புதன், 4 பிப்ரவரி, 2015

பாசிசத்தின் இந்திய முகங்கள்



தற்போதைய தேசியவாத கவர்ச்சிச் கோஷங்கள் அனைத்தும் 1930களின் பாசிச வரலாற்றோடு இணைந்தவைகளாக உள்ளன. நரேந்திர மோடி இதை பாரம்பரிய கொடையாக கருதுகிறார். ஆர்எஸ்எஸ் ஒரு பாசிச சக்தி என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். தனது கைப்பாவையான பிஜேபியின் மீது கடந்த 10 ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ்-சின் பிடி மேலும் இறுகியுள்ளது. ஆளுங்கட்சி மீது பாசிசம் செல்வாக்கு பெறும் போது அரசியல் சாசனத்தின் செயல்பாடு சிதைந்து போகிறது. மத்திய அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு, தலைமையின் மௌனம், சுதந்திரமான நிர்வாகப்பணிகள் மீது தாக்குதல், இப்படி இந்தியாவின் அமைச் சரவை ஆட்சி முறை நொறுங்கிக் கொண்டிருக்கிறது. தனது சிறந்த நூலான `மதச்சார்பற்ற நாடாக இந்தியா’வில் அதன் ஆசிரியர் டொனால்டு ஈஜின் ஸ்மித் இப்படி கூறுகிறார். “ஐரோப்பிய பாசிசத்தின் இந்திய வடிவம்தான் இந்து அடிப்படைவாதம் என நேரு ஒரு முறைகூறினார். ஆர்எஸ்எஸ்க்கும் கொடுந்தேசியவாதத்தை முன்வைக்கும் பாசிசத்திற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. ராணுவவெறிமயமாக்கல், இன கலாச்சார உயர்வுக் கொள்கை மதவெறிபாய்ச்சிய தீவிர தேசியவாதம், பழமைச்சுவடுகளை பயன்படுத்துதல், மத-இன சிறுபான்மை மக்களை தேசியக் கொள்கை களிலிருந்து விலக்கி வைத்தல் இப்படிப்பட்ட ஆர்எஸ்எஸ்-இன் இயல்புகள்ஐரோப்பிய பாசிசத்தை நினைவூட்டுகின் றன. ஆட்சி அதிகாரத்தின் மூலம் தனது இலக்கை அடைய முடியும் என்பதை ஆர்எஸ்எஸ் நிராகரிக்கிறது. பதிலாக இந்து சமூகம் தனக்குள்ளிருந்து புத்துயிர்ப்பு பெற்றுஎழுந்து வரவேண்டும் என திட்டமிடுகிறது”. இத்தாலிய ஆராய்ச்சியாளர் மார்ஸியா கசோலாரி எழுதிய “1930களில் இந்துத்வாவின் வெளிநாட்டு த்தொடர்பு” மற்றும் “அரசியலில் இந்து தனித்துவத்தை உருவாக்கு வதில் வாரணாசியின் பாத்திரம்” என்னும்கட்டுரைகளை எக்கானமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி வெளியிட்டிருந்தது. மார்ஸியா கசோலாரி “இந்திய தேசியவாதத்திற்கும் நாஜிகளின் பாசிசத்திற்கும் இடையில் உள்ள சந்தேக உறவு” என்னும் நூலையும் எழுதியுள்ளார். “பிரசுரிக்கப்பட்ட ஆவணங்கள், அலுவலகக் கோப்புகள் மற்றும் சுற்றுக்கு விடப்பட்ட இதர ஆவணங்களில் 1920-லிருந்து1940க்கு இடைப்பட்ட காலக்கட்ட பாசிசத்தின் மேல் இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு ஈர்ப்பு இருந்தது. முசோசலினியின் கட்டுரைகள், அவரது வாழ்க்கை வரலாறு ,கோஷங்கள் இந்தக் குழுக்களுக்குள் சுற்றுக்கு விடப்பட்டன. 1938ல் சாவர்க்கர் தலைவராக இருந்த காலத்தில் நாஜி ஜெர்மனிதான் இந்து மகாசபைக்கு பொருத்தமான முன்னுதாரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. இனம் தொடர்பான நாஜிகளின் கொள்கைகள்தான் இந்தியாவில் முஸ்லிம் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு கடைப்பிடிக்கப்படவேண்டும் இந்துவெறி அமைப்புகள் இரண்டு முக்கிய அரசியல் பாதைகளை 1920-1940 காலத்தில் தேர்ந்தெடுத்திருந்தன. ஒன்று ஐரோப்பிய பாசிச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருந்த இனம் சார்ந்த கருத்துருவாக்கத்தை போல சக்தியான சொல்லாடல்கள் மூலம் இந்துத்வா நோக்கத்தை உச்சத்திற்கு கொண்டு செல்வது. மற்றொன்று இந்து சமுதாயத்திடம் கட்டுப்பாட்டுணர்வு குறைவாக இருப்பதாக குறிப்பிடும்படியான முயற்சிகள் மூலம் மக்களை நம்பவைப்பது. அவர்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம் எதிர்ப்பு இலக்குடன் இந்து சமுதாயம் ராணுவ வெறியூட்டப்படவேண்டும். 1920-களிலிருந்து முஸ்லிம்கள்தான் முதன்மையான இலக்காக கருதப்பட்டு பிரிட்டிஷாரை விட அபாயகரமானவர்கள் என முஸ்லிம்கள் கூர்ந்து கவனிக்கப் பட்டனர்” நூல் நெடுகிலும் மார்ஸியா தனது கருத்தை ஆவணங்களின்வழி கூறுவதில்கவனமாக-நிதானமாக இருந்திருக்கிறார். காந்தியின் படுகொலையில் சாவர்க்கருக் கும் பங்கு இருந்தது என உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எல். கபூர் முடிவுக்கு வந்திருந்தார். இதன் காரணமாகவே ஆர்எஸ்எஸ்- ஜனசங்கத்திற்கும் இடையே கருத்துவேறுபாடு உருவானதாக இட்டுக்கட்டப்பட்டது. இந்தக் கட்டுக்கதையை ஆராய்ச்சியாளர் மார்ஸியா உடைத்தெறிந்துள்ளார்.“கே.பி.ஹெட்கேவாரை தவிர்த்து பி.எஸ்,மூஞ்சே, எல்.வி.பரஞ்சாபி, பாபாராவ் சாவர்க் கர் மற்றும் சிலரைக் கொண்டதுதான் இந்து மகாசபை. ஒரே அரசியல் கொண்ட இந்த ஒரு சிறிய குழுவால் உருவாக்கப்பட்டதுதான் ஆர்எஸ்எஸ். ஹெட்கேவார் 1925 இல் சாவர்க்கரை ரத்னகிரி சிறையில் சந்தித்து ஆர்எஸ்எஸ்-ஐ உருவாக்குவதற்கு அறிவுரைகளை கேட்டார்”. பி.எஸ்.மூஞ்சே இந்து மகாசபை-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் பாலமாக செயல்பட்டவர். இவர் 19.3.1931 அன்று ரோம் நகரில் முசோலினியை சந்தித்தார். அவரிடம் ஆர்எஸ்எஸ் போல குறிக்கோள் கொண்ட சுதந்திரமான ஒரு அமைப்பை நான் துவங்கியுள்ளேன் என முசோலினியிடம் தெரிவித்தார்.“இத்தாலியில் பாசிஸ்ட்கள் ஜெர்மனியில் நாஜிகளைப் போல இந்தியாவில் எதிர்காலத்தில் உருவாவோம் என இந்துத்வாகருதுவதாக ஒரு பிரிட்டிஷ் உளவுத்துறை அறிக்கை கூறியது. 23.6.1934-ல் நடைபெற்றபம்பாய் இந்து மகாசபை மாநாட்டில் ஆர்எஸ் எஸ்-ஐ உருவாக்கிய ஹெட்கேவாரை பாராட்டியது. ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ள 15 பேர் கொண்ட குழுவினை மாநாடு நியமித்தது. அதில் என்.டி. சாவர்க்கரும் என்.சி.