வெள்ளி, 21 அக்டோபர், 2016

போனஸ் கேட்டு தொடர் போராட்டம்

BSNL ஊழியர் சங்கம்
தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
கடலூர் மாவட்டம்
தொடர் போராட்டம்
 
அன்பார்ந்த தோழர்களே!!
வணக்கம், நமது கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும்  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 2015-16 ஆண்டுக்கான சட்டரீதியான போனஸ் தொகை ரூபாய் 7000 பூஜா பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டுமென BSNL கடலூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் மூன்று ஒப்பந்ததாரர்களுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பே நமது இரண்டு சங்கங்களின் சார்பாக (BSNLEU & TNTCWU) கடிதம் கொடுத்திருந்தோம்.
      நமது கடிதத்தை பெற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் மூன்று ஒப்பந்ததாரர்களுக்கும் ஒப்பந்த சரத்தில் உள்ளபடி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டுமென கடிதம் அனுப்பியது. நமது கடிதத்தையும் நிர்வாகம் கொடுத்த கடிதத்தையும் பெற்று கொண்ட ஒப்பந்தக்காரர்கள் மௌனம்  சாதித்த நிலையில் நமது சங்கம் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை சந்தித்து முதன்மை முதலாளி என்ற முறையில் BSNL நிர்வாகம் தலையிட்டு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்தி வந்தது. மாவட்ட நிர்வாகம் முழுமையான அக்கறையோடு  போனஸ் பிரச்னையை தீர்க்க முயற்சி செய்தது . மூன்று ஒப்பந்த காரர்களுக்கும் 21-10-2016 – குள் சட்ட ரீதியான போனஸ் தொகை வழங்க வேண்டுமென உத்திரவிட்டது. NACSS காண்ட்ராக்ட்டர் 21.10.2016 அன்று தான் ஏற்றுக்கொண்ட டெண்டர் விதிமுறைகளை மதிக்காமல் ஒருமாத ஊதியத்திற்கும் குறைவாக  ZONE-1 தொழிலாளர்களுக்கு ரூ.3100 போனஸ் வழங்கியுள்ளார் இது ஏற்பதற்கில்லை.      NACSS ஒப்பந்ததாரர் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக மீதமுள்ள தொகையினை வழங்கிட வேண்டும் என வலியுறித்தியும் போனஸ் பிரச்சனையில் எவ்வித சலனமும் இன்றி நமது கோரிக்கையினையோ மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவுகளையோ மதிக்காமல் அலட்சியம் காட்டும் EOI Contractor BALAJI AGENCIES மற்றும்  Housekeeping Contractor   EX-SERVICEMEN SECURITY AND INTELLIGENCE SERVICE நிறுவனங்களை கண்டிப்பதோடு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக முழுமையான போனஸ் ரூபாய் 7000/- வழங்கிட வேண்டுகிறோம். மேலும்   கார்பரேட் அலுவலக 07.10.2016 உத்திரவுப்படி ஒப்பந்த தொழிலாளர்களின் முதன்மை முதலாளி என்கிற முறையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு  உடனடியாக சட்ட பூர்வ  நடவடிக்கை எடுத்து போனஸ் பிரச்சினையை தீர்த்திட வேண்டும் என  வலியுறுத்தி  கீழ் கண்ட தொடர் போராட்டம் நடத்துவதென 21.10.2016  அன்று மாலை நடை பெற்ற மாவட்ட மைய செயலக கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டுள்ளது .

1.     24-10-2016 – அனைத்து கிளைகளிலும் இணைந்த ஆர்ப்பாட்டம்
2.     25-10-2016 – கடலூர் GM அலுவலகம் முன்பு பெரும் திரள் முறையீடு
3.     26-10-2016 – முதல் உண்ணாவிரத போராட்டம்

          அனைத்து தோழர்களும் சங்க வித்தியாசமின்றி போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றிபெறச் செய்வீர்.

போராடாமல் வென்றதில்லை ! போராடி நாம் தோற்றதில்லை !!

ஆர்ப்பரிப்போம் !  அணிதிரள்வோம் !!  அலைகடலாய் !!! 

தோழமையுடன்
    M.பாரதிதாசன்                                                         K.T.சம்பந்தம்
மாவட்ட  செயலர்  TNTCWU                                                            மாவட்ட  செயலர்   BSNLEU

22.10.2016

கடலூர்-1

கருத்துகள் இல்லை: