வியாழன், 7 பிப்ரவரி, 2019
செவ்வாய், 5 பிப்ரவரி, 2019
வியாழன், 31 ஜனவரி, 2019
தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளருடன் AUAB சந்திப்பு
தொலை
தொடர்பு துறையின் கூடுதல் செயலாளருடன் AUAB
சந்திப்பு
AUAB தலைவர்கள் மற்றும் தொலை தொடர்பு
துறையின் கூடுதல் செயலாளர் திரு அன்ஷு பிரகாஷ் ஆகியோர் இடையேயான சந்திப்பு இன்று (30.01.2019) நடைபெற்றது. COMMITTEE OF PERIODIC INTERACTIONல்
உள்ள AUAB பிரதிநிதிகளான
தோழர் P.அபிமன்யு
GS BSNLEU & CONVENOR AUAB, தோழர்
சந்தேஸ்வர் சிங் GS NFTE & CHAIRMAN AUAB, தோழர்
K.செபாஸ்டின்
GS SNEA மற்றும்
தோழர் பிரகலாத்ராய் GS AIBSNLEA ஆகியோர்
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். தொலை தொடர்பு துறையின் சார்பில் திரு R.K.கண்டேல்வால் Joint Secretary(Admn.), திரு
S.K.ஜெய்ன்
DDG (Estt.), திரு
ராஜிவ் குமார் DDG (Budget) ஆகியோரும்
பங்கு பெற்றனர். திருமிகு சுஜாதா T.ரே, Director (HR) மற்றும் திரு A.M.குப்தா, GM(SR), ஆகியோர் BSNL சார்பாக பங்கு பெற்றனர். 3வது ஊதிய மாற்றம், 4G
அலைக்கற்றை ஒதுக்கீடு, வாங்கும்
சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பு மற்றும் ஓய்வூதிய மாற்றம் ஆகியவை
தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. 3வது
ஊதிய மாற்ற பிரச்சனையில், 5% ஊதிய
நிர்ணய பலனுடன் ஊதியமாற்றத்தை தொலை தொடர்பு துறை முன்மொழிந்தது. AUAB இதனை ஏற்றுக் கொண்டால், 05.02.2019ல் நடைபெற உள்ள டிஜிட்டல் கமிஷன்
(பழைய டெலிகாம் கமிஷன்) கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு, அதன் பின் மத்திய அமைச்சரவையின்
ஒப்புதலுக்கு வைக்கப்படும் என தொலை தொடர்பு துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. 5% ஊதிய நிர்ணய பலன் என்பது மிக மிக
குறைவு என்பதால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என AUAB
தெரிவித்து விட்டது. அதன் பின்னர், AUAB மீண்டும் BSNL CMDஉடன் விவாதித்து விட்டு ஓரிரு
தினங்களில் மீண்டும் வந்து தன்னை சந்திக்கும்படி தொலை தொடர்பு துறையின் கூடுதல்
செயலாளர் ஆலோசனை வழங்கினார். 03.12.2018 அன்று
நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 15% ஊதிய
நிர்ணய பலன் தருவதற்கு சாத்தியமில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்ததை நாம் நினைவு
கூற வேண்டும். மேலும் தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளருடன் நடைபெற்ற கடந்த
கூட்டத்தில் 0% ஊதிய
நிர்ணய பலனை தொலை தொடர்பு துறையின் சார்பாக முன்மொழியப்பட்டது என்பதையும் நாம்
நினைவில் கொள்ள வேண்டும்.
------நமது மத்திய சங்க செய்தி (மாநிலச் சங்க வலைத்தளத்திலிருந்து.)
சனி, 19 ஜனவரி, 2019
ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் பெற கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம்.கடலூர் மாவட்டத்தில் வெற்றிபெறச் செய்வீர்!
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
தமிழகம் முழுவதும் ஜனவரி 2019 மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து எதிர்வரும் 21.01.2019 திங்களன்று அனைத்து கிளைகளிலும் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
செவ்வாய், 15 ஜனவரி, 2019
திங்கள், 7 ஜனவரி, 2019
புதன், 2 ஜனவரி, 2019
செவ்வாய், 1 ஜனவரி, 2019
வெள்ளி, 14 டிசம்பர், 2018
தொடர் போரட்டத்திற்கு வெற்றி
BSNLEU- TNTCWU
அன்பார்ந்த தோழர்களே!
நமது மாநில,
மத்திய சங்கங்களின் தொடர் முற்சியின் பலனாக மாநில
நிர்வாகத்திற்கு ரூபாய் ஆறு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று
ஊதியம் பட்டுவாடா செய்யப்படும் என்று தமிழ் மாநில நிர்வாகம் உறுதி அளித்ததின்
அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் நாம் நடத்த இருந்த தர்ணா போராட்டம்
ஒத்திவைக்கப்படுகிறது. பிரச்சினை தீர முயற்சி எடுத்த நமது மாநில, மத்தியசங்கங்களுக்கு
நன்றியினையும், இரண்டு கட்ட போரரட்டங்கள் நடத்திய நமது தோழர்களுக்கு வாழ்த்துக்களையும்
தெரிவித்துக்கொள்கிறோம்.
BSNLEU -TNTCWU
கடலூர் மாவட்ட சங்கம்
வியாழன், 6 டிசம்பர், 2018
திங்கள், 3 டிசம்பர், 2018
காலவரையற்ற வேலை நிறுத்தம் 10-12-2018 க்கு ஒத்தி வைப்பு!!!
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
AUAB தலைவர்களுக்கும் தொலை தொடர்பு செயலாளருக்கும் இடையே 02-12-2018 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது . BSNL க்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு , ஓய்வூதிய மாற்றம் , BSNL வழங்கும் ஓய்வூதிய பங்களிப்பு , ஆகிய பிரச்சனைகளில் முன்னேற்றம் தெரிகின்றது.எனினும், மூன்றாவது ஊதியமாற்றம் பிரச்சனையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.இதன் நிலை தொடர்பான தொலை தொடர்பு செயலாளரின் பதிலை AUAB தலைவர்கள் ஏற்கவில்லை .
இந்த சூழ்நிலையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சருடன் விவாதிப்பதிற்கான வாய்ப்பை உறுதி செய்வதற்காக, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பது என AUAB முடிவு செய்துள்ளது. மத்திய தொலைதொடர்பு அமைச்சரோடு நடைபெறும் பேச்சு வார்த்தையில் பலன் கிடைக்கவில்லை என்று சொன்னால் 10-12-2018 அன்று 00 .00 மணி முதல் நமது காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும்.
பி.அபிமன்யூ, பொதுச்செயலர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















