வியாழன், 31 ஜனவரி, 2019

தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளருடன் AUAB சந்திப்பு


தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளருடன் AUAB சந்திப்பு
AUAB தலைவர்கள் மற்றும் தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளர் திரு அன்ஷு பிரகாஷ் ஆகியோர் இடையேயான சந்திப்பு இன்று (30.01.2019) நடைபெற்றது. COMMITTEE OF PERIODIC INTERACTIONல் உள்ள AUAB பிரதிநிதிகளான தோழர் P.அபிமன்யு GS BSNLEU & CONVENOR AUAB, தோழர் சந்தேஸ்வர் சிங் GS NFTE & CHAIRMAN AUAB, தோழர் K.செபாஸ்டின் GS SNEA மற்றும் தோழர் பிரகலாத்ராய் GS AIBSNLEA ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். தொலை தொடர்பு துறையின் சார்பில் திரு R.K.கண்டேல்வால் Joint Secretary(Admn.), திரு S.K.ஜெய்ன் DDG (Estt.), திரு ராஜிவ் குமார் DDG (Budget) ஆகியோரும் பங்கு பெற்றனர். திருமிகு சுஜாதா T.ரே, Director (HR) மற்றும் திரு A.M.குப்தா, GM(SR), ஆகியோர் BSNL சார்பாக பங்கு பெற்றனர். 3வது ஊதிய மாற்றம், 4G அலைக்கற்றை ஒதுக்கீடு, வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பு மற்றும் ஓய்வூதிய மாற்றம் ஆகியவை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. 3வது ஊதிய மாற்ற பிரச்சனையில், 5% ஊதிய நிர்ணய பலனுடன் ஊதியமாற்றத்தை தொலை தொடர்பு துறை முன்மொழிந்தது. AUAB இதனை ஏற்றுக் கொண்டால், 05.02.2019ல் நடைபெற உள்ள டிஜிட்டல் கமிஷன் (பழைய டெலிகாம் கமிஷன்) கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு, அதன் பின் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படும் என தொலை தொடர்பு துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. 5% ஊதிய நிர்ணய பலன் என்பது மிக மிக குறைவு என்பதால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என AUAB தெரிவித்து விட்டது. அதன் பின்னர், AUAB மீண்டும் BSNL CMDஉடன் விவாதித்து விட்டு ஓரிரு தினங்களில் மீண்டும் வந்து தன்னை சந்திக்கும்படி தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளர் ஆலோசனை வழங்கினார். 03.12.2018 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 15% ஊதிய நிர்ணய பலன் தருவதற்கு சாத்தியமில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்ததை நாம் நினைவு கூற வேண்டும். மேலும் தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளருடன் நடைபெற்ற கடந்த கூட்டத்தில் 0% ஊதிய நிர்ணய பலனை தொலை தொடர்பு துறையின் சார்பாக முன்மொழியப்பட்டது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
------நமது மத்திய சங்க செய்தி (மாநிலச் சங்க வலைத்தளத்திலிருந்து.)


சனி, 19 ஜனவரி, 2019

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் பெற கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம்.கடலூர் மாவட்டத்தில் வெற்றிபெறச் செய்வீர்!

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
தமிழகம் முழுவதும் ஜனவரி 2019 மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து எதிர்வரும் 21.01.2019 திங்களன்று அனைத்து கிளைகளிலும் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

திங்கள், 7 ஜனவரி, 2019

07.01.2019 அன்று உணவு இடைவேளையின்போது கடலூர் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஜனவரி 08,09 அகில இந்திய பொது வேலை நிறுத்த கோரிக்கை விளக்கக் கூட்டம்.