கேல்கரும் அடங்குவர்”. இந்து மகாசபைக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் இடையே இருந்த உறவிற்கு இது மேலும் ஒரு ஆவண சாட்சியமாகும். “பம்பாய் மாநாட்டிற்கு பிறகு சாவர்க்கர் ஆர்எஸ்எஸ் கிளை அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றினார். இக்கூட்டங்களில் பங்கேற்ற மத தீவிரவாதிகளையும் சாவர்க்கர் வெளிப்படையாக பாராட்டவும் செய்தார். இக்கூட்டங்களில் ஹெட்கேவாரின் பங்கை பாராட்டவும் சாவர்க்கர் தவறவில்லை. 29.7.1939 அன்று புனேயில் குருபூர்ணிமா ஆர்எஸ்எஸ் விழாவில் சாவர்க்கர் உரையாற்றினார். சில ஆண்டுகளுக்கு பிறகு27-29.5.1943 மூன்று நாட்கள் மூஞ்சே தலைமையில் கோல்வால்கர் முன்னிலையில் ஐயாயிரம் பேர் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற்றது. சாவர்க்கர் அதில் கலந்து கொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டி பெருமை பொங்க உரையாற்றினார்”. ஹிட்லரை விமர்சனம் செய்ததற்காக நேருவை சாவர்க்கர் கடுமையான தாக்கிப்பேசியதோடு செக் நாட்டின் சூடன்டெண்லேண்ட் நகரை ஹிட்லர் ஆக்கிரமித்த தையும் அவரது யூதக்கொள்கையையும் ஆதரித்தார். இந்திய முஸ்லிம்கள் அந்த திசைவழியில்தான் நடத்தப்படவேண்டும் என விரும்பினார்.“ஆரியக் கலாச்சாரத்தை புதுப்பிக்கும் பெருமைமிக்க ஜெர்மனியின் கொள்கையை, ஸ்வஸ்திகாவின் புகழை, ஆரியக்கல்விக்கான ஆதரவு மற்றும் இந்திய ஜெர்மானிய கலாச்சாரத்தின் வெற்றியை உணர்வுமிக்க இந்திய இந்துக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்” என 25.3.1939 அன்று இந்து மகாசபை கூறியது. “நேரு தலைமையிலான ஒரு சில சோசலிஸ்ட்டுகள் ஜெர்மனிக்கு எதிரான கோப நீர்க்குமிழிகளை தோற்றுவிக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் அது எடுபடவில்லை. ஜெர்மனியின் தவிர்க்கமுடியாத வலிமைக்கு முன்னே மகாத்மா காந்தியின் சாபம் எதுவும் பலிக்காது, ஆரிய கலாச்சாரத்தின் எதிரிகளோடு ஜெர்மனி நடத்தும் புனிதப்போர் உலகமெங்கும் உள்ள ஆரிய இன நாடுகளை சிந்திக்க வைக்கும்”. சங் பரிவாரம் நாட்டின் விடுதலை இயக்கத்தில் பங்கேற்கவில்லை. 9.9.1939 அன்று சாவர்க்கர் வைஸ்ராய் லின்லித்கோவை சந்தித்தார். பிரிட்டிஷ் அரசுடன் ஒரு உடன்பாடு செய்து கொள்ளவிரும்புவதாகத் தெரிவித்தார். “அவர் (சாவர்க்கர்) மாட்சிமை பொருந்திய மன்னர்பிரானின் அரசு இந்துக்கள் பக்கம் திரும்பவேண்டும். அவர்கள் ஆதரவுடன் வேலை செய்யவேண்டும். கடந்த காலத்தில் என்னதான் இந்துக்களுக்கும் நமக்கும் உறவில் பிரச்சனைகள் இருந்தாலும் பிரிட்டன்-பிரெஞ்ச் உறவைப்போல சமீபத்திய நிகழ்வுகள் காட்டும் ரஷ்யா-ஜெர்மனி உறவுகளை போல உண்மையில் சரிசமமானது. இந்துக்கள் பிரிட்டனின் நட்புறவோடு தற்போதைய நமது நலன்கள் பிணைந்துள்ளதால் பழைய பகைமைகள் இனி தேவையில்லை”. மார்ஸியாவின் நூலுக்கான கருத்துரைகள், குறைவாகவும் எல்லைக்குட்பட்டும் முழுநிறைவான ஆவணமாக உள்ளது குறிப்புரைகள் ஆழ்ந்த நோக்கை பிரதிபலிப்பவைகளாக உள்ளன. நூலில் எதிரி என்பதன் கோட்பாடு இந்திய தேசியத்திற்கும் இந்து தேசியத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டை தெளிவாக விளக்குவதாக உள்ளது. முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரசின் இந்திய தேசியம் என்பதன் கருத்தெல்லை பிரிட்டிஷாரை எதிரியென நிறுத்துவதற்குரியதாக இருந்தது. 1930களில் காங்கிரசை விட்டு விலகி தனது தனிப்பட்ட கொள்கைகளை முஸ்லிம் லீக் உருவாக்கத்துவங்கியது. தனக்கென ஒரு நாட்டின் திட்டத்தையும் உருவாக்கிவளர்க்கத் தொடங்கியது. ஆயினும் இந்தக்கொள்கைகள் சகோதரப்படுகொலையை ஆதரிக்கவில்லை. அதே சமயத்தில் முஸ்லிம்களுக்கான தனிநாடு உருவாவது இந்துக்களின் எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. சரியோ தவறோ இந்திய முஸ்லிம்களின் நலன்களை எடுத்துக்கூறும் கொள்கை பலவீனத்திற்கான பரிகாரமாகத்தான் புதிய நாடு உருவாவதை அவர்கள் கண்டனர். சங்பரிவாரத்தின் அடாவடித்தனமான முஸ்லிம் எதிர்ப்புப் பேச்சுக்கள் ஒரு வன்முறைச் சூழலை உருவாக்கியதோடு முஸ்லிம் குழுக்கள் மத்தியில் பிரிந்துசெல்லும் மனநிலையை வளர்த்தன. நாடு முழுவதும் தனி நாடு அறைகூவலை முஸ்லிம்கள் மத்தியில் பரப்பியது. இந்தப் பிரிவினைக்கு சங்பரிவாரமும் காங்கிரஸ் கட்சியிலிருந்த அதன் அனுதாபிகளும்தான் பொறுப்பாகும். 4.11.1948 அன்று டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியல் சாசன வரைவை முன்மொழிந்து பேசும்போது அரசின் நிர்வாக அமைப்பு அரசியல் சாசனத்தோடு நெருங்கிய தொடர்புள்ளது என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டார். அரசு நிர்வாக முறை என்பதன் புரிதல் அரசியல் சாசனத்தின் உன்னத நெறிகளின் மிகச்சரியான புரிதலோடும் இணைந்திருக்க வேண்டும். வேறுவார்த்தைகளில் சொல்லப்போனால் அரசியல் சாசன விதிகளை திருத்தாமலே நிர்வாக முறையில் மாறுதல் செய்வதன் மூலம் அரசியல் சாசன விதியை பொருத்தமாற்ற தாக்கி சிதைத்து அதன் சாரத்திற்கு எதிராகமாற்றிவிடவும் முடியும். நரேந்திர மோடி உள்பட 19 மத்திய அமைச்சர்கள் ஆர்எஸ்எஸ் பின்னணியில் உள்ளனர். இந்து ராஜ்யத்தை ஏற்படுத்த இவர்கள் அரசியல் சாசனத்தை திருத்தவேண்டியதில்லை. சங்பரிவாரத்தின் ஒரு குரு சியாமா பிரசாத் முகர்ஜி இவர்களுக்கு ஒரு பாதையையும் காட்டியுள்ளார். 6.1.1946 தேதியின்அவரது நாட்குறிப்பில் “75 சதம் இந்துக்கள் இந்தியாவில் உள்ளனர். இவர்கள் விரும்பினால் ஜனநாயக வடிவ அரசை ஏற்க முடியும். அதில் முக்கிய பாத்திரத்தையும் வகிக்கமுடியும்”. இதுதான் பெரும்பான்மைவாதம் என்பது. தொடர்ந்து நிர்வாக ஆணைகளின் மூலம் மதச்சார்பின்மை கோட்பாட்டை கிழித்தெறிந்துவிட்டு புதிய சூழ்நிலையை உருவாக்க முடியும். அரசு நிர்வாகத்தின் வடிவம் மாற்றப்பட்டு வருகிறது. அதே வேளையில் அரசியல் அமைப்புச் சட்டம் இப்போது தாக்குதலுக்குள்ளாகியும் இருக்கிறது. நன்றி: பிரண்ட்லைன் 23.1.2015தமிழில் சுருக்கம்: ப.தெட்சிணாமூர்த்தி

கருத்துகள் இல்லை: