ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

தோழர்.செல்லப்பா AGS , தோழர்.பாபு ராதாகிருஷ்ணன் CS பங்கேற்க்கும் சிறப்பு கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே , தோழியர்களே !!!

நமது மாவட்ட செயலக கூட்டம் 31.07.2015 அன்று மாவட்ட தலைவர் தோழர்.A .அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. 

பின்வரும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன :

1. அண்மையில் பணி நிறைவு செய்த தோழர்.N.மேகநாதன் , தோழர்.B.சந்திரசேகர் , தோழர்.P.ராஜேந்திரன் ஆகியோர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் தோழர்.செல்லப்பா AGS , தோழர்.பாபு ராதாகிருஷ்ணன் CS பங்கேற்க்கும் சிறப்பு கூட்டம் விழுப்புரத்தில் 11.08.2015 அன்று மாலை 5 மணிக்கு வெகு சிறப்பாக நடத்துவது.

2. பாராட்டு விழா செலவினங்களுக்கு ஒவ்வொரு உறுப்பினரிடமும் ரூ.100 வசூலித்து மாவட்ட சங்கத்திடம் வழங்கிடவும், 300 க்கும் மேற்பட்ட ஊழியர்களை சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க செய்திட நடவடிக்கை மேற்கொள்ளவும்.   

3. நாகர்கோவிலில் OCT - 3,4 தேதிகளில் நடைபெற உள்ள CCWF அகில இந்திய மாநாட்டு நிதி, ஒப்பந்த தொழிலாளர் ஒவ்வொருவரிடமும் ரூ.300 வசூல் செய்திட வேண்டும். இம்மாத ஊதியத்தில் ரூ.150 வசூலித்து AUG  - 15 ல் ஈரோட்டில் நடைபெற உள்ள ஒப்பந்த ஊழியர்கள் தொழிற்சங்க வகுப்பில் முதல் தவணையாக ரூ.30,000 வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

4. இணைந்த கிளைசெயளர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தங்கள் கிளைக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கைப்படி ஒப்பந்த தொழிலாளர் தோழர்களை பங்கேற்க செய்திட வேண்டும்.

                     தோழர்களே, மேற்கண்ட முடிவுகளை முழுமையாக அமுலாக்கிட வேண்டுமென மாவட்ட சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


தோழமையுடன், 
K.T.சம்பந்தம் 

கருத்துகள் இல்லை: