புதன், 26 நவம்பர், 2014

நவம்பர் 11 வேலைi நிறுத்த விளக்கக்கூட்டங்கள்

நவம்பர்’27 வேலைநிறுத்த விளக்க சிறப்புக்கூட்டங்கள்
விருத்தாசலம் கிளையில்  17-11-2014 அன்று காலை வேலைநிறுத்த  போராட்ட விளக்கக் கூட்டம்  நடைபெற்றது. தோழர்கள்.V.இளங்கோவன்,கலைமணி தலைமையில்  NFTE தோழர்கள். R.செல்வம்,  இரா.ஸ்ரீதர், BSNLEU தோழர்கள் K.T. சம்பந்தம்,      A. அண்ணாமலை போராட்ட விளக்கவுரையாற்றினர்.  விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த தோழர்களுக்கு நன்றி.


உளுந்தூர்பேட்டையில் 17-11-2014 அன்று மதிய உணவு இடைவெளியில் தோழர் .அம்பாயிரம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. NFTE சார்பில் தோழர்கள்.R.செல்வம்  இரா.ஸ்ரீதர், BSNLEU சார்பில் தோழர்கள் K.T. சம்பந்தம்,  A. அண்ணாமலை போராட்ட விளக்கவுரையாற்றினர். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த உளுந்தூர்பேட்டை தோழர்களுக்கு நன்றி.


20.11.2014 அன்று மதியம் நெய்வேலியில் போராட்டவிளக்க சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. சிறப்புரையாக
தோழியர்.P.இந்திரா மாநில துணைத்தலைவர் BSNLEU,       தோழர். V.லோகநாதன்.மாநில துணைத்தலைவர்-NFTE. விளக்கவுரையாற்றினர்.



 20-11-2014 மாலை கடலூரில் GM அலுவலக வளாகத்தில் நடைபெற்றது, BSNLEU –B. சந்திரசேகர் தலைமையேற்றார், BSNLEU மாவட்டத் தலைவர் A.அண்ணாமலை வரவேற்புரை நிகழ்த்தினார், தோழர்கள்.G.ரங்கராஜ்-TMTCLU, M.பாரதி-TNTCWU, NFTE இரா.ஸ்ரீதர்,BSNLEU K.T.சம்பந்தம் விளக்கவுரையாற்றினர். BSNLEU மாநிலத்துணைத்தலைவர் தோழியர்.இந்திரா, NFTE மாநிலத்துணைத்தலைவர் லோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். NFTE மாவட்ட பொருளாளர்  A.சாதிக்பாஷா நன்றிவுரையற்றினார். பெருந்திரளாக தோழர்கள், தோழியர்கள் கலந்துகொண்டது கூட்டத்தின் சிறப்பம்சமாகும். விழா ஏற்பாடுகளை சிறப்பாக ஏற்பாடுகளை செய்த கிளைத் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.













வியாழன், 20 நவம்பர், 2014

நவம்பர் 27-2014 வேலைநிறுத்த விளக்க சிறப்புக்கூட்டம்.சிதம்பரம்.

27-11-2014 அன்று காலை சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்திற்கு தோழர்H.இஸ்மாயில் மரிகார் NFTE, தோழர்N.அனந்தன் BSNLEU, தோழர் K.ராமையாFNTO, தோழர் M.தேவராஜன் NFTE-KTL.ஆகியோர் கூட்டு தலைமையேற்க,
தோழர் V.சிதம்பரநாதன் கிளைசெயலர்BSNLEU வரவேற்க, 
துவக்கவுரை தோழர் K.ராமையா FNTO ஆற்றினார்.
தோழர்.K.T.சம்மந்தம்.மாவட்டசெயலர்-BSNLEU, தோழர்.இரா.ஸ்ரீதர்.மாவட்டசெயலர்-NFTE.
போராட்ட விளக்கவுரையாற்றினார்கள்.

சிறப்புரை: தோழியர்.P.இந்திரா. மாநில துணை செயலர்-BSNLEU,

தோழர். V.லோகநாதன்.மாநில துணைத்தலைவர்-NFTE.

நன்றியுரை: தோழர் D.ரவிச்சந்திரன் மாவட்ட உதவிசெயலர்.NFTE.. கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.​














சனி, 15 நவம்பர், 2014

இரங்கல் செய்தி

NFTE சங்கத்தின் தமிழ் மாநில செயலர் தோழர் பட்டாபியின் தாயார்மங்களம் அம்மாள் 14.11.2014 அன்று  காலமானார் . தாயாரை  இழந்து வாடும் தோழர் பட்டாபிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கடலூர்  மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம்  ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.நல்லடக்கம் இன்று காலை 8.30 மணிக்கு காரைக்காலில் நடைபெறும்.

வெள்ளி, 14 நவம்பர், 2014

கடலூர் கோட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


 BSNLEU & NFTE   
கிளை சங்கங்கள் , கடலூர்

கண்டன ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த தோழர்களே ,

          கடலூர் மாவட்டத்தில் புதியதாக அமுல்படுத்த உள்ள EOI டெண்டர் சம்மந்தாக அனைத்து கோட்ட பொறியாளர்களும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுடன் விவாதித்து முடிவுகள் எடுக்கின்ற சூழலில் , கடலூர் கோட்ட பொறியாளர் தானடித்த மூப்பாக செயல்படுவதும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை உதானசீனப் படுத்துவதையும் கண்டித்து 15-11-2014 அன்று மாலை 5:30 மணியளவில் மெயின் தொலைபேசி வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் .
அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டுகின்றோம்.

கண்டன உரை

K.T.சம்பந்தம் மாவட்டச் செயலர் BSNLEU
இரா.ஸ்ரீதர் மாவட்டச் செயலர் NFTE

                                                                                                           தோழமையுள்ள
                                                                                                                           BSNLEU & NFTE
                                                                                                            கிளை சங்கங்கள் ,கடலூர்.



வியாழன், 13 நவம்பர், 2014

பாஜகவின் இரட்டை நாக்கு அரசியல்




இறுதியாக, தில்லி சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் அடுத்த ஆண்டின் துவக்கத் தில் நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுவிட்டன. நவம்பர் 4 அன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் தில்லி சட்டமன்றத்தைக் கலைத்திடக் கோரி தில்லிதுணைநிலை ஆளுநர் அளித்த பரிந்துரையை உடனடியாக ஏற்றுக் கொண்டதை அடுத்துநாட்டின் தலைநகரில் மீண்டும் புதிதாக தேர்தல் நடத்துவதற்கான நடைமுறை தொடங்கிவிட்டது. இதன்மூலம், நவம்பர்25 அன்று காலியாக இருந்த மூன்று இடங்களுக்காக நடைபெறவிருந்த இடைத் தேர்தல்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. (இந்த மூன்று தொகுதிகளிலும் தேர்வு பெற்ற பாஜக உறுப்பினர்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதால் இந்த இடங்கள் காலியாயின.) தில்லி சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி யின் அரசாங்கம், ராஜினாமா செய்துவிட்டதால், அது 2014 பிப்ரவரியிலிருந்து செயல்படா நிலையிலிருந்தது.
சட்டமன்றம் கலைக்கப் பட்டதிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் மீண்டும் புதிதாகத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தேர்தல்கள் நடந்து, புதிய ஆட்சி அமையும்வரை, மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் தற்போதைய குடியரசுத் தலைவர் ஆட்சி தொடரும் என்பது உறுதி. தில்லி சட்டமன்றத்தில் பெரும்பான்மை யைப் பெறுவதற்காக பாஜக மேற்கொண்ட அனைத்துத் தில்லுமுல்லு வேலைகளும் தோல்வியடைந்ததை அடுத்தே, இத்தகைய முடிவிற்கு அக்கட்சி வந்துள்ளது. பாஜக, தில்லி சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக, எல்லாவிதமான குதிரைபேரங் களிலும் ஈடுபட்டதாக, ஏஏபி கட்சியும் முன் னாள் தில்லி முதல்வரான அதன் தலைவரும் குற்றம்சாட்டி இருந்தார்கள்.
மகாராஷ்ட்ராவில் தேர்தல் வெற்றி மற்றும் ஹரியானாவில் தனிப்பெரும் கட்சி அந்தஸ்தைப் பெற்றதைத் தொடர்ந்து, பாஜக பெரும்பான்மையைப் பெற்றிடுவதற்காக இத்தகைய தில்லுமுல்லு வேலைகள் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதுபோல் தோன்றுகிறது. இப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் களில், வெற்றிகளைப் பெற்றிருந்தபோதிலும், 2014 பொதுத் தேர்தல்களுக்குப்பின் நடைபெற்ற பல்வேறு சட்டமன்றங்களில் நடைபெற்ற பல்வேறு இடைத் தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெறவில்லை. உத்தரப்பிரதேசம், குஜ ராத், ராஜஸ்தான் மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கு முன்பு, நாட்டின் பல மாநிலங்களில் 50 சட்டமன்ற இடங்களுக்காக இடைத் தேர்தல்கள் நடந்துள்ளன.
இவற்றில் 2014 பொதுத் தேர்தல்களுக்கு முன் 35 இடங்களில் பாஜக குறிப்பிடத்தக்க அளவில் முன்னணியில் இருந்தது. ஆயினும் பாஜக தலைமையிலான தேஜகூட்டணி இவற்றில் 18 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இம் மாநிலங்களில் இதற்கு முன் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிட்டால்கூட, கூர்மையான அளவிற்கு வீழ்ச்சியே ஏற்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில் 71 இடங்களை பாஜககைப்பற்றி இருந்தது. ஆனால் அதன் பின்னர் அது மத்தியில் ஆட்சிஅமைத்து சுமார்100 நாட்கள் முடிந்துள்ள நிலையில் மீண்டும் இம்மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் சட்டமன்றத்தில் அது பெற்றி ருந்த 8 இடங்களை இழந்து விட்டது. குஜராத்திலும் பாஜக 3 இடங்களை இழந்துள்ளது.
அதேபோன்றே ராஜஸ்தானிலும் 3 இடங்களை இழந்துவிட்டது. இப்போது ஒன்பது மாநிலங் களில் 32 சட்டப்பேரவை இடங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பாஜக வெறும் 12 இடங் களை மட்டுமே வென்றிருக்கிறது. சமீபத்தில் மகாராஷ்ட்ராவிலும், ஹரியானா விலும் நடைபெற்ற தேர்தல் வெற்றிகளில்கூட, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தங்களுடைய மிகவும் அரக்கத்தனமான நிகழ்ச்சி நிரலாக விளங்கும் `இரட்டை நாக்கு’ அரசிய லைப் பிரயோகிப்பதில் தவறவில்லை என்று ஊடகங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. ஒரு பக்கத்தில் `வளர்ச்சி’ என்றும், `குஜராத் மாடல்’ என்றும், `நல்ல நாள் வருகுது’ என்றும் சொல்லிக்கொண்டே, மறுபக்கத்தில் தேர்தல் ஆதாயங்களை அறுவடை செய்வதற்காக மதவெறித் தீயை விசிறி, வன்முறைகளில் ஈடுபடும் தங்கள் உண்மையான உத்தியைக் கடைப்பிடித்ததையும் பார்த்தோம்.
தில்லியில் நடைபெறவிருக்கும் தேர்தலின்போதும் இதேபோன்று தேர்தல் உத்திகளைப் பின்பற்றிட முடிவு செய்திருப்பதை, இடைத்தேர்தல்களில் பாஜக பின்னடைவை சந்தித்த பின்னர் அதன் மூத்த தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களிலிருந்து நன்கு உணர்ந்து கொள்ளமுடிகிறது. `ஜிகாத் காதல்’ போன்ற முழக்கங் களை முன்னெடுத்துச் செல்லாததும், முசாபர்நகர், சகாரன்புர் மற்றும் மொராதாபாத் ஆகியஇடங்களில் நடைபெற்ற வகுப்புக் கலவரங் களை பெரிய அளவிற்குத் தேர்தல் பிரச்சனை யாக எடுத்துப் போகாததும்தான் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜக பல இடங்களை இழந்ததற்கு முக்கிய காரணம் என்று அவர்கள்கூறத் தொடங்கியுள்ளனர்.
“2014 மக்கள வைத் தேர்தல்களின்போது நாம் அதிக வாக்குகளைப் பெற்றதற்கு நம் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலே காரணமாகும். இப்போது இடைத் தேர்தலின்போது தான் நம்முடைய உண்மையான அடையாளத்தை மறந்ததும், உள்ளார்ந்த அரசி யலைப்பின்பற்றியதும்தான் நம் தோல்விக்குக் காரணம்,’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது. (மெயில் டுடே, செப்டம்பர் 17, 2014) மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா வெற்றி களைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ்/பாஜக தங்களுடைய மதவெறித் தீயை தில்லியில் பலபகுதிகளில் விசிறிவிடத் தொடங்கி இருக்கிறது. பவானா, நந்னகிரி, திரிலோக்புரி, சமய்பூர் பத்லி மற்றும் பல இடங்களில் இவ்வாறு அவர்கள் தங்கள் மதவெறி நடவடிக்கை களைத் தொடங்கியுள்ளனர்.
வடக்கு தில்லி யில் பவானா பகுதியில் நவம்பர் 2 அன்று ஒரு`மகா பஞ்சாயத்து’ நடந்திருக்கிறது. அதில் நவம்பர் 4 அன்று நடைபெறவுள்ள முகரம் ஊர்வலத்தை எதிர்த்திட வேண்டும் என்று கோரியுள்ளனர். இக்கூட்டத்தில் அப்பகுதி யைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் மிகவும் வெறித்தனமாகப் பேசியிருக்கிறார். வரவிருக்கும் தேர்தல்களை மனதில்கொண்டுதான் இப்பகுதிகளில் பதற்றநிலைமை உருவாக்கப்பட்டுக்கொண்டிருப்ப தாக, அப்பகுதி மக்கள் என்டிடிவி போன்ற ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். இங்கேயுள்ள ஒரு சிறிய வாய்க்கால் இந்து மற்றும் முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளைப் பிரிக்கிறது. மதப்பதற்ற நிலைமையைத் தணிப் பதற்காக, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக முகர்ரம் ஊர்வலம் வரும் பாதையை மாற்றி அமைத்திட முஸ்லிம் சிறுபான்மையினர் ஒப்புக்கொண்ட போதிலும், அங்கே பதற்ற நிலைமைகள் தொடர்கின்றன.
கிழக்கு தில்லியில் உள்ள திரிலோக் புரியிலிருந்து மிக அருகில், வடகிழக்குத் தில்லியில் உள்ள நந்னாகிரிப் பகுதியில், சென்ற வாரம்இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வகுப்பு மோதல்கள் நடைபெற்றுள்ளன. மீண்டும் இங்கே கலகத் தைத் தூண்டி விட்டது பாஜக தலைவர்கள்தான் என்பது ஊடகங்களில் வந்துள்ளசெய்திகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது. தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை சாக் காக வைத்துக்கொண்டு சமய்பூர் பத்லி மற்றும் மஜ்னு கா திலா ஆகியஇடங்களில் வகுப்புவாதப் பதற்ற நிலைமைகள் உருவாக்கப்பட் டிருக்கின்றன. ஐம்பது வயது மூதாட்டி ஒரு வர் இதில் பலியாகிவிட்டார். நாற்பதுக்கும் மேற் பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தேசிய அரசியலில் தொடர்ந்து நீடிக்க வேண்டு மானால் அதற்கு வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதும், மதவெறித் தீயை விசிறி விடுவதும்தான் அடிப் படை என்கிற விதத்தில் பிரதமரே இவற்றை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். மும்பையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இதனை விரிவாகவே ஊடகங்கள் தெரிவித் தன.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் காணப்பட்ட ஓர் உரைக்கு, ஓர் அரசியல் விமர்சகர் கீழ்க்கண்டவாறு கருத்து தெரிவித் திருக்கிறார்: “ஈடிணையற்ற வகையில் புத் தெழுச்சி பெற்ற இந்துயிசத்தின் தாயத்தாக தற்போதைய இந்தியப் பிரதமர் மீளவும் புதி தாய் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார் என்பதை யார் மறுக்க முடியும்?’’ இந்த “ஈடிணையற்ற வகை’’ என்பது பிரதமரே பீற்றிக் கொள்வதைப்போல, இந்தியாவில் ஆண் டாண்டு காலமாய் இருந்து வரும் புராணக் கதைகளையெல்லாம் எவ்வித சிரமமுமின்றி நாட்டின் வரலாறாக மாற்றுவதும், தத்துவ சாஸ்திரத்தை, மத சாஸ்திரத்துடன் இணைப்பதுமேயாகும்.
இத்தகைய இவர்களின் அரக்கத்தனமான நிகழ்ச்சிநிரலை இரக்கமற்ற முறையில் பின்பற்ற இவர்கள் முயற்சிப்பது, இந்தியாவின் நவீன மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்குப் பேரழிவினை ஏற்படுத்திடும். நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை ஆர்எஸ் எஸ் பரிவாரங்கள் தங்களுடைய வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் `இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றிட முயலும் இவர்களின் கொள்கையை முழுமையாக நிராகரித்து, மதவெறி சக்திகளுக்கு தோல்வியை ஏற்படுத்து வதன் மூலம் நாட்டுமக்கள் இத்தகைய ஆபத்தை முழுமையாக முறியடித்திட வேண்டும். ஒன்றுபட்ட மதச்சார்பற்ற ஜனநாயக இந்தி யாவின் அடித்தளங்களைப் பாதுகாப்பதன் மூலமாக மட்டுமே நாட்டு மக்கள் அனை வருக்கும் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்கான போராட்டத்தை தீர்மானகரமான முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும்.
- தமிழில்: ச.வீரமணி
ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தேசிய அரசியலில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் அதற்கு வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதும், மதவெறித் தீயை விசிறி விடுவதும்தான் அடிப்படை என்கிற விதத்தில் பிரதமரே இவற்றை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். 
நன்றி தீக்கதிர் 13.11.2014

புதன், 12 நவம்பர், 2014



வெகு சிறப்புடன் நடைபெற்ற கொல்கத்தா அகில இந்திய மாநாடு
தோழர்களே!
 நமது BSNLEU சங்கத்தின் அகில இந்திய மாநாடு கொல்கத்தா நகரில் வெகு சிறப்புடன் 6,7,8 மற்றும் 9/11/2014 தேதிகளில் நடைபெற்றது. ஆளும் கட்சியின் இடையூற்றினால் இரண்டு நாட்களில் மாநாட்டை வேறு ஒரு இடத்தில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போதும்,சூழலை சவாலாக எடுத்துக் கொண்டு மேற்கு வங்க தோழர்கள் அருமையாக நடத்தினர். நமது கடலூர் மாவட்டத்தில் இருந்து 3 பிரதிநிதிகள் மற்றும் 2 பார்வையாளர்கள் கலந்துகொண்டோம்.
தோழர்கள் K.T.சம்பந்தம், A.அண்ணாமலை,V.குமார் ஆகியோர் பிரதிநிதிகளாகவும் தோழர்கள் K.சாரங்கபாணி மற்றும் ராஜசேகர் (சிதம்பரம்) ஆகியோர் பார்வையாளர்களாக கலந்து கொன்டோம்..
மாநாட்டு காட்சிகள்

A I C AT KOLKATTA












செவ்வாய், 11 நவம்பர், 2014

அகில இந்திய மாநாட்டில்...

7 ஆவது அகில இந்திய மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்
Patron : V.A.N.நம்பூதிரி
தலைவர்                                        : தோழர் பல்பீர் சிங், (பஞ்சாப்)
உப தலைவர்கள்             தோழர் அசோக் பாபு (ஆந்திரா)
                              தோழர் அனிமேஷ் மித்ரா (மே.வ)
                              தோழர் கே.ஆர். யாதவ் (உ.பி)
                              தோழர் பி.நாராயண் (ஜார்கண்ட்)
                              தோழர் ஜகதீஷ் சிங் (ம.பி)
                              தோழர் ஓம் பிரகாஷ் சிங் (கொல்கத்தா)
பொதுச் செயலர்             : தோழர் பி.அபிமன்யு (தமிழ்நாடு)
துணைப் பொதுச் செயலர்கள் : தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி (NE-1)
உதவி பொதுச் செயலர்கள்   : தோழர் கே.சம்பத் ராவ் (ஆந்திரா)
                              தோழர் ஜான் மார்கஸ் (மகாராஷ்ட்ரா)
                              தோழர் எஸ். பிரதாப் குமார் (கேரளா)
                              தோழர் எம்.சி.பாலகிருஷ்ணா (கர்னாடகா)
                              தோழர் எஸ்.செல்லப்பா (தமிழ்நாடு)
பொருளாளர்                 : தோழர் சைபல் சென்குப்தா (கல்கத்தா)
உதவி பொருளாளர்          : தோழர் குல்தீப் சிங் (ஹரியானா)
அமைப்புச் செயலர்கள்       : தோழர் ஆர்.எஸ். சௌகான் (NTR)
                              தோழர் சுனிதி சௌத்ரி (பீகார்)
                              தோழர் சுகவீர் சிங் (உ.பி)
                              தோழர் விஜய் சிங் (ராஜஸ்தான்)
                              தோழர் டி.கே.பகோத்ரா (குஜராத்)
                              தோழர் சண்ட்யா காட்கில் (மகாராஸ்ட்ரா)
                              தோழர் எம்.விஜயகுமார் (கேரளா)
                              தோழர் கோகுல் போரா (அஸ்ஸாம்)
                              தோழர் G.Q.டாண்ட்ரூ (J&K)
தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள் அனைவருக்கும் கடலூர் மாவட்டச் சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துகள்

ஞாயிறு, 9 நவம்பர், 2014

மத்திய சங்க நிர்வாகிகளுக்கு BSNLEU கடலூர் மாவட்ட சங்கம்வாழ்த்து.



அருமைத் தோழர்களே! நமது BSNLEU-7வது அகில இந்திய மாநாடு கொல்கொத்தாவில் தலைவர், செயலர், பொருளர் பதவிகளுக்கு முறையே, தோழர். பல்பீர் சிங், தோழர்.பி. அபிமன்யு, தோழர்.சைபால் மற்றும் நமது தமிழ் மாநிலத்தில் தோழர். எஸ்.செல்லப்பா உதவிச்செயலர் உள்ளிட்ட அனைத்து மத்திய சங்க நிர்வாகிகளுக்கும் நமது கடலூர் மாவட்ட சங்கம் தனது உளப் பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

என்றும் தோழமையுடன்
தோழர்.K.T.சம்பந்தம்

ஞாயிறு, 2 நவம்பர், 2014

ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மத்திய அமைச்சருடன் சந்திப்பு கல்வி முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்திட நிர்ப்பந்தம்



ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர்கள் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை சந்தித்தனர். அந்த சமயத்தில் அவர்கள் இந்தியக் கல்வி முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிகிறது.தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக-வின் தலைமை அமைப்பாக விளங்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்கள், சுரேஷ் சோனி மற்றும் தத்தத்ரேயா ஹோஷாபாலே ஆகிய இருவரும் மத்திய அமைச்சர் இரானியுடன் தற்போதைய கல்வி முறை குறித்து விவாதித்து, இதனை மாற்றி அமைத்திட வேண்டும் என்கிற தங்கள் பரிந்துரைகளையும் அளித்துள்ளார்கள் என்று தெரிகிறது. ஆர்எஸ்எஸ் இயக்கம் எவ்வாறு இந்துத்துவா என்னும் மதவெறிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவிடும் வகையில் கல்வி அமைப்பின் கீழ் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரலாறு மற்றும் பாடத் திட்டங்களில் இந்துத்துவாக் கருத்துக்களைத் திணித்திடத் துணிந்துள்ளத

சமீபத்தில் மத்திய அரசின் மூத்த அமைச்சர்களுடன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்எஸ்எஸ்-க்கும் அரசாங்கத்திற்கும் இடையே மிகவும் சிறந்த முறையில் ஒருங்கிணைப்பினை மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் தீனனாத் பத்ரா தலைமையில் இயங்கிவரும் சிக்ஷா பச்சாவோ அந்தோலான் சமிதி, “இந்தியாவின் மாண்புகளை’’ப் பிரதிபலிக்கும் வகையில் பள்ளிப் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதற்கான ஆலோசனைகளை அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டிருந்தது. மோடி முதலமைச்சராக இருந்த குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே தீனனாத் பத்ராவின் புத்தகங்கள் கட்டாயமாக்கப்பட்டுவிட்டன. இதற்கு எதிராக நாடு முழுதும் உள்ள கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். 

இதற்கிடையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்புள்ள யோகா குரு ராம்தேவ் என்று அழைக்கப்படும் சாமியாரும் கல்வி அமைப்பை “இந்தியமயமாக்கும்’’ விதத்தில் ஒரு புதிய தேசியப் பள்ளி ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார். இத்திட்டத்திற்கு மோடியின் ஆதரவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இவர்கள் அளிக்க இருக்கும் பாரதிய இடைநிலைக் கல்வி ஆணைக் குழுவின் பாடத்திட்டங்கள், பண்டைக் காலத்துக் குருகுலக் கல்வி முறையுடன் நவீனக் கல்வி முறையைக் கலந்து போதிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனவாம்.
நன்றி தீக்கதிர் 02.11.2014

பரங்கிப்பேட்டையில் தனியார் நிறுவனம் அமைவதால் மக்களுக்கு பாதிப்பு தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ கடிதம்




சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஐ.எல் - எப்.எஸ் என்ற தனியார் நிறுவனம் அமைந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் ``மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர - திட்டங்களுக்காக மக்கள் இல்லை' என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு விரோதமாக இத்தொழிற்சாலைக்கு பல சலுகைகள் அளித்து வருவது வேதனையளிக்கிறது.இந்தத் தொழிற்சாலை கனரக வாகனங்கள் கிராம சாலைகள் வழியே சென்றதால் கரிகுப்பம் - புதுகுப்பம் சாலை, கரிகுப்பம் கிராம சாலைகள், கரிகுப்பம் மற்றும் பஞ்சங்குப்பம் பாலம், பஞ்சங்குப்பம் - புதுகுப்பம் சாலை, பெரியபட்டு - புதுச்சத்திரம் கடற்கரை சாலைகள் அனைத்தும் சேதமடைந்து மக்கள் வாகனங்களில் செல்லமுடியவில்லை.
புதுகுப்பம் - கரிகுப்பம் சாலையை அடைத்து காம்பவுண்டு சுவர் எழுப்புவதால் புதுகுப்பம் மக்கள் 4 கி.மீ சுற்றிவரவேண்டியுள்ளது. மேலும் கடல் அலைகள் எழும்பும் நேரத்தில் ஊரிலிருந்து வெளியேற முடியாமல் கிராமமே அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கரிகுப்பம், பஞ்சங்குப்பம், புதுகுப்பம் ஆகிய கிராமங்களின் சுடுகாடும் சுடுகாட்டு பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.ராட்சச குழாய்க் கிணறுகளால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் இப்பகுதியில் சுமார் 50 கிராமங்களில் குடிநீர் பாதித்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.கரிகுப்பம் கிராமத்தை சுற்றிலும் முள்வேலி அமைந்துள்ளதால் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் கழிப்பிட வசதியின்றி சொல்லொண்ணா கொடுமைக்குள்ளாகியுள்ளனர். மேலும் அனல் மின்நிலையம் செயல்படும் போது நிலக்கரி துகள்கள் குடிசை வீடுகளில் படிந்து மக்களின் உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை பாதிப்பதோடு சுகாதார கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பலதலைமுறைகளாக விவசாயிகள் அனுபவித்து சாகுபடி செய்துவரும் அரசு புறம்போக்கு நிலங்களை விவசாயிகளுக்கு தெரியாமலேயே கம்பெனிக்கு தாரைவார்த்திட மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறிகிறோம். சாதாரண ஏழை விவசாயிகள் வாழ்விழந்து தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.விவசாயத்தையும் விவசாய கூலி வேலையையும் இழந்துள்ள கிராமங்களுக்கு கம்பெனி நிர்வாகம் கட்டுமான பணிகளில்கூட வேலை தர மறுத்து வருகிறது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள தனியார் நிர்வாகத்திற்கு அனைத்து சலுகைகளையும் வழங்கி வரும் தமிழக அரசு சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த ஏழை மக்களின் வேதனைகளை செவிமடுக்க மறுத்து வருகிறது. மேற்கண்ட பிரச்சனை குறித்து மூன்று முறை தமிழக மின்துறை அமைச்சரின் முன்நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஏற்றுக்கொண்ட ஒன்றைக்கூட நிர்வாகம் நிறைவேற்றி தர மறுத்துவிட்டது.மீண்டும் அமைச்சர் தலையிட்டு தீர்வுகாண பலமுறை வலியுறுத்தியும் இப்போதுவரை நடைபெறவில்லை. 

