செவ்வாய், 21 மே, 2019
புதன், 15 மே, 2019
நாடுமுழுவதும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 30% ஊதியத்திற்கான நிதி ஒதுக்கீடு- BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி...
அன்பார்ந்த தோழர்களே!
தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்காத பிரச்சனைக்காக தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கமும், TNTCWUவும் தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு இரண்டு நாட்கள் உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தியது. நாடு முழுவதும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த நான்கு/ஐந்து மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் உள்ள பிரச்சனையை BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் 13.05.2019 அன்று DIRECTOR(FINANCE) அவர்களிடம் விவாதித்தார். அதன் அடிப்படையில் இன்று (14.05.2019) நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் 30% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய BSNL ஊழியர் சங்கத்திற்கும் அதன் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களுக்கும் நமது தமிழ் மாநில சங்கங்களுக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் கடலூர் மாவட்ட சங்கங்களின் சார்பில் உரித்தாக்கிக் கொள்கிறோம்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)