வெள்ளி, 14 டிசம்பர், 2018

தொடர் போரட்டத்திற்கு வெற்றி


BSNLEU- TNTCWU

அன்பார்ந்த தோழர்களே!

நமது மாநில, மத்திய சங்கங்களின் தொடர் முற்சியின்  பலனாக மாநில நிர்வாகத்திற்கு ரூபாய் ஆறு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று ஊதியம் பட்டுவாடா செய்யப்படும் என்று தமிழ் மாநில நிர்வாகம் உறுதி அளித்ததின் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் நாம் நடத்த இருந்த தர்ணா போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. பிரச்சினை தீர முயற்சி எடுத்த நமது மாநில, மத்தியசங்கங்களுக்கு நன்றியினையும், இரண்டு கட்ட போரரட்டங்கள் நடத்திய நமது தோழர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
BSNLEU -TNTCWU
கடலூர் மாவட்ட சங்கம்

திங்கள், 3 டிசம்பர், 2018

காலவரையற்ற வேலை நிறுத்தம் 10-12-2018 க்கு ஒத்தி வைப்பு!!!

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!

AUAB தலைவர்களுக்கும் தொலை தொடர்பு செயலாளருக்கும் இடையே 02-12-2018 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது . BSNL க்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு , ஓய்வூதிய மாற்றம் , BSNL வழங்கும் ஓய்வூதிய பங்களிப்பு , ஆகிய பிரச்சனைகளில் முன்னேற்றம் தெரிகின்றது.எனினும், மூன்றாவது ஊதியமாற்றம் பிரச்சனையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.இதன் நிலை தொடர்பான தொலை தொடர்பு செயலாளரின் பதிலை AUAB தலைவர்கள் ஏற்கவில்லை
இந்த சூழ்நிலையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சருடன் விவாதிப்பதிற்கான வாய்ப்பை உறுதி செய்வதற்காக, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பது என AUAB முடிவு செய்துள்ளது. மத்திய தொலைதொடர்பு அமைச்சரோடு நடைபெறும் பேச்சு வார்த்தையில் பலன் கிடைக்கவில்லை என்று சொன்னால் 10-12-2018 அன்று 00 .00 மணி முதல் நமது காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும். 
பி.அபிமன்யூ, பொதுச்செயலர்

வெள்ளி, 26 அக்டோபர், 2018

ஒப்பந்த ஊழியர்களுக்கு முழுமையான போனஸ் பட்டுவாடா நடைபெற்றது

     BSNLEU-TNTCWU

 ஒப்பந்தஊழியர்களுக்கு முழுமையான        போனஸ் பட்டுவாடா நடைபெற்றது
அன்பார்ந்த தோழர்களே !
நமது மாவட்டத்தில் பணிபுரியும் ஓப்பந்த ஊழியர்களுக்கு  2017-2018 ஆம் ஆண்டிற்கான  போனஸ் ரூபாய் 7000/- பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தொடர் முயற்சி எடுத்த நமது கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், நம்மோடுஇந்த வெற்றிக்கு உறுதுணையாகஇருந்த NFTE,TMTCLமாவட்ட சங்கங்களுக்கும்  நமது நெஞ்சார்ந்த நன்றி...

          போனஸ் நன்கொடையாக முழு நேர பணியாற்றுபவர்களிடம்  ரூபாய் 300/-ம், பகுதி நேர பணியாளர்களிடம் ரூபாய்150 ம் தோழர்களிடம் வசூலித்து  ருபாய்100, ருபாய்50ஐ கிளைகள் எடுத்துக்கொண்டு 200,100ஐ மாவட்ட சங்கத்திடம் வழங்கிடுமாறு தோழமையோடு தொடர் முயற்சி எடுத்த நமது கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், கேட்டுக் கொள்கின்றோம்.

 அது போல் போனஸ் வழங்காமல் விடுபட்டிருந்தாலோ குறைவாக வழங்கப்பட்டிருந்தாலோ மாவட்ட தலைமைக்கு உடனடியாக தகவல் கொடுக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்
                                                              தோழமையுடன்
           K.T.சம்பந்தம்,  K. விஜயானந்த்
                       மாவட்ட செயலர்கள்                                            

வெள்ளி, 5 அக்டோபர், 2018

28.01.2018ல் நடைபெற்ற JE LICE தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்களில் தளர்வு வழங்கப்பட்டது. நாடு முழுவதும் 250 தோழர்கள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளனர்.


தோழர்களே!!!,  தோழியர்களே !!!

      28.01.2018ல் நடைபெற்ற JE LICE தேர்வு முடிவுகளில் மிக மோசமான முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, மதிப்பெண்களில் தளர்வை தரவேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கடுமையாக வாதாடி வந்தது. 10.07.2018 அன்று நடைபெற்ற ஒரு முக்கியமான கூட்டத்தில் BSNL CMD திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா அவர்கள் நமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக் கொண்டு அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து DIRECTOR HR அவர்களிடமும் இதே பிரச்சனை விவாதிக்கப்பட்டது. 

     BSNL ஊழியர் சங்கத்தின் கடுமையான தொடர் முயற்சிகளின் காரணமாக சில நாட்களுக்கு முன் கார்ப்பரேட் அலுவலகம் இதற்கான உத்தரவினை பிறப்பித்தது. அந்த உத்தரவின் காரணமாக 250 தோழர்கள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. BSNL உருவான இந்த 18 ஆண்டு காலத்தில் இலாகா தேர்வில் மதிப்பெண்கள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 22 தோழர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.


கடலூர்  மாவட்டத்தில் தோழர்கள்,

1. K.விஜய் ஆனந்த்
2. S.விஜய் ஆனந்த்
3. S.பிரான்சிஸ்கா ரோஜா

ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

         தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.     தொடர் முயற்சி செய்த மத்திய மற்றும் மாநில சங்கங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

உண்ணாநோன்பு போராட்டம் அனைவரும் பங்கேற்பீர்!!!!

BSNL ஊழியர் சங்கம் 
தமிழ்நாடு தொலைதொடர்பு  ஒப்பந்ததொழிலார்  சங்கம் .கடலூர் மாவட்டம் .

         உண்ணா  நோன்பு போராட்டம் 


அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே! 
          வணக்கம். கடலூர்,பாண்டிச்சேரி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஜூலை மாத ஊதியம் வழங்கப்படாத தை  கண்டித்தும்,உடனடியாக ஊதியம் பட்டுவாடா செய்திட மாநில நிர்வாகத்தை வலியுறுத்தியும் .நமது இரண்டு மாநிலச் சங்கங்களின் அறைகூவலை ஏற்று
  கடலூர் பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக 29.08.2018 புதன் கிழமை காலை 10.00 மணி முதல் ஒரு நாள் உண்ணாநோன்பு போராட்டம் நடைபெறும்.BSNLEU-TNTCWU சங்கங்களின் அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும்,கிளைச் செயலர்களும்,முன்னணித் தோழர்களும் தவறாமல் பங்கேற்று சிறப்பிககுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கோரிக்கைகள் 
மாநில  நிர்வாகமே ! 
* ஒப்பந்த  தொழிலாளர்களுக்கு  ஜூலை  2018 மாத  ஊதியத்தை உடனடியாக  வழங்கிடு .
* 2009-2010 நிலுவை தொகையை  மேலும்  தாமதிக்காமல் வழங்கிடு.
* திறனுக்கு ஏற்ற ஊதியத்தை மாநிலம்  முழுவதும்  வழங்கிடு .
* தமிழகம்  முழுவதும்   ஒரே  சீரான டெண்டர்  முறையை அமுல்படுத்து .
  
அனைவரும் பங்கேற்பீர் !வெற்றி பெறச் செய்வீர் !!
                                                          தோழமையுடன் 
           K,T.சம்பந்தம்                         M.பாரதிதாசன்