எனவே கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி கிராமப்புற ஏழை மக்களது வாழ்வை பாதுகாத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.கரிகுப்பம் கிராமத்தில் குடிசை வீடுகளை மாற்றி அரசு மற்றும் கம்பெனி நிர்வாகத்தின் பங்களிப்போடு தரமான வீடுகளை - பசுமை வீடுகளுக்கு நிகரான வீடுகளாக கட்டிக்கொடுக்க வேண்டும். தற்போது அரசின் மானியம் மற்றும் கம்பெனியின் பங்களிப்போடு தரகுறைவாக கட்டப்படும் கழிவறைகளை தரமானதாக கட்டித்தர வேண்டும். மிலி-திஷி தமிழ்நாடு பவர் கம்பெனி லிமிடெட் அமைந்து வரும் இடத்தில் விவசாய தினக்கூலி வேலைசெய்து பிழைத்து வந்த கிராம மக்கள் தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துவிட்டனர். ஆகவே இந்த கிராமங்களில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் தற்போது நடைபெறும் கட்டுமான பணிகளில் வேலையளிக்க வேண்டும்.மேற்கண்ட நிறுவனத்திற்கு நிரந்தர பணியாளர்களை தேர்வு செய்யும் போது இப்பகுதிகளில் உள்ள படித்து பட்டம் பெற்ற தகுதியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

இக்கிராமங்களை சேர்ந்த பெண்கள் நிறுவனம் அமைந்துள்ள இடங்களிலிருந்து முன்பு சவுக்கை, முந்திரி, பனை மற்றும் இதர மரங்களிலிருந்து கிடைக்கும் விறகுகளை கொண்டு உணவு சமைத்து வந்தனர். தற்போது விறகுகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே அனைத்து குடும்பங்களுக்கும் இலவச எரிவாயு சிலிண்டருடன் கூடிய அடுப்புகள் வழங்க வேண்டும்.பள்ளி மாணவர்கள் படிப்புக்கு உதவிடும் வகையில் கரிகுப்பம், பஞ்சங்குப்பம், கொத்தட்டை கிராமங்களில் பள்ளி கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும். கொத்தட்டையில் மேல்நிலைப்பள்ளி அமைவதற்கு தேவைப்படும் கோவில் நிலத்திற்கான கிரய தொகையை நிறுவனம் அரசுக்கு செலுத்தி நிலத்தை பெற்றுத் தரவேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்துவந்த விவசாயிகளுக்கு உரிய நட்ட ஈட்டை நிறுவனத்திடம் பெற்றுத்தர வேண்டும்.நிறுவனத்தின் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு கடல்நீரை நல்லநீராக மாற்றி தொழிற்சாலைக்கு பயன்படுத்த வேண்டும். மாறாக ஆழ்குழாய் அமைத்து நிலத்தடிநீரை உறிஞ்சுவது தடைசெய்யப்பட வேண்டும். புதுகுப்பம் பிரதான சாலையை அடைப்பதும் சுடுகாடுகளை ஆக்கிரமிப்பதும் தடைசெய்யப்பட வேண்டும்.நிறுவனம் வரும் பகுதிகளில் உள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படுகிறது.

அவர்களின் மீன்பிடி உரிமை பறிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை உறுதி செய்திட கீழ்காணும் ஏற்பாடுகள் அவசியமாகிறது. 1. கடற்கரையோரம் எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. 2. குளிர்சாதன வசதியுடன் கூடிய மீன் பதப்படுத்தும் நிறுவனம் துவங்குதல். 3. புதுகுப்பம், புதுப்பேட்டை, வேளங்கிப்பட்டு, சின்னூர் ஆகிய கிராமங்களிலிருந்து நகர்புறங்களுக்கு செல்ல பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்திட வேண்டும்.நீதிமன்ற வழக்குகள் உள்ள நிலங்கள் சம்பந்தமாக நியாயமான தீர்வுகளை காணவேண்டும்.இப்பகுதி கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு குடிநீர் மேல்நிலைத் தொட்டி மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைத்துத் தரவேண்டும்.இக்கிராமங்களை சேர்ந்த பெண்கள் தங்களுடைய தினக்கூலியை நம்பி அவர்கள் நடத்திவந்த சுயஉதவி குழுக்களின் வழியாக பல வங்கிகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தி வந்தனர். 

தற்போது அது முழுமையாக முடங்கி உள்ளது. எனவே இப்பகுதி பெண்கள் முன்னேற்றத்திற்கு தேவையான கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மற்றும் சிறுதொழில் அமைப்பதற்கு பயிற்சிகள் அரசுடன் இணைந்து மானிய கடன் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தாங்கள் அனல் மின்நிலைய நிறுவனத்துடன் உரியமுறையில் பேசி நிறைவேற்றி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தீக்கதிர் 02.11.2014

மோடியின் இரண்டு முகங்கள்


விஞ்ஞானத்திற்குப் புறம்பாக ஒரு பிரதமரே பேசுகிறார்; அதை எந்தவொரு விஞ்ஞானியும் மறுத்துப் பேசவில்லை. இவர்களது மவுனம் எனக்கு புரியாத புதிராகவே உள்ளது. ஊடகங்களின் மவுனம் என்னை ஆழமாக தொந்தரவு செய்கிறது என்கிறார் பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளரும், `ஹெட்லைன்ஸ் டூடே’செய்திச்சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் கரன் தாப்பர்.

வரலாற்றுக்கு முந்தைய புராண காலங்களிலேயே இந்தியா மரபணு விஞ்ஞானத்திலும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் சிறந்து விளங்கியது என்று பிரதமர் மோடி பேசியிருப்பது அறிவுக்கு புறம்பானது.நாம் நமது பிரதமரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம்? இது வியந்தோதும் அலங்கார, ஆச்சரியக் கேள்வியல்ல. நேர்மை, அர்ப்பணிப்பு, கடமை தவறாமை, நிர்வாகத் திறமை, ஓரளவுக்கு அறிவுகூர்மை ஆகியவற்றை ஒரு பிரதமரிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் இவை மட்டும்தானா எல்லாம்?மற்ற அனைத்து குணங்களுக்கு ஈடாக முக்கியத்துவம் வாய்ந்தது பகுத்தறிவு. இதையும் ஒரு பிரதமரிடம் நாம் எதிர்பார்க்கிறோம்.

நம் பிரதமர் சொல்வது, அல்லது செய்ய நினைப்பது பற்றி நாம் எப்போதும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. ஆனாலும் அவரின் சிந்தனைகள், செயல்கள் அறிவுப்பூர்வமானதாகவும், நன்கு பரிசீலிக்கப்பட்டதாகவும், நம்பகத் தன்மை வாய்ந்த தாகவும் நாம் அனுமானித்துக்கொள்கிறோம். அவர்களது முடிவு தவறாகப் போகும் போது கூட (பெரும்பாலும் அப்படித்தான்), பொது அறிவுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர்கள் எதுவும் செய்து விட மாட்டார்கள் என்றே நாம் நம்புகிறோம்.இந்த இடத்தில்தான் நரேந்திர மோடியிடம் சில கேள்விகள் எனக்கு உள்ளது.

சர் எச்.என்.ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் ஒன்றை கடந்த சனிக்கிழமை அவர் திறந்து வைத்தார். அப்போது அவர், “மகாபாரதத்தில் கர்ணன் தாயின் கருவறையிலிருந்து பிறந்தவரல்ல என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இதிகாசம்எழுதப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் மரபணு விஞ்ஞானம் இருந்து வந்துள்ளதை இது காட்டுகிறது. நாம் விநாயகரை வணங்குகிறோம். அவரது மனித உடலில் யானையின் தலையைப் பொருத்திய பிளாஸ்டிக் சர்ஜன்கள் அப்போது இருந்திருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.மோடியின் இந்த நம்பிக்கையை பல இந்துக்களும் நிச்சயம்பகிர்ந்து கொள்வர் என்பதில் சந்தேகமேயில்லை. ஒவ்வொருவரும் எதை நம்புவது என்பது அவரவர்களின் தனிப்பட்டசுதந்திரத் தெரிவு.

ஆனால் ஒரு பிரதமர் புராணக் காலத் தில் மரபணு விஞ்ஞானம் இருந்ததற்கு கர்ணனின் பிறப்பையும், விநாயகர் உருவத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜன்கள் அக் காலத்தில் இருந்தனர் என்றும் நம்பிக்கையை உண்மையாகக் கூறுவதில், அதுவும் ஒரு மருத்துவமனையின் தொடக்க விழாவில், இவ்வாறு கூறுவது - முற்றிலும் வேறு விஷயம்.ஏன்?விஞ்ஞானச் சாதனைகளுக்கு புராணங்களை இப்படிப் பயன்படுத்துவது அறிவுக்குப் புறம்பானது. முதலில், புராணம் உண்மை என்பதன் மீதான நமது நம்பிக் கையைத் தவிர இதற்கு வேறு நிரூபணங்கள் இல்லை.இரண்டாவதாக, நீங்கள் உயர்த்திப் பிடிக்கும் இத்தகைய விஞ்ஞான அறிவு மற்றும் சாதனைகள் இருந்து பிறகு தொலைந்தது என்பதற்கோ, அல்லது நீண்டகாலத்திற்கு முன்பே இது மறக்கப்பட்டுவிட்டது என்பதற்கோ, இவை எப்போதாவது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதற்கான ஆதாரப்பூர்வ பதிவுகளின் சுவடுகள் கூட இல்லை எனும்போது அதற்கு எப்படி நியாயம் கற்பிக்கப் போகிறீர்கள்?அனைத்தையும் விட மோசமானது, மோடியின் இத்தகைய பார்வைகள் தீனநாத் பத்ரா என்பவரின் பார்வை களை எதிரொலிப்பதே.

இவரது புத்தகங்கள் தற்போது குஜராத் மாநிலத்தில் 42,000 பள்ளிகளில் பாடத் திட்டத்தில்சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்ட நூல்களில் குந்தி மற்றும் கவுரவர்கள் காலத்திலேயே `ஸ்டெம் செல்’ ஆராய்ச்சி இருந்தது என்றும், மகாபாரதக் காலக்கட்டத்திலேயே தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டது என்றும், வேதகாலத்திலேயே மோட்டார் வாகனம் இருந்தது என்றும்கூறப்பட்டுள்ளது. வெகுசிலரே இது அறிவுகெட்டத்தன மானது என்று மறுப்பார்கள். ஆனால் இதே போன்ற வாதத்தை புராணக் காலத்தில் மரபணு விஞ்ஞானம் இருந்தது என்றும் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்றும் ஏன் வைக்க வேண்டும்? அப்படி வைக்கும் போது இதனையும் அறிவுகெட்டத் தனமானது என்று ஏன் கூறக்கூடாது? இதற்கு மேலும் என்னிடம் கூறுவதற்கு 2 விஷயங்கள் உள்ளன.பிரதமர் மோடி ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க வேண்டும் என்கிறார், கல்விக்கான தேவையை வலியுறுத்துகிறார்.

செவ்வாய் கிரக சாதனை கண்டு பெருமை கொள்கிறார். டிஜிட்டல் இந்தியா மேல் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது, புல்லட் ரயில்களை இறக்குமதி செய்யவேண்டும் என்கிறார். அதி தொழில்நுட்ப ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்கிறார். இவையெல்லாம் 21ம் நூற்றாண்டு லட்சியங்கள்.இவையெல்லாம் அவர் வியந்து போற்றுகிற, விஞ்ஞானப்பூர்வ மாக சரி பார்க்க முடியாத, புராணக் கதைகளுடன் எப்படி ஒத்துப் போகும்? இது முரண்பாடல்லவா?இரண்டாவதாக, கிரேக்க புராணங்களில் மனித-குதிரை வடிவ புராண உயிரிகளும், மனித உடலில் எருதின் தலை உள்ள புராண உயிரிகளும், பெர்சியர்களிடத்தில் உடல், வால், பின்கால்கள் ஆகியவை சிங்கத்துடையதாகவும், தலையும், இறகுகளும் பருந்தினுடையதாகவும் உள்ள கற்பனை உருவம் உள்ளது.
பிரித்தானியர்களிடத்தில் யூனிகார்ன் உள்ளது. மேலும் தேவதைக் கதைகளில் கடற்கன்னி, மனித உருவத்திலிருந்து ஓநாய் உருவத்திற்கும் பின்பு மனித உருவத்திற்கும் மாறும் உயிரிகள் இருக்கின்றன. மோடியின் நம்பிக்கை அளவுகோல்களின் படி பார்த்தால் மேற்கூறியவையும் உண்மையில் இருந்தனவென்றே ஆகும். ஆனால் யாராவது ஒருவர் இதனை நம்ப முடியுமா? அல்லது நம் கனவுகளில் இருக்கிறதோ? அல்லது நாம் குழந்தைகளாக இருக்கும் போது இந்த நம்பிக்கை இருக்குமோ என்னவோ?பிரதமர் மோடியின் இத்தகைய கருத்திற்கு என்னுடைய எதிர்வினை மேலும் ஒரு புள்ளி நகர்கிறது. இதுதான் நான் அவர் கருத்தின் மீது வைக்கும் மிக முக்கியமான விமர்சனம் ஆகும். அரசியல் சாசனச் சட்டம் 51 ஹ(h) பிரிவின் படி, ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை விஞ்ஞான அறிவை வளர்ப்பதாகும். ஆனால் ஒரு பிரதமரே விஞ்ஞானத்திற்கு புறம்பான விஷயங்களை எப்படி ஒரு கருத்தாக முன் வைக்க முடிகிறது.எனவே பிரதமரின் மருத்துவமனை திறப்பு விழாப் பேச்சு தெளிவாக, மறுப்பதற்கிடமின்றி அரசியல் சாசனத் தேவைகளுடன் முரண்படுகிறது.

உண்மையில், மோடி இதனை ஏற்க மறுக்கமாட்டார் என்று நான் நம்புகிறேன். இவையெல்லாம் தொந்தரவு செய்யும் சந்தேகங்கள், இதற்குக் காரணமாக ஒரு பிரதமரே இருப்பது மேலும் கவலையளிப்பதாகும். இறுதியாக, பிரதமரின் இந்தப் பேச்சு ஊடக கவனம் பெறவில்லை என்பது எனக்கு சோர்வளிக்கிறது. அதைவிட எந்த ஒரு விஞ்ஞானியும் மோடியின் இத்தகைய கருத்துகளை மறுக்கவில்லை என்பது. இவர்களது மவுனம் எனக்கு புரியாத புதிராகவே உள்ளது. ஊடகங்களின் மவுனம் என்னை ஆழமாகத் தொந்தரவு செய்கிறது. வேண்டுமென்றே இந்த விவகாரம் ஒன்றுமில்லாமல் செய்யப்பட்டதோ என்று கூட எனக்குத் தோன்றுகிறது.
(இந்து நாளிதழில் நவம்பர் 1 அன்று வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம்)