ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பாஸ்வேர்டு’ தெரியாததால் பாதுகாப்புத்துறை தப்பித்தது மத்திய அரசின் ஆவணங்களை திருடியவர்கள் அதிர்ச்சித் தகவல்



புதுதில்லி, பிப். 21-
பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருட்டு வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடை பெற்ற விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் கள் கிடைத்துள்ளன என்று தில்லி காவல்துறை தலைவர் பாசி தெரிவித்துள்ளார்.இந்த விசாரணையானது வழக் கின் முக்கியத்துவம் கருதி சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. தில்லியின் இணை போலீஸ் கமிஷனர் யாதவ், கூடுதல் கமிஷனர் அசோக் சந்த், துணை போலீஸ் கமிஷனர் பிஷம் சிங்,
உதவி கமிஷனர் மல்ஹோத்ரா மற்றும் போலீஸ் ஆய்வாளர்கள் மற்றும் துணைஆய்வாளர்கள் கொண்ட புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சனிக் கிழமையன்று பத்திரிகையாளர்களிடம் கூறிய தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவை.இந்த வழக்கின் விசாரணையில் திருடப் பட்ட மிக முக்கிய ஆவணங்கள் ரகசியமாக பராமரிக்கப்படுபவை.
1. தேசிய எரிவாயு தொகுப்பு குறித்து நிதி அமைச்சரின் பட்ஜெட் பேச்சுக்கான 2 பக்க குறிப்பு;
2. எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தினைச் சேர்ந்த விதேஷ் என்பவர் குறித்த ரகசியம் என்று குறிப்பிடப்பட்ட ஆவணங்கள்;
3. பிரதமரின் முதன்மைச் செயலர் நிபேந் திரா மிஸ்ராவின் கடிதம்;
4. பெட்ரோலிய அமைச்சகத்தின் எண்ணெய் தோண்டும் துறையின் ஆவணங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்டவை மற்றும் எரிவாயு குறித்த மாத அறிக்கை;
5. இலங்கையில் உள்ள வாய்ப்புகள் குறித்த குறிப்பு;
6. அவசரக்கூட்டம் குறித்த ஒரு நோட்டீஸ்; மற்றும்
7. நிலக்கரி மற்றும் எரிசக்தி அமைச்சகங் களிடம் திருடப்பட்ட ஆவணங்கள் என அனைத்தும் திருடப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்கள் அனைத்தும் மிக முக்கியமானவை ரகசியமாக பராமரிக்கப்படுபவை யாகும். இதுபோன்ற எண்ணற்ற ஆவணங்கள் பல காலமாக திருடப்பட்டு ரிலையன்ஸ், எஸ்ஸார் உள்ளிட்ட பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தரப்பட்டுள்ளன. சில கம்பெனிகள் சாஸ்திரி பவானிலுள்ள கீழ்நிலை ஊழியர் களையே இந்த சட்டவிரோதச் செயலுக்காக நியமித்துள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு கம்பெனிகளின் மூத்த உயர் அதிகாரி களும் அடங்குவர்.
வெள்ளியன்று இரவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த சக்சேனா, ஜூப்லி எனர்ஜி கம்பெனியைச் சேர்ந்த சந்திரா, ரிலையன்ஸ் அடர்க் கம்பெனியைச் சேர்ந்தஆனந்த் , எஸ்ஸார் கம்பெனியைச் சோந்த வினஸ் மற்றும் காய்ர்ன்ஸ் இந்தியா நிறுவனத்தின் நாயக் ஆகியோர் உள்ளனர்.இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120(பி)(குற்றச்சதி,)
மற்றும் பிரிவு 411 (மோசடியான முறையில் திருடப்பட்ட பொருளை வாங்கும் குற்றம்) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப் பட்டு தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இந்த வழக்கில் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஊழியர் லோகேஷ் என்பவர் தேடப் பட்டு வருகிறார்.
பாதுகாப்புத்துறை தப்பித்தது
பெட்ரோலிய அமைச்சகத்தில் கைதான ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ரகசிய ஆவணங்களை திருடவும் முயற்சித்துள் ளனர். விசாரணையில் அவர்கள், பாதுகாப்புத்துறையின் கணிப்பொறியின் ரகசிய கடவுச் சொல்லை கண்டறிய முடியவில்லை என்று கூறியுள் ளனர். இந்த கூற்று உண்மையா என்பதும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சந்தேகிக்கப்படும் தனியார் மின்சாரக் கம்பெனிகளின் உயர் அதி காரிகளின் தொலைபேசி உரையாடல்கள் உளவுத்துறையினரால் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
இது வரை 100க்கும் மேற்பட்ட உரை யாடல்கள் பதிவு செய்யப்பட்டு அவை அலசி ஆராயப்பட்டு வருகின்றன.
இதெல்லாம் சாதாரணமப்பா...
இதுபோன்று ஆவணங்களை திருடுவது சர்வசாதாரணமான ஒன்று என பெருமுதலாளிகளின் அமைப்பான இந்திய தொழிற்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.35 விழுக்காடு கார்ப்பரேட் கம்பெனிகள் ஆவணங்களை திருடுவதில் ஈடுபட்டு வருகின்றன. பெட்ரோலிய அமைச்சகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து அமைச்சகத்திலிருந்தும் முக்கிய ஆவணங்களை திருடுவது பல பத்தாண்டுகளாகவே நடைபெற்று வருகிறது என இந்திய தொழிற்கூட்டமைப்பின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அந்தந்த அமைச்சகங்களின் ஊழியர்கள் மட்டுமல்ல,
அமைச்சகத்திலுள்ள உயர் அதிகாரிகளும் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அந்தந்த அமைச்சகங்களின் சில குறிப்பிட்ட உயர் அதிகாரிகள் தொடங்கி கீழ்மட்ட ஊழியர்கள் வரை மாதச் சம்பளம் போன்று கையூட்டைப் பெற்று வருகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. 
நன்றி தீக்கதிர் 22.௦2.2௦15

கருத்துகள் இல்லை: