bima Yojana)திட் டத்தை மாற்றி அமைக்க
இருப்ப தாகவும் அறிவித்திருக்கிறது. ஆனால் மாற்றம் எப்படி இருக்கும் என்று
விளக்கப்பட வில்லை. ஆர்எஸ்பிஒய், ஆம் ஆத்மி பீமா யோஜனா மற்றும் இந்திரா
காந்தி வயது முதிர்ந்தோர் ஓய்வூதியத்திட்டம் ஆகிய மூன்றும் ஒரே `ஸ்மார்ட்
கார்டு’மூலம் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மூன்று
திட் டங்களுமே கடந்த பல ஆண்டுகளாகவே அமல்படுத்தப்பட்டு வருகின்றன இப்போது
இவற்றில் என்ன மாற்றத்தைக் கொண்டுவர இருக்கிறார்கள் என்பதை
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இவை தொடர்பாக
இவர்கள்மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் அiத்துமே வஞ்சகமானவை என்று மிகவும்
தெளிவாகத் தெரிகின்றன.
இத்திட்டத்தின் பிரதான குறிக்கோள், முதலீட்
டாளர்களை - உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலீட்டாளர்களை - திருப்திப்
படுத்த வேண்டும் என்பதேயாகும். `இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ என்கிற
பிரதமரின் அழைப்பு மூலம் முதலீட் டாளர்களுக்கு `சிவப்புக் கம்பள வர வேற்பு’
அளிப்பதன் தொடர்ச்சியே இதுவாகும். எனவேதான், தொழிற்சங்கங்கள் தங்கள் ஆழமான
ஐயங்களை வெளிப் படுத்தும் அதே சமயத்தில், கார்ப்பரேட் ஊடகங்களும்,
முதலாளிகளின் அமைப்புகளும் பிரதமரின் இத்தகைய அறிவிப்புகளுக்கு
அளவுக்குமீறிய மகிழ்ச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளன. பிரதமரின்
அறிவிப்புகளை வரவேற் றுள்ள `ஃபிக்கி’ (குஐஊஊஐ) என்னும் முத லாளிகளின்
அமைப்பு, “தாங்கள் மேலும் பல தீவிர மாற்றங்களை எதிர் பார்த்தோம்’’ என்று
கூறியிருக்கிறது.தொழிலாளர்களின் நலன் சார்பாக தொழிற்சங்க இயக்கங்கள் கோரி
வந்த கோரிக்கைகள், `உழைப்பே வெல்லும்’ திட்டத்தில் முற்றிலுமாகப்
புறக்கணிக்கப் பட்டுள்ளன.
இதனை மூடிமறைத்திடவே, பிரதமர் சொல்
விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்கிறார். எனவேதான், சத்யமேவ ஜெயதே என்ற
கோஷத்துடன் `ஷ்ரமேவ ஜெயதே’ (உழைப்பே வெல்லும்) என்ற கோஷத்தை இணைத்துப்
பார்ப்பது டன், தொழிலாளர்களை, `ஷ்ரம யோகி’ என்றும், `ராஷ்ட்ர யோகி’
என்றும், `ராஷ்ட்ர நிர்மாதா’ என்றும் புகழ்ந்து தள்ளுகிறார். உழைக்கும்
மக்களுக்கு சில ஆதாயங்களை அளித்திருப்பதுபோல் காட்டுவதற்காகவே இத்தகைய
ஏமாற்று வேலைகளை அரசாங்கம் செய்து கொண் டிருக்கிறது.மத்தியிலும் இராஜஸ்தான்
மற்றும்மத்தியப் பிரதேசத்திலும் உள்ள பாஜக அரசாங்கங்கள் பல்வேறு தொழி
லாளர் நலச்சட்டங்களில் மாற்றங்களை ஏற் படுத்தி தொழிலாளர்களின் அடிப்படை
உரிமைகளைப்பறித்துள்ள சூழ்நிலையில் தான் இந்தத் திட்டமும் கொண்டுவரப்பட்
டிருக்கிறது.
தொழிலாளர்களின் மிகப்பெரும்பான்மையினரை தொழி லாளர்
நலச்சட்டங்களின் வரையறைகளி லிருந்து அப்புறப்படுத் திடவே இவ்வாறு
தொழிலாளர்நலச் சட்டங்களில் மாற்றங் களைக் கொண்டு வந்திருக்கிறது. இவ் வாறு
தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவர மற்ற மாநில அரசுகளும்
தயாராகிக் கொண் டிருக்கின்றன. நாட்டில் இதுநாள்வரை அரசு - நிர் வாகம் -
தொழிலாளர் ஸ்தாபனம் என்ற முறையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள்
பெயரளவிலாவது நடந்து வந்தன. அநேகமாக அவற்றின் முடிவு கேலிக் கூத் தாகவே
இருக்கும். ஏன், நாட்டின் உயர்பட்சமுத்தரப்பு அமைப்பான இந்தியத் தொழி
லாளர் மாநாடு என்னும் அமைப்பின் பரிந் துரைகளே அமல்படுத்தப்படவில்லை.
