சனி, 24 டிசம்பர், 2016

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !!!


அவசர மாவட்ட செயற்குழு

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
நமது சங்கத்தின் அவசர மாவட்ட செயற்குழுக்கூட்டம் செவ்வாய் காலை 10.00 மணிக்கு தோழர் A . அண்ணாமலை அவர்கள் தலைமையில் கடலூர் மெயின் தொலைபேசி நிலைய மனமகிழ்மன்றத்தில் நடைபெறஉள்ளது. அனைத்து கிளை செயலர்களும், மாவட்ட சங்க நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்றிட தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வெள்ளி, 16 டிசம்பர், 2016

டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தில் பங்கேற்று மகத்தான வெற்றிபெறச்செய்த அனைத்து தோழர், தோழியர்களுக்கும் நன்றி!நன்றி !! நன்றி !!!

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !!
BSNL நிறுவனத்தினை சீரழிக்க தனி செல் டவர் கார்ப்பரேஷன் அமைக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து டிசம்பர் 15 அன்று  நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் கலந்து கொண்டு மகத்தான வெற்றிபெறச்செய்த  அதிகாரிகள் மற்றும் தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் புரட்சிகர வாழ்த்துகளையும்,நன்றியினையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்


திங்கள், 5 டிசம்பர், 2016

கிளைச்செயர்கள் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது கிளைச்செயர்கள் கூட்டம் 05.12.2016 மாலை 5.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர் தோழர் A.அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரிய நேரத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
                                   தோழமையுள்ள,
                                       K.T.சம்பந்தம்

ஞாயிறு, 27 நவம்பர், 2016

கண்ணீர் அஞ்சலி


தோழர்களே!
கடலூர் மாவட்டத்தில் நம்முடைய இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும்,T3 சங்கத்தின் மாவட்ட செயலர்,BSNLEU சங்கத்தில் மாவட்டதலைவர் மற்றும் இப்போதைய மாவட்ட  பொருளாளர் என தொடர்ந்து K.G போஸ் அணியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட ஒப்பற்ற தோழர்  V.குமார் இன்று 27.11.2016 நண்பகல் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரதுகுடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். நமது செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம்

அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை( 28.11.2016)  மாலை 3.00 மணிக்கு விழுப்புரம்,மாம்பழப்பட்டு சாலை கமலக்கண்ணப்ப நகர் அவரது இல்லத்திலிருந்து நடைபெறும் 





சனி, 19 நவம்பர், 2016

வெற்றி ! BSNLEUவெற்றி!! TNTCWWU வெற்றி!!! பெருந்திரள் முறையீட்டால் பணிந்தது மாநில நிர்வாகம்..பணிநீக்கம் செய்யப்பட்ட 11 ஒப்பந்த ஊழியர்களுக்கும் மீண்டும் பணிவழங்கப்பட்டது.

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே  !!
ஒப்பந்ததாரர் மாறிவிட்டார் என்ற காரணத்தை காட்டி தமிழக தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 15 ஆண்டுகாலத்திற்கு மேல் பணியாற்றி வரும் 11 ஒப்பந்த தொழிலாளர்கள் 01.10.2016 முதல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடுமைக்கு எதிராக CGM அலுவலக மாவட்ட சங்கம் இரண்டு கட்ட போராட்டங்களை நடத்தியது. அதன் பின்னர் BSNLEU மற்றும் TNTCWU ஆகிய இரண்டு சங்கங்களின் சார்பாக தமிழகத்தில் அனைத்து கிளைகளிலும், 07.10.2016 அன்று சக்தி மிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 14.10.2016 அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் மாலை நேர தர்ணா போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. GM(HR) உள்ளிட்ட அதிகாரிகள் 15.10.2016 அன்று நடைபெற உள்ள முத்தரப்பு கூட்டத்தில் சுமுக தீர்வு ஏற்பட்டுவிடும் என்று கூறி நமது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தனர். நல்லெண்ணத்தின்.அடிப்படையில்நமது மாநிலச்சங்கம்  14.10.2016 தர்ணா போராட்டத்தை ஒத்தி வைத்தது .

ஆனால் 15.10.2016 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒப்பந்ததாரர் வரவில்லை. நிர்வாகம் ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் மூன்று ஊழியர்களை மட்டும் எடுக்க ஒத்துக் கொண்டதாகவும், மற்றவர்களை பணிக்கு எடுக்க மறுத்து விட்டார் என்றும் நமது மாநிலச்சங்கத்திடம் தெரிவித்தது..மேலும் தங்களால் ஏதும் செய்ய இயலாது என்றும் தெரிவித்தது தமிழ்மாநில நிர்வாகம். நமது மாநிலச்சங்கம் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணிக்கு எடுப்பதை தவிர வேறு எந்த உடன்பாட்டிற்கும் வர இயலாது என்பதை மிகத் தெளிவாக தெரிவித்தது. எனவே நமது மாநிலச்சங்கம் ஏற்கனவே திட்டமிட்டபடி 25.10.2016 அன்று அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் மாலைநேர தர்ணாபோராட்டமும்,18.11.16 அன்று சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்த்திற்கும்  அறைகூவல் விடுத்தது.

18.11.16 அன்று பணி நீக்கம் செய்யப்பட்ட 11 தோழர்களை மீண்டும்  பணிக்கு எடுக்க  வலியுறுத்தி தமிழகம் முழுவதிலிருந்தும் 2௦௦௦ -ற்கும் மேலான தோழர்கள் ஆர்ப்பரித்து பங்கேற்றனர்.நமது மாவட்டத்திலிருந்து 176 தோழர்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர்.கார்ப்பரேட் அலுவலக உத்திரவைக் காட்டி அலட்சியம் செய்த மாநில நிர்வாகம்,பேசமறுத்த நிர்வாகம் நமது  பெருந்திரள் பங்கேற்பால் பணிந்தது சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில், கடந்த 15ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தேசமணி, பாரதி, மங்கா, பூங்கொடி, கலா, ஜெயா, வரலட்சுமி, அமுதா,ஜெனிபர், தாரா, ஆசிர்வாதம் ஆகிய பணிநீக்கம் செய்யப்பட்ட 11 ஒப்பந்த ஊழியர்களுக்கும் மீண்டும் பணிவழந்கப்பட்டது.
  ஒப்பந்ததாரர் மாறினாலும் ஒப்பந்த ஊழியர் மாறக்கூடாது  என்ற நமது கொள்கைக்கு கிடைத்திட்ட மாபெரும் வெற்றி இது.இதில் பங்கேற்ற அனைத்து தோழர்களையும் மாவட்ட சங்கத்தின் சார்பில் மனதார பாராட்டுகிறோம். அனைத்து கிளைகளிலும் வாயிற்கூட்டங்கள் நடத்தி இவ்வெற்றியை கொண்டாடிட வேண்டுகிறோம்.
                                                                                                                                         தோழமையுடன் 
                                                                                                                                            K.T.சம்பந்தம் 
                                                                                                                                 மாவட்டசெயாலாளர்





                                                                                                                                       

சனி, 12 நவம்பர், 2016

இரங்கல் செய்தி

நம்முடன் கடலூர் வாடிக்கையாளர் சேவைமையத்தில் பணிபுரிந்த தோழர் A.R.பன்னீர்செல்வம் டெலிகாம் டெக்னிசியன், நேற்று இரவு (11.11.2016) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில்  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதி ஊர்வலம் , இன்று (12.11.2016) மாலை 4.00 மணியளவில் கடலூர் O.T பென்சனர் வீதியில் நடைபெறும்.

புதன், 9 நவம்பர், 2016

இணைந்த கிளைச்செயலர்கள் கூட்டம்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது இரண்டு சங்கங்களின் (BSNLEU & TNTCWU) இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் 11.11.2016 மாலை 5.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர்கள் தோழர் A.அண்ணாமலை, தோழர் S.V.பாண்டியன் ஆகியோர் கூட்டு தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரிய நேரத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
                                   தோழமையுள்ள,
                                       K.T.சம்பந்தம்

வெள்ளி, 21 அக்டோபர், 2016

போனஸ் கேட்டு தொடர் போராட்டம்

BSNL ஊழியர் சங்கம்
தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
கடலூர் மாவட்டம்
தொடர் போராட்டம்
 
அன்பார்ந்த தோழர்களே!!
வணக்கம், நமது கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும்  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 2015-16 ஆண்டுக்கான சட்டரீதியான போனஸ் தொகை ரூபாய் 7000 பூஜா பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டுமென BSNL கடலூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் மூன்று ஒப்பந்ததாரர்களுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பே நமது இரண்டு சங்கங்களின் சார்பாக (BSNLEU & TNTCWU) கடிதம் கொடுத்திருந்தோம்.
      நமது கடிதத்தை பெற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் மூன்று ஒப்பந்ததாரர்களுக்கும் ஒப்பந்த சரத்தில் உள்ளபடி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டுமென கடிதம் அனுப்பியது. நமது கடிதத்தையும் நிர்வாகம் கொடுத்த கடிதத்தையும் பெற்று கொண்ட ஒப்பந்தக்காரர்கள் மௌனம்  சாதித்த நிலையில் நமது சங்கம் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை சந்தித்து முதன்மை முதலாளி என்ற முறையில் BSNL நிர்வாகம் தலையிட்டு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்தி வந்தது. மாவட்ட நிர்வாகம் முழுமையான அக்கறையோடு  போனஸ் பிரச்னையை தீர்க்க முயற்சி செய்தது . மூன்று ஒப்பந்த காரர்களுக்கும் 21-10-2016 – குள் சட்ட ரீதியான போனஸ் தொகை வழங்க வேண்டுமென உத்திரவிட்டது. NACSS காண்ட்ராக்ட்டர் 21.10.2016 அன்று தான் ஏற்றுக்கொண்ட டெண்டர் விதிமுறைகளை மதிக்காமல் ஒருமாத ஊதியத்திற்கும் குறைவாக  ZONE-1 தொழிலாளர்களுக்கு ரூ.3100 போனஸ் வழங்கியுள்ளார் இது ஏற்பதற்கில்லை.      NACSS ஒப்பந்ததாரர் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக மீதமுள்ள தொகையினை வழங்கிட வேண்டும் என வலியுறித்தியும் போனஸ் பிரச்சனையில் எவ்வித சலனமும் இன்றி நமது கோரிக்கையினையோ மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவுகளையோ மதிக்காமல் அலட்சியம் காட்டும் EOI Contractor BALAJI AGENCIES மற்றும்  Housekeeping Contractor   EX-SERVICEMEN SECURITY AND INTELLIGENCE SERVICE நிறுவனங்களை கண்டிப்பதோடு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக முழுமையான போனஸ் ரூபாய் 7000/- வழங்கிட வேண்டுகிறோம். மேலும்   கார்பரேட் அலுவலக 07.10.2016 உத்திரவுப்படி ஒப்பந்த தொழிலாளர்களின் முதன்மை முதலாளி என்கிற முறையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு  உடனடியாக சட்ட பூர்வ  நடவடிக்கை எடுத்து போனஸ் பிரச்சினையை தீர்த்திட வேண்டும் என  வலியுறுத்தி  கீழ் கண்ட தொடர் போராட்டம் நடத்துவதென 21.10.2016  அன்று மாலை நடை பெற்ற மாவட்ட மைய செயலக கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டுள்ளது .

1.     24-10-2016 – அனைத்து கிளைகளிலும் இணைந்த ஆர்ப்பாட்டம்
2.     25-10-2016 – கடலூர் GM அலுவலகம் முன்பு பெரும் திரள் முறையீடு
3.     26-10-2016 – முதல் உண்ணாவிரத போராட்டம்

          அனைத்து தோழர்களும் சங்க வித்தியாசமின்றி போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றிபெறச் செய்வீர்.

போராடாமல் வென்றதில்லை ! போராடி நாம் தோற்றதில்லை !!

ஆர்ப்பரிப்போம் !  அணிதிரள்வோம் !!  அலைகடலாய் !!! 

தோழமையுடன்
    M.பாரதிதாசன்                                                         K.T.சம்பந்தம்
மாவட்ட  செயலர்  TNTCWU                                                            மாவட்ட  செயலர்   BSNLEU

22.10.2016

கடலூர்-1

திங்கள், 17 அக்டோபர், 2016

பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் 25.10.2016 அன்று சென்னையில் உள்ள தமிழக BSNL தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு

ஒப்பந்ததாரர் மாறிவிட்டார் என்ற காரணத்தை காட்டி தமிழக தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 15 ஆண்டுகாலத்திற்கு மேல் பணியாற்றி வரும் 11 ஒப்பந்த தொழிலாளர்கள் 01.10.2016 முதல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடுமைக்கு எதிராக CGM அலுவலக மாவட்ட சங்கம் இரண்டு கட்ட போராட்டங்களை நடத்தியது. அதன் பின்னர் BSNLEU மற்றும் TNTCWU ஆகிய இரண்டு சங்கங்களின் சார்பாக தமிழகத்தில் அனைத்து கிளைகளிலும், 07.10.2016 அன்று சக்தி மிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 14.10.2016 அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் மாலை நேர தர்ணா போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. GM(HR) உள்ளிட்ட அதிகாரிகள் 15.10.2016 அன்று நடைபெற உள்ள முத்தரப்பு கூட்டத்தில் சுமுக தீர்வு ஏற்பட்டுவிடும் என்று கூறி நமது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தனர். நல்லெண்ணத்தின் அடிப்படையில் நாமும் 14.10.2016 தர்ணா போராட்டத்தை ஒத்தி வைத்தோம். ஆனால் இன்று (15.10.2016) நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒப்பந்ததாரர் வரவில்லை. நிர்வாகம் ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் மூன்று ஊழியர்களை மட்டும் எடுக்க ஒத்துக் கொண்டதாகவும், மற்றவர்களை பணிக்கு எடுக்க மறுத்து விட்டார் என்று நம்மிடம் தெரிவித்து விட்டனர். தங்களால் வேறு ஏதும் செய்ய இயலாது என்றும் தெரிவித்து விட்டனர். நாம் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணிக்கு எடுப்பதை தவிர வேறு எந்த உடன்பாட்டிற்கும் வர இயலாது என்பதை மிகத் தெளிவாக தெரிவித்து விட்டோம். எனவே நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி 25.10.2016 அன்று சென்னையில் உள்ள தமிழக BSNL தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு கண்டிப்பாக நடைபெறும் என அறிவித்துள்ளோம். எனவே 25.10.2016 அன்று நமது தோழர்களை பெருவாரியாக திரட்டி சென்னையை நோக்கி அணி திரள வேண்டும் என இரண்டு மாநில சங்கங்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். பணி நீக்க கொடுமையினை எதிர்த்து ஆர்ப்பரிப்போம்!!! பணி நீக்கம் செய்யப்பட்ட தோழர்களை பணிக்கு எடுக்க வைப்போம்!!!