திங்கள், 5 ஜனவரி, 2015

வோடாபோனுக்கு கோடிக்கணக்கில் வரிச்சலுகை சொந்தக் கம்பெனிக்கு எந்த உதவியும் இல்லை பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீர்குலைக்கும் மோடி அரசு ,ஜனவரி 6,7,8 நாடுதழுவிய தர்ணா போராட்டம்





பிஎஸ்என்எல் நிறுவனத்தை புதுப்பிக்கக்கோரி நாடு முழுவதும் அனைத்து மாவட் டங்களிலும் பிஎஸ்என்எல் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அனைத்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித் துள்ளது.தில்லியில் பிஎஸ்என்எல் சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் வி.ஏ.என். நம்பூதிரி கூறியதாவது: பிஎஸ்என்எல் நிறு வனத்தைப் புதுப்பிக்க அவசர நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். வாடிக்கை யாளர்களுக்கு அளிக்கப்படும் சேவை களை மேம்படுத்த வேண்டும்.
இதுகுறித்து அரசும் பிஎஸ்என்எல் நிர்வாக மும் எதிர்மறையான அணுகுமுறையையே மேற்கொள் கின்றன. மொபைல் வழித்தடங்கள், கேபிள்கள், மின்கம்பிகள், பிராட்பாண்ட் மோடம் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட பல கருவிகள் புதிய தொடர்புகள் வழங்கவும் மேம்பட்ட சேவையை வழங்கவும் தேவைப்படு கின்றன. இவற்றை அரசு உட னடியாக வழங்க வேண்டும். தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பிஎஸ்என்எல் அலைக்கற்றைகளை சமர்ப்பித் ததற்காக கட்டணமாக 6000 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். இதேபோல நிலுவைத் தொகையாக யூஎஸ்ஓ நிதியிலிருந்து 1,250 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது.வோடபோன், நோக்கியா ஆகிய கம்பெனிகளுக்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசின் சொந்தக் கம்பெனியான பிஎஸ்என்எல்க்கு எந்த உதவியும் அளிக்கப்படவில்லை.பிஎஸ்என்எல்லின் மூன்று பதவிகளான சிஎம்டி, இயக்குநர்(நிதி) மற்றும் இயக்குநர் (மனிதவளம்) ஆகியவை பல மாதங்களாக நிரப்பப்படவில்லை. இதனால் அன்றாடச் செயல்பாடுகள் தாமதமாகின்றன.1,30,000 தொழிலாளர்கள் பழுதடைந்த தடங்களை சரி செய்வது, பராமரிப்பு ஆகிய பணிகளை பார்த்து வந்தனர்.
கடந்த 2000ல் இவர்கள் பதவி ஓய்வு பெற்றனர். ஆனால் அதற்கு பின்னர் இவர்களின் காலி இடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் சேவைகளின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகள் குறித்து தகவல் தொடர்புத்துறை அமைச்சர், பிஎஸ்என்எல் செயலாளர் டிஓடீ, டிஎம்டி ஆகிய அனைத்துத்துறை அதிகாரிகளிடமும் அனைத்து பிரச்சனைகள் குறித்து விரிவான மனு அளித்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தப் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு ஊழி யர்களை அழைத்து ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை.
இத்தகைய சூழ்நிலைமைகளில் பிஎஸ்என்எல் சங்கங்களின் கூட்டமைப்பு வரும் ஜனவரி 6ம் தேதியிலிருந்து 8ம்தேதி வரை மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளது.இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மார்ச் 17 ம்தேதியிலிருந்து கால வரையற்ற வேலைநிறுத்தம், போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துக் கொள் கிறோம்.
 (ஐஎன்என்) , நன்றி தீக்கதிர் 05.01.2015

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

மின்விபத்தில் அகால மரணமடைந்த தோழர் R.பாலசுப்ரமணியன் ஒப்பந்த ஊழியர் சிதம்பரம், குடும்ப நிவாரண நிதியினை தாராளமாக வழங்கிடுவீர் .....

BSNL அதிகாரிகள் – ஊழியர்கள் கூட்டமைப்பு

பரிதவித்து நிக்குது ஒரு குடும்பம்! 
 உதவுவது நம்கடமை!!
கை ஏந்திக் கேட்கின்றோம்,
 நன்கொடை தாரீர் கண்ணீர் துடைப்பீர் .....!!!

அன்பார்ந்த தோழர்களே!.. தோழியர்களே!...
தோழர்  R.பாலசுப்ரமணியன் என்ற ஒப்பந்த ஊழியர்  சிதம்பரத்தில் புத்தாண்டு தினத்தில்  - பழுது நீக்க சென்ற இடத்தில் – நடந்த விபத்தில் அகால மரணம் அடைந்தார்.

     BSNL-லுக்காக பணியாற்றிய  அந்தத் தொழிலாளி  இன்று இல்லை!.. அவரது சொற்ப ஊதியத்தை நம்பி இருந்த ஒரு குடும்பமோ இன்று நிற்கதியாய் உள்ளது...நம் எல்லோர் கண்களிலும் செய்தி அறிந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது....
மத்திய அரசாங்கத்தின் முதலாளித்துவ கொள்கைகளால்  ஒப்பந்த ஊழியர் என்பதனால் இழப்பீடு ஏதும் பெரிய அளவில் கிடைக்க வாய்ப்பில்லை...

ஆனால் அவரது தோழர்களான நம்மால் அவர் குடும்பத்திற்கு நிச்சயம் உதவ முடியும். இதுபோல முன்பும் உதவி இருக்கின்றீர்கள் அந்த நம்பிக்கையில் வேண்டுகின்றோம்...
 
உதவுங்கள்,பெரிய மனதோடு  ஓரிரு கண்ணீர்த் துளிகளையாவது துடைக்க முயல்வோம்!..வழுக்கும் நிலத்தில் ஊன்றுகோலாய்...வாழ்க்கை இழந்தவர்களுக்கு  உங்கள் உதவி புதிய நம்பிக்கையைத் தரட்டும்.
கண்ணீரோடு வேண்டுகின்றோம்!.. தாராளமாக நிதிஅளிப்பீர்!... 
தோழமையுள்ள

K.T.சம்பந்தம் D/S, BSNLEU          இரா.ஸ்ரீதர் D/S ,NFTE ,                            R.ஜெயபாலன் D/S ,FNTO

C.பாண்டுரங்கன் D/S SNEA ,   P.வெங்கடேசன்  D/S ,AIBSNLEA
                                 G.ரங்கராஜ் D/S ,TMTCLU,          M.பாரதி D/S ,TNTCWU,

வெள்ளி, 2 ஜனவரி, 2015

PAY SLIP- சம்பள பட்டியல் பெறுவதற்கான புதிய போர்ட்டல்...

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!

ERP-ல் சம்பள பட்டியல் (PAY SLIP) விபரம் நமது ஊழியர்கள்  அனைவரும் தெரிந்து கொள்வதற்கு தமிழ்  மாநில நிர்வாகம் வழிகாட்டுதலையும்,  PAY SLIP பெறுவதற் கான புதிய  SAP Net weaver portal  ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ERP-ல்PAYSLIP- பார்பதற்கு /print  எடுப்பதற்கு Cudaalore  SSA SITE-ல் உள்ள "ERP ESS Portal"லை கிளிக் செய்தால் SAP Net weaver portal ஸ்கிரின் மிளிரும், அதில் User ID ஆக தங்களது HRMS.NO முதல் எண்ணை தவிர்த்து எட்டு எண்களை பதிவு செய்யவும், பின்பு PASS WORD ஆக bsnltn@123 யை பதிவு செய்ய PASS WORD மாற்றுவதற்கு ஸ்கிரின்ல்  தங்களது புதிய சொந்த PASS WORD பதிவு செய்யவும். அப்போது கிடைக்கும்  Benefits and Payments கிளிக் செய்தால் தங்களது சம்பள பட்டியல் கிடைக்கும் SAP Net weaver portal ஐ காண  .--- இங்கே கிளிக் செய்யவும். 

IDA உயர்வு

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே !!
01/01/2015 முதல் IDA  2.2 %உயர்ந்துள்ளது.
        இத்துடன் சேர்த்து மொத்தம் IDA100.3 %ஆகும்.       

இரங்கல் செய்தி

அன்பார்ந்த தோழர்களே ! தொழியேகளே !!
கடலூர் மாவட்டம்,சிதம்பரம் சக்திநகர் தொலைபேசி நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் தோழர் R.பாலசுப்பிரமணியன் 01.01.2015 அன்று மதியம் தொலைபேசி லைன் பழுது நீக்க பணியாற்றிக்கொண்டிருக்கும்போது  மின்சாரம் தாக்கி பணியிடத்தில் அகால மரணமடைந்தார்.அவரது பிரிவால் வருந்தும் அவரதுகுடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,தோழர்களுக்கும் நமது மாவட்டத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் பிரிவினையும் தெரிவித்துக்கொள்கிறோம். இறுதி நிகழ்ச்சி இன்று 01.02.2015 காலை வல்லம்படுகை கிராமத்தில் நடைபெறும்.

புதன், 31 டிசம்பர், 2014

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.


போராடும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!

ஊதிய மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி 28.12.2014 முதல் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள்  தமிழக அரசு, போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிடவும்,ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு அறவழியில் போராடும் தொழிலாளர்கள் மீது காவல் துறையை கட்டவிழ்த்து விட்டு   அடக்கி ஒடுக்க முயற்சிப்பதையும், தினக்கூலி அடிப்படையில் புதியதாக ஊழியர்கள் நியமனம் செய்வதை கைவிட வலியுறுத்தியும் 02.01.2015 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட நமது மாநிலச்சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. 

மாநிலச்சங்கத்தின் அறைகூவலுக்கிணங்க கடலூர் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் சக்திமிக்க ஆர்ப்பாட்டங்களை நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம் 
                                                                             தோழமையுள்ள 
                                                                                  K.T.சம்பந்தம் 

செவ்வாய், 30 டிசம்பர், 2014

கடலூர் மாவட்ட BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு கூட்டத்தின் - முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே   தோழியர்களே!!

BSNL அனைத்து ஊழியர்-அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பாக  கலந்தாய்வுக் கூட்டம் கடலூரில் இன்று 29-12-2014 மாலை BSNLEU அலுவலகத்தில் NFTE மாவட்டச் செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர்கள் தோழர் K.T.சம்பந்தம், BSNLEU தோழர் C.பாண்டுரங்கன்SNEA ,,தோழர் P.வெங்கடேசன், AIBSNLEA  தோழர் R.அசோகன், மத்திய செயற்குழு உறுப்பினர் தோழர் P.சிவக்குமரன் SNEA,தோழர் R.V.ஜெயராமன், BSNLEU .NFTE  மாவட்ட அமைப்பு செயலர். தோழர். முகுந்தன், NFTE மூத்த தோழர்.K.செல்வராஜ்,R.பன்னீர்செல்வம், NFTE முன்னாள் மாவட்ட செயலர் தோழர்.P.சுந்தரமூர்த்தி, BSNLEU கிளைச் செயலர் தோழர்.S.சௌந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

              ஜனவரி’30 அன்று கடலூரில் மாநிலம் அளவிலான கருத்தரங்கம் தேதி  மாற்றம் குறித்த நமது தமிழ் மாநிலச்செயலரின் வேண்டுகோளை சென்றக்கூட்டத்தில் மாவட்டசெயலர் தோழர் இரா.ஸ்ரீதர் முன்வைத்திருந்தார். இதைப்  பற்றி இன்றைய இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கன்வீனர் தோழர்.K.T.சம்மந்தம் கருத்தரங்க தேதி மாற்றம் செய்வதில் உள்ள சில பிரச்சனைகளை எடுத்துரைத்தார். கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டபின் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஜனவரி’30 அன்றே இக்கருத்தரங்கை கடலூரில் சிறப்பாக நடத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
     
   BSNL அனைத்து ஊழியர்-அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் அறைகூவலை ஏற்று மாவட்டம் தழுவிய தர்ணா போராட்டத்தை ஒரு நாள் மட்டும்  கடலூரில் ஜனவரி -7 அன்று நடத்துவது எனவும்,

     கையெழுத்து இயக்கம் ஜனவரி-3 அன்று பண்ருட்டி, ஜனவரி-6 அன்று கள்ளக்குறிச்சி, ஜனவரி-10 அன்று  உளுந்தூர்பேட்டையிலும் நடைபெறும், அன்றே உளுந்தூர்பேட்டையில் கூட்டமைப்பு கூட்டம் நடத்துவது எனவும்,

      கருத்தரங்கத்திற்கான செலவிற்காக  NFTE ரூ.20.000. BSNLEU ரூ.20,000, SNEAரூ.10,000, AIBSNLEA ரூ.10,000, தருவது எனவும், கருத்தரங்கம் நடத்தப்படும் மண்டபச் செலவை மாநிலசங்கம் வழங்கும் என முடிவெடுக்கப்பட்டது. 

      கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் ஜனவரி’30 மதியம் 2-30 மணிக்கு இக்கருத்தரங்கம் நடைபெறும்.கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற  நமது தோழர்கள் ஒவ்வொருவரும் ரூ.100/-நன்கொடை அளித்திட வேண்டுகின்றோம்.. 


ஒப்பந்த ஊழியர் ஊதியம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு முந்தைய ஒப்பந்தக்காரரால் தரப்படாமல் இருந்த அக்டோபர் மாதத்திய ஊதியம் புதிய ஒப்பந்தக்காரர் மூலம்   நாளை 30-12-2014 வழங்கப்படவுள்ளது. ERPஅமுல்படுத்திய பிறகும் தொடர் முயற்சியின் காரணமாக  பட்டுவாடா செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகத்திற்கு நமது நன்றி. !

டிசம்பர் மாதத்திய சம்பளம் ஜனவரி-7 க்குள் வழங்கப்படவுள்ளது, (நவம்பர் மாத சம்பளம் டிசம்பர்-1 க்குள் வழங்கப்பட்டுவிட்டது)  
                                                      தோழமையடன் 
                                                       K.T.சம்பந்தம்.

திங்கள், 29 டிசம்பர், 2014

LIC ஊழியர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் அனைவரும் பங்கேற்பீர்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
 காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்காதே!!!!! டிசம்பர் 29 அன்று LICயில் நடைபெறும்  ஆர்ப்பாட்டத்தில் சக்தியாக கலந்து கொள்ள மத்திய,மாநிலச்சங்கங்கள் அறைகூவல் 

மாநிலச்செயலர் தோழர் A.பாபுராதாக்கிருஷ்ணன் உண்ணாநோன்பு மேற்கொள்கிறார்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
 தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்து 30.12.2014 அன்று தூத்துக்குடியில் நமது தமிழ் மாநில செயலர் உண்ணாவிரதம் அறிவித்துள்ளார் ...

தமிழ் மாநிலச்சங்கத்தின் சுற்றறிக்கை  படிக்கRead


சனி, 27 டிசம்பர், 2014


Displaying 04.JPGDisplaying 10.jpg

சிதம்பரம் பகுதியில் BSNL பாதுகாப்பு இயக்கத்தை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் K.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே!!
       BSNL நிறுவனத்தை பாதுகாத்திட பொது மக்களிடம் நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்துப் பெற்று பாரத பிரதமரிடம் சமர்பிக்க BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்  26.12.2014 அன்று மாலை 5.30 மணிக்கு சிதம்பரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள காந்தி சிலை பக்கத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
        தோழர் இஸ்மாயில் மரைக்காயர் NFTE தலைமையேற்ற இந்த நிகழ்வில் 150 க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள் பங்கேற்றனர்.தோழர்.G.S.குமார் BSNLEU வரவேற்புரை நிகழ்த்தினார்.BSNLEU சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் K.T.சம்பந்தம் கையெழுத்து இயக்கத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார். சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் K.பாலகிருஷ்ணன் CPI(M) அவர்கள் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
          மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு K.S.அழகிரி இந்திய தேசிய காங்கிரஸ்,   தோழர் T. மணிவாசகம் ,CPI மாநில குழு உறுப்பினர்,திரு ஜேம்ஸ் விஜராகவன் திமுக நகர்மன்ற உறுப்பினர், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலர் வழக்குரைஞர் திரு வேணுபுவனேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் மாவட்ட செயலர் திரு செல்லப்பன், சிதம்பரம் நகர அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலர் தோழர் C.வெங்கடேசன், அண்ணாமலை பல்கலைகழக ஊழியர்சங்க தலைவர் தோழர் மதியழகன் ஆகியோர் பங்கேற்று ஆதரித்து பேசினார்கள்.
               FORUM தலைவர்களான தோழர் R.ஸ்ரீதர் NFTE,  C.பாண்டுரங்கன்SNEA(I), P.வெங்கடேசன்AIBSNLEA, A.அண்ணாமலைBSNLEU, V.லோகநாதன்NFTE ஆகியோர்  பங்கேற்று சிறப்பித்தனர்.தோழர்A. நடராஜன்SNEA(I) நன்றி கூறி நிறைவு செய்தார். சிதம்பரம் தோழர்கள் மிகச்சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர் மகிழ்வோடு பாராட்டுகிறோம்.
              

வியாழன், 25 டிசம்பர், 2014

மக்கள் சந்திப்பு இயக்கம் வெற்றிகரமாக துவங்கியது கடலூரில்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!! 

BSNL ஐ பாதுகாக்க நாடு முழுவதும் மக்களிடமிருந்து 1 கோடி கையெழுத்து பெற்று பாரத பிரதமரிடம் சமர்பிக்க BSNL அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் 24-12-2014 அன்று மாலை 5.00 மணிக்கு உழவர் சந்தை அருகில்  மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.NFTE மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் தலைமையேற்ற இந்த நிகழ்வில்  150 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இந்த இயக்கத்தின் கடலூர் பகுதி ஒருங்கிணைப்பாளரும் AIBSNLEA மாவட்ட செயலருமான தோழர்.  P வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். கன்வீனர் BSNLEU மாவட்ட செயலர் தோழர் . K.T சம்பந்தம் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் நோக்கத்தை பற்றி எடுத்துரைத்தார்.,CPI(M ) மாவட்ட செயலர் தோழர்  T. ஆறுமுகம் , CPI மாவட்ட செயலர் தோழர்  M சேகர்திராவிட முன்னேற்ற கழகத்தின்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள புகழேந்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் PRS வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  மாவட்ட செயலர் தாமரைசெல்வன் மற்றும் திருமார்பன், NFTE சம்மேளன செயலர் G ஜெயராமன் ,நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச்செயலர்  நிஜாமுதீன் குடியிருப்போர் நலச் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர்  மருதவாணன் மற்றும் பொதுநல இயக்கத்தின் நிர்வாகிகள்  வெண்புறா குமார் ,C A தாஸ் ஆகியோர் கையொப்பமிட்டு இயக்கத்தை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர். SNEA மாவட்ட செயலர் தோழர் பாண்டுரங்கன் நன்றியுரை வழங்கினார். கடலூர் பகுதியின் அனைத்து கிளை சங்கங்களும் இணைந்து  சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தன. குறிப்பாக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள செய்ததில்  கடலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் வெங்கடேசன் அவர்களின்  பங்கு சிறப்பானதாகும்.