தற்போதைய
அரசாங்கம், பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வந்த முத்தரப்பு
தொழிற்சாலைக் கமிட்டிகளைக் கலைத்துவிட்டது. இதற்கு எந்தக் காரணத்தையும்
அரசாங்கம் குறிப்பிட வில்லை.தொழிலாளர் நலச்சட்டங்களில் திருத்தங்களைக்
கொண்டுவந்து தொழி லாளர்களுக்கு உதவ வேண்டும் என்று உண்மையிலேயே அரசாங்கம்
கருது மானால், முதலில் அது, தொழிலாளர் அமைச்சகத்தால் ஒப்பந்தத் தொழி லாளர்
(முறைப்படுத்தல் மற்றும் ஒழித் தல்) சட்டத்தின் மீது திருத்தங்கள்
கொண்டுவரப்பட்டு, நான்கு ஆண்டு களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டு,
பிரதமர் அலுவலகத்தில் தூசி மண்டிக்கிடக்கும் கோப்புகளை எடுத்து,
அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கட்டும். இந்தியத் தொழிலாளர் மாநாட்டின்
முடிவு களுக்கு இணங்க, “சம வேலைக்கு சமஊதியம்’’ என்னும் அடிப்படையில்
திருத்தங்களேயாகும். இத்திருத்தத்தின் நியாயம் குறித்து எவராலும்
ஆட்சேபிக்க முடியவில்லை. ஹரியானாவில் மானேசரில் உள்ள மாருதி சுசுகி
தொழிற்கூடத் தில் ஒப்பந்தத் தொழிலாளர் என்ற பெயரில் நடைபெற்று வரும்
சுரண்டலுக்கு எதிராக கார்ப்பரேட் ஊடகங்கள் கூட தலையங்கங்கள் தீட்டியுள்ளன.
நன்றி: தீக்கதிர் 28.10.2014 ....நாளை முடியும்தோழர் N.சுந்தரம் STS அவர்களை மாவட்டசங்கத்தின் சார்பில் மனதார பாராட்டுகிறோம்.ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உங்கள் தொண்டுகள் தொடரட்டும் தோழா ....
அன்பார்ந்த தோழர்களே !
நமது மாவட்டசங்கத்தின் உதவித்தலைவர் தோழர் N.சுந்தரம் STS அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக செஞ்சியை சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் வாழுகின்ற ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை இருளர் இன மக்களுக்கு பல்வேறு சமுக நலப்பணிகள்செய்து வந்ததையும், அவர்களுக்கான உரிமைப் போராட்டங்களை தலைமையேற்று நடத்தியதையும் அங்கீகரித்து சென்னை ஜெருசேலம் பல்கலைக்கழகம் சமுகநல சேவருக்கான டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது .பட்டமளிப்புவிழா 17.10.2014 அன்று சென்னை இராஜாஅண்ணாமலைமலை மன்றத்தில் நடைபெற்றது. உயர் நீதிமன்ற நீதிபதி, நீதியரசர் இராமசுப்ரணியன் அவர்கள் பட்டம் வழங்கி கவுரவித்தார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.தோழர் சுந்தரம் அவர்களின் மக்கள்பணி தொடரட்டும் என மனதார வாழ்த்துகிறோம்.
BSNLEU & NFTE -(BSNL )
மாவட்டச் சங்கங்கள்
தோழர்களே
நமது கடலூர் மாவட்டத்திலுள்ள
விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில்
பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு OCTOBER -27 தேதியாகியும் அவர்களுக்கு சம்பளம்
வழங்கப்படாததனை கண்டித்து BSNLEU, TNTCWU , மற்றும்
NFTE, TMTCLU ஆகிய நான்கு மாவட்டச் சங்கங்களின் சார்பாக கவன்
ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
நிர்வாகத்தின் உறுதிமொழியினால் கவன ஈர்ப்பு போராட்டம்
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
September -2014 மாத சம்பள பட்டுவாட இன்று அல்லது நாளை நடைபெற தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்.
INNOVOTIVE SOLUTIONS –ஒப்பந்தகாரரை BLOCK LIST (ஒப்பந்ததிலிருந்து நீக்குதல்) செய்வதற்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்படும்.
OCTOBER-2014 சம்பள பட்டுவாடவிற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
NOVEMBER-2014 முதல் புதிய டெண்டர் அமுலுக்கு வரும்.
September -2014 மாத சம்பள பட்டுவாட இன்று அல்லது நாளை நடைபெற தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்.
INNOVOTIVE SOLUTIONS –ஒப்பந்தகாரரை BLOCK LIST (ஒப்பந்ததிலிருந்து நீக்குதல்) செய்வதற்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்படும்.
OCTOBER-2014 சம்பள பட்டுவாடவிற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
NOVEMBER-2014 முதல் புதிய டெண்டர் அமுலுக்கு வரும்.
விழுப்புரம், திண்டிவனம், , விருத்தாசலம், ஆகிய பகுதிகளில்
மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து
சங்க தோழர்களுக்கும் நமது நன்றியினை
தெரிவித்து கொள்கிறோம்
மாநில சங்கங்கள் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனை
தீர்வுக்கு தொடர் முயற்சி மேற்கொண்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்..
தோழமையுடன்
K.T.சம்பந்தம் இரா.ஸ்ரீதர்
மாவட்டசெயலர் மாவட்டசெயலர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







