சனி, 21 செப்டம்பர், 2013
வியாழன், 19 செப்டம்பர், 2013
செவ்வாய், 17 செப்டம்பர், 2013
ஞாயிறு, 15 செப்டம்பர், 2013
மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை
அன்பார்ந்த தோழர்களே ! எதிர்வரும் 18.09.2013 அன்று காலை 11.30 மணிக்கு ''FORMAL MEETING'' நடைபெற உள்ளது. நமது சங்கத்தின் சார்பில் தோழர்.V. குமார்,தோழர்.N. மேகநாதன்,தோழர்.G.S.குமார், தோழர்.A.அண்ணாமலை, தோழர்.I.M.மதியழகன் மற்றும் தோழர்.K.T.சம்பந்தம் ஆகியோர் கலந்து கொள்வார்கள். நாம் கொடுத்துள்ள ஊழியர் பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
சனி, 14 செப்டம்பர், 2013
BSNL நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை
BSNL நிர்வாகம், UNITED FORUM சார்பாக கொடுத்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி நமது சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளது. செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை 3.௦௦ மணிக்கு நடைபெறும்.
மத்தியச்சங்க செய்திகள்
பரிவு அடிப்படையில் பணி நியமனம் கோரி
ஆகஸ்ட் 2012 வரை நிலுவையில் உள்ளவைகளை "ஹை பவர் கமிட்டி" இறுதி
முடிவு செய்து விட்டதாக பொது மேலாளர் (ESTT ) அவர்கள் நமது துணைப் பொதுச்
செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களிடம் தெரிவித்து உள்ளார்.
.
பிஎஸ்என்எல் ஸ்போர்ட்ஸ் போர்டு
கூட்டத்தை 2012 இல் இருந்து நடை பெறாமல் உள்ளதை நமது துணைப் பொதுச் செயலர்
சுட்டி காட்டி உள்ளார் .பொது மேலாளர் (ADMN ) அவர்கள் கூட்டத்தை நடத்த
உறுதி அளித்துள்ளார் .
BSNL / MTNL புத்தாக்கம் செய்வதற்கான அமைச்சர்கள் குழுவின் முடிவுகள்
BWA (Broadband
Wireless Access) அலைக்கற்றை கட்டணமாக BSNL/MTNL நிறுவனங்கள் செலுத்திய 11,000 கோடி தொகையைத்திருப்பி அளிப்பது.
இதில் BSNLன் பங்கு 6725 கோடியாகும்.
MTNL செலுத்தியது 5700 கோடியாகும்.
Ø
MTNL ஊழியர்களுக்கு ஒய்வூதியம் அளிப்பது. இதற்கான ஆண்டு ஓய்வூதியச்செலவு
570 கோடியாகும். இதில் 170 கோடியை MTNL செலுத்தும். மீதியை அரசே ஏற்றுக்கொள்ளும்.
மத்திய அமைச்சரவையின்
ஒப்புதல் பெற்ற பின்பு மேற்கண்டவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், மேலே கண்ட முடிவுகள் மூலம் BSNL/MTNL நிறுவனங்கள் லாபம் நோக்கி செல்ல முடியும் எனவும் இலாக்கா அமைச்சர் கூறியுள்ளார்.
மேற்கண்ட பிரச்சினைகள்
தவிர
Ø
விருப்ப ஓய்வு, BSNL/MTNL வளர்ச்சிக்கான கருவிகள் வாங்குதல், அரசுத்துறைகள் BSNL/MTNL சேவையை பயன்படுத்துதல்,
DOT சொத்துக்களை BSNLக்கு மாற்றுதல்
போன்ற முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படவில்லை.
வியாழன், 12 செப்டம்பர், 2013
பண்ருட்டியில் பொதுக்குழு
நமது மாவட்ட செயலக முடிவின்படி இன்று(12.09.2013) மதிய உணவு இடைவேளையில் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. தோழியர் G.இராஜேஸ்வரி தலைமை ஏற்றார்.தோழர்P.ராஜேந்திரன் வந்திருந்த அனைவரையும் வரவேற்று பொதுக்குழுவின் நோக்கங்களை முன்வைத்தார். மாவட்ட செயலர் தோழர்K.T.சம்பந்தம் 6-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள புதிய சூழல்களையும் ,நமது மத்திய,மாநில சங்கங்கள் மேற்கொண்டுள்ள தொடர்முயற்சிகளையும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் நமது மாவட்டத்தில் நமது செயல்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும்,எதிர்வரும் 27.09.2013 ஒருநாள் வேலைநிறுத்தத்தின் கோரிக்கைகளையும் வேலைநிறுத்தத்தின் அவசியத்தையும் விளக்கமாகப் பேசினார். பண்ருட்டி கிளைத்தோழர்கள் அனைத்து நன்கொடைகளையும் செலுத்தியதற்கு பாராட்டுகளையும் தெரிவித்தார். இறுதியாக தோழர் K.மணிமாறன் நன்றிநவில பொதுக்குழுக்கூட்டம் நிறைவுற்றது.
திங்கள், 9 செப்டம்பர், 2013
சனி, 7 செப்டம்பர், 2013
எழுச்சியோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
நமது மத்திய செயலக முடிவின்படி நாடுதழுவிய அளவில் நடைபெற்ற ஒப்பந்தஊழியர்கள் கோரிக்கைகளுக்கான ஆர்ப்பாட்டத்தில் கடலூர், விழுப்புரம்,திண்டிவனம்,செஞ்சி,கள்ளக்குறிச்சி,நெய்வேலி,சிதம்பரம் ஆகிய இடங்களில் எழுச்சியோடு பங்கேற்ற அனைவரையும் மாவட்டசங்கம் மனதாரப்பாராட்டுகிறது.
வெள்ளி, 6 செப்டம்பர், 2013
புதன், 4 செப்டம்பர், 2013
செவ்வாய், 3 செப்டம்பர், 2013
தோழர் v.s. பாலாஜி TTA சென்னை மாற்றல்
நமது செஞ்சி கிளைத் தோழர் v.s. பாலாஜி TTA அவர்களுக்கு நமது மத்திய மாநில சங்கங்களின் முயற்சியால் RULE-8 மாற்றல் கிடைக்கப் பெற்றது. தலமட்ட அதிகாரிகளின் தயாள குணத்தால் விடுவிக்கப் படாமல் இருந்தார். தற்போது பயிற்சி முடித்து நியமனம் பெற்ற உழியர்களைக் கொண்டு தோழர்
v.s. பாலாஜி விடுவிக்கப்படுகிறார். உரிய நடவடிக்கை மேற்கொண்ட நமது மாவட்ட
நிர்வாகத்திற்கு நெஞ்சிநிறை நன்றயினை உரித்தக்கிக்கொள்கிறோம். அதுபோல் தோழர் v.s. பாலாஜிபணி சிறக்க வாழ்த்துகிறோம்...
கடலூர் மாவட்டத்தில் பணியில் சேரும் தோழர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்!!!!
பணியில் சேரும் TTA தோழர்கள்
P செந்தாமரை TTA பெண்ணாடம்
R ஸ்ரீநாத் TTA CM நெய்வேலி
S புவனேஸ்வரி TTA OCB கடலூர்
R .நந்தகுமார் TTA CSC செஞ்சி
T சக்திமணாளன் TTA Groups செஞ்சி
ஆகியோர்கள்
பணி சிறக்க வாழ்த்துகிறோம்
P செந்தாமரை TTA பெண்ணாடம்
R ஸ்ரீநாத் TTA CM நெய்வேலி
S புவனேஸ்வரி TTA OCB கடலூர்
R .நந்தகுமார் TTA CSC செஞ்சி
T சக்திமணாளன் TTA Groups செஞ்சி
ஆகியோர்கள்
பணி சிறக்க வாழ்த்துகிறோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)