சனி, 19 நவம்பர், 2016

வெற்றி ! BSNLEUவெற்றி!! TNTCWWU வெற்றி!!! பெருந்திரள் முறையீட்டால் பணிந்தது மாநில நிர்வாகம்..பணிநீக்கம் செய்யப்பட்ட 11 ஒப்பந்த ஊழியர்களுக்கும் மீண்டும் பணிவழங்கப்பட்டது.

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே  !!
ஒப்பந்ததாரர் மாறிவிட்டார் என்ற காரணத்தை காட்டி தமிழக தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 15 ஆண்டுகாலத்திற்கு மேல் பணியாற்றி வரும் 11 ஒப்பந்த தொழிலாளர்கள் 01.10.2016 முதல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடுமைக்கு எதிராக CGM அலுவலக மாவட்ட சங்கம் இரண்டு கட்ட போராட்டங்களை நடத்தியது. அதன் பின்னர் BSNLEU மற்றும் TNTCWU ஆகிய இரண்டு சங்கங்களின் சார்பாக தமிழகத்தில் அனைத்து கிளைகளிலும், 07.10.2016 அன்று சக்தி மிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 14.10.2016 அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் மாலை நேர தர்ணா போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. GM(HR) உள்ளிட்ட அதிகாரிகள் 15.10.2016 அன்று நடைபெற உள்ள முத்தரப்பு கூட்டத்தில் சுமுக தீர்வு ஏற்பட்டுவிடும் என்று கூறி நமது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தனர். நல்லெண்ணத்தின்.அடிப்படையில்நமது மாநிலச்சங்கம்  14.10.2016 தர்ணா போராட்டத்தை ஒத்தி வைத்தது .

ஆனால் 15.10.2016 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒப்பந்ததாரர் வரவில்லை. நிர்வாகம் ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் மூன்று ஊழியர்களை மட்டும் எடுக்க ஒத்துக் கொண்டதாகவும், மற்றