BSNL –ஊழியர் சங்கம்
தமிழ்நாடு
தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
கடலூர் மாவட்டம்
28.06.2018
நாடு
தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்
|
அன்பார்ந்த
தோழர்களே !!
BSNL நிறுவனத்தில்
1984-ஆம் ஆண்டு முதல்
ஆளெடுப்பு தடை சட்டம் அமுல்படுத்த பட்டது அதன் விளைவாக Group “ D” பணிகளில்
நேரடி ஊழியர்கள் நியமனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் ஒப்பந்த
தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு நிரந்திர
தன்மை கொண்ட Housekeeping , Cable mtce ,
security போன்ற பணிகளை ஒப்பந்த முறையில் செய்து
வருகின்றனர்.
இவர்களுக்கு நிலையான ஊதியம், சட்டபடியான சலுகைகள்
எதுவும் வழங்கப்படமால் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த இவர்களை பாதுகாக்க வேண்டும், அவர்களுக்கு சட்ட
பாதுகாப்பை உருவாக்கி தர வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு BSNL ஊழியர் சங்கம் நாடு
முழுவதும் ஒப்பந்த தொழிலாளர்களை அணிதிரட்டி அவர்களுக்கென்று ஓரு சங்கத்தை
அமைத்து பல ஆண்டுகாலமாக ஒப்பந்த
தொழிலாளர்களின் கோரிக்கை முன்வைத்து அவர்களின் போராட்டத்தை தலைமையேற்று கடந்த 15
ஆண்டுகளாகத் நடத்தியதன் விளைவாக ஒப்பந்த
தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 10000 EPF , ESI போன்ற சட்ட சலுகைகள்
அமுல்படுத்த பட்டன அதுமட்டுமின்றி திறனுக்கேற்ற ஊதியம் (skilled wages ) வழங்கப்பட
வேண்டுமென வழக்கு தொடர்ந்து போராடி உத்திரவை
பெற்றுள்ள இந்த சூழலில் BSNL நிர்வாகம்
நஷ்டத்தை காரணம் காட்டி சிக்கனம் என்கிற பெயரில் 40% ஒப்பந்த தொழிலாளர்களை
குறைக்க வேண்டுமென முடிவெடுத்து உத்திரவு பிறப்பித்தத்தோடு அதிதீவிரமாக
நடைமுறைபடுத்தி வருகிறது. இந்த உத்திரவை நமது மத்திய சங்கம் கடுமையாக எதிர்த்து வருவதோடு,
போராட்டங்களை நடத்த அறைகூவல்
விடுத்துள்ளது எனவே கடலூர் மாவட்டத்தில் அனத்துகிளைகளிலும் 28.06.2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை மிக சக்திகரமாக நடத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்
M.பாரதிதாசன் K.T.சம்பந்தம்
மாவட்ட செயலர் மாவட்ட
செயலர்
TNTCWU BSNLEU
M.பாரதிதாசன் K.T.சம்பந்தம்