செவ்வாய், 28 ஜூலை, 2015

நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி !!!

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே !!

கேடர்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்ற நீண்ட நாளைய கோரிக்கைக்கு தற்போது முடிவு ஏற்பட்டுள்ளது.

 இன்று (28.07.2015) நடைபெற்ற DESIGNATION  COMMITTEE கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்படுள்ளன. 


1)  Regular Mazdoor                 -  Telecom Assistant

2)  Telecom Mechanic              -  Telecom Technician

3)  TTAs                                      -  Junior Engineer

4)  Sr.TOAs in NE11 &
              NE12 pay scales          -  Office Superintendent 

5) Other Sr.TOAs                      -  Office Associate

என்ற புதிய பெயர்கள் வழங்கப்படும். 

மத்திய மற்றும் மாநில சங்கங்களுக்கும், போராடிய அணைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம். 

LEO அலுவலகம் நோக்கி பேரணி ஒத்திவைப்பு


தோழர்களே ! தோழியர்களே!!

    நாளை (29.07.2015) LEO அலுவலகம் நோக்கி நாம் நடத்த இருந்த பேரணி, முன்னால் குடியரசு தலைவர், டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்கள் மறைவை ஒட்டி,  7 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதால் 25.08.2015 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தோழமையுடன்
K.T.சம்பந்தம்  

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் மறைவு --அஞ்சலி--





         இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர்,  மிகப்பெரிய பொருளாளர்இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன்இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தைசிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த .பி.ஜே அப்துல் கலாம்.

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும்,ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்:
அப்துல் கலாம்இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனதுபள்ளிப்படிப்பை தொடங்கினார்ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
கல்லூரி வாழ்க்கை:
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகுதிருச்சிராப்பள்ளியிலுள்ளசெயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டுஇயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்..டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்
விஞ்ஞானியாக .பி.ஜே அப்துல் கலாம்:
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கியஅப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினிI என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதானபத்ம பூஷன்விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரைஇந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில்முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய .பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர்அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
குடியரசுத் தலைவராக .பி.ஜே


அப்துல் கலாம்:

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
விருதுகள்:

1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு
இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான்
விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார்
விருது
.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய
நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின்எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர். உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பாக நமது இதயபூர்வ அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.