BSNL
ஊழியர்சங்கம்
தமிழ்
நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
கடலூர் மாவட்டம்
சிறப்பு வாய்ந்த கருத்த்தரங்கம்
|
அன்பார்ந்ததோழர்களே!தோழியர்களே!!
வணக்கம், நமது சங்கத்தின் சார்பில் BSNL நேரடி நியமனம்
பெற்ற ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான EPF கருத்தரங்கம் 08.04.2018. அன்று கடலூர் தொலைபேசி நிலைய கான்பரன்ஸ் ஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது . கருத்தரங்க நிகழ்ச்சிக்கு நமது மாவட்டதலைவர். தோழர்.P.ரத்தினம் தலமைத் தாங்கினார். மாவட்டஉதவிச்செயலர். தோழர். G.ஜெகதீசன் வரவேற்புரை நிகழ்த்தியபின் நமது உதவிபொதுமேலாளர் AGM( Admin) திருமதி. D.கலைவானி அவர்கள் கருத்தரங்கத்தை துவக்கிவைத்து உரையாற்றினார். அவர் தனது உரையில் Bsnl நேரடி நியமனம் பெற்ற ஊழியர்களுக்குCorporate அலுவலக உத்திரவு படி EPf அமுல்படுத்தபட்டு வருகிறது எனவும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு EPf முறையாக அமுல்படுத்தபட்டுவருவதாகவும்
கடலூர் மாவட்ட நிர்வாகம் மிக கவனமாக கண்காணித்து வருவதாகவும் ஒப்பந்த
தொழிலாளர்களாகிய நீங்களும் உங்கள் கணக்கில் EPF தொகை செலுத்தபடுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என
கேட்டுக்கொண்டார். அறிமுகவுரையாற்றிய
நமது மாவட்ட செயலர் தோழர் K.T.
சம்பந்தம் அவர்கள் இந்த நிகழ்ச்சி
நடத்துவதற்கு சங்கம் எடுத்த முயற்சிகளையும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இந்த
கருத்தரங்கம் பெறிதும் பயனுள்ளதாக அமையும் என தாம் நம்புவதாக தெரிவித்தார்.
சிறப்புரை நிகழ்த்திய நமது துணைப்பொதுமேலாளர். திருமதி. N.ஜெயந்தி அபர்ணா
அவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மிகவும் பயனளிக்க கூடிய இந்த நிகழ்ச்சியை
ஏற்பாடு செய்த நமது மாவட்ட செயலரை பாராட்டியதோடு நமது மாவட்டத்தில் தான்
ஒப்பந்ததொழிலாளர்கள் மீது தொழிற்சங்கங்கள் அதிகப்படியான அக்கறை செலுத்தி அவர்களை
பாதுகாத்து வருவது பாராட்டத்தக்கது என குறிபிட்டார். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களக்கு EPF முறைபடுத்துவதற்காக நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளையும்
அதற்கு உதாரனமாக தாமே EPF கட்டாத இரண்டு ஒப்பந்த நிறுவனத்தை தகுதி நீக்கம்செய்ததை (Black list) நினைவு
கூர்ந்தார். இம்மாதம் பணியிலிருந்து ஓய்வுபெறும் DGM அவர்களுக்கு நமது ஒப்பந்த தொழிளார் சங்கத்தின் சார்பாக நினைவு
பரிசு வழங்கப்பட்டது.
EPF அலுவலகத்தின் சார்பாக கலந்து கொண்ட சட்ட அமலாக்க அதிகாரி திரு. P .சுப்பையா அவர்கள் EPF. சட்ட திட்டங்கள் பற்றியும் அதில் தொழிலாளர்களுக்கு உள்ள பயன்கள் அதனை பெறும்
முறைகள் அமுல்படுத்துவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை சரி செய்வதற்கான வழிமுறைகள்
ஆகியவற்றை மிக அற்புதமாக எடுத்துகூறினார். EPF கமிஷனர் திரு.கெளரவ்கார்க் அவர்கள் பேசும் போது இது போன்ற ஒப்பந்த தொழிலாளர்களுக்காக
நடத்தப்படும் கூட்டங்களில் முதன்மை முதலாளிகள் (Principal Employer)
கலந்து கொள்வதில்லை எனவும் BSNL நிர்வாகத்தின்
சார்பில் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என
குறிப்பிட்டார். மேலும் மத்திய அரசின் புதிய EPF திட்டங்கள் பற்றியும் EPF ல் கொண்டுவரப்பட்டுள்ள online சேவைகளை பற்றியும் அதனை செயல்படுத்தும்
வழிமுறைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டியதோடு ஒவ்வொரு மாதமும் 10 ம் தேதி EPF பயனாளிகள்
குறைகேட்பு கூட்டம் கடலூர் EPF
அலுவலகத்தில் நடைபெற்று வறுகிறது எனவும் BSNL ஒப்பந்த தொழிலாளர்களும் தங்கள் பிரச்சனைகளை முறையிட்டு
தீர்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார் கூட்டத்திற்கு மாவட்ட முழுவதிலுமிருந்து
சுமார் 150க்கும்
மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டது குறிப்பிட தக்கது இறுதியாக TNTCWU மாவட்ட
பொருளர் தோழர் . முரளி நன்றி கூற கருத்தரங்கம் இனிதே முடிவுற்றது. நிகழ்ச்சியை மிக
சிறப்பாக ஏற்பாடு செய்த கடலூர் தோழர்களை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.
மதியம் 2.00 மணிக்கு TNTCWU மாவட்ட செயற்குழு கூட்டம்
மாவட்ட தலைவர் தோழர்.S.V.பாண்டியன்
தலைமையில் நடைபெற்றது. செயற்குழுவை BSNLEU மாவட்ட தலைவர் தொழர். P..ரத்தினம் , மாவட்ட, பொருளர்
தோழர் . G.
கலியமூர்த்தி மாவட்ட உதவி தலைவர் தோழர். R.V. ஜெயராமன் , மாவட்ட உதவி
செயலர்கள் தோழர்.S.
பழனி , தோழர் G.ஜெகதீசன், TNTCWU மாநில செயற்குழு உறுப்பினர்
தோழர். V.
மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரைக்கு பின்
நமது மாவட்ட செயலர் தோழர். M. பாரதி செயற்குழு அறிக்கையினை சமர்பித்தார் 8 கிளைசெயலர்களும் 5 மாவட்ட சங்க நிர்வாகிகளும்
அறிக்கையின் மீதான விவாதத்திற்கு பின் கீழ்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டது
. இறுதியாக சிறப்புரை நிகழ்த்திய BSNLEU மாவட்ட செயலர் தோழர். K.T. சம்பந்தம்
அவர்கள்
ஒப்பந்த தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக BSNLEU சங்கம் எடுத்துவரும்
முயற்சிகளையும் நடத்திவரும் தொடர் போராட்டங்களையும் விவரித்தார் மேலும் நமது தோழர்கள் நமது சங்கத்தை
மேலும் வலுபடுத்த ஆற்ற வேண்டிய கடமைகள்
பற்றியும் TNTCWU சங்கத்தின்
மாவட்ட மாநாட்டை கடலூரில் மிகச்சிறப்பாக நடத்த வேண்டுமெனவும் அதற்கு BSNLEU துணை நிற்கும் என்று
நம்பிக்கையூட்டும் வகையில் உரையாற்றினார்.,
செயற்குழு முடிவுகள் :
1. 6 வது மாவட்ட மாநாட்டை வரும்
மே மாத இறுதிக்குள் கடலூரில் சிறப்பாக
நடத்துவது.
2. ஒவ்வொரு
உறுப்பினரிடமிருந்து மாநாட்டு நிதியாக ரூபாய்: 500 ( மத்திய சங்க நிதி , மாநிலசங்க வளர்ச்சி நிதி
உள்பட) வசூல் செய்து நிதியை ஏப்ரல் மாதத்திற்குள் அனுப்புவது.
3. BSNLEU
மத்திய
செயற்குழுவின் முடிவின் படி ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை உள்ளடக்கி 3.05.2018
ல்
நடைபெறும் நாடு தழுவிய ஆர்பாட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களும்
பங்கேற்று சிறப்பாக நடத்துவது .
4. அனைத்து கிளைகளிலும் மாதா மாதம் கட்டாயமாக கிளை
கூட்டம் நடத்துவது.
5. EPF சம்மந்தமான பிரச்சனைகளை
தொகுத்து மனுகொடுப்பது.
கடலூரில் நடைபெற உள்ள
மாநட்டிற்கு நிதி உதவி , பொருள் உதவி அளித்த தோழர்களை
செயற்குழு மனதார பாராட்டுகிறது :
தோழர். P.கிருஷ்ணன் BSNLEU மாவட்டஅமைப்பு செயலர் அரகண்டநல்லூர் : ரூபாய்: 2000.00
தோழர். மணிகண்டன் திண்டிவனம் தேங்காய் வழங்குவது
தோழர். ரவிச்சந்திரன் அரகண்ட நல்லூர் : அரிசி 1 சிப்பம்
தோழர். J. முரளி மாவட்ட பொருளர் கடலூர்: அரிசி 1 சிப்பம்
தோழர். சுப்ரமணியம் கடலூர் : அரிசி 1 சிப்பம்
தோழர். கோவிந்தசாமி திட்டக்குடி : அரிசி 1 சிப்பம்
தோழர். பாஸ்கர் கிளைச்செயலர் விருத்தாசலம் : அரிசி 1 சிப்பம்
தோழர். மாரிமுத்து மாநில செயற்குழு
உறுப்பினர் நெய்வேலி : ஆயில் 1 டின்
தோழர்: JK வெங்கடேஷ் காய்கனி வாங்க ரூபாய் : 1000.00
தோழர். திருநீலம் நெய்வேலி : காய்கனி வாங்க ரூபாய் : 1000.00
தோழர்: ரத்தினம் கள்ளக்குறிச்சி வாழப்பழம்
தோழர்: S.பழனி கடலூர் பால் செலவு
தோழர்: இந்திரா செஞ்சி, மாநாட்டிற்கு தேவையான சால்வை
தோழர்: பொன்னம்பலம் கிளைசெயாலர் BSNLEU ரூபாய் : 1000.00
தோழர்: S.பூரணி கடலூர் ரூபாய்: 1000.00
தோழர்: சக்திவேல் அரக்கண்ட நல்லூர் ரூபாய் : 1000.00
தோழர்: ராமர் சிதம்பரம் ரூபாய்: 500.00
தோழர்: M.சுந்தரமூர்த்தி கடலூர் ருபாய்: 500.00
தோழர்: அருண்குமார் திண்டிவனம் ருபாய் : 1000.00
தோழர்: D.முரளி கிளை பொருளர் கடலூர் ; பேனர்
செலவு
தோழர்: R.ராஜ்குமார் கடலூர் : மினரல் வாட்டர் மேலும்
பட்டியல் தொடரும் ..
தோழர்கள் : S.பழனி மாவட்ட உதவி செயலர் BNLEU திண்டிவனம் மற்றும் தோழர்: V.சுரேஷ்பாபு கிளைச்செயலர் BSNLEU நெய்வேலி . கல்வெட்டு செலவு
தோழமையுடன்
M.பாரதிதாசன் K.T
சம்பந்தம்
மாவட்ட செயலர் TNTCWU மாவட்ட செயலர்BSNLEU
கருத்தரங்க
புகைப்பட காட்சிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக