அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
1)நெய்வேலி ஊழியர்கள் குடியிருப்பில் நீரேற்று மின்மோட்டார் சரிசெய்யப்பட்டுள்ளது மேலும் பைப் லைன் வால்வுகள் மாற்றப்பட்டுள்ளது.
2)தோழர் V.S.பாலாஜி TTA அவர்களுக்கு கண்பர்மேஷன் உத்திரவு வழங்கப்பட்டுள்ளது.
3)நமது சங்க அலுவலகத்திற்கு புதிய கணினி வழங்கஉத்திரவிடப்பட்டுள்ளது.
05.02.2015 அன்று நமது மாவட்ட நிவாகத்துடன் "FORMAL MEETING" நடைபெற்றது. மாவட்ட செயலருடன் தோழர்கள் A.அண்ணாமலை, G.S.குமார்,S.பரதன் ஆகியோர் பங்கேற்றனர்.நமது பொதுமேலாளரின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது.நாம் கொடுத்த ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கும், சேவை மேம்பாட்டிற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற உத்திரவாதத்தோடு பேட்டி நிறைவுற்றது.
தீர்க்கப்பட்டுள்ள பிரச்சனைகள்
1)நெய்வேலி ஊழியர்கள் குடியிருப்பில் நீரேற்று மின்மோட்டார் சரிசெய்யப்பட்டுள்ளது மேலும் பைப் லைன் வால்வுகள் மாற்றப்பட்டுள்ளது.
2)தோழர் V.S.பாலாஜி TTA அவர்களுக்கு கண்பர்மேஷன் உத்திரவு வழங்கப்பட்டுள்ளது.
3)நமது சங்க அலுவலகத்திற்கு புதிய கணினி வழங்கஉத்திரவிடப்பட்டுள்ளது.
ஏற்கப்பட்டுள்ள நமது கோரிக்கைகள்
1) 31.03.2015 க்குள் சீருடை வழங்கப்படும்.
2) 2௦ சத ஊழியர்களுக்கு முதல் காலாண்டிலும் அடுத்தடுத்த காலாண்டுகளில் முறையே 2௦ சத ஊழியர்களுக்கும் "TOUR BAG" வழங்கப்படும்.
3)கள்ளக்குறிச்சி பகுதியில் கேபிள் பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியத்தை ஒப்பந்ததாரரிடமிருந்து பெற்றுக்கொண்டு பட்டுவாடா செய்யாத கள்ளக்குறிச்சி வெளிப்புற அதிகாரிமீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
4)தோழர் K.ராஜேஷ்TTA - G.V.ஸ்ரீதர்TTA மியுச்சுவல் மாற்றல் வழங்கப்படும்.
5)தோழியர் S.சிவகாமி TTA வுக்கு அம்மேரி TO நெய்வேலி தற்காலிக மாற்றல் வழங்கப்படும்
.
6)தோழர் K.மண்ணாங்கட்டி TTA வுக்கு சங்கராபுரம் TO கள்ளக்குறிச்சி மாற்றல் வழங்கப்படும்.
7)தோழர்கள் P.ராஜசேகர் STS கடலூர்,ஜெயச்சந்திரன் TM கடலூர்,நவாப்ஜான் TM கடலூர்,L.சையத்சம்சுதீன் TM சுலாங்குரிச்சி ஆகியோர்களது மருத்துவ பில்கள் பட்டுவாடா செய்யப்படும்.
8)12.௦2.2௦15 அன்று கடலூரில், கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகளுக்கான " WORKS COMMITTEE" கூட்டம் நடத்தப்படும்.
9)கடலூர் நகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் செல் சிக்னல் பிரச்சனைகள் தீர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
1௦)செல்சேவை விரிவாக்கத்திற்காக கள்ளக்குறிச்சி மலையக பகுதிகளான கண்ணூர்,எழுத்தூர்,மணியார்பாலயம்,முண்டியூர்பகுதிகள் பயன்பெறும் வகையில் இரண்டு புதிய BTS கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
11) தரைவழி இணைப்புகள் வழங்கிட கடலூர்,கள்ளக்குறிச்சி,மற்றும் சிதம்பரம் பகுதிகளில் உள்ள TNF அனைத்தும் வழங்கிட அந்தந்த கோட்ட பொறியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
பரிசீலனைக்கு உரியவை
தோழியர் R.ஷீலா TM கடலூர் புதுவை மாற்றல்
தோழர் E.C.கண்ணன் TM மண்மலை அவர்களின் NEPP
நமது கோரிக்கைகளை பரிவுடன் கேட்டு சட்ட விதிகளுக்குட்பட்டும்,மனிதாபிமான அடிப்படையிலும் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்ட நமது முதுநிலை பொதுமேலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக்கொல்கிறோம்.
தோழமையுடன்
K.T.சம்பந்தம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக