அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
     BSNL நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்வது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நாகர்கோவிலில் நடைபெற்ற BSNLCCWF அகில இந்திய மாநாட்டில் வடித்தெடுத்தோம்.  அக்கோரிக்கைகளை நிறைவேற்றிட முதற்கட்டமாக 30.11.2015 அன்று  அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பட்டமும் மாவட்ட பொது மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்திடவும் நமது மத்திய, மாநில  சங்கங்கள் அறைகூவல்  விடுத்துள்ளன. அதன்படி நமது கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் இணைந்த கண்டன ஆர்பாட்டங்களை நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
                                                           தோழமையுள்ள
M.பாரதிதாசன்                                                                                            K.T. சம்பந்தம் 
மாவட்ட செயலாளர்                                                               மாவட்ட செயலாளர்
TNTCWU                                                                                                                       BSNLEU
இது குறித்து மாநில சங்கத்தின் சுற்றறிக்கையினைக்  காண இங்கே கிளிக் செய்யவும்  >>>Click Here<<<
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக