செவ்வாய், 29 அக்டோபர், 2013

மகளிர்பயிலரங்கம்



          நவம்பர் 17 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை  மகளிர்பயிலரங்கம் கோயம்புத்தூரில் பிரதான தொலைபேசி நிலையம் அருகேஉள்ள தாமஸ் மன்றத்தில் நடைபெற உள்ளது.

வரவேற்புரை   : தோழியர் K .பங்கஜவல்லி
அறிமுக உரை : தோழியர் P .இந்திரா

காலை அமர்வு

தலைமை  : தோழியர்  பிரேமா 
ஆசிரியர்    : தோழியர் கிரிஜா 
பொருள்     :சமூகத்தில் பெண்கள் சந்திக்கும்  சவால்கள்

பிற்பகல் அமர்வு

தலைமை : தோழியர்  ராஜலட்சுமி 
ஆசிரியர்   :  தோழர் செல்லப்பா , மாநில செயலர் 
பொருள்  : பொதுத்துறைகள் சந்திக்கும் சவால்கள்
v
புதிய பதவி உயர்வு

28-10-2013அன்று நமது BSNLEU சங்க தலைமையிலானUNITED FOURMற்கும் நிர்வாகத்திற்கும் இடையில்ஏற்பட்ட உடன்பாட்டின்படி CR இல் 'சராசரி'உள்ளீடுகளுக்காக (பதிவு) NEPP பதவி உயர்வுகள்மறுக்கபடுவதை தவிர்க்க நாம் கொடுத்தகுறிப்புகள் நிர்வாக கமிட்டி கூட்டத்தில் (28-10-2013)ஏற்றுக் கொள்ளப்பட்டது. நமது போராட்ட அழைப்பிற்குஇது முதல் வெற்றி.

திங்கள், 28 அக்டோபர், 2013

ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் பட்டுவாடா

அன்பார்ந்த தோழர்களே !!

நமது மாவட்டத்தில் பணியாற்றிவரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிட நமது இரண்டு சங்கங்களின் சார்பில் (BSNLEU & TNTCWU ) கோரிக்கை வைத்து மாவட்ட நிர்வாகத்துடனும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். நமது கோரிக்கையை தீர்த்துவைப்பதற்கு நமது மாவட்ட நிர்வாகமும் தொழிலாளர் நலத்துறையும் மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக, குறைந்தபட்ச போனஸ் 8.33% அனைவருக்கும் வழங்கிட இன்னோவைட்டி நிறுவனம் ஒத்துகொண்டுள்ளது. அதன்படி முழு நேர ஊழியர்களுக்கு ரூ.3600ம்  பகுதி நேர ஊழியர்களுக்கு அவர் அவர் வாங்கும் ஊதியத்தின் அடிப்படையிலும் போனஸ் வழங்கப்படும். 29.10.2013 முதல் தொடங்கி தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அனைத்து பகுதி ஊழியர்களுக்கும் போனஸ் பட்டுவாடா செய்யப்படும். நமது ஒப்பந்த தொழிலாளர்கள் நியாயமான போனஸ் பெற்றிட உரிய நடவடிக்கை மேற்கொண்ட நமது மாவட்ட நிர்வாகத்திற்கும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கேபிள் பகுதியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நியாயமான போனஸ் பெற்றிட நாம்  தொடர் முயற்சி செய்து வருகிறோம். தொழிலாளர் நலத்துறை அதிகாரி (LEO) அவர்கள் தனது முதற்கட்ட விசாரணையை இன்று 28.10.2013 நடத்தி உள்ளார். மேலும் ஒப்பந்ததாரர் திரு.R.சீனுவாசன் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக போனஸ் வழங்க அறிவுறுத்தி உள்ளார். கேபிள் பகுதி ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கும் வரை நமது முயற்சி தொடரும்.

சனி, 26 அக்டோபர், 2013

முகேஷ் அம்பானி

இந்தியாவின் செல்வந்தர்களில் முதலிடத்தை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். இவரது வருவாயில் 2 சதவீதம் இழப்பு ஏற்பட்டபோதும் இந்த முதலிடத்தை இவர் தக்கவைத்துள்ளார். இந்திய செல்வதர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹரூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வரும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டு 2 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது, என்றாலும் அவர் 18.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.ண்டனில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் 15.9 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். திலீப் சங்வி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி 12 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 4-வது இடத்திலும், எச்.சி.எல். நிறுவனத் தலைவர் சிவ் நாடார் 8.6 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். தொழில் அதிபர் குமார் மங்கலம் பிர்லா 8.4 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.பாலிவுட் நடிகரான ஷாருக் கான் 400 மில்லியன் டாலர் சொத்துக்களுடன் இப்பட்டியலில் 114 வது இடத்ததை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கறிஞராக விரும்பும் நரிக்குறவர் மாணவி

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது எச்தொட்டம்பட்டி நரிக் குற வர் காலனிஇங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள்குடிசை அமைத்து பல ஆண்டுகாலமாக வசித்து வருகின்றனர்.இவர்களது தொழில் ஊசிபாசிமணி விற்பதும்கிராமங்களில்திருவிழா நடைபெற்றால் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்களும் விற்பது தான்நரிக்குறவர் காலனியைச் நேர்ந்த ராமையா(42) லல்லி (38) தம்பதியினரின்  மகன் பிரசாத் (20). பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்அஜித் (15) பத்தாம  வகுப்பும் ராகுல்(12)8ம்வகுப்பும் படித்து வருன்றனர்மகள் கல்கி (18) தருமபுரி அரசு கல் லூரியில் பிகாம், (வணிக வியல்முதலாம் ஆண்டு படித்துவருகிறார்.தருமபுரி மாவட்டத்திலேயே குறவர் சமூகத்தில் கல்லூரி படிப்பிற்கு செல்லும் முதல் மாணவி என்ற பெருமைக் குரியவர் இவர்.தனது விருப்பம் குறித்து தெரிவித்த கல்கி “நான் ஏழ் மையான குடும்பத்தைச்சார்ந்தவள்என் அப்பாஅம்மா ஊசிபாசிமணிவிற்றுதான் படிக்கவைக் கிறாங்க.என் அம்மாவுக்கு உடம்புசரியில்ல.படிக்க வைக்க பணம் இல்லாத கார ணத்தினால்என் படிப்பை பாதியிலேயே நிறுத்திடச் சொன்னாங்ககல்யாணம் பண்ணிக்கோன்னுசொன்னாங்கநான் படிக் கிறேன்னு அடம்பிடிச்சி கல்லூரி சேர்ந்து படிச்சு வர்றேன்.நான் வழக்கறிஞராக ஆசைப்படுறேன்என் சமு தாயத்தில் எல்லோரும் படிக்கனும்னுஆசப்படு றேன்இதற்காக நான் என் சமூக மக்களிடையே விழிப் புணர்வுஏற்படுத்துவேன்” என்று உற்சாகத்துடன் அவர் கூறினார்.நரிக்குறவர் சமூகத்துக்கேமுன் உதாரணமாக இருக்கும் மாணவிக்கு மாவட்ட நிர் வாகமும் அரசும் படிப்பதற்குஉதவி செய்யவேண்டும் என் பதே அனைவரின் எதிர் பார்ப்பாகும்.

வியாழன், 24 அக்டோபர், 2013

DOT செயலருக்கு CMD கடிதம்

நமது CMD அவர்கள் 78.2 % IDA இணைப்பால்  01-01-2007 முதல் 10-06-2013 வரையில் ஊழியர்களுக்கு வழங்கபடாத நிலுவைதொகையை நிறுவனம் நிதி நிலையில் முன்னேறியவுடன் கொடுக்க வேண்டும் எனவும், 01-01-2007 முதல் 10-06-2013 வரை பணி ஓய்வு  பெற்ற பென்சன்தாரர்களுக்கு 78.2 % IDA இணைப்பின் படி பென்ஷன் உயர்த்தபடவேண்டும்  எனவும் 21-10-2013 அன்று DOT செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார் .

திங்கள், 21 அக்டோபர், 2013

மகத்தான உடன்பாடு:வேலை நிறுத்தம் ஒத்தி வைப்பு

19-10-2013 அன்று நடைபெற்ற UNITED FORUM
கூட்டத்தில்  25-10-2013 அன்று நடைபெற இருந்த
வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பது என்று

முடிவு   எடுக்கக் பட்டுள்ளது 

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

கள்ளக்குறிச்சி ஆர்ப்பாட்டம்-18-10-13-மாவட்ட நிர்வாகத்தின் பார்பட்ச அணுகுமுறையை கண்டித்து..



விழுப்புரம்- ஆர்ப்பாட்டம் -கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் பாரபட்ச அணுகுமுறையை எதிர்த்து- நாள் 18-10-13 காலை 10 மணி

சனி, 19 அக்டோபர், 2013

கடலூர் மாவட்ட நிர்வாகத்தினை எதிர்த்த நமது போராட்டம் ஒத்திவைப்பு

                                                 இன்று காலை நமது முதுநிலை பொது மேலாளர் திரு.A. மார்ஷல் ஆண்டனி  லியோ, அவர்களின் அழைப்பின் பேரில் நமது சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.     கள்ளக்குறிச்சி TM சுழல் மாற்றல் உள்ளிட்ட நமது பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும் என்ற          உறுதிமொழியினை நமது பொது மேலாளர் அளித்துள்ளார் . மேலும் அவர்  கேட்டுக்கொண்டதற்கு இணங்க 23.10.2013 அன்று நாம் நடத்த இருந்த தர்ணா  போராட்டம்  ஒத்திவைக்கப்படுகின்றது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

புதன், 16 அக்டோபர், 2013

BSNLஉத்தரவு

01.10.2013 முதல் 6.6% பஞ்சப்படி உயர்ந்து மொத்தம் 85.5%ஆக மாறியுள்ளது- 15.10.2013 அன்று BSNLஉத்தரவு வெளியிட்டுவிட்டது

இரங்கல் செய்தி

                   விழுப்புரம் கிளை செயலாளர் தோழர் A . சுந்தர் அவர்களுடைய தாயார் திருமதி. ராஜம் அம்மாள் (75) நேற்று மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம். அன்னாரது இறுதி சடங்கு 17.10.2013 அன்று காலை 10.00 மணிக்கு  சென்னை பெருங்குடியில் நடைபெற உள்ளது. தாயாரை பிரிந்து வாடும் தோழர் சுந்தர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நமது அழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

போராட்ட விளக்க கூட்டங்கள்

அன்பார்ந்த தோழர்களே !
        கடலூர் மாவட்ட நிவாகத்தின் பாரபட்ச அணுகுமுறையை மாற்றிட நாம் நடத்த உள்ள தொடர்போராட்ட விளக்கக் கூட்டங்கள் பின்வரும் அட்டவணையின்படி மிகச்சிறந்த வகையில் நடத்திடுமாறு மாவட்டசங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
நாள்                  இடம்                  பங்கேற்கும் தோழர்கள் 

14.10.2013      சிதம்பரம்              K.T.சம்பந்தம், G.S.குமார் 

15.10.2013      கடலூர்                   K.T.சம்பந்தம்,I.M.மதியழகன் 

15.10.2013       பண்ருட்டி            I.M.மதியழகன் (உணவு இடைவேளை )

15.10.2013       செஞ்சி                   V.குமார், I.துரைசாமி 

15.10.2013        நெய்வேலி          N.மேகநாதன் ,G.M.ராஜசேகரன் 

17.10.2013        திண்டிவனம்       I.M.மதியழகன் ,G.ஜெகதீசன் 

17.10.2013         விழுப்புரம்            N.மேகநாதன் ,N.P.சேகர்

17.10.2013          விருத்தாச்சலம்  A.அண்ணாமலை , G.M.ராஜசேகரன்

17.10.2013          அரகண்டநல்லூர்  V.குமார் ,P.ராஜேந்திரன் 

17.10.2013           கள்ளக்குறிச்சி     K.T.சம்பந்தம்,S.பொன்மலை

   

வெள்ளி, 11 அக்டோபர், 2013

செயலக கூட்ட முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே!

    10.10.2013 அன்று மாலை நமது மாவட்ட தலைவர் தோழர் V.குமார் தலைமையில் மாவட்ட செயலக கூட்டம் நடைபெற்றது.கள்ளகுறிச்சி TM சுழல்மாற்றல் பிரச்சினையில் மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டது.மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய  திட்டமிட்ட இழுத்தடிக்கும் போக்கு, BSNLஊழியர் சங்கத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறையில் மாற்றம் காணவும், கள்ளக்குறிச்சி சுழல்மாற்றல் இதுவரையில் கடைபிடித்த நடைமுறையில் அமுல்படுத்திடவும், கடலூர் ஒப்பந்த ஊழியர் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டபடி நிறைவேற்றிட வலியுறுத்தியும்  சக்திமிக்க தொடர்போராட்டம் நடத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

  முடிவுகள்

1. 17.10.2013ற்குள்  அனைத்து கிளைகளிலும் போராட்ட விளக்க கூட்டம்.        


2.    18.10.2013 அன்று  அனைத்து கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

3.  23.10.2013 அன்று கடலூர் GM அலுவலகம் முன்பாக தர்ணாபோராட்டம்

        மேற்கண்ட போராட்டங்களை  வெற்றிகரமாக நடத்திட அனைத்து கிளை நிர்வாகிகளும், மாவட்ட சங்க பொறுப்பாளர்களும் இணைந்து பணியாற்றிடு மாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.