செவ்வாய், 31 மார்ச், 2015

பஞ்சப்படி 0.2% உயர்வு

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
01.04.2015 முதல் பஞ்சப்படி (IDA) 0.2% உயர்ந்து மொத்தம் 100.5% ஆக மாறியுள்ளது என தெரியவருகிறது.

திங்கள், 30 மார்ச், 2015

ஒப்பந்த ஊழியருக்கு நிலுவைத்தொகை

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது மாநில ச்ங்கங்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஒப்பந்த ஊழியருக்கு முன் தேதியிட்டு தொழிலாளர் நல ஆணையர் நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும் என வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read >>>

தோழியர் இந்திராணி மற்றும் தோழர் முனுசாமி பணி நிறைவு பாராட்டு விழா கள்ளக்குறிச்சியில் 28.03.2015 அன்று வெகு சிறப்பாக தோழர் பொன்மலை மற்றும் தோழர் ராஜாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.


















வியாழன், 19 மார்ச், 2015

மனு அதர்மம் எனும் மக்காத குப்பை

சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக பைபிளில் கூறப்படுகிறது. ஆனால், மனு மட்டும் அன்றாடம் உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கிறான். அண்ணல் அம்பேத்கரால், அதிக மாக வெறுக்கப்பட்ட ஒரு மனிதன் உண்டென்றால், அது மனுதான். “அவன் மட்டும் என் கையில் கிடைத் தால், அவனது குரல்வளையைக் கடித்துத் துப்பிவிடுவேன்” என்று ஆவேசப் பட்டிருக்கிறார் பாபா சாகேப்.
மனுதர்ம சாஸ்திரம் என்பது, மனு என்கிற தனிமனிதனின் மூளையில் உதித்த வக்கிரம் மட்டுமல்ல; இந்தியா வில் அன்றைக்கு நிலவிய கொடூரமான சமூக விதிகளைத்தான் தொகுத்துத் தந்திருக்கிறான் அவன். பிரம்மனுடைய முகத்தில் பிறந்தவர் கள் பிராமணர்கள், தோளில் பிறந்தவர்கள் சத்திரியர்கள், தொடையில் பிறந்தவர்கள் வைசியர்கள், காலில் பிறந்தவர்கள் சூத்தி ரர்கள் என்கிறான் மனு. கோடானுகோடி தாழ்த்தப்பட்ட மக்கள், நால்வர்ண முறைக்குள்ளேயே இல்லை. அவர்கள் காலில்கூட பிறக்கவில்லை. அதனினும் கீழானவர்கள் என்பதுதான், மனு அதர்மம்.
மனு ஸ்மிருதியில், சூத்திரர்களுக்கு தரப்பட்டுள்ள கடமைகள், தண்டனைகள், ரத்தத்தைச் சூடேற்றுகின்றன. சூத்திரர்கள் என்று மனு வகுத்துள்ள சூத்திரத்திற்குள் சொல்லப்படுவர்கள், பெரும்பகுதியின ராக உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே ஆவர். இதைவிடக் கொடூரமாக தலித்துகள் என்று இன்று அழைக்கப்படும்- அன்றைக்கு பஞ்சமர்கள் என்று அழைக்கப் பட்ட எளிய உழைக்கும் மக்கள் நடத்தப் பட்டிருக்கிறார்கள். மனு ஸ்மிருதி எனும் மக்காத குப்பை, 2683 சுலோகங்களைக் கொண்டது. அதில் காணப்படும் அத்தனை வரிகள் மட்டுமல்ல; வரிகளுக்கு இடையிலான இடைவெளியிலும்கூட வக்கிரமும் சமூக அநீதியும் கொப்பளிக்கின்றன. ‘பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு பலத்தையும், வைசிய னுக்கு பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இடவேண்டும்’ என்கிறான் மனு.
அவன் மேலும் சொல்கிறான், பிராமணனுக்கு சர்ம என்றும், சத்திரியனுக்கு வர்ம என்றும், வைசியனுக்கு பூதி என்றும், சூத்திரனுக்கு தாசன் என்றும் பெயரிட வேண்டுமாம். (அத்.2, சுலோகம் 31, 32)இன்றைக்கும் கூட அறிந்தோ அறியா மலோ, இந்த கட்டளை தொடரத்தான் செய்கிறது. யாரெல்லாம் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடக்கூடாது என்றும் சொல்லி யிருக்கிறான் மனு.
இந்தப் பட்டியலில், திருடன், நாத்திகன், மருத்துவன் (நாவிதன்), மாமிசம் விற்போன், ஊர்ப்பொது ஏவலாளன், ஆடு, மாடு மேய்த் துப் பிழைப்பவன், பிராமணனை வெறுப்போன், பாட்டுக் கட்டுபவன் (கவிஞன்), கூத்தாடுவோன், சாதிவிட்டு சாதி மாறி திருமணம் செய்தவன், விதவைக்குப் பிறந்த பிள்ளை, தாழ்ந்த குலத்தானிடம் கலைகள் பயின்றவன், கீழ் சாதியின ருக்குப் பயிற்றுவித்தவன், இழிதொழில் இயற்றுபவன், சிறிய தெய்வங்களை வழிபடுபவன் என்றெல்லாம் நீள்கிறது.திருப்பூரில் கூடும் தமுஎகச மாநாடு, “மனுதர்ம தந்திரத்தை முறியடிப்போம்! முற்போக்குத் தமிழ்மரபை முன்னெடுப்போம்!” என்ற மூல முழக்கத்தை முன்வைத்துள்ளது. மனுவின் விலக்கப்பட்டவர்களின் பட்டியலில், ஏதாவது ஒருவகையில் இடம் பெறுபவர்கள்தான் நாம் அனைவருமே.
நாம் ஒன்றுகூடுவதே ஒன்றாக அமர்ந்து, கூட்டாஞ்சோறு சாப்பிடுவதே, மனுவுக்கு எதிரான ஒரு நடவடிக்கைதான். நான்காம் வருணத்து சூத்திரன், சாஸ்திர விரோதமாக கூத்திடவும், பாடவும், இசைக்கருவிகள் இசைத்தலும் கூடாது என்றெல்லாம் பட்டியலிடுகிறான் மனு. சூத்திர - பஞ்சமரின் சேர்ந்திசை யிலும், கூத்திலும் மனுவின் கல்லறை அலறட்டும். சூத்திரன் தன்சாதியிலும், வைசியன் தன்சாதி மற்றும் சூத்திரசாதியிலும், சத்திரியன் தன்சாதி மற்றும் வைசிய- சூத்திர சாதியிலும், பிராமணன் தன்சாதி யிலும் மற்ற மூன்று சாதியிலும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியதோடு, சூத்திரன் தன்சாதியைத் தவிர்த்து, வேறு எந்தச் சாதியிலும் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்று மனு விதித்திருக்கிறான்.உயர்சாதிப் பெண்ணுடன், சூத்திரன் உறவுகொண்டால் அவனது ஆணுறுப்பை அறுக்க வேண்டும் என்பது, மனுவின் கட்டளை. சூரக்கோட்டை மாரிமுத்து வுக்கு இதற்கான தண்டனையைத்தான் மனுவின் வாரிசுகள் வழங்கினார்கள். தர்மபுரி இளவரசன் மீது ஏறி ஓடியது, ரயில் அல்ல; மனுவின் தேர்ச்சக்கரங்கள் தான். பிணத்தின் ஆடையைத்தான் சண்டாளர்கள் என இழிவுபடுத்தப்பட்ட பஞ்சமர்கள் அணிய வேண்டும் என் கிறான் மனு. இளவரசன் போன்றவர்கள் ஜீன்ஸ் அணிவது கண்டு, சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டதற்குக் காரணம் மனு வின் மரபணுதான்.
கௌரவக்கொலை செய்பவர்களின் கைகளில் இருப்பது, மனு கொடுத்த கொடுவாள்தான்.அகங்காரம் மிகுந்து, பிராமணனுக்கு தர்மத்தை உபதேசிக்கிற சூத்திரனுடைய வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமென்றும், சூத்திரன் வேதத்தைச் சொன்னால் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் வேதத்தை கேட்டால், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும், மனத்திற்குள் நினைத்தால், இருகூறாக பிளந்துவிட வேண்டும் என்றும் சொல்கிறான் மனு.
ஒடுக்கப் பட்ட மக்களுக்கு, இடஒதுக்கீடே கூடாது என்பவர்கள் மனுச்சூத்திரத்திற்கு பொழிப் புரை எழுதுகிற, நவீன மனுக்களே ஆவார்கள். பிராமணன் எந்தப் பாவம் செய்தாலும், அவனைக் கொல்லக்கூடாது; காயப்படுத்தவும் கூடாது; மாறாக, பொரு ளைக் கொடுத்து, ஊரைவிட்டு வெளி யேற்ற வேண்டுமாம். அதாவது, யாரையாவது கொலை செய்தால்கூட அதற்காக பரிசளித்து, அனுப்ப வேண்டு மாம். ஒருவேளை தண்டித்தே ஆக வேண்டும் என்றால் முடியின் முனையை வெட்டினாலே போதும்; ஆனால், அதே குற்றத்தைச் செய்த பிற வர்ணத்தாரின் உயிரைப் பறிக்க வேண்டும் என்பதே, மனு அதர்மம். மற்றவரின் உயிரும், உயர் குலத்தவரின் மயிரும் சமமாம். இந்த நால்வர்ண முறையை நடைமுறைப்படுத்தத்தான் மோடி ஆட்சி முன்வந்திருக்கிறது. இந்திய வரலாற்று ஆய்வுமையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர்,
ஒய்.சுதர்சனராவ் என்ற ஆர்எஸ்எஸ் ஆசாமி. அவர் சொல்கிறார்: “ சாதி என்பது, சமூகப் பிரிவினை; வர்ணம் என்பது,அவரவர்க்குரிய பணிகளை வரையறுப் பது; சாதி என்பது, மனிதவள பயன்பாட் டிற்கான கட்டமைப்பு; வர்ணம் மோட்சத் திற்கு வழி சொல்கிறது” என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகும் அவர், புராதன வர்ண அமைப்பு, நன்றாகச் செயல் படக்கூடியது; அதைப் புனரமைக்க வேண்டும் என்கிறார். இவருடைய தலைமையிலான அமைப்புதான் இனி, இந்திய வரலாற்றை எழுதப் போகிறது. சூத்திரர்கள் - பஞ்சமர்களை மட்டு மல்ல; அனைத்துச் சாதியிலுள்ள பெண் களையும் மிக இழிவாகக் கருதுகிறான் மனு. “தாய்- தங்கை இவர்களுடன்கூட தனியாக- ஒன்றாக உட்காரக்கூடாது;
இந்திரியங்களின் கூட்டமானது, மிக வும் பலமுடையது; அது, யாரையும் மயக்கிவிடும்” (அத்.215) என்பது, மனுவின் கூற்று. தில்லியில் நிர்பயா எனப்படும் பெண்ணை கும்பல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கிய, முகேஷ்சிங் அளித்த பேட்டியில், இரவில் ஆண்களுக்கு பாலியல் உணர்ச்சி அதிக மிருக்கும்; அந்தநேரத்தில் நிர்பயா பேருந்தில் பயணம் செய்ததுதான் தவறு; அதனால்தான் பாலியல் வல் லுறவு செய்யும்படி ஆயிற்று என்று கூறியிருந்தான். இதிலிருந்தே இந்தப் பயல், மனிதப்பால் குடித்து வளர்ந்தவன் அல்ல; மனுவின் பால் குடித்து வளர்ந் தவன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ‘அழகான மாதர்கள், எவ்விடத் திலிருந்தாலும் ரத்தினம்போல அதைக்கவர்ந்து கொள்ளலாம்’ என்ற மனு வின் வாசகமும், முகேஷ்சிங் என்றமூர்க்கனுக்கு தைரியம் கொடுத்திருக்கக் கூடும்.
‘கணவன் துர் ஆச்சாரம் உள்ளவனாக இருந்தாலும், அந்நிய ஸ்திரி லோலனாக இருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும், பதிவிரதையான ஸ்திரியான வள், அவனை தெய்வத்தைப் போல பூஜிக்க வேண்டும்‘ (அத்.5, சுலோகம் 164). இந்த வழியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கற்புக்கரசிதான் தொழு நோயாளியாக இருந்த கணவனை, இன்னொரு பெண்ணின் வீட்டிற்குத் தூக்கிச் சென்ற நளாயினி போன்ற புராண பாத்திரங்கள். இதற்கான எதிர்மரபுதான் கொலைசெய்ய குன்றின் உச்சிக்கு அழைத்துச் சென்ற கணவனை, கீழே பிடித்துத் தள்ளிய குண்டலகேசி. ‘சிறுமியாக இருக்கும்போது, தகப் பனுக்கும், வாலிபத்தில் கணவனுக்கும், கணவனுக்குப் பிறகு பிள்ளைகளுக்கும் கட்டுப்பட்டு இருக்க வேண்டியவள் பெண்; அவள் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கவே கூடாது’ என்பதுதான் மனு வின் குரல் (அத்.5. 148) ‘எந்த நிலையிலும், அடங்கி நடக்க மாட்டோம்; சுதந்திரச் சிறகு விரிப்போம்!’ என விடுதலை முழக்கமிடும் பாரதியின் புத்திரிகள், சரிநிகர் சமானமாய், அணிவகுக்கும் களம்தான் தமுஎகச மாநாடு.மோடி ஆட்சி மத்தியில் அமைந்த பிறகு, ``மகாத்மா காந்தியை படுகொலை செய்த கொடியவன் கோட்சேவிற்கு சிலை வைப்போம்; இந்தியாவில் பிறந்த எல்லோரும் இந்து மதத்தில், அவரவர் சாதிப்படி மீண்டும் சேர வேண்டும்; ராமனின் பிள்ளைகளுக்கு மட்டும்தான் இங்கு இடமுண்டு; மசூதிகள் அனைத் தும் வெறும் கட்டடமே, அவற்றை எப்போது வேண்டுமானாலும் இடித்துத் தள்ளலாம்; அன்னை தெரசாவின் சேவைக்குப் பின்னால் ஒளிந்திருந்தது, மதமாற்றம்தான்; சேதுசமுத்திரத் திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்றவிட மாட்டோம்; பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமனுக்குக் கோயில் கட்டியேதீருவோம்; அரசியல் சாசன முகவுரை யிலிருந்து, மதச்சார்பற்ற- சோசலிச எனும் வார்த்தைகளை அகற்றுவோம்” என்றெல்லாம் கொக்கரிக்கப்படும் வாசகங்கள், மனு ஸ்மிருதியின் மறுபதிப்புதான்.நான்கு வருணங்களையும் நான்தான் படைத்தேன்; நானே நினைத்தால்கூட அவற்றை மாற்ற முடியாது என்று பகவத் கீதையில் பகர்கிறார் `பகவான்’ கிருஷ்ணன். இதைத்தான் இந்தியாவின் தேசிய புனிதநூலாக அறிவிக்க வேண்டும் என்கிறார், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ். ‘பெண்களை பாவயோனி’ என்று இகழ்கிறது, பகவத்கீதையின் ஒன்பதாம் பகுதி. இதனை எரிக்க வேண்டும் என்றுபஞ்சாப் இதழொன்றின் ஆசிரியர் நியூ டான் தாகூர் கூறியதற்காக, அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டது. கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்று கூறினால், மத்திய அமைச்சர் பதவி. எதிர்த்தால் சிறை. இதுதான் மோடி ஆட்சி.மனுவின் விஷம் தோய்ந்த கத்திதான் படைப்பாளி பெருமாள் முருகனின் நாவை அறுத்து, மௌனத்தைத் திணித்துள்ளது. ‘பிகே’ படத்தைத் தடை செய்ய வேண்டும் என்பதும், தாலி குறித்து எவனாவது பேசினால், அவனது மனைவியின் தாலியை அறுப்போம் என்பதெல்லாம், கல்லறையிலிருந்து எழும் மனுவின் குரல்களே!மனுவின் வார்த்தைகள், இப்போதும் புத்தகத்தில் மட்டுமில்லை; காலங் காலமாக போதிக்கப்பட்டு, புத்தியில் பொதிந்து வாழ்கிறது; அதை கலை- இலக்கியப் படைப்புவாளைக் கையில் ஏந்தி, அறுத்தெறியத் துடிப்பவர்களின் அணிவகுப்பே, திருப்பூரில் நடைபெறும் தமுஎகச மாநாடு. மனுவுக்கு எதிராக மனிதத்தைக் கூட்டுவோம்!
--- மதுக்கூர் இராமலிங்கம்...நன்றி தீக்கதிர்19.03.2015

கையெழுத்து இயக்கமும் மற்றும் சில மத்திய சங்க செய்திகளும்

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே!!
கையெழுத்து இயக்கமும் மற்றும் சில மத்திய சங்க செய்திகள் குறித்து நமது மாநிலச் சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையினை காண இங்கே கிளிக் செய்யவும்<<<Read >>>