வெள்ளி, 3 பிப்ரவரி, 2017


இரங்கல் செய்தி

தோழர்களே !
நம்முடன் கடலூர் பொதுமேலாளர் அலுவலகத்தில் AGM,மார்கட்டிங்காக பணியாற்றிய தோழர் C.B.ஜெயராம்குமார் அவர்கள் இன்று காலை  (௦3.O2.2017) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

செவ்வாய், 31 ஜனவரி, 2017

கிளைச்செயர்கள் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது கிளைச்செயர்கள் கூட்டம் 04.02.2017 மாலை 3.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர் தோழர் A.அண்ணாமலை தலைமையில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரிய நேரத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
குறிப்பு:கிளைச்செயலர்கள்  வரும்போது  அகிலஇந்திய மாநாட்டு நன்கொடை ரசீது புத்தகங்களைக் கொண்டுவரவேண்டும்.மேலும்  செயலாளர்கள், முகவரி மற்றும் அந்தக் கிளையின் உறுப்பினர் எண்ணிக்கை, அந்தக் கிளைக்கு தேவையான தொலை தொடர்பு தோழன் பத்திரிக்கையின் எண்ணிக்கை மற்றும் TELE CRUSADER பத்திரிக்கையின் எண்ணிக்கை ஆகியவற்றிற்கான விபரங்களையும் கட்டாயம் கொண்டுவர வேண்டுகிறோம். 
                                                             தோழமையுள்ள,
                                                                 K.T.சம்பந்தம்
                                                              மாவட்டசெயலர்

சனி, 24 டிசம்பர், 2016

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !!!


அவசர மாவட்ட செயற்குழு

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
நமது சங்கத்தின் அவசர மாவட்ட செயற்குழுக்கூட்டம் செவ்வாய் காலை 10.00 மணிக்கு தோழர் A . அண்ணாமலை அவர்கள் தலைமையில் கடலூர் மெயின் தொலைபேசி நிலைய மனமகிழ்மன்றத்தில் நடைபெறஉள்ளது. அனைத்து கிளை செயலர்களும், மாவட்ட சங்க நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்றிட தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வெள்ளி, 16 டிசம்பர், 2016

டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தில் பங்கேற்று மகத்தான வெற்றிபெறச்செய்த அனைத்து தோழர், தோழியர்களுக்கும் நன்றி!நன்றி !! நன்றி !!!

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
BSNL நிறுவனத்தினை சீரழிக்க தனி செல் டவர் கார்ப்பரேஷன் அமைக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து டிசம்பர் 15 அன்று  நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் கலந்து கொண்டு மகத்தான வெற்றிபெறச்செய்த  அதிகாரிகள் மற்றும் தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் புரட்சிகர வாழ்த்துகளையும்,நன்றியினையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்


திங்கள், 5 டிசம்பர், 2016

கிளைச்செயர்கள் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது கிளைச்செயர்கள் கூட்டம் 05.12.2016 மாலை 5.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர் தோழர் A.அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரிய நேரத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
                                   தோழமையுள்ள,
                                       K.T.சம்பந்தம்

ஞாயிறு, 27 நவம்பர், 2016

கண்ணீர் அஞ்சலி


தோழர்களே!
கடலூர் மாவட்டத்தில் நம்முடைய இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும்,T3 சங்கத்தின் மாவட்ட செயலர்,BSNLEU சங்கத்தில் மாவட்டதலைவர் மற்றும் இப்போதைய மாவட்ட  பொருளாளர் என தொடர்ந்து K.G போஸ் அணியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட ஒப்பற்ற தோழர்  V.குமார் இன்று 27.11.2016 நண்பகல் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரதுகுடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். நமது செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம்

அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை( 28.11.2016)  மாலை 3.00 மணிக்கு விழுப்புரம்,மாம்பழப்பட்டு சாலை கமலக்கண்ணப்ப நகர் அவரது இல்லத்திலிருந்து நடைபெறும் 





சனி, 19 நவம்பர், 2016

வெற்றி ! BSNLEUவெற்றி!! TNTCWWU வெற்றி!!! பெருந்திரள் முறையீட்டால் பணிந்தது மாநில நிர்வாகம்..பணிநீக்கம் செய்யப்பட்ட 11 ஒப்பந்த ஊழியர்களுக்கும் மீண்டும் பணிவழங்கப்பட்டது.

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே  !!
ஒப்பந்ததாரர் மாறிவிட்டார் என்ற காரணத்தை காட்டி தமிழக தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 15 ஆண்டுகாலத்திற்கு மேல் பணியாற்றி வரும் 11 ஒப்பந்த தொழிலாளர்கள் 01.10.2016 முதல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடுமைக்கு எதிராக CGM அலுவலக மாவட்ட சங்கம் இரண்டு கட்ட போராட்டங்களை நடத்தியது. அதன் பின்னர் BSNLEU மற்றும் TNTCWU ஆகிய இரண்டு சங்கங்களின் சார்பாக தமிழகத்தில் அனைத்து கிளைகளிலும், 07.10.2016 அன்று சக்தி மிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 14.10.2016 அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் மாலை நேர தர்ணா போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. GM(HR) உள்ளிட்ட அதிகாரிகள் 15.10.2016 அன்று நடைபெற உள்ள முத்தரப்பு கூட்டத்தில் சுமுக தீர்வு ஏற்பட்டுவிடும் என்று கூறி நமது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தனர். நல்லெண்ணத்தின்.அடிப்படையில்நமது மாநிலச்சங்கம்  14.10.2016 தர்ணா போராட்டத்தை ஒத்தி வைத்தது .

ஆனால் 15.10.2016 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒப்பந்ததாரர் வரவில்லை. நிர்வாகம் ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் மூன்று ஊழியர்களை மட்டும் எடுக்க ஒத்துக் கொண்டதாகவும், மற்றவர்களை பணிக்கு எடுக்க மறுத்து விட்டார் என்றும் நமது மாநிலச்சங்கத்திடம் தெரிவித்தது..மேலும் தங்களால் ஏதும் செய்ய இயலாது என்றும் தெரிவித்தது தமிழ்மாநில நிர்வாகம். நமது மாநிலச்சங்கம் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணிக்கு எடுப்பதை தவிர வேறு எந்த உடன்பாட்டிற்கும் வர இயலாது என்பதை மிகத் தெளிவாக தெரிவித்தது. எனவே நமது மாநிலச்சங்கம் ஏற்கனவே திட்டமிட்டபடி 25.10.2016 அன்று அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் மாலைநேர தர்ணாபோராட்டமும்,18.11.16 அன்று சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்த்திற்கும்  அறைகூவல் விடுத்தது.

18.11.16 அன்று பணி நீக்கம் செய்யப்பட்ட 11 தோழர்களை மீண்டும்  பணிக்கு எடுக்க  வலியுறுத்தி தமிழகம் முழுவதிலிருந்தும் 2௦௦௦ -ற்கும் மேலான தோழர்கள் ஆர்ப்பரித்து பங்கேற்றனர்.நமது மாவட்டத்திலிருந்து 176 தோழர்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர்.கார்ப்பரேட் அலுவலக உத்திரவைக் காட்டி அலட்சியம் செய்த மாநில நிர்வாகம்,பேசமறுத்த நிர்வாகம் நமது  பெருந்திரள் பங்கேற்பால் பணிந்தது சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில், கடந்த 15ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தேசமணி, பாரதி, மங்கா, பூங்கொடி, கலா, ஜெயா, வரலட்சுமி, அமுதா,ஜெனிபர், தாரா, ஆசிர்வாதம் ஆகிய பணிநீக்கம் செய்யப்பட்ட 11 ஒப்பந்த ஊழியர்களுக்கும் மீண்டும் பணிவழந்கப்பட்டது.
  ஒப்பந்ததாரர் மாறினாலும் ஒப்பந்த ஊழியர் மாறக்கூடாது  என்ற நமது கொள்கைக்கு கிடைத்திட்ட மாபெரும் வெற்றி இது.இதில் பங்கேற்ற அனைத்து தோழர்களையும் மாவட்ட சங்கத்தின் சார்பில் மனதார பாராட்டுகிறோம். அனைத்து கிளைகளிலும் வாயிற்கூட்டங்கள் நடத்தி இவ்வெற்றியை கொண்டாடிட வேண்டுகிறோம்.
                                                                                                                                         தோழமையுடன் 
                                                                                                                                            K.T.சம்பந்தம் 
                                                                                                                                 மாவட்டசெயாலாளர்





                                                                                                                                       

சனி, 12 நவம்பர், 2016

இரங்கல் செய்தி

நம்முடன் கடலூர் வாடிக்கையாளர் சேவைமையத்தில் பணிபுரிந்த தோழர் A.R.பன்னீர்செல்வம் டெலிகாம் டெக்னிசியன், நேற்று இரவு (11.11.2016) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில்  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதி ஊர்வலம் , இன்று (12.11.2016) மாலை 4.00 மணியளவில் கடலூர் O.T பென்சனர் வீதியில் நடைபெறும்.

புதன், 9 நவம்பர், 2016

இணைந்த கிளைச்செயலர்கள் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது இரண்டு சங்கங்களின் (BSNLEU & TNTCWU) இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் 11.11.2016 மாலை 5.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர்கள் தோழர் A.அண்ணாமலை, தோழர் S.V.பாண்டியன் ஆகியோர் கூட்டு தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரிய நேரத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
                                   தோழமையுள்ள,
                                       K.T.சம்பந்தம்