வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

08.02.2016 திங்கள் அன்று மாலை கடலூரில் கிளைச்செயலர்கள் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
7-உறுப்பினர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவீர்.நமது தேர்தல் பணிகளை துவக்கிட வேண்டும்.மேலும் எதிர்வரும் 12.02.2016 அன்று வேலூரில் தமிழ்மாநில செயற்குழு மற்றும் 13.02.2016 அன்று விரிவடைந்த மாநில செயற்குழுவும் நடைபெறவுள்ளது.அதற்கான தயாரிப்பு பணிகளை திட்டமிடவும் 08.02.2016 அன்று மாலை 5.30 மணிக்கு கடலூரில் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்டத்த்தலைவர் தோழர் A.அண்ணாமலை தலைமையில் கிளைச்செயலர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
                                                          தோழமையுடன் 
                                                              K.T.சம்பந்தம் 
குறிப்பு :மாநிலச்சங்கம் கேட்டுள்ள விபரங்களை கட்டாயம் கொண்டுவர வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை: