புதன், 9 மார்ச், 2016

மார்ச் 10 தேசிய எதிர்ப்பு நாள்

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
மத்திய அரசாங்கம் கடைபிடித்துவரும்   தொழிலாளர் விரோத,மக்கள் விரோத,தேசவிரோத கொள்கைகளுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருவதை நாம் அனைவரும் அறிவோம். அதுபோல் இதுவரையில் நடைபெற்றுள்ள 16 பொது வேலை நிறுத்தங்களிலும் பங்கேற்றுள்ள பெருமை நமக்குண்டு.தற்போது மத்திய தொழிற்சங்கங்கள் மார்ச் 10 அன்று தேசிய எதிர்ப்பு நாளாக இந்திய தொழிலாளி வர்க்கம் அனுசரித்திட வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளது.
           அதனையேற்று நமது மத்திய,மாநில சங்கங்கள் அதில் பங்கேற்க அறைகூவல் விடுத்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டத்தில் NFTE சங்கமும் கலந்துகொள்கிறது. எனவே நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் இணைந்த கண்டன ஆர்ப்பாட்டங்களை சக்திமிக்கதாக நடத்திட வேண்டுகிறோம்.
                                                                            தோழமையுள்ள 
                                                                               K.T.சம்பந்தம்  

கருத்துகள் இல்லை: