BSNL
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு
கடலூர் மாவட்டச் சங்கங்கள்
தற்காலிக PLI வழங்கக்கோரி அக்டோபர்-6ல்
ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த தோழர்களே , தோழியர்களே.....
24-09-2015 அன்று நடைபெற்ற FORUM கூட்டத்தில் தற்காலிக PLI-ஐ உடனே வழங்கக் கோரி 06-10-2015 அன்று நாடு தழுவிய அளவில் சக்தியான
ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது. நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதை
காரணம் காட்டி கடந்த சில வருடங்களாக நிர்வாகம் PLI வழங்க மறுத்து வந்தது .
ஆனால் ஒரு நிறுவனத்தின் லாபத்துடன் PLI வழங்குவதை இணைக்கக் கூடாது என DPEயின்
வழிகாட்டுதல் உள்ளது. நிர்வாகத்திற்கு அந்தக் கடிதத்தின் நகலையும் நாம்
கொடுத்துள்ளோம். புதிய PLI பார்முலா உருவாக்க அமைக்கப்பட்ட கமிட்டி,
தொடர்ச்சியாக கூடாத காரணத்தால் இது வரை முடிவு எடுக்கப்படவில்லை. இந்தக் கமிட்டி
புதிய பார்முலா உருவாக்க இன்னமும் சில மாத காலம் ஆகலாம். அது நிர்வாகக் குழு
மற்றும் இயக்குனர் குழுவின் ஒப்புதலை பெற மேலும் சில மாதம் ஆகும். எனவே தற்காலிக PLIஐ
உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என FORUM முடிவு
செய்துள்ளது. நிர்வாகம் பொருத்தமான முடிவு எடுக்கவில்லை என்றால் போராட்டத்தை
தீவிரப்படுத்த அடுத்து 12-10-2015 அன்று நடைபெறும் FORUM முடிவு செய்யும்.
எனவே FORUMத்தில் உள்ள அனைத்து சங்கங்களையும் ஒன்று திரட்டி 06-10-2015 அன்று சக்தியான ஆர்ப்பாட்டங்களை
நடத்த மாவட்ட சங்கங்கள் தயாரிப்பு பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என மத்திய ,மாநில சங்கங்கள் அறைகூவல்
விடுத்துள்ளது. அதற்கேற்ப நாம் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் 06-10-2015 அன்று சக்திமிகுந்த கூட்டமைப்பின்
சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டுகின்றோம்.
அதன் அடிப்படையில் கடலூரில் நமது பொது மேலாளர் அலுவலகம்
முன்பாக மதியம் 1:௦௦ மணியளவில் (உணவு இடைவேளையின் போது) ஆர்ப்பாட்டம்
நடைபெறும். தோழர்கள், தோழியர்கள் அனைவரும்
பங்கேற்று வெற்றி பெறச் செய்யுமாறு கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
தோழமையுடன்
மாவட்டச் செயலர்,BSNLEU மாவட்டச் செயலர்,NFTE மாவட்டச் செயலர் ,SNEA(I) மாவட்டச் யலர்,AIBSNLEA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக