புதன், 21 மார்ச், 2018

கடலூர் கிளைகளின் கொடியேற்ற நிகழ்ச்சி


BSNL –ஊழியர் சங்கம்
கடலூர் கிளைகள்
அன்பார்ந்த தோழர்களே !!
              வணக்கம் , நமது சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு நாளை 22.03.2018 அன்று காலை கீழ்கண்ட பகுதிகளில் நமது இரு கிளைகளின் சார்பாக கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும்.
இடம்
நேரம்
செங்கொடியினை
ஏற்றிவைப்பவர்
வாழ்த்துரை
கடலூர் PORT
தொலைபேசி நிலையம்
காலை
8.00 மணிக்கு
தோழர்.
S.சதிஷ்குமார்

தோழர்.S. பரதன்
மாவட்ட உதவி செயலர்
திருப்பாபுலியூர் தொலைபேசி நிலையம்
காலை
8.15 மணிக்கு
தோழர். E.பாலு
கிளைப்பொருளர் BSNLEU
தோழர்.
R.v.ஜெயராமன்
மாவட்ட உதவி தலைவர்
நண்பர் நகர்
தொலைபேசி நிலையம்
காலை
8.30 மணிக்கு
தோழர்.
M.கருனாநிதி  கிளை உதவி தலைவர்
தோழர்.S.சவுந்தரராஜன் மாவட்ட உதவி தலைவர்
மெயின்தொலைபேசி நிலையம்
காலை
8.45 மணிக்கு
தோழர்.
M.கலியமூர்த்தி கிளை உதவி செயலர்
தோழர்.
K.விஜய்ஆனந்த்
கிளைச்செயலர்
TRA  வளாகம்
காலை
9.00 மணிக்கு
தோழர்.
R.v.ஜெயராமன் மாவட்ட உதவி தலைவர்
தோழர்.K.சிவசங்கர் மாவட்டஉதவி பொருளர்
GM அலுவகம்
காலை
9.15 மணிக்கு
தோழர்.K.T. சம்பந்தம்
மாவட்ட செயலர்
தோழர்.K.T. சம்பந்தம்
மாவட்ட செயலர்
நெல்லிக்குப்பம் தொலைபேசி நிலையம்
மதியம் 1.00 மணிக்கு
தோழர் .
K.கோவிந்த ராஜலு
தோழர். P. ராஜதுரை
கிளைச்செயாலர் TNTCWU
                                                               
தோழமையுடன்
                     K.விஜய்ஆணந்த்                                                                         K.சிவசங்கர்
        கிளைச்செயலர்                                                                                கிளைச்செயலர்
        வெளிபகுதி கிளை                                        GM (O) கிளை


மாவட்ட செயற்குழு முடிவுகள்


BSNL ஊழியர் சங்கம்
கடலூர் மாவட்டம்

செயற்குழு முடிவுகள்

தோழர்களே தோழியர்களே!!
வணக்கம் , நமது சங்கத்தின் மாவட்ட செயற்குழு 13.03.2018 அன்று கடலூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் மதியம் 2.00 மணிக்கு மிக சிறப்பாக நடைபெற்றது  8 வது மாவட்ட மாநாட்டிற்கு பிறகு  நடைபெற்ற முதல்  செயற்குழுவிற்கு நமது மாவட்ட தலைவர் தோழர். P.ரத்தினம் தலைமை தாங்கினார். . செயற்குழுவிற்கு வந்த அனைவரையும் கடலூர் வெளிபகுதி கிளைச்செயலர் தோழர் K.விஜய் ஆனந்த் வரவேற்றார். மாவட்ட உதவி செயலர் தோழர். S. பழனி  அஞ்சலி உரை நிகழ்த்திய பின் நமது  மாவட்ட செயலர் தோழர் .K.T.சம்பந்தம் செயற்குழுவின் நோக்கங்கள் பற்றியும் செயற்குழுவிற்கான விவாத குறிப்புகளையும் அறிமுகபடுத்தி பேசினார்.  அதனை தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் 16 மாவட்ட சங்க நிர்வாகிகளும் 9 கிளைச்செயலர்களும்   (விழுப்புரம் கிளை செயலர் பங்கேற்கவில்லை) கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். நமது மாநில செயலர். தோழர். A.பாபுராதாகிருஷ்ணன் இறுதியாக நிறைவுரையாற்றினார். தோழர்களின் உணர்வு மிக்க  ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு பின் கீழ்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன .
1. Aircel நிறுவனம் மூடபட்ட சூழ்நிலையில்  வாடிக்கையாளர்களை     BSNL நிறுவனத்தில் இணைத்திட நமது தோழர்கள் அதிகாரிகளுடன் இணைந்து கூடுதல் கவனத்துடன் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பணியாற்றிட வேண்டும். நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் நமது தோழர்கள் உறுதுணையாக செயலாற்றிட வேண்டுமென அனைவறையும் இச் செயற்குழு கேட்டுகொள்கிறது. அது போல் கூடுதல் சந்தாதாரர்கள் இணைவதின் காரனமாக ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை உடனடியாக சரி செய்திடவும் MNP மூலம்  இணையும் வாடிக்கையாளர்கக்கு விரைவாக சேவை வழங்கிடத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்தை இச்செயற்குழு  கேட்டுக்கொள்கிறது.
2. BSNL அலுவலகங்கள் , தொலைபேசி நிலையங்கள் செல் கோபுரங்கள் போன்றவற்றை பராமரிக்கவும் மின் கட்டணங்கள் மற்றும் வாடகை செலுத்துவதற்கும் தேவையான நிதியினை காலதாமதமின்றி ஒதுக்கீடு செய்திட மத்திய, மாநில சங்கங்கள் முயற்சித்திட வேண்டு மென இச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது .
3. நமது கடலூர் மாவட்ட சங்கத்தின் 8 வது மாநாட்டை கள்ளகுறிச்சியில் இதுவரை நடைபெற்றிடாத  வகையில்  அனைவரும் பாராட்டும் படி மிக அற்புதமாக நடத்தி கொடுத்த கள்ளக்குறிச்சி கிளைச்சங்க தோழர்களை இச்செயற்குழு வெகுவாக பாராட்டுகிறது .
4. நமது கடலூர் மாவட்டத்தில் 10 கிளைச்சங்கங்களும் தங்களது கிளை மாநாட்டினை மேமாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஒவ்வொரு மாநாட்டிற்கும் அனைத்து பகுதிகளிலுமிருந்து தோழர்கள் கலந்து கொள்வதை உறுதிசெய்திட வேண்டும் .  
5.  மாவட்ட அளவிலான ஊழியர் பிரச்சனைகளை குறிப்பாக ஊழியர்களுக்கு 01.01.2017 முதல் வழங்கப்படவேண்டிய  NEPP , TT  சுழல் மாற்றலில் ஏற்பட்ட பாதிப்புகளை களைதல், நமது மாவட்டத்தில்  உள்ள அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்கள்,TRAஉள்ளிட்ட அலுவலகங்கள்(BSNLEU சங்க அலுவலகம் உட்பட)  கணினிகளை சரி செய்வதில் ஏற்படும் காலதாமதத்தை களைந்திடக் கோரியும் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வது .
6. கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 2009-2010 க்கான நிலுவைத்தொகை வழங்கிடவும், , திறனுக்கேற்ற ஊதியம் வழங்கிடவும் மாநில நிர்வாகத்தின் உத்திரவுகள் , நினைவூட்டும் கடிதங்கள் பல பிறப்பிக்கபட்டும் கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்திரவை அமுல் படுத்தபட வில்லை என்பதை இம்மாவட்ட செயற்குழு கவலையுடன் பார்க்கிறது  . மேற்கண்ட உத்திரவுகளை உடனடியாக அமுல்படுத்திட வேண்டி ஒப்பந்த தொழிலாளர்   சங்கத்துடன் இணைந்து இயக்கம் நடத்துவது .
7. BSNL ஊழியர் சங்கத்தின் 18 வது அமைப்பு தினத்தை அனைத்து  கிளைகளிலும் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடிட இச் செயற்குழு அறைகூவல் விடுக்கிறது .
8. பின்வரும் தோழர்கள் தலமட்ட குழுவிற்கு (LJCM) ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .

தோழர் .  K.T.சம்பந்தம்,   TT, CSC, கடலூர்                செயலர் LJCM
தோழர் . P. ரத்தினம் TT , KAC                                                                     Member
தோழர் . G.கலியமூர்த்தி AOS(TG), CSC, Temple ,CDM                         Member
தோழர் . S. சதீஷ் குமார் JE Cuddalore Port ,                                           Member
தோழர் . E.கவிதா  JE , Block 20, NTS                                                          Member
தோழர் . N. ஜெயராஜ் TT ,Udaan, Cuddalore                                             Member
தோழர் . V.S. கார்த்திகேயன் AOS(TG) CSC,VLU                                   Member
தோழர் . D. மனோகரன்  TT ,TNV                                                             Member
தோழர் . D. பொன்னம்பலம் TT ,ARA                                                                      Member
Welfare Committee  
தோழர். G. நாகராஜ் OS (TG) Villupuram   
தோழர்களின் பணிச்சிறக்க மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.மேலும் மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட மேற்கண்ட முடிவுகளை வெற்றிகரமாக அமுல்படுத்திட மாவட்டசங்க,கிளைச்சங்க நிர்வாகிகள் முழுவீச்சுடன்  பணியாற்றிடவும் மாவட்ட சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.   
தோழமையுடன்
K.T. சம்பந்தம்
மாவட்ட செயலர்


செவ்வாய், 20 மார்ச், 2018

இரங்கல் செய்தி

தோழர்களே,

  நம்முடன்  கள்ளக்குறிச்சி பகுதியில் பணிபுரியும் தோழர். T.வேம்பு TA(RM),  அவர்கள் இன்று (20.03.2018) காலை 11.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


     இறுதி ஊர்வலம் நாளை காலை 09.00 மணிக்கு கள்ளக்குறிச்சியில்  நடைபெறும்.


  அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஞாயிறு, 4 மார்ச், 2018


BSNLEU–ஊழியர் சங்கம்
தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்

இணைந்த கிளைச்செயலர் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!

           நமது இரு சங்கங்களின் (BSNLEU&TNTCWU ) இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் 06.03.2018 (செவ்வாய்கிழமை) மாலை 5.00 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும் (BSNLEU&TNTCWU ), மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரிய நேரத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

கூட்டுத்தலைமை :

                தோழர்கள் : P.ரத்தினம் மாவட்ட தலைவர் BSNLEU
                                           S.V. பாண்டியன் மாவட்ட தலைவர் TNTCWU

 ஆயப்படு பொருள்
               *   ஒப்பந்த தொழிலாளர் ஆட்குறைப்பு பிரச்சனையும் –
                     மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறையும்
               *   BSNLEU  மாவட்ட செயற்குழு
               *   திறனுக்கேற்ற ஊதியம் (Skilled wage) அமுலாக்கம்
               *   ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 2009-2010 நிலுவைத்தொகை
                    – உயர்நீதிமன்ற உத்திரவு அமுலாக்கம்.
               *  TNTCWU மாவட்ட மாநாடு

 தோழமையுள்ள,
    M.பாரதி                                                                     K.T.சம்பந்தம்
மாவட்ட செயலர்                                                        மாவட்ட செயலர்
TNTCWU                                                                              BSNLEU



செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

இரங்கல் செய்தி


தோழர்களே,

  நம்முடன் திருக்கோவிலூர்  பகுதியில் பணிபுரியும் தோழர். R.தினகரன் TT அவர்களின் தாயார் திருமதி.செங்கமலம் அம்மாள்(93) அவர்கள் நேற்று (12.02.2018) இரவு  இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

     இறுதி ஊர்வலம் இன்று மாலை 4.00 மணிக்கு அரகண்டநல்லூர் அருகில் உள்ள கீழையுரில் நடைபெறும்.

 அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

BSNLEU-ஊழியர் சங்கம்
தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்சங்கம்
கடலூர் கிளைகள்

தோழர்களே:
           நமது இரு மாநில சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க மாநிலமுழுவதும் பல மாவட்டங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு டிசம்பர் 2018 மாத ஊதியம் வழங்படாததை கண்டித்து வரும் 05.02.2018 அன்று மாலை 5.30 மணிக்கு GM அலுவலகம் முன்பு நமது கிளையின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்துகொள்ளவும் 

                          தோழமையுடன்


        K. சிவசங்கர்           K. விஜய்ஆனந்த்             P.ராஜதுரை
      கிளைசெயலர்           கிளைசெயலர்             கிளைசெயலர்
       BSNLEU GM (O)                   BSNLEU Extl                                       TNTCWU