செவ்வாய், 28 ஜூலை, 2015

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் மறைவு --அஞ்சலி--





         இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர்,  மிகப்பெரிய பொருளாளர்இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன்இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தைசிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த .பி.ஜே அப்துல் கலாம்.

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும்,ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்:
அப்துல் கலாம்இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனதுபள்ளிப்படிப்பை தொடங்கினார்ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
கல்லூரி வாழ்க்கை:
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகுதிருச்சிராப்பள்ளியிலுள்ளசெயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டுஇயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்..டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்
விஞ்ஞானியாக .பி.ஜே அப்துல் கலாம்:
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கியஅப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினிI என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதானபத்ம பூஷன்விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரைஇந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில்முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய .பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர்அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
குடியரசுத் தலைவராக .பி.ஜே


அப்துல் கலாம்:

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
விருதுகள்:

1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு
இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான்
விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார்
விருது
.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய
நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின்எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர். உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக நமது இதயபூர்வ அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

செவ்வாய், 21 ஜூலை, 2015

இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் தவறாமல் பங்கேற்பீர்!

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!


நமது இரண்டு சங்கங்களின் இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் 22.07.2015 அன்று மாலை 5.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர்கள் தோழர் A.அண்ணாமலை ,தோழர் S.V.பாண்டியன் ஆகியோர் கூட்டு தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

குறிப்பு : கிளைச்செயளர்கள் அனைவரும் 15.07.2015 தேதி முடிய, தங்களின் கிளை உறுப்பினர்கள் பட்டியலை அவசியம் கொண்டுவரவும். 
                                     

  தோழமையுள்ள,
  K.T.சம்பந்தம்

சனி, 18 ஜூலை, 2015

FORUM கூட்ட முடிவுகளும், DOT செயலருடன் நடைபெற்ற சந்திப்பும்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
FORUM கூட்ட முடிவுகளும், DOT செயலருடன் நடைபெற்ற சந்திப்பும்குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read >>>

இனிய ரமலான் வாழ்த்துக்கள் !!!


திங்கள், 13 ஜூலை, 2015

இரங்கல் செய்தி

தோழர்களே !தோழியர்களே !!

நம்முடன்  சிதம்பரம் பகுதியில் பணிபுரிந்த தோழர் N.தங்கையன் TM அவர்கள் உடல் நல குறைவு காரணமாக 12/07/2015 (ஞாயிறு) இரவு மரணம் அடைந்தார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று (13/07/2015) மாலை  4.00 மணி அளவில், வண்டிகேட் ஊழியர் குடிஇருப்பில் இருந்து  நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

திங்கள், 6 ஜூலை, 2015

Com.N.Mehanathan retirement party at Villupuram

தோழர்.N.மேகநாதன் STS விழுப்புரம் மற்றும் BSNLEUவின் மூத்த தலைவர்,.அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா விழுப்புரம் பணி ஓய்வு பாராட்டு விழாக்குழு சார்பில் , விழுப்புரத்தில் தொலைபேசி நிலைய வளாகத்தில் 30-06-2015 அன்று மாலை நடைபெற்றது..தோழர் ஆர்.ராமமூர்த்தி விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்...புகைப்படங்கள்






ஞாயிறு, 5 ஜூலை, 2015

BSNL CUDDALORE SSA RETIREMENT PARTY









30/06-2015 அன்று  BSNL கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக கான்பிரன்ஸ் ஹாலில் பணி ஓய்வு பாராட்டு விழாநடைபெற்றது.
கீழ் கண்டோர் பணி நிறைவு பாராட்டு பெற்றனர்.
 1.தோழர். எம்.சேகர் AGM/CDL 2. தோழியர் எஸ்.மங்கைகயர்க்கரசி STS/VLU 
 3. தோழர் என்.மேகநாதன் STS/VLU 4 . தோழியர். T.வாசுகி SSS/CDL
 5 தோழர் எம்.தங்கவேலு TM/CDL 6. தோழர் என்.பாலசுப்ரமனியன் TM/CDL
7 தோழர்.எஸ்.தேசிங்கு TM/KAC….புகைப் படங்கள்.. 




புதன், 1 ஜூலை, 2015

இரங்கல் செய்தி

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
நீலகிரி மாவட்ட ITEU சங்கத்தின் மாவட்ட செயலராகவும்,கடலூர் மாவட்ட சங்க பொறுப்பில் சிறப்பாக  செயல்பட்டவரும் நம்முடன் திண்டிவனத்தில் பணியாற்றிவரும் தோழர் S.ஜோசப் TM அவர்களுடைய தாயார் வியாகுலமேரி அம்மாள் இன்று (01.07.2015) மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதுடன் நமது இரங்கலையும் உரித்தாக்கிக் கொள்கிறோம்.அன்னாரது இறுதி நிகழ்வு கொடியாலம் கிராமத்தில் நாளை (02.07.2015) மதியம் 2.00 மணி அளவில் நடைபெறும்.