வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

Joint Forum ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் உள்ளடக்கிய Joint Forum சார்பாக , ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பைத்தியகாரதனத்தில் அவசரகோலத்தில் பிஎஸ்என்எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை இணைப்பதற்கு எதிராக, மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில், இன்று 28-02-2014 மதிய உணவு இடைவெளி நேரத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த அழைப்பு விடுத்துள்ளது .ஊழியர்கள் பிரதிநிதிகள் ஆலோசனை இல்லாமல், அரசாங்கம் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்க அனுமதிக்க முடியாது. கிளைகள் அனைத்தும் ஆர்பாட்டத்தை வெற்றிகரமாக்க மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது . Joint Forum அடுத்த நடவடிக்கையை முடிவு செய்ய 04-03-2014 அன்றுமீண்டும் கூட உள்ளது .

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

வெண்மணி நினைவாலய திறப்பு விழா



தஞ்சாவூர்:வெண்மணி நினைவாலயத் திறப்பு விழாவிற்கு, 25 ஆயிரம் பேரைத் திரட்டுவது என விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் கடந்த 16ம் தேதி தஞ்சையில் மாநிலத் தலைவர் ஏ.லாசர் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. ஜி.மணி, எஸ்.திருநாவுக்கரசு, வி.அமிர்தலிங்கம், கே.பக்கிரிசாமி உட்பட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:
மனிதர்களாக வாழ வேண்டும், உரிமை வேண்டுமென செங்கொடியின் கீழ் அணிதிரண்டு போராடிய விவசாய தொழிலாளர்கள் மீது நிலப்பிரபுக்கள் கொடூரமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டனர். குண்டர்களின் தாக்குதல், பொய்வழக்குகள், சிறை தண்டணையை விவசாயக்கூலிகள் சந்தித்தனர். போராடிய முன்னணித் தோழர்கள் கொல்லப்பட்டனர். அப்போதும் போராட்ட அலையை அடக்க முடியாததால், 1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி கீழ்வெண்மணி கிராமத்தில் ஒரு சிறு குடிசைக்குள் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என 44 பேரை தீயிட்டு கொளுத்தினார்கள். ரத்த வெறிபிடித்த நிலப்பிரபுக்களும் அவர்களின் அடியாட்களும்!உரிமைக்காக, செங்கொடியைக் காப்பதற்காகப் போராடி பலியான 44 தோழர்களின் நினைவாக பிரம்மாண்டமான நினைவாலயம் வெண்மணி கிராமத்தில் சி.ஐ.டி.யு வின் முன் முயற்சியால் எழுப்பப்பட்டுள்ளது. மார்ச் 9ல் வெண்மணி தியாகிகள் நினைவாலயம் திறப்பு விழா நாகை மாவட்டம் வெண்மணியில் நடைபெறுகின்றது. சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் தோழர்.பிரகாஷ்காரத் திறந்து வைக்கிறார். சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ தலைமையேற்கிறார்.25000 விவசாயத் தொழிலாளர்களை திரட்டி கீழ்வேளூரில் இருந்து ஊர்வலமாக கொடிகளுடன் சென்று அஞ்சலி செலுத்தி திறப்பு விழாவில் பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வெண்மணியில் உயிரோடு எரிக்கப்பட்ட 44 தியாகிகளை நினைவு கூரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் 44 புதிய கிராம கிளை அமைப்புகளை நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்வது, மாவட்டங்கள்தோறும் விழாவினை விளம்பரப்படுத்துவது, கிராமம் கிராமமாக சென்று நோட்டீஸ் வினியோகம் செய்து விவசாயத் தொழிலாளர்களை திரட்டுவது, என மாநில நிர்வாகிகள் கூட்டம் முடிவு செய்துள்ளது. இம்முடிவினை சிறப்போடு நிறைவேற்றிட வேண்டுமென மாவட்டக்குழு இடைக்குழு கிளை நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறோம்.

வியாழன், 20 பிப்ரவரி, 2014

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

கிளைச்செயலர்கள் மற்றும் செயலகக்கூட்ட முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே !
 இன்று மாலை நாம் திட்டமிட்டபடி இணைந்த  கிளைச்செயலர்கள் மற்றும் மாவட்ட  செயலகக் கூட்டம் நடைபெற்றது.நமது மாவட்ட தலைவர் தோழர் V.குமார் தலைமை தாங்கினார்.அதில் மார்ச் 08 அன்று குடும்ப விழா நடத்துவது,மீதமுள்ள கிளை மாநாடுகளை நடத்தி முடிப்பது,மேல்மட்ட நன்கொடைகளை வசூலித்து ஒப்படைப்பது,மற்றும் RGB வேட்பாளர்களை தேர்வு செய்வது என்பன ஆய்படு பொருளாக இருந்தது.கீழ்கண்ட முடிவுகள் ஒரு மனதாக எடுக்கப்பட்டுள்ளது.
முடிவுகள்
1).மார்ச் 8 அன்று கடலூரில் வெகுச்சிறப்பாக குடும்ப விழா நடத்துவது.
2) மார்ச் மாத இறுதிக்குள் கிளை மாநாடுகளை நடத்தி முடிப்பது.
3) மார்ச் முதல் வாரத்தில் அனைத்து நன்கொடைகளையும் வசூலித்து மேல்மட்டங்களுக்கு அனுப்புவது.
4) கீழ்கண்ட தோழர்களை RGB வேட்பாளர்களாக நமது சங்கத்தின் சார்பில் நிறுத்துவது.என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
நமது வேட்பாளர்கள் 
தோழர் A.அண்ணாமலை SSSகடலூர் 
தோழர் I.துரைசாமி TM திண்டிவனம் 
தோழர் N.உமாசங்கர் TM விழுப்புரம் 
தோழர்களே மேற்கண்ட  முடிவுகளை வெற்றிகரமாக்கிட இணைந்து களப்பணியாற்றிடுவோம் வெற்றிபெறுவோம்.

RGB தேர்தல் உடன்பாடு

அன்பார்ந்த தோழர்களே !
சென்னை கூட்டுறவு நாணயச்சங்க RGB தேர்தலுக்கான வேட்பாளர்களை NFTE,BSNLEU,SNEA(I),AIBSNLEA ஆகிய சங்கங்கள் கூட்டாக நிறுத்துவது என்று நான்கு சங்கங்களும் இணைந்து பேசி  18.02.2014 அன்று கூட்டணி  உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். அதன்படி NFTE-4,BSNLEU-3,SNEA(I)-1,AIBSNLEA-1 என்ற அளவில்  RGB உறுப்பினர்களை பகிர்ந்துகொள்வது, செலவிங்களை பகிர்ந்துகொள்வது, கூட்டாக தேர்தல் பிரச்சாரம் செய்வது,எதிர்வரும் 01.03.2014-ல் மீண்டும் கூடி பேசுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளையும் நமது கூட்டணி வேட்பாளர்கள் கைப்பற்ற நமது தோழர்கள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

பன்முகப் போராளி சிங்காரவேலர்



இன்று சிங்காரவேலரின் 154 ஆவது பிறந்த நாள்
‘சிந்தனைச் சிற்பி’ என அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட சிங்காரவேலர் ஒரு பன்முகப் போராளியாவார். 1860ம்ஆண்டு பிப்ரவரி 18ம் நாள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மீனவர் குடும்பத்தில் பிறந்த சிங்காரவேலர் இந்திய விடுதலைப் போராட்டம், பொதுவுடமை இயக்கம், தொழிற்சங்க இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கம், எழுத்தாளர் என பல துறைகளிலும் வலுவான முத்திரை பதித்தவர். பல்வேறு போராட்டங்களில் முனைப்புடன் பங்கேற்ற சிங்காரவேலர் ஆர்வம் மிக்கஒரு படிப்பாளியாகவும் திகழ்ந்தார். அரசியல், பொருளாதாரம், சமூகம், விஞ்ஞானம் என ஏராளமான நூல்களை அவர் கற்றறிந்துள்ளார். அவரைச் சந்திக்க வருபவர்களிடம் “நேற்று என்ன புத்தகம் படித்தாய்” என அவர் கேட்பது வழக்கம் என நினைவு கூர்கிறார் குத்தூசி குருசாமி. 1946ம் ஆண்டு பிப்ரவரி 11ம் நாள் தனது 86ம் வயதில் மரணமடைந்த சிங்காரவேலர் இறுதி மூச்சுவரை போராட்டம் மிக்க தனது பொது வாழ்க்கையை தொடர்ந்தார்.துவக்க காலத்தில் பௌத்த மதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட சிங்காரவேலர் பின்னர் இடதுசாரி கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஒரு பொதுவுடமைவாதியாக மாறினார். கான்பூரில் 1925ல் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்கினார். பின்னர் கான்பூர் சதி வழக்கில் அவர் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். 1922 ஆம் ஆண்டு கயாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற சிங்காரவேலர் தன்னை “உலகப் பொதுவுடமை இயக்கத்தின் பிரதிநிதி” என அறிமுகப்படுத்திக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
காந்தியின் மீது பற்றும் முரண்பாடும்
காந்தியின் மீது துவக்க காலத்தில் மிகப் பெரிய மரியாதையை வைத்திருந்தவர் சிங்காரவேலர். விடுதலை பெற்ற இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என அவருக்கு பல பகிரங்கக் கடிதங்கள் எழுதினார். அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் “நம்முடைய துரதிருஷ்ட மக்கள் தற்போதைய அந்நியர் சுரண்டலிலிருந்தும் எதிர் காலத்தில் நம்மவர் சுரண்டலிலிருந்தும் விடுபடாத வரை அவர்களுக்கு சுதந்திரம் என்பதோ மகிழ்வு என்பதோ கிடையாது என நான் நம்புகிறேன். ஆதலால் தான், பொதுவுடமை தான் நிலங்களையும் தொழிற்சாலைகளையும் பொது நன்மைக்காகவும் தொழிலாளர்களின் நன்மைக்காகவும் தன்னகத்தே கொண்டுள்ளது எனவும் நம்புகிறேன். இந்தப் பொதுவுடமை சுபிட்சத்தையும் சுதந்திரத்தையும் நல்கும் என்பதில்எனக்கு நம்பிக்கையுண்டு.... ஒவ்வொரு குடிமகனும் தனக்கென்று கொஞ்சம் நிலத்திற்கு சொந்தக்காரனாக இருக்க வேண்டும். அவனவன் சொந்த நிலத்தில் அவனவனே பாடுபட்டு பயிரிட வேண்டும். மேலும் ஒவ்வொரு குடிமகனும் தனக்கென்று சொந்தமான நல்லதொரு குடிசையில் வாடகையின்றி நலமுடன் வாழ வேண்டும். இந்த உறுதிமொழியை வழங்காதவரை எந்தவித சுயராஜ்யமும் சிறந்ததாக நான் நிச்சயம் கருதமாட்டேன்” என எழுதினார். இவ்வாறு காந்தியிடம் மிகவும் எதிர்பார்த்ததற்கு மாறாக அவரது பேச்சும் நடவடிக்கையும் அமைந்ததைப் பார்த்த சிங்காரவேலர் பிற்காலத்தில் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
பொதுவுடமை போராளியாக...
பொதுவுடமை இயக்கச் சித்தாந்தத்தில் அவருக்கு இருந்த ஈடுபாடும் உறுதியும் ஆழமானது. மாமேதை லெனின் மரணமடைந்தபோது அவர் வெளியிட்ட உணர்ச்சி மிக்கஇரங்கல் செய்தியிலும் இதனை வெளிப்படுத்தினார். அதன் ஒரு பகுதி வருமாறு. “தம் சொந்தநாட்டில் நிக்கோலாய் லெனின் அரசியல், சிந்தனை, தத்துவம் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய மிகப்பெரும் புரட்சி அழிக்கப்படலாம். ஒரு கால் மக்கள் சிலரின் தன்னலப்போக்கினால் ஒதுக்கி தள்ளப்படலாம். ஆனால் அது மீண்டும் உயிர் பெற்று எழுந்து இறுதியாக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கையை மிகச் சிறப்புள்ளதாகவும், இன்பம் உள்ளதாகவும் ஆக்கும். ஏராளமானவற்றை செய்துள்ள அவருக்கு ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதர்களைப் போலவே உழைக்கவும், வாழவும் உரிமை உண்டு என்ற தெளிவான தோற்றத்தை தொழிலாளிக்கு தந்தஅவருக்கு, நம் அன்பையும் நன்றி உணர்வுடனான வணக்கத்தையும் காட்டுகிற முறையில் எங்கள் கரங்களை உயர்த்துகிறோம்”. பிற்காலத்தில் சோவியத் யூனியன் சுயநல சக்திகளாலும் ஏகாதிபத்திய சக்திகளாலும் சிதறுண்டதையும் சோசலிசம் பின்னடைவைச் சந்தித்ததையும் நாம் அறிவோம். ஆயினும் பின்னாளில் நடக்க இருப்பது குறித்து எவ்வளவு தீர்க்க தரிசனமாக 1924ம் ஆண்டே சிங்காரவேலர் வெளிப்படுத்தினார் என்பது வியக்கத்தக்கதாகும்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்பது புரட்சிகரமானதல்ல என வாதிடுவோருக்கு 1930களில் அவர் கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறார். “சமதர்ம ஞானத்தை பொதுமேடையிலிருந்து தெரிவிப்பதுடன் சட்டசபைகளிலும் மற்ற பல தேசியஸ்தாபனங்களிலும் நுழைந்து பொதுமக்களி டம் நெருங்க வேண்டும். சட்ட சபைகளால் மட்டும் சமதர்மத்தை நாட்டில் ஸ்தாபிக்க முடியாது. ஆனால் அவ்விடத்தில் செய்யும் பிரச்சாரம் பல கோடி மக்களுக்கு முழுமையாக எட்டும்”.இந்தியாவில் முதல் தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கிய பெருமை 1905ல் ஹார்வி மில் தொழிலாளர்களுக்கான சங்கத்தை உருவாக்கிய வ.உ.சிக்கு உண்டு. ஆனால் இந்தியாவில் 1918ம் ஆண்டு வாக்கில் ஒரு இடதுசாரி தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கிய பெருமை சிங்காரவேலருக்கே உண்டு. தென் இந்திய ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை தலைமையேற்று நடத்திய காரணத்திற்காக சிங்காரவேலர் கைது செய்யப்பட்டு 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். ஆயினும் தண்டனை முடியும் முன்பே அவர் விடுதலை செய்யப்பட்டார்.
பெரியாருடன் நட்பும் - முரண்பாடும்
மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், சமூக சீர்திருத்த கருத்துகளுக்காகவும் தீவிரமாகச் செயல்பட்டவர் சிங்காரவேலர். பெரியாருடன் நட்புக் கொண்டிருந்த சிங்காரவேலர் அவரை சமதர்மக் கருத்துக்களை ஏற்க வைத்தார். இதனையொட்டித்தான் பெரியார் 1931-32 ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியன் பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து திரும்பிய பிறகு பொதுமேடைகளில் தீவிரமாக சுயமரியாதை கருத்துக்களுடன் சமதர்மக் கருத்துக்களையும் சேர்த்து பிரச்சாரம் செய்தார். ஈரோட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டை “சுயமரியாதை சமதர்ம இயக்கமாநாடாக” நடத்திய பெரியார் அதில் சிங்காரவேலரையும் பங்கேற்க வைத்தார். பெரியார் நடத்திய சமதர்ம பிரச்சாரம் கண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அச்சமடைந்தது. சுயமரியாதை இயக்கத்தில் இடம்பெற்ற கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களும் அச்சமடைந்தனர். நிர்ப்பந்தம் காரணமாக பெரியார் பிற்காலத்தில் சமதர்ம பிரச்சாரத்தை கைவிட்டு சுயமரியாதை இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தினார். இதனால் அதிருப்தியடைந்த சிங்காரவேலர், ஜீவா போன்றவர்கள் சுயமரியாதை இயக்கத்துடனான தங்கள் தொடர்பை முறித்துக் கொண்டனர். பெரியாரிடம் ஏற்பட்ட மாற்றத்திற்காக சிங்காரவேலர் பிற்காலத்தில் அவரை விமர்சனம் செய்தும் பிரச்சாரம் செய்தார்.
சமூக சீர்திருத்தத்தில் தனிக் கவனம்
எனினும் தன்வாழ்நாள் முழுவதும் பொதுவுடமை இயக்க கருத்துக்களோடு சமூக சீர்திருத்த கருத்துக்களிலும் தனிக் கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்தார் சிங்காரவேலர். இது குறித்து அவர் குறிப்பிட்டிருப்பதாவது. “நமது நாட்டில் மூன்று முக்கியமான தீமைகள் பரவியுள்ளதைக் காணலாம். அவையாவன: மதபேதம், ஜாதிபேதம், பொருளாதார பேதம். மற்ற தேசங்களில் பொருளாதார பேதம் ஒன்றே காணப்படும். இந்திய தேசத்தில் மாத்திரம் இம்மூன்றும் நிலைபெற்றுள்ளது. ஆதலின் இந்திய தேசத்தில் பொருளாதார வித்தியாசத்தை ஒழிப்பதோடு சாதி, மத வித்தியாசங்கள் ஒழிக்கப்பட வேண்டியது மிக அவசியமாகும். சிலர் பொருளாதார பேதம் ஒழிந்தால் மத பேதமும், சாதிபேதமும் தானாகஒழிந்து விடும் என்கிறார்கள்.
ஆனால் இதுமாத்திரம் போதாதென்று தோன்றுகிறது. ஏனெனில் நமது தேசம் மற்ற தேசங்களை விட விசித்திரமானதோர் தேசமாகும். எங்குமில்லாத சமூக வித்தியாசங்கள் இங்கு தோன்றியுள்ளன”. வர்க்க ஒடுக்குமுறைக்கும் சமூக ஒடுக்குமுறைக்கும் எதிராக ஏக காலத்தில் போராட வேண்டுமென 1930களில் அவர் கூறியது இன்றளவும் பொருந்தக் கூடிய ஒன்றாகும்.தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற அவர்கள் மென்மேலும் விழிப்புணர்வு பெற வேண்டுமென வலியுறுத்தினார் சிங்காரவேலர். இது குறித்து அவர் கூறுவதாவது. “நமது தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைமை அபிவிருத்தியடைய வேண்டுமானால் பஞ்சமர், பறையர்என தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல்துறையில் இறங்கி தங்கள் சமத்துவத்தைப் பெற தாங்களே முயற்சி செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட வம்சத்தில் உதித்த இரண்டொரு முதலாளிகளால் தங்களுக்கு எதுவும் கூடி வரப்போவதில்லை. சமதர்ம ஆட்சி வரும் வரை தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினர் தங்கள் உரிமைகளை தாங்களே பெற வேண்டும். தீண்டாமை ஒழிக என்ற மந்திர உபதேசம் செய்வதால் 7 கோடி மக்களின் தரித்திரம் ஒழியும் என்பது வஞ்சனையே ஆகும்”.
முன்னெடுத்துச் செல்வோம்
இவ்வாறு பொதுவாழ்வின் பல்வேறு தடங்களில் ஆழமான முத்திரை பதித்தவர் சிங்காரவேலர். எனினும் அவர் நடத்திய போராட்டங்கள், வெளியிட்ட கருத்துக்கள், செய்த பணிகளுக்கு ஏற்ப போதுமான அளவில் அவர் நினைவு கூரப்படவில்லை என்ற நியாயமான ஆதங்கம் பலருக்கும் உள்ளது. அதில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய கடமை இன்றைய தலைமுறைக்கு உண்டு.இடதுசாரி இயக்கம் இன்று அரசியல், சித்தாந்த, சமூக ரீதியான பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ளும் திராணியும், உறுதிப்பாடும் அதன் கோட்பாடுகளுக்குள்ளேயே உண்டு. சிங்காரவேலரின் பல்வேறு பங்களிப்புகளை நினைவுகூர்வது மட்டுமல்ல முன்னெடுத்துச் செல்வது இடதுசாரி இயக்க வளர்ச்சிக்கு பெரிதும் உரமூட்டும்.
கட்டுரையாளர், தோழர் பி.சம்பத் நன்றி தீக்கதிர்18.02.2014

ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றுங்கள்

குறைந்தபட்சக் கூலியில் ஒரு பக்கம் வறுமையோடு போராட்டம், மறுபக்கம் பணிநிரந்தரம் கோரி அரசோடு போராட்டம் என்று தொடர்கிறது இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்க்கை. அவர்களில் ஒரு குழுவினர்தான் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள்.
லாபம் மட்டுமே குறி!
விவசாயம், தொழில், சேவைத் துறை இந்த மூன்றும் சேர்ந்ததுதான் மொத்த உள்நாட்டு உற்பத்தி. இதில் தொழில் துறை, சேவைத் துறையில் பணியாற்றுபவர்களில் 90% பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள். நேருவின் பஞ்சசீலக் கொள்கையில் உருவான பொதுத்துறை நிறுவனங்களின் நோக்கம் லாபம் மட்டுமே அல்ல; வேலைவாய்ப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்திப் பெருக்கத்துக்காகவும் அவை ஏற்படுத்தப்பட்டன.
ஆனால், அந்தக் கொள்கையைக் கிடப்பில் போட்டுவிட்டு, லாபம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பொதுத்துறை நிறுவனங்கள் செயல் படுகின்றன. பல்வேறு பணிகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டு விட்டன. எட்டு மணி நேர வேலை 12 மணி நேரமாக்கப்பட்டது. ஒப் பந்தத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே ஓய்வுபெறும் அவலச் சூழல் உருவாகிவிட்டது.
சட்டத்தை மதிக்காத நிர்வாகங்கள்
என்.எல்.சி-யில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களைச் சுரண்டி வருகி றார்கள். தொடர்ச்சியாக 450 நாட்கள் பணிசெய்வோரை, நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டம் இருந்தும், அதனை நிர்வாகம் பொருட்படுத்தவில்லை. கொத்தனார், சித்தாள்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களைவிட பொதுத்துறை நிறுவனங்களின் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கூலி மிகக் குறைவு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
பணி நிரந்தரம்தான் இதற்கு ஒரே தீர்வு. அதற்காக நெய்வேலியில் வேலைநிறுத்தப் போராட்டங்களை மேற்கொண்டோம். போராட்டம் மூலமாகவே இந்தியாவில் வேறு எந்த பொதுத்துறை நிறு வனத்திலும் கிடைக்கப்பெறாத ஊதிய உயர்வை முதன்முதலாகப் பெற்றோம். சொல்லப்போனால், எங்களை முன்னு தாரணமாகக் கொண்டுதான் நாட்டின் இதர பொதுத்துறை நிறுவனங்களிலும் ஊதிய உயர்வு கிடைக்கப்பெற்றது.
உதாசீனப்படுத்தப்படும் தீர்ப்பு
உச்ச நீதிமன்றம், நெய்வேலித் தொழி லாளர்களைப் பணி மூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால், நிர்வாகம் சாக்குப்போக்குச் சொல்லி காலம் தாழ்த்திவருகிறது. ஒவ்வொரு முறையும் போராட்டங்களின் மூலமே எங்களது நியாயமான உரிமைகளைப் பெற முடிகிறது. அதனால், மீண்டுமொரு வலிமையான போராட்டத்துக்குத் தயாராகி விட்டோம்.
நாட்டுக்கே ஒளி கொடுக்கும் எங்கள் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒளி இல்லை. இந்தப் போராட்டத்துடன் நாங்கள் ஓய மாட்டோம். எல்லாக் கட்சிகளும் எங்கள் குரலுக்குச் செவிசாய்த்தே ஆக வேண்டும். நாங்கள் யார் என்று வரும் தேர்தலில் எல்லோருக்கும் தெரியும்!
- டி. ஜெயராமன், நெய்வேலி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கப் பொதுச் செயலாளர்

திங்கள், 17 பிப்ரவரி, 2014

இரங்கல்செய்தி

அன்பார்ந்த தோழர்களே !
சங்கராபுரம் கிளை உறுப்பினர் தோழர் K.மாயவன் TM விறியூர் மற்றும் K.ராஜா ஒப்பந்த ஊழியர் சங்கராபுரம் ஆகியோர்களது தாயார் திருமதி K.மண்ணாங்கட்டி அவர்கள் 16.02.2014 அன்று மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்தெரிவித்துக்கொள்கிறோம்.அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினற்கும் உறவினர்களுக்கும் நமது பரிவினையும் இரங்கலையும் உரித்தாக்கிக்கொள்கிறோம். அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று மாலை சங்கராபுரம் அருகிலுள்ள மஞ்சப்புத்தூர் கிராமத்தில் நடைபெறும்.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

திருக்கோயிலூர் கிளைமாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

அன்பார்ந்த தோழர்களே !
18.02.2014 அன்று நடைபெற இருந்த திருக்கோயிலூர் கிளையின் ஏழாவது கிளைமாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தேங்கியுள்ள பிரச்சனைகள் தீர்விற்கு பொதுச் செயலாளர் நிர்வாகத்துடன் சந்திப்பு.

சனி, 15 பிப்ரவரி, 2014

மாவட்ட செயலகம் மற்றும் கிளைச்செயலர்களின் இணைந்த கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !
நமது மாவட்ட செயலகம் மற்றும் கிளைச்செயலர்களின் இணைந்த  கூட்டம் வருகின்ற 18-02-2014 அன்று மாலை  5 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட சங்க செயலகக் கூட்ட நிர்வாகிகளும் அனைத்து கிளைச் செயலாளர்களும்   தவறாமல் குறித்த நேரத்தில்  கலந்து கொள்ள வேண்டுகிறோம்.  பொருள்: சென்னை சொசைட்டி RGB தேர்தல்

BSNL MTNL இணைப்பு -FORUM முடிவுகள்

BSNL, MTNL நிறுவனங்களை இணைப்பதை எதிர்க்கிறோம்.

ராஜ்கோட் மத்திய செயற்குழு முடிவுகள்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

தேர்தல் அதிகாரி நியமனம்

அன்பார்ந்த தோழர்களே !
பிரதிநிதித்துவப்  பேரவை தேர்தல் 2014 நமது கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு (பிரதிநிதித்துவப்   பேரவை தேர்தல் 2014) தேர்தலை நடத்த சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் உயர்திரு. C.T.மோகன், B.Sc., M.L.,  நியமிக்கப்பட்டுள்ளார்.
2014-2019 காலத்திற்கான சங்க பிரதிநிதித்துவப் பேரவை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ளதால் 03.02.2014 வரை சேர்க்கப்பட்டு தொடர்ந்து அங்கத்தினர்களாக இருப்பவர்களின் பெயர்கள் மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். << கிளிக் >>

OL கடன் ரூபாய் 4 லட்சத்திலிருந்து 5 லட்சம்

அன்பார்ந்த தோழர்களே !

கூட்டுறவு சங்க  OL கடன் ரூபாய் 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக 03-03-2014 முதல் கிடைக்கும். இந்த மாதம் லோன் வாங்கினாலும் அடுத்த மாதம் புதிய லோன் (4 லட்சம் to 5 லட்சம்) தொகை கிடைக்கும்.

சனி, 8 பிப்ரவரி, 2014

எலி வளைகளில் உணவு தேடும் அவலம்



ராம் அவதார் , ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும் அதன் மீது அவர் உரிமை கொண்டாட முடியாது./உத்தரப்பிரதேசத்தின் குருமிஹா - மாபிடோலாவில் சாதி இந்துக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள முஷார் இனமக்கள்
 
ராம் அவதார் (60) வாழ்க்கை ஒவ்வொரு நாளுமே ஒரு போராட்டம்தான். இவரது போராட்டம் பணத்திற்கானதோ அல்லது தன் அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கானதோ அல்ல. தானும் தன்னைச் சார்ந்தவர்களும் எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இவர் போராடிக் கொண்டிருக்கிறார்களா என்பது ஆச்சர்யமாக இருக்கும்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் குஷிநகர் மாவட்டத்தில் குத்வா திலீப் நகர் கிராமத்தைப் சேர்ந்தராம் அவதார் தாழ்த்தப்பட்ட ‘சாதியில் முஷாஹர் இனத்தைச் சேர்ந்தவர். இவர் தன் குடும்பத்தினருக்குத் தேவையான கோதுமையையும், அரிசியையும் வயல் வெளிகளில் உள்ள எலி வளைகளிலிருந்து கடந்த முப்பதாண்டுகளாக சேகரித்து வருகிறார்.

அறுபது வயதாகும் ராம் அவதார், உயர் சாதியினரால், எவ்வாறு எலி வளைகளைத் தேடி அவர்களது நிலங்களுக்குள் நுழைந்தற்காக பல முறை கசையடிகளைப் பெற்றிருக்கிறார். இவ்வாறு முஷாஹர் இனத்தைச் சேர்ந்த தீண்டத்தகாதவர்கள் தங்கள் நிலத்திற்குள் நுழைந்தால் தங்கள் நிலத்தின் புனிதம் கெட்டுவிடும் என்று நிலப்பிரபுக்கள் நம்புகிறார்கள். எனவே, அவர்களின் தாக்குதல்களுக்கு பயந்து, அவர்களுக்குத் தெரியாமல், இரவில்தான் எலிகளின் வளைகளிலிருந்து எலிகள் சேகரித்து வைத்துள்ள உணவு தானியங்களைத் திருடி வருகிறார். ஆயினும் அவ்வாறு சேகரித்து வரும் உணவு தானியங்கள் தன் குடும்பத்தினரைப் பட்டினிக் கொடுமையிலிருந்து பாதுகாத்திடக் கூடிய அளவிற்கு போதுமானவை கிடையாது.ராம் அவதார் குடும்பத்தினர் அசைவ உணவு உட்கொள்பவர்கள்தான். இவர்களுக்குக் கிடைக்கும் அசைவ உணவு என்பது வயல்வெளிகளில் கிடைத்திடும் நந்தைகள்தான்.ராம் அவதாருக்கு மூன்று மகன்களும், மூன்று மகள்களும் இருக்கிறார்கள்.

இவர்களும் தங்களுக்கு ஐந்து வயது ஆன காலத்திலிருந்தே தந்தைக்கு அவர் உணவு தானியங்களை சேகரிப்பதற்கு உதவி வருகிறார்கள். இப்போது அவர்களுக்கெல்லாம் திருமணமாகிவிட்டது. அவர்களும் ராம் அவதாரைப் போன்றே எலி வளைகளில் உள்ள உணவு தானியங்களைத் திரட்டி தங்கள் குடும்பங்களை நடத்தி வருகிறார்கள்.ராம் அவதார் தன் நான்கு பேரக் குழந்தைகளையும், அவருடைய கிராமத்தில் ஓர் அறையில் நடந்து வந்த அரசினர் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்தார். ஆயினும் அந்தப் பள்ளிக் கூடம் 2010ல் அங்கிருந்து பக்கத்திலிருந்த கிராமத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. அங்கே, நிலச்சுவான்தார்களின் குழந்தைகள் முஷாஹர் இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் மீது கற்களை எறிந்து துரத்தியடித்தன. ஆசிரியர்களும், இக்குழந்தைகளை விரும்பவில்லை. எனவே, ராம் அவதார் தன் பேரக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார்.வருவாய்த்துறையில் உள்ள ஆவணங்களின்படி ராம் அவதாரின் பெயருக்கு ஒரு ஏக்கர் நிலம் உண்டு. ஆனால் அது எங்கிருக்கிறது என்று கூறுவதற்கே ராம் அவதார் அச்சப்படுகிறார். ஜமீன்தாரி ஒழிப்பு மற்றும் நிலச்சீர்திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தபோது, அந்த நிலம் ராம் அவதாருக்குக் கிடைத்தது. ஆயினும் இப்போது அந்த நிலத்தைப் பயன்படுத்தி வரும் நிலப்பிரபுவிடமிருந்து அதனைப் பெறக் கூடிய வல்லமை ராம் அவதாருக்குக் கிடையாது.

அரசாங்கத்திடமிருந்து ராம் அவதார் தன் வாழ்நாளில் பெற்ற உதவி என்னவென்றால் இந்திரா ஆவாஸ் யோஜனாவின் கீழ் அரைகுறையாகக் கட்டித்தரப்பட்ட செங்கல் வீடு ஒன்றுதான்.இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும் ராம் அவதார்கள் ஒருவர், இருவர் அல்ல. இதேபோன்று உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட முஷாஹர்கள் மிகவும் வறுமையில்வாடி வதங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தங்கள் உணவுக்காக எலி வளைகளைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறார்கள்
நன்றி தீக்கதிர் :ச.வீரமணி(ஆதாரம்: தி மெயில் டுடே)

TNTCWU சங்கத்தின் 16வது அமைப்பு தினம் 07.02.2014 அன்று கடலூரில் நடைபெற்ற இரத்ததான முகாம்!












சனி, 1 பிப்ரவரி, 2014

TTA,TOA,RM ஊதிய குறைப்பு பிரச்னை

     01-01-2007 க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு(TTA, TOA மற்றும் RM) ஊதிய குறைப்பு ஏற்பட்டதை தீர்க்க திட்டவட்டமாக JTO கேடருக்கு வழங்கப்பட்டதை போல் 5 இன்கிரிமெண்ட் வழங்க வலியுறுத்தி நமது சங்கம் மீண்டும் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.3 பொது மேலாளர் அடங்கிய குழு ஒரு இன்கிரிமெண்ட் மட்டும் வழங்க வேண்டும் என்றும் அதற்கு நிலுவை தொகை கிடையாது என்றும் பரிந்துரைத்த பாரபட்சத்தால் நமது நிறுவனத்தின் செயல் திறன் பாதிக்கப்படும் என நமது சங்கம் எச்சரித்து உள்ளது .நமது சங்க கடிதம் படிக்க :-Click Here

உலக நாட்டாமையின் வருத்தத்தை பாரீர்


                     உலக நாட்டாமைக்கு  இந்தியாவில்  கூட்டணி ஆட்சி வந்தால் புதிய பொருளாதார கொளகை மற்றும் வெளியுறவு கொள்கையில் மாற்றம் வந்து விடுமோ என்று   அச்சம் தெரிவித்து உள்ளதை மேற்குறிய  செய்தி தெரிவிக்கிறது இந்தியாவின் இறையாண்மையில் இவர்களின் அக்கறையை என்னவென்பது ?
                       <நன்றி : தினமலர் >