செவ்வாய், 10 டிசம்பர், 2013

புதிய PLI ஃபார்முலா

அன்பார்ந்த தோழர்களே!

புதிய PLIஃபார்முலா முடிவு செய்வதற்கான கூட்டு குழுவின் முதல் கூட்டம் 09-12-2013-ல் நடைபெற்றது. ஊழியர் தரப்பு சார்பாக தோழர் அபிமன்யு மற்றும் தோழர் இஸ்லாம் அகமது, ஆகியோர் கலந்து கொண்டனர் .நிர்வாக தரப்பில் பொது மேலாளர் (Estt.), பொது மேலாளர் (எஸ்), பொது மேலாளர் (Restg.) மற்றும் பொது மேலாளர் (EF) ஆகியோர் கலந்து கொண்டனர் .ஊழியர் தரப்பு சார்பாக PLI என்பது நிறுவனத்தின் இலாபத்தோடு இணைத்து கணக்கில் எடுத்து கொள்ள கூடாது என்று கடுமையாக கருத்தை பதிவு செய்துள்ளனர் . நிர்வாக தரப்பு PLI என்பது செயல்திறன் அடிப்படையில் இருக்க வேண்டும் வாதிட்டது .மேலும் அவர்கள் "GPMS" (குழு செயல்திறன் மேலாண்மை அமைப்பு) அடிப்படையில் PLI நிர்ணயி க்கப்பட வேண்டும் என்று கூறினர் . அதற்கு ஊழியர் தரப்பு GPMS இல் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காட்டினர். உதாரணமாக, அதிக இலாபம் ஈட்டும் கேரளா வட்டம் , GPMS அடிப்படையில் சட்டீஸ்கர் வட்டதை விட குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளது . இறுதியாக, ஊழியர் தரப்பு முழுமையாக GPMS பற்றி படிக்க வேண்டும் என்று கூறியது.இது சம்பந்தமாக, நிர்வாகம் ஒரு விரிவான குறிப்பை கொடுக்க ஒப்பு கொண்டது . குழுவின் அடுத்த கூட்டம் ஜனவரி, 2014 இல் நடைபெறும் .

கருத்துகள் இல்லை: