செவ்வாய், 20 ஜூன், 2017
திங்கள், 19 ஜூன், 2017
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி - நடைபயணம்
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
சாதி ஆணவ படுகொலையை தடுத்து நிறுத்திட, தனி சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி,சேலம் முதல் சென்னை வரை ஜூன் 9 முதல் தொடர்ந்து நடைபயணத்தை தமிழக தீண்டாமை ஒழிப்பு, முன்னனி சார்பில் அதன் பொதுசெயலர் தோழர்.கே.சாமுவேல் தலைமையில் நடத்துகிறது. நடைபயணத்தின் 9வது நாளான இன்று கூட்டேறிபட்டு பஜாரில் கடலூர் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலர்.தோழர்.K.T.சம்பந்தம்,முன்னாள் மாநில உதவி தலைவர் தோழர்.A.அண்ணாமலை,தோழர்.N.மேகநாதன்மாவட்ட தலைவர் AIBDPA ஆகியோர் தலைமையில் சிறப்பானவரவேற்பளிக்கப்பட்டது. நடைபயணக்குழு தலைவர் தோழர் சாமுவேல்ராஜ் அவர்களுக்கு நமது மாவட்ட உதவித்தலைவர் தோழர் சுந்தரம் அவர்கள் கதராடை அணிவித்தார். அரகண்டநல்லூர்கிளை செயலர் தோழர் பொன்னம்பலம் ,செஞ்சி கிளை செயலர் தோழர் வேல்முருகன்,திண்டிவனம் கிளை செயலர் தோழர் புண்ணியகோடி ஆகியோர் தங்கள் கிளை தோழர்களுடன் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
தோழர்கள்K.T.சம்பந்தம்,A.அண்ணாமலை மற்றும் N.மேகநாதன் ஆகியோர் திண்டிவனம் வரை நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.திண்டிவனம் நம் தோழர்கள் D.மனோகரன்,K.சாரங்கபாணி, I.துரைசாமி, S.ஜோசப் மற்றும் நமது மாவட்ட உதவிச்செயலர் தோழர்.S.பழனி ஆகியோர் நடைபயணத்தில் சென்றவர்களின் களைப்பை போக்கிட அருமையான மோர் கொடுத்து உபசரித்தனர்.பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
தோழர்கள்K.T.சம்பந்தம்,A.அண்ணாமலை மற்றும் N.மேகநாதன் ஆகியோர் திண்டிவனம் வரை நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.திண்டிவனம் நம் தோழர்கள் D.மனோகரன்,K.சாரங்கபாணி, I.துரைசாமி, S.ஜோசப் மற்றும் நமது மாவட்ட உதவிச்செயலர் தோழர்.S.பழனி ஆகியோர் நடைபயணத்தில் சென்றவர்களின் களைப்பை போக்கிட அருமையான மோர் கொடுத்து உபசரித்தனர்.பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
வெள்ளி, 16 ஜூன், 2017
வெள்ளி, 9 ஜூன், 2017
இணைந்த ஆர்ப்பாட்டம்
NFTE – BSNLEU
தண்ணீர்.....
தண்ணீர்..... தண்ணீர்....
தோழர்களே!
கடலூர்
வண்ணாரப்பாளையம் ஊழியர் குடியிருப்பில் கடந்த ஐந்து நாட்களாகச்
சொட்டுத் தண்ணீர் இல்லை. காரணம்
தண்ணீர் மோட்டார் பழுது. இதனை
உடனே நிர்வாகத்தின் கவனத்திற்கும்
கொண்டு சென்றோம். ஆனாலும் தீர்க்கப்பட
வில்லை.
சில ஊழியர்கள்
தம் குடும்பத்தை வெளியூருக்கு
அனுப்பிவிட்டனர். ஹோட்டலில்
சாப்பிடுகின்றனர்.
நிர்வாகம் லாரியில் தண்ணீர் ஏற்பாடு செய்கிறது. நன்றி. ஆனால் மூன்றாவது மாடிக்கு எப்படி எடுத்துச் செல்வது?. அப்படியும் தண்ணீர் தூக்கிச் சென்ற ஒரு ஊழியரின் துணைவியார் மாடிப்படியில் தடுக்கி விழுந்து தலையில் அடிபட்டுவிட்டது.
இரண்டு ஊழியர் சங்கங்கள் இணைந்து முதற்கட்டமாக
இன்று 09-06-2017 மதிய உணவு இடைவேளையின் போது
இணைந்த ஆர்ப்பாட்டம்
போராடுவோம்!
வியாழன், 1 ஜூன், 2017
இரங்கல் செய்தி
நமது தபால் தந்தி துறை ஆரம்பகால தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரும், FNTO இயக்கத்தின் மகத்தான தலைவருமான தோழர். கனகசொரூபன் அவர்கள் இன்று 01.06.2017 வியாழன் அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரது இறுதி ஊர்வலம் 02.06.2016 வெள்ளி கிழமை காலை 09.00 மணிக்கு கடலூரில் காந்தி நகர், செந்தில் இல்லத்திலிருந்து புறப்பட்டு பெண்ணை நதிக்கரையில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், BSNL ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிப்பு : கடலூர் தோழர்களின் கவனத்திற்கு BSNL அணைத்து சங்க ஊழியர்களின் சார்பில் 01.06.2017 மாலை 04.00 மணிக்கு கடலூர் CSC வளாகத்திலிருந்து மௌன ஊர்வலம் நடைபெறுகிறது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)