வியாழன், 31 மார்ச், 2016

எட்டப்பர்கள் என்றும் BSNLலில் ஜெயித்ததில்லை


போனஸ் என்பது பிச்சை அல்ல, ஊழியர்களின் உரிமை .ஆனால் NFTE BSNL மீண்டும் ஊழியர்நலனை அடமானம் வைக்க முடிவு செய்துள்ளது. அதை BSNLஊழியர் சங்கம் முறியடிக்கும் உயர்ந்த பட்ச PLI ஐ பெற்றே தீர்வோம்.நமது மத்திய,மாநில சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க நமது கடலூர் மாவட்டத்தில் பின்வரும் போராட்டங்களை சக்திமிக்கதாக நடத்திட வேண்டுகிறோம். 

01-04-2016 – அன்று ஆர்ப்பாட்டம் (அனைத்து கிளைகளில் )
07-04-2016 அன்று தர்ணாபோர் (G.Mஅலுவலகம் முன்பாக )



NFTE–BSNL லின் ஊழியர் விரோத முகத்திரையை அறுத்தெறிவோம்

NFTE _BSNL லின் ஒப்புதல் வாக்குமூலம் NFTE –BSNL இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது

30-03-2016 : PLI payment:- The joint meeting of PLI committee took place today with Shri Shamim Akhtar, PGM(SR) in Chair, GM(Restg), GM(Pers) also attended. Com. Islam Ahmad, Leader Staff Side in NC and NFTE nominee alone attended the meeting. Secy, Staff side has not attended on the plea that one month notice is required for the meeting. The official side proposed about amount of PLI for year 2014-15. The leader staff side stated that the quantum of money is too meager but we are not rejecting the proposal. The committee will now place its report to the competent authority for decision. NFTE is keen to see that the right of the workers is restored.

NFTE–BSNL ன் ஒப்புதல் வாக்குமூலம்
நிர்வாகத்தரப்பில் குறைவான தொகை போனசாக முன் வைக்கப்பட்டது. போனஸ் தொகையின் அளவு நமக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் நமது உரிமையான போனசை நாம் போராடிப்பெற்ற போனசை நாம் ஆண்டாண்டு காலம் பெற்ற போனசை.. நிர்வாகம் மறுக்கவே இயலாது என்றும்... ஊழியர்களுக்கு கொடுத்தே தீர வேண்டும் என்றும்..உணர்வோடு..உறுதியோடு... தனது வாதத்தை தோழர்.இஸ்லாம் முன் வைத்தார்.

நிர்வாகத்தின் சூழ்ச்சியை முறியடிப்போம்- நியாயமான PLI கேட்டு போராட்டம்


வெள்ளி, 25 மார்ச், 2016

கடலூரில் நடைபெற்ற BSNLEU 16வது அமைப்பு தினம் மற்றும் தோழர் P. அபிமன்யு GS BSNLEU பங்கேற்ற தேர்தல் சிறப்புக் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
22-03-2016 செவ்வாய் அன்று மாலை 6மணியளவில் கடலூர் தொலைபேசி நிலைய வளாகத்தில் BSNLEU 16வது அமைப்பு தினம் மற்றும் 7வது சரிபார்ப்பு தேர்தல் சிறப்புக் கூட்டம் வெகு சிறப்பாகவும் உற்சாகமாகவும் நடைபெற்றது.தோழர் A. அண்ணாமலை மாவட்டத் தலைவர் தலைமையேற்றார். தோழர்R.V.ஜெயராமன் மாவட்ட உதவிச் செயலர் வரவேற்புரையாற்றினார். தோழியர் R.உஷா BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கினைப்பாளர் அஞ்சலியுரையாற்ற, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தோழர் A.பாபுராதாகிருஷ்னன் மாநிலச் செயலர் BSNLEU, தோழர் S.முத்துக்குமரசாமி AIBDPA மாவட்டச் செயலர், தோழர்.S.செல்லப்பா அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் வாழ்த்துரை வழங்கினார். 

பின்னர் தோழர் P. அபிமன்யு பொதுச் செயலர் BSNLEU,அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் சங்கம் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். BSNL நஷ்டத்தில் இயங்குகிற சூழலிலும் 78.2 சத IDA இணைப்பு, 1.1.2007 பிறகு நியமிக்கப்பட்ட TTA தோழர்களுக்கு அவர்களது ஊதிய இழப்பை சரி செய்தது, JTO Officiatingல் உள்ளவர்களை JTOவாக பணியலமர்த்தியது, கேடர் பெயரில் மாற்றங்களைக் கொண்டு வந்தது ஆகியவற்றைக் குறிப்பிட்டார். BSNL நிறுவனத்தை லாபகரமாக கொண்டு செல்ல FORUM அமைத்து கோரிக்கைகைகளை வைத்துபோராடியது மட்டுமல்லாமல் ஊழியர்களை ஊக்கப்படுத்தி சேவையை மேம்படுத்த திட்டங்களை வகுத்தது, “புன்னகையுடன் சேவை “திட்டத்தை அமல்படுத்தியது ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தார். PLI (போனஸ்) பார்முலாவை உருவாக்குவதில் NFTEயின் எதிர்மறையான அணுகுமுறை குறித்து விமர்சனம் செய்தார். கமிட்டியில் பங்கு வகித்த NFTEயின் தலைவர் தோழர் இஸ்லாம் அகமதுவின் உதவிகரமற்ற போக்கை கடுமையாக சாடினார். நமது சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும் போது நாம் 50 சதத்துக்கும் மேல் பெற்று முதல் சங்கமாக வெற்றி பெறுவது எளிது. எனினும் தோழர்கள் சிறப்பாக பணியாற்றி கூடுதல் வாக்குகளை சேகரிக்கவேண்டும். இம்முறை SNATTA சங்கம் நமது கூட்டணியில் உள்ள சாதகமான சூழலை பயன்படுத்தி நாம் வெற்றி வாகை சூட வேண்டும் என்று குறிப்பிட்டார். முன்னதாக மத்திய சங்க சாதனைகள் குறித்த கையேடு தமிழாக்கம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. தோழர் S.செல்லப்பா புத்தகத்தை வெளியிட நமது பொதுச் செயலர் P.அபிமன்யு முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். 

கூட்டத்திற்கு விழுப்புரம், திண்டிவனம்,செஞ்சி, கள்ளக்குறிச்சி,நெய்வேலி, விருத்தாசலம் மற்றும் சிதம்பரம்  ஆகியகிளைகளிருந்து வேன் வைத்துக் கொண்டும் மற்ற மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பெருமளவில் நமது தோழர்கள் திரளாக வந்திருந்து பங்கேற்றனர். நமது மாவட்டத்தில் இது ஒரு நல்ல துவக்கமாக அமைந்திருந்தது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் தோழர் v.குமார் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவடைந்த்தது.

புகைப்படங்கள்


















புதன், 23 மார்ச், 2016

அரிமாக்களே, எழுங்கள்...தோழர் பகத்சிங் (1929 ஜூன் ‘கீர்த்தி’ இதழில் வெளியான பகத்சிங் கட்டுரை)







நம் நாடு உண்மையில் மிகவும் மோசமான வடிவத்தில் இருக்கிறது. இங்கே மிக விசித்திரமான கேள்விகள் எல்லாம் கேட்கப்படுகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது, நாட்டின் 30 கோடி மக்களில் ஆறில் ஒருபங்காகஇருக்கக்கூடியதீண்டத்தகாதவர்கள்பற்றியதாகும்.உதாரணமாக:தீண்டத்தகாதவர் ஒருவர் தொட்டுவிட்டால் தீட்டாகிவிட மாட்டோமா?தீண்டத்தகாதவர் கோவிலுக்குள் நுழைந்தால் கடவுள்கள் கோபமடையாதா?பொதுக் கிணற்றிலிருந்து தீண்டத்தகாதவர்கள் தண்ணீர் இறைத்தால் அந்தத் தண்ணீர் முழுமையாக மாசு அடைந்து விடாதா? இத்தகைய கேள்விகள் 20ஆம் நூற்றாண்டிலும் கேட்கப்படுவதானது, நம் தலைகளை வெட்கத்தால் குனிய வைக்கின்றன. இந்தியர்களாகிய நாம், நம்முடைய ஆன்மீக வாழ்வு குறித்து ரொம்பவும்தான் பீற்றிக்கொள்கிறோம். ஆயினும் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் நம்மைப் போன்ற ஒருவரே என்பதை ஏற்க நாம் மறுக்கிறோம்.
மேற்கத்திய மக்கள், காசில் குறியாக இருப்பவர்களாக இருந்தபோதிலும், மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை கொள்கையளவில் ஏற்றுக் கொள்கிறார்கள். இதனை அவர்கள் அமெரிக்காவிலும், பிரான்சிலும் இவை அனைத்திற்கும் மேலாக ரஷ்யாவிலும் புரட்சிகள் நடைபெற்ற போது அவர்கள் மெய்ப்பித்துக் காட்டினார்கள். இந்நாட்களில் ரஷ்யா மக்கள் மத்தியில் நிலவிய அனைத்துவிதமான பாகுபாடுகளையும் துடைத்தெறிந்து விட்டது. அதன் மூலம் மே தினப் பிரகடனத்தில் கூறப்பட்ட கோட்பாடுகளை நிறைவேற்றியது.ஆனால் இந்தியர்களாகிய நாம், நம் கடவுள்களையோ அல்லது கடவுள் தன்மையையோ பீற்றிக் கொள்வதில் கொஞ்சம்கூட களைப்படைவதில்லை. மேலும் தீண்டத்தகாதவர்கள் பூணூ ல் அணியலாமா என்றும், வேதங்கள்/சாஸ்திரங்கள் படிக்கலாமா என்றும் மிகவும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம். பிற நாடுகளில் நாம் தரக்குறைவாக நடத்தப்படுவதாக - அதிலும் குறிப்பாக வெள்ளையர்கள் நம்மைத் தரக்குறைவாக நடத்திடும்போது - குறைபட்டுக்கொள்கிறோம்.அதே சமயத்தில், நாம் நம் சொந்தச் சகோதரர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம்?
பாட்னாவில் மாபெரும் இந்துக்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது. தீண்டத்தகாதவர்கள் மீது, மிகவும் நீண்டகாலமாகவே அனுதாபம் வைத்திருந்த லாலா லஜபதிராய் இம்மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். தீண்டத்தகாதவர்கள் பூணூல் அணிவதற்குத் தகுதியுடையவர்களா? அவர்கள் வேதங்கள்/சாஸ்திரங்கள் படிக்க முடியுமா? இவ்வாறு கேள்விகள் கேட்கப்பட்ட சமயத்தில் சமூக சீர்திருத்தவாதிகள் என்று சொல்லிக்கொண்டிருந்த பலரால் இவற்றைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தங்கள் நிலையை இழந்தார்கள். ஆனால் லாலாஜி மட்டும் பொறுமைகாத்து அவர்களைச் சமாதானப்படுத்தி, இவ்விரு பிரச்சனைகளிலும் ஒரு சமரசத்தைக் கொண்டு வந்தார்.
ஆனால், தீண்டத்தகாதவர்களிடம் மிகவும் நேசப்பூர்வமான அணுகுமுறை கொண்ட மாபெரும் சமூக சீர்திருத்தவாதியான பண்டிட் மாளவியாஜி கூட, (இன்றைக்கு பாஜகவினர் தூக்கிப்பிடிக்கும் மதன்மோகன் மாளவியா) பொது இடத்தில் தெருக்கூட்டுபவர் (ஸ்வீப்பர்) ஒருவர் மாலை அணிவித்ததை ஏற்றுக்கொண்டு, பின்னர் குளித்துவிட்டு, தன் துணிகளைத் துவைக்கும் வரை, தான் தீட்டாகிவிட்டதாகக் கருதவில்லையா? சொல்லுக்கும் செயலுக்கும் என்னே முரண்தகை?அனைவரும் கும்பிடுவதற்கான கோவிலில் ஓர் ஏழை புகுந்துவிட்டால் அது கறைபடிந்துவிடுமாம், கடவுளுக்குக் கோபம் வந்துவிடுமாம். இந்து சமூகத்தில் இதுதான் நிலைமை என்றால், இதைவிட நன்றி கெட்டத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. நமக்காக மிகவும் இழிவான வேலைகளை எல்லாம் செய்து நம்மை சௌகரியமாக வைத்திருப்பவர்களை, நாம் ஒதுக்கித் தள்ளுகிறோம். நாம் மிருகங்களைக் கூட கும்பிடுவோம், ஆனால் சக மனிதர்களை நம் அருகே அமர்வதைச் சகித்துக்கொள்ள மாட்டோம்.இந்நாட்களில் இது மிகவும் சூடான விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. ...
ஒருவன் ஏழைத் தோட்டியின் வீட்டில் பிறந்துவிட்டான் என்பதற்காகவே, அவன் வாழ்நாள் முழுவதும் கழிப்பறைகளைத்தான் கழுவ வேண்டும் என்றும், வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புக்கள் அனைத்தும் அவனுக்கு மறுக்கப்பட வேண்டும் என்பதும் பகுத்தறிவுக்கொவ்வாத பேச்சாகும். வரலாற்றுரீதியாகப் பேசுவோமானால், ஆரியர்கள் இத்தகைய பாகுபாடுகளைக் கொண்டுவந்து, அவர்களை இழிதொழில் புரிவோர் என்று முத்திரை குத்தி, அவர்களை எவரும் தொடக்கூடாது என்று கூறி, அனைத்து இழிதொழில்களையும் அவர்களிடம் சுமத்தினர். அவர்களும் தங்கள் நிலைகண்டு இதற்கெதிராகக் கலகம் செய்ய முன்வந்த நேரத்தில், ‘‘இவை அனைத்தும் நீங்கள் பூர்வஜென்மத்தில் செய்த பாவங்களுக்கான பலன்கள். இப்போது என்ன செய்ய முடியும்? அனைத்தையும் அமைதியாகப் பொறுத்துக் கொள்ளுங்கள்!’’ என்றனர்.
இத்தகைய தூக்கமாத்திரைகளைக் கொடுத்து அவர்களால் சிறிது காலம் அமைதியை வாங்க முடிந்தது. ஆயினும் எந்தவிதத்தில் பார்த்தாலும் இதைப் போன்றதொரு கொடூரமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது. இதற்குக் கழுவாய் தேடும் காலம் வந்துவிட்டது.விரிவான சமூகக் கண்ணோட்டத்தில் கூறுவதானால், தீண்டாமை என்பது தீங்கு பயக்கக்கூடிய பல்வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியதாகும். பொதுவாக மக்கள், வாழ்க்கைக்கு அடிப்படையான வேலைகளைச் செய்வோரை வெறுக்கும் மனோபாவத்தைக் கொண்டிருக்கிறார்கள். நம் மானத்தை மறைக்க நமக்குத் துணி நெய்து கொடுப்போரை நாம் தீண்டத்தகாதவர்களாகக் கருதுகிறோம். உத்தரப் பிரதேசத்தில் தண்ணீர் சுமப்போர்கூட தீண்டத்தகாதவர்களாவார்கள். உழைப்பின் மேன்மையை - குறிப்பாக மனித உழைப்பை - உதாசீனம் செய்வதன்மூலம் நம் முன்னேற்றத்திற்கே நாம் கடும் சேதத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உழைப்போரைத் தீண்டத்தகாதவர்கள் என்று கருதுவதையோ அல்லது அழைப்பதையோ நாம் கைவிட வேண்டும்.
இது தொடர்பாக நவஜீவன் பாரத் சபாவிலும், இளைஞர் மாநாட்டிலும் நாம் ஓர் செயல்திட்டத்தை உருவாக்கினோம். அதன்படி அதுநாள்வரை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கிவைத்திருந்த நம் சொந்தச் சகோதரர்களிடமிருந்தே அவர்கள் கைகளின் மூலமாகவே உணவு / தண்ணீர் முதலானவைகளைப் பெற ஏற்பாடு செய்தோம். இவ்வாறு செய்யாமல், சமூகத்தில் கண்ணியமான இடத்தை அவர்களுக்கு அளிக்காமல் அவர்களை வென்றெடுப்பது குறித்து நமக்குள் நாமே சண்டையிட்டுக் கொண்டிருப்பது என்பது வீணேயாகும். இவ்வாறு நாம் மனிதர்கள் மத்தியில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடித்துக்கொண்டு கிராமங்களுக்குச் சென்ற அந்தக் கணமே, ‘‘நமது முயற்சிகள், உயர்சாதியினருக்குச் சேவகம் செய்துவந்த இழிசாதியினரை அவ்வாறு சேவகம் செய்யவிடாமல் தடுத்திடும்’’ என்று அரசாங்க ஏஜெண்டுகள் பிரச்சாரத்தை முடுக்கி விட்டார்கள். இது சரியான திசைவழியில் அடி எடுத்து வைத்த ஜாட் போன்ற உயர்சாதி இனத்தவரை நமக்கு எதிராக ஆத்திரமடையச் செய்திடப் போதுமானதாக இருந்தது.தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்கள், தாங்கள் ஒன்றுபட்டு, ஸ்தாபனரீதியாகத் திரளாத வரை, தங்கள் பிரச்சனைகளைத் திருப்திகரமான முறையில் தீர்த்துக் கொள்ள முடியாது. அவர்கள் சமீபத்தில் தங்கள் தனித்துவ அடையாளத்திற்காக ஒன்றுபட்டு நிற்பதும், மக்கள் தொகை எண்ணிக்கையின்படி முஸ்லீம்களுக்கு இணையாகப் பிரதிநிதித்துவம் கோரி இருப்பதும் அவர்கள் சரியான திசைவழியில் எடுத்து வைத்த அடிகளாகும். கொள்கையளவில், சட்டமன்ற மேலவைகளும், பேரவைகளும் அனைத்து இன மக்களும் பள்ளிகள், கல்லூரிகள், கிணறுகள் மற்றும் சாலைகள் ஆகிய அனைத்து இடங்களிலும் முழுமையாகவும் சுதந்திரமாகவும் இயங்கிட அனுமதிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்திடுவதற்குக் கடமைப்பட்டவைகளாகும்.
அதுவும் இதனை ஏட்டில் எழுதி வைத்தால் மட்டும் போதாது, செயலிலும் காட்ட வேண்டும். தீண்டத்தகாதவர்களை கிணறுகள், பள்ளிகள் முதலான இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களை அனுமதித்திட வேண்டும். எனவேதான், ‘‘எழுங்கள் தோழர்களே! தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்பட்ட, வாழ்க்கையின் உண்மையான உழைப்பாளிகளே, அவமானகரமான கடந்த காலத்தை விட்டு வெளியேறுங்கள், குரு கோவிந்த் சிங் ராணுவத்தின் பின்புலம் நீங்கள்தான். சிவாஜி அனைத்தையும் சாதிக்க முடிந்ததற்கு உங்கள் பங்களிப்புதான் காரணம். நீங்கள்தான் வரலாற்றில் அவரை என்றென்றுமாய் பிரகாசிக்கச் செய்திருக்கிறீர்கள். உங்கள் தியாகங்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியவைகளாகும். எங்களுக்காக நீங்கள் அளித்திட்ட உழைப்பு அதன்மூலம் எங்களுடைய வசதியான வாழ்க்கை - இவை அனைத்தும் உங்கள் மீது மிகுந்த மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்துகின்றன.
இதுநாள் வரை உங்களைப் பாராட்டத் தவறிவிட்டோம்,’’ என்று உரக்கவே பிரகடனம் செய்கின்றோம். உண்மையில் சொல்லப்போனால், முதலாளித்துவ அதிகாரவர்க்கக் கூட்டணிதான் உங்களது ஒடுக்குமுறைக்கும் வறுமைக்கும் முக்கிய பொறுப்பாகும். எனவே எப்போதும் அவர்களை ஒதுக்கித்தள்ளுங்கள். அதன் சூழ்ச்சிகளுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருங்கள். இது ஒன்றே விடுதலை பெறும் வழியாகும். நீங்கள்தான் உண்மையான தொழிலாளர் வர்க்கம். தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள் - நீங்கள் இழக்கப்போவது எதுவுமில்லை, உங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர. இப்போதுள்ள முதலாளித்துவ ஆட்சி அமைப்புக்கு எதிராகக் கலகம் செய்திட, எழுங்கள். படிப்படியாக என்பதோ அல்லது சீர்திருத்தமோ உங்களுக்குப் பயன் அளிக்கப் போவதில்லை. சமூகக் கிளர்ச்சியிலிருந்து புரட்சியைத் தொடங்குங்கள். அரசியல் மற்றும் பொருளாதாரப் புரட்சிக்குத் தயாராகுங்கள்.நீங்கள்தான், நீங்கள் மட்டுமேதான் நாட்டின் தூண்கள் மற்றும் அதன் உள்ளீடான வலிமையாகும். ஓ, உறங்கும் அரிமாக்களே, எழுங்கள், கிளர்ச்சி செய்யுங்கள், புரட்சிப் பதாகையை உயர்த்திப் பிடித்திடுங்கள்.
நன்றி தீக்கதிர் 23.03.2016 - தமிழில்: ச.வீரமணி




திங்கள், 21 மார்ச், 2016

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
    கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இன்றைய தேதி வரையில் சம்பளம் பட்டுவாடா செய்யப்படவில்லை. இது மாதாமாதம் தொடர்கதையாகி வருகிறது கார்ப்பரேட் அலுவலகமும், மாநில நிர்வாகமும் பல உத்தரவுகள் பிறப்பித்தும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்க நிர்வாகம் தாமதம் செய்து வருகிறது. இப் போக்கினை கண்டித்து இன்று 18-03-2016 அன்று மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் BSNLEU, NFTE ,TNTCWU TMTCLU, ஆகிய சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.அனைத்து கிளைகளிலும் சிறப்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் உட்பட அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். கடலூரில் GMஅலுவலக வாயிலில் இணைந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் 

நெய்வேலி 


திண்டிவனம் 
                                                                                           சிதம்பரம் 


 பண்ருட்டி 



வியாழன், 17 மார்ச், 2016

நமது BSNLEU கூட்டணியில் SNATTA சங்கம்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!      

         SNATTA சங்கம் எதிர்வரும் 7வது சரிபார்ப்பு தேர்தலில், நமது BSNLEU கூட்டணியில் இணைந்துள்ளது. 11.03.2016 அன்று நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூவும், SNATTA பொது செயலர் தோழர் அனுப் மூகர்ஜீயும், ஒப்பந்தத்தில் கையெழுத்துதிட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
         6 வது சரிபார்ப்பு தேர்தலில் SNATTA சங்கம் நமது கூட்டணியில் இல்லை. இந்த 3 ஆண்டுகளில், BSNLEU சங்கம் நேரடி நியமன TTA தோழர்களின் கோரிக்கைகளை தீர்த்து வைத்ததற்காக, நமக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக நாம் இதை பார்க்கிறோம்.ஒட்டுமொத்த BSNL ஊழியர்களின் எதிர்காலமும், நேரடி நியமன TTA தோழர்களின் எதிர்காலமும் நல்ல விதத்தில் அமைய, அவர்களின் வாழ்வையும், அவர்களின் நலனையும், காக்க BSNLEU தான் சிறந்த பாதுகாவலன் என்பதை இளம் வர்க்கப் படையினர் உணர்ந்துள்ளார்கள். 
        51 சதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று, நாம் வெற்றி பெறுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. அது தற்போது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கிட வலியுறுத்தி இணைந்த ஆர்ப்பாட்டம்...


செவ்வாய், 15 மார்ச், 2016



CUG மொபைலில் BSNL அல்லாத எண்களுக்கும் பேசலாம். -- மத்திய சங்கத்தின் சாதனை 
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
CUG மொபைலில் BSNL அல்லாத எண்களுக்கும் பேச அனுமதி வழங்க வேண்டும் என்று நம் மத்திய சங்கம் கார்ப்பரேட் அலுவலகத்தை வலியுறித்தி வந்தது. தற்போது கார்ப்பரேட் அலுவலகம் CUG மொபைலில் அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.200/-ல் மாதம் ரூ. 50க்கு மாநில அளவில் BSNL அல்லாத எண்களுக்கு பேச அனுமதி வழங்கி உத்திரவு வெளியிட்டுள்ளது.

வெள்ளி, 11 மார்ச், 2016

அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து நடத்திய
கடலூர் மகளிர் தின விழா – மார்ச் 10, 2016
கடலூர் வாடிக்கையாளர் சேவைமையத்தில் உணவு இடைவேளைவிழாவாகச் சிறப்பாக நடைபெற்றது.மகளிர் தினத்தை முன்னிட்டு டில்லிமுதல் சான்பிரான்ஸிஸ்கோ வரை 17மணி நேரம் விமானத்தை பெண்கள்மட்டுமே இயக்கினார்கள்.  அதுபோன்று கடலூரில் பெண்கள் மட்டுமேநடத்திய விழா.
 தோழியர்கள் B.S.நிர்மலா,K.லலிதா முன்னிலை வகிக்க தலைமைக்குழுவாக தோழியர்கள் R.உஷா, V.கீதா, D.கலைவாணிசித்ரா நாகராஜன்தலைமையேற்று நடத்தினர்தோழியர் உஷா பெண்கள் தினம் பூக்களால்உருவாக்கப்பட்டதல்ல போராட்டங்களால் உருவானது என்றுரைத்து நல்லதுவக்கம் செய்தார்.  தோழியர் கீதா பெண்கள் தினத்தின் வரலாற்றைஎடுத்துக் கூறி துவக்க உரையாற்றினார்.  தோழியர் சரோஜாதேவி கணீரெனஅனைவரையும் வரவேற்றார்,
கடலூர் கந்தசாமி நாயுடுகலைக்கல்லூரி (K.N.C) யின்பேராசிரியர் தோழியர்  P.சாந்தி சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டுசிறப்புரையாற்றினார்.  அவருக்குதோழியர் கலைவாணி பொன்னாடைபோர்த்தி கவுரவித்தார்பேராசிரியர்தமது உரையில்,
அனைவருக்கும் உழைக்கும்மகளிர் தின வாழ்த்துகள்.  இப்போது நாடெங்கும் பல அமைப்புகளால் வணிகநிறுவனங்களால் ஊடகங்களால் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறதுஆனால் மகளிர் தினம் யாரால் எப்போது கொண்டாடத் துவங்கப்பட்டதுஅதுஅமெரிக்காவில் உழைக்கும் பெண்களால் –எளிய பெண்களால்சிறுபொறியாகத் துவக்கப்பட்டது.  18—ம் நூற்றாண்டில் பெண்கள் 14 மணி நேரம்உழைக்க நிர்பந்திக்கப்பட்டார்கள்.  அதுவும் அதே பணியைச் செய்யும்ஆண்களை விட குறைந்த கூலிக்கு.  இந்த அநீதியை எதிர்த்து அவர்கள்பெரிய போராட்டம் எதுவும் செய்யவில்லை, 10 மணிநேர வேலைநேரக்குறைப்புக்காக ஊர்வலம் சென்றார்கள்.  லாபம் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் தொழிற்சாலை முதலாளிகள் பொறுப்பார்களா?ஊர்வலம் வன்முறையால் நசுக்கப்பட்டது.
அமெரிக்கா  “லோவல்“ ஆயத்தஆடை தயாரிப்பு ஆலையில் பணிபுரிந்த பல்லாயிரக்கணக்கானபெண்கள் 10 மணி நேர வேலை,சமவேலைக்கு சம கூலி என்றகோரிக்கைகளை முன் வைத்துமீண்டும் ஊர்வலம்மீண்டும்அடக்குமுறை.  1908-ல் 15 ஆயிரம்பெண்கள் ஊர்வலம், 1911 ல் டிராய்டில்146 பெண்கள், கும்பகோணம் தீ விபத்து போன்றதொரு விபத்தில் கருகிச்சாம்பலாயினர் (அவர்கள் ஆலையை விட்டு வெளியே வர முடியாதபடிவெளியே பூட்டப்பட்டிருந்ததுஏனெனில் வேலை நேரத்தில் அவர்கள்வெளியே திரியக் கூடாது என்பதற்காக முதலாளிகளின் ஏற்பாடு)  பணிசெய்யும் ஆலைகளில் போதுமான கழிவறைகள் கிடையாதுகழிவறைக்குச்சென்று ஏன் தாமதமானது எனக் கேட்டு அதற்கு சம்பளப்பிடித்தம்,,,, இப்படிஎத்தனை அராஜகங்கள்தீ விபத்திற்குப் பின் அரசு சில மாற்றங்களைக்கொண்டு வந்தது.  இதைக் கொண்டாடும் வகையில் அமெரிக்காவில்பிப்ரவரி கடைசி ஞாயிறு மகளிர் தினமாக அனுசரிக்கப்பட்டது.

1910 ல் உலக மகளிர் சங்கமாநாடு நடைபெற்றது.  அதில்தோழியர் கிளாரா ஜெட்கின்முன்மொழிந்தது தான் மார்ச் 8 ம் நாள்உலகெங்கும் சர்வதேச உழைக்கும்பெண்கள் தினமாகஅனுசரிக்கப்படுகிறதுஅமெரிக்காவில்பலநாடுகளைச் சேர்ந்த பெண்கள் பணிசெய்ததால் எழுச்சிக்கும் சர்வதேசபார்வைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 200 ஆண்டு கால போராட்ட வரலாற்றுப்பின்னணி கொண்டது இந்த தினம்.
ஆனால் போராட்டம் கோரிக்கைகள் தியாகம் என்பதையெல்லாம்மழுங்கடிக்கும் வகையில் ஆடல்,பாடல்,கோலம்,சமையல் போட்டி எனநம்மை முடக்கும் வகையிலேயே கொண்டாட்டங்களைத் திட்டமிட்டுநடத்துகிறார்கள்.  ஆனால் பெண்களின் நிலை?
இன்னும் பள்ளி முதல் காடு கழனி வரை பாலியல் துன்புறுத்தல்கள்நிர்பயா வழக்கில் என்ன நடந்தது?  அந்தப் பெண் ஏன் இரவு 10 மணிக்குமேல் ஆண் நண்பருடன் செல்ல வேண்டும் என பெண்களை வைத்தே பேசவைத்தார்கள்.  காரணம் இங்கு பெண்கள் உருவாவதில்லை,உருவாக்கப்படுகிறார்கள்.  அவள் எதை உடுத்த வேண்டும் எதை உண்ணவேண்டும் எப்படி நடக்க வேண்டும் என்பதெல்லாம் மற்றவர்கள் தான் முடிவுசெய்கிறார்கள்பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என வரையறைசெய்து சட்டகத்தில் அடைக்க எண்ணுகிறார்கள்.
ஆற நூறு ஆக்குவாங்க சின்னக் கண்ணு – அதை --அம்மா கையிலேகொடுத்துப் பாரு செல்லக்கண்ணு என்ற சினிமா பாடல்அப்படி சேமிப்பதுஅவள் குணம்தன் நலம் தன் உணவு என்பதைக் கூட கவலைப்படாதுகுடும்பத்தை கவனிப்பவள் அல்லவா பெண்.  பிறகு ஏன் நாட்டில் 33 சதவீதஇட ஒதுக்கீடு இன்னும் இழுபறியாகவே உள்ளது?

பொருளாதார ரீதியாக நாம்நன்றாக உள்ளோம்.  பொதுத்துறையான BSNL –ல் பல பெண்கள்பணியாற்றுகிறீர்கள்.  இந்தத் துறைநன்றாக இருக்க வேண்டும்என்பதற்கான பொதுப்போராட்டங்களில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டாமாபோராட்டங்களில் உருவான பெண்கள்தினத்தைக் கொண்டாடும் நாம் நமது துறையைக் காக்கும் வேலைநிறுத்தஇயக்கங்களில் பங்கேற்க வேண்டாமா?
ஆனால் போராட்டங்களில் பெண்கள் ஈடுபடுவதை இந்த சமூகம்சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை தான்.  ஏன் எங்கள் கல்லூரியில்மாணவிகள் போராடினார்கள்.  பல நூறு பெண்கள் பயிலும் கல்லூரியில்கழிவறைகள் இல்லைகுறைந்த பட்ச அடிப்படை வசதியைக் கேட்டுப்போராடுவது குற்றமா?  அப்படி நாங்கள் போராடும் போது நீங்கள் வந்துஆதரவு தெரிவித்திருக்க வேண்டாமா?  இங்கே உள்ள பெண் அதிகாரிகள்எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவிகள்ஆனால் எங்கள் மாணவிகளின்போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டது என்பது தான் உண்மை
ஆனால் இதனை மாற்ற தொடர்ந்து போராடத்தான் வேண்டும்.  சமூகஅநீதிகளை எதிர்த்து நாம் குரல் எழுப்ப வேண்டும்அத்தகைய போராட்டகுரல்களோடு நமது குரலும் சேர்ந்து ஒலிக்க வேண்டும்.  அதுதான் பெண்கள்தினம் கொண்டாடத் துவங்கிய அந்த நூற்றாண்டு பெண்களின் தியாகத்திற்குநாம் நியாயம் செய்தவர்களாக இருப்போம்.  மே ஒன்றாம் நாள் மேதினம்போல மார்ச் 8 பெண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும்மேம்போக்காக பொழுபோக்காகக் கொண்டாடும் நிலையை மாற்றுவோம்.சமூகத்திற்கான நமது பங்களிப்பைச் செலுத்துவோம்.  வாய்ப்புக்கு நன்றிஅனைவருக்கும் மீண்டும் சர்வதேச உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!
அடுத்து நமது DGM (CM & EB )தோழியர் ஜெயந்தி அபர்ணா அவர்கள்வாழ்த்துரை வழங்கினார்அவருக்குசித்ரா நாகராஜன் பொன்னாடைபோர்த்தினார்தமது உரையில்,அலுவலக பணி காரணமாகதாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கோரிஇந்த விழா அடுத்த ஆண்டு முழுநாள்        
விழாவாக மாலை நேர விழாவாக நடத்தப்பட வேண்டும்.  அதற்குபெண்களாகிய நாம் ஒருநாளாவது நமக்கான விழாவை 5 மணிக்குப் பிறகும்இருந்து நடத்த முன்வரவேண்டும்.  பேராசிரியர் கழிவறைவசதி பற்றிகுறிப்பிட்டார்  உண்மைதான் நான் பள்ளியில் கல்லூரியில் படிக்கும் போதும்அதே நிலைமைதான்.  ஆனால் இது போன்று போராட முடியும் என்றுஎங்களுக்குத் தோன்றியதில்லை .  பல கிராமப்புறஅரசுப் பள்ளிகளில்கழிவறை வசதிகள் சுகாதாரம் மேம்படுவதற்கு நம்மால் ஆனவற்றை நாம்செய்து உதவ முடியும்.  இதற்கெல்லாம் நமது பார்வை விசாலமடையவேண்டும்.  புடவை நகைகள் என நாம் நம்மையே முடக்கிக்கொள்வதிலிருந்து வெளியே வரவேண்டும்.  அனைவருக்கும் வாழ்த்துகள்
இறுதியாக தோழியர் S. மணிமேகலை நன்றி கூறினார்.
அனைவருக்கும் துவக்கத்தில்எலுமிச்சை சாறு  வழங்கப்பட்டதுபோல கூட்ட முடிவில் இனிமையானசுவையான உணவு வழங்கப்பட்டதுஇதில் குறிப்பிட வேண்டிய ஒன்றுதிட்டமிடும் போது மதிய உணவுஏற்பாடு இல்லை.  ஆனால் எங்கள்விழாவில் உணவில்லாமலா எனவிழா மகளிர் அணி உணவுக்குஏற்பாடு செய்தார்கள் என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.  இதனைச்சொல்லும் போது மகளிர் தினத்தை ஒட்டி வந்த ஒரு கவிதையின் ஒரு பகுதிமிகப் பொருத்தமானது
அம்மா --
அவளை எந்த பொய் சொல்லியும்
ஏமாற்றிவிடலாம் – ஆனால்
பசி இல்லை,
சாப்பிட்டு விட்டேன்
என்று மட்டும் கூறி
ஏமாற்றவே முடியாது “  
மிகச் சிறப்பான விழா பெருந்திரளாக மகளிர், ஊழியர்கள்,அதிகாரிகள், அனைத்து தொழிற்சங்கத் தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதனைவிஞ்சப் போவது அடுத்தடுத்த ஆண்டுகளில் இவர்கள் நடத்தும்விழாக்களாகவே இருக்கும்.