திங்கள், 29 ஜூன், 2015

FORUM முடிவுகளும், அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வும் ….

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!

FORUM முடிவுகளும், அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வும் …. குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read >>>

சனி, 27 ஜூன், 2015

வியாழன், 25 ஜூன், 2015

ரயில்வேயில் தனியார் நுழைவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
நரேந்திரமோடி அரசாங்கம் அமைத்த பிபேக் தேப்ராய் கமிட்டி ரயில்வேயை தனியார் மயமாக்க தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இந்த அறிக்கைக்கு எதிராக ஜூன் 30ஆம் தேதியை “கருப்பு தினம்” என கடைபிடிப்பது என ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளது. ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என டல்ஹௌசி மத்திய செயற்குழுஅறைகூவல் விட்டுள்ளது.எனவே நமது கடலூர் மாவட்டத்தின் அனைத்து கிளைளிலும்   ஜூன் 30ஆம் தேதி ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

புதன், 24 ஜூன், 2015

22ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
22.06.2015 அன்று சென்னையில் நடைபெற்ற 22ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read >>>

செவ்வாய், 23 ஜூன், 2015

டல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
16.06.2015 to 18.06.2015--ல் டல்ஹௌசி யில் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் முடிவுகள் குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read >>>




வியாழன், 18 ஜூன், 2015

FORUM அறைகூவலுக்கிணங்க நமது மாவட்டத்தில் BSNL வளர்ச்சிக்கான முதல் கலந்தாய்வுக் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
கடலூர் மாவட்ட FORUM சார்பாக எடுக்கப்பட்ட முடிவின் படி BSNL வளர்ச்சிக்காக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்தாய்வு கூட்டம் முதன் முதலாக சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் 16-06-2015 அன்று நடைபெற்றது. கூட்டத்தை சிதம்பரம் கோட்ட பொறியாளர் திரு.N.செல்வராஜ் அவர்கள் தலைமையேற்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக திரு.K.சமுத்திரவேலு,DGM/CFA,திரு.P.சாந்தகுமார்,DGM/Fin.,திரு.M.சேகர்,AGM/N.W ஆகியோரும், தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக திரு.C.பாண்டுரங்கன்,மாவட்டதலைவர்.SNEA,தோழர்.இரா.ஸ்ரீதர்,மாவட்டசெயலர்.NFTE,தோழர்.K.T.சம்மந்தம் .மாவட்டசெயலர்-BSNLEU மற்றும் தலமட்ட அதிகாரிகளும், 80 க்கும் மேற்பட்ட ஊழியர்களும் கலந்துகொண்டனர். நிர்வாக வளர்ச்சிப்பற்றி அதிகாரிகளும், தொழிற்சங்க தலைவர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். ஊழியர் தரப்பில் கேபிள் பழுதுகள் நிறைய உள்ளதையும் அதனை விரைந்து முடிக்க கூடுதலாக ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கோரியதை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டு, கூடுதல் ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பதாக உறுதியளித்துள்ளது. மேலும் டூல்ஸ் மற்றும் புதிய HMT-கள் உடனடியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர். ஊழியர்களும் கூடுதலாக புதிய இணைப்புகளை அதிகப்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்ய தயாராக உள்ளதாக உறுதியளித்துள்ளனர். சிதம்பரத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டம் பயனுள்ளதாக அமைந்ததாக மாவட்ட நிர்வாகமும் தொழிற்சங்கமும் கருதுகிறது.








திங்கள், 15 ஜூன், 2015

ஓன்று பட்ட போராட்ட அறைகூவலுக்கு கிடைத்த வெற்றி!!!

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
10.06.2015 அன்று நடைபெற இருந்த தர்ணா ஒத்திவைக்கப்பட்ட பின் 12.06.2015 அன்று மாநில நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் சாராம்சம் காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read >>>

செவ்வாய், 9 ஜூன், 2015

இணைந்த கிளைச்செயலர்கள் கூட்டத்தின் முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது இரண்டு சங்கங்களின் இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் 08.06.2015அன்று மாலை 5.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர்கள் தோழர் A.அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. கிளைச்செயளர்கள் கூட்டத்தின் நோக்கங்களை மாவட்ட செயலர்கள் முன்வைத்தனர். 12 கிளைச்செயலர்களும், மூன்று மாவட்ட சங்க நிவாகிகளும் கருத்துரை வழங்கினர்.ஒப்பந்த ஊழியர்சங்க மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து  ஒப்பந்த ஊழியர் நிரந்தரத்திற்காக நாம் தொடுத்த நீதிமன்ற வழக்கின் விபரங்களை எடுத்துரைத்தார்.பின்வரும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
1) FORUM அறைகூவலை கடலூர் மாவட்டத்தில் முழுமையாக அமுலாக்க முனைப்புடன் செயலாற்றுவது.
2)தகவல் பலகைகளில் மேல்மட்ட செய்திகளை தினந்தோறும் வெளியிடுவது.
3)கேபிள் பழுது குறித்த விபரங்களை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் புள்ளிவிபரங்கள் சேகரிப்பது.
4)விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு  ESI அட்டையை பெற்றுத் தருவது.ஏற்கனவே பெற்றவர்களின் அட்டைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பது.
5)விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களிடம் உறுப்பினர் படிவத்தினையும் ஆண்டு சந்தாவையும் சேகரித்து மேல்மட்டங்களுக்கு அனுப்புவது.
தோழர்களே மேற்கண்ட முடிவுகளை வெற்றிகரமாக அமுலாக்கிட வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
                                                                                                                     தோழமையுடன் 
                                                                                                                        K.T.சம்பந்தம்  

ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகளுக்காக சென்னையில் நடைபெற இருந்த தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு

போராட்டம் ஒத்திவைப்பு
ஒப்பந்த ஊழியர்களுக்கான பிரச்சினைகளை வலியுறுத்தி 10-06-2015 அன்று சென்னையில் நடைபெறவிருந்த பெருந்திரள் தர்ணா போராட்டம் இன்று 
(8-5-2015) நடைபெற்ற மாநில முதன்மைப் பொதுமேலாளர் உடனான மாநில செயலர்களின்   முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட  சில முன்னேற்றத்தின் அடிப்படையில் ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த கட்ட பேச்சு வார்த்தை ஜூன்-12 அன்று நடைபெறுகிறது.

கடலூர் மாவட்ட FORUM கூட்டம் முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
08.06.2015 அன்று கடலூர் மாவட்ட FORUM கூட்டம் தோழர் R.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.அதில் FORUMத்தில் அங்கம் வகிக்கும் SNEA(I) சார்பில் தோழர்கள் C.பாண்டுரங்கன், R.அசோகன் ஆகியோரும், 
AIBSNLEA சார்பில் தோழர்கள் K.தனசேகரன், வெற்றிவேல், ஆனந்த் ஆகியோரும், NFTE சார்பில் தோழர் R.பன்னீர்செல்வம் BSNLEU  சார்பில் தோழர் R.V.ஜெயராமன் ஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.கன்வீனர் தோழர் K.T.சம்பந்தம் அனைத்திந்திய FORUM விடுத்துள்ள அறைகூவலை கடலூர் மாவட்டத்தில் சிறப்பான முறையில் அமுலாக்க தனது முன்மொழிவுகளை தெரிவித்தார்.மேலும் இக்கூட்டத்தில் AIBSNLEA மாவட்ட செயலர் கொடுத்த கடிதம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.கீழ்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட நிர்வாகத்தை DGM(CFAவை ) 09.06.2015 அன்று கூட்டாக சந்திப்பது.BSNLதலைமையகம் அறிவித்துள்ள இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையில் தரைவழி தொலைபேசிகளுக்கு வழங்க இருக்கும் இலவச அழைப்பு திட்டம் குறித்து பொது மக்களிடம் கொண்டுசெல்வது குறித்த நமது FORUM எடுக்க இருக்கும் நடவடிக்கைகளுக்கு நிர்வாகத்தின் ஒத்துழைப்பை கோருவது.

கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு FORUM செயலர் பெயரில் வந்துள்ள மொட்டை கடிதத்திற்கும் கடலூர் FORUMத்திற்கும் சம்பந்தமில்லை என்று கடிதம் கொடுப்பது.

ஞாயிறு, 7 ஜூன், 2015

கடலூரில் சிறப்பாக நடைபெற்ற பணிநிறைவு பாராட்டு விழா மற்றும் ஏழாவது மாவட்ட மாநாட்டின் வரவேற்பு குழு நிறைவுசெய்தல் விழா

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
கடலூரில் பணியாற்றி பணிஓய்வு பெற்ற தோழர்கள் B.சந்திரசேகரன்,P.ராஜசேகரன் மற்றும் P.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோரது பணிநிறைவு பாராட்டு விழாவுடன் செப்டம்பர் 5-ல் கடலூரில் நடைபெற்ற ஏழாவது மாவட்ட மாநாட்டின் வரவு செலவு கணக்கை சரிபார்த்து வரவேற்பு குழுவினை நிறைவு செய்யும் விழாவும் 06.06.2015 அன்று மாலை  மிகவும் சிறப்பாக நடை பெற்றது.அவ்விழாவின் சில புகைப்படக் காட்சிகள் 









.

இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் தவறாமல் பங்கேற்பீர்!

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
நமது இரண்டு சங்கங்களின் இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் 08.06.2015அன்று மாலை 5.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர்கள் தோழர் A.அண்ணாமலை ,தோழர் S.V.பாண்டியன் ஆகியோர் கூட்டு தலைமையில் நடைபெற உள்ளது.அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
                                       தோழமையுள்ள 
                                         K.T.சம்பந்தம் 

சனி, 6 ஜூன், 2015

அகில இந்திய FORUMன் முடிவை தமிழகத்தில் வெற்றிகரமாக்குவோம்!!!

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையான இலவச அழைப்பு வசதியை மக்களிடம் கொண்டு சேர்த்து தரைவழி இணைப்புகளை அதிகரிக்க ஒரு மாத தொடர் இயக்கம் நடத்திட நமது அகிலஇந்திய FORUM அறைகூவல் விடுத்துள்ளது.இது குறித்து நமது தமிழ் மாநில  FORUM விடுத்துள்ள சுற்றறிக்கையை காண இங்கே கிளிக் செய்யவும்.<<<Read>>>

திங்கள், 1 ஜூன், 2015

தமிழக JTO LICE தேர்வில் தலையிட்டு வழிகாட்டுதலை பெற்றுத் தந்தது நமது மத்திய சங்கம்.

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
தமிழக JTO LICE தேர்வில் தலையிட்டு வழிகாட்டுதலை பெற்றுத் தந்தது நமது மத்திய சங்கம். து குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>