செவ்வாய், 9 ஜூன், 2015

இணைந்த கிளைச்செயலர்கள் கூட்டத்தின் முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது இரண்டு சங்கங்களின் இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் 08.06.2015அன்று மாலை 5.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர்கள் தோழர் A.அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. கிளைச்செயளர்கள் கூட்டத்தின் நோக்கங்களை மாவட்ட செயலர்கள் முன்வைத்தனர். 12 கிளைச்செயலர்களும், மூன்று மாவட்ட சங்க நிவாகிகளும் கருத்துரை வழங்கினர்.ஒப்பந்த ஊழியர்சங்க மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து  ஒப்பந்த ஊழியர் நிரந்தரத்திற்காக நாம் தொடுத்த நீதிமன்ற வழக்கின் விபரங்களை எடுத்துரைத்தார்.பின்வரும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
1) FORUM அறைகூவலை கடலூர் மாவட்டத்தில் முழுமையாக அமுலாக்க முனைப்புடன் செயலாற்றுவது.
2)தகவல் பலகைகளில் மேல்மட்ட செய்திகளை தினந்தோறும் வெளியிடுவது.
3)கேபிள் பழுது குறித்த விபரங்களை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் புள்ளிவிபரங்கள் சேகரிப்பது.
4)விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு  ESI அட்டையை பெற்றுத் தருவது.ஏற்கனவே பெற்றவர்களின் அட்டைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பது.
5)விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களிடம் உறுப்பினர் படிவத்தினையும் ஆண்டு சந்தாவையும் சேகரித்து மேல்மட்டங்களுக்கு அனுப்புவது.
தோழர்களே மேற்கண்ட முடிவுகளை வெற்றிகரமாக அமுலாக்கிட வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
                                                                                                                     தோழமையுடன் 
                                                                                                                        K.T.சம்பந்தம்  

கருத்துகள் இல்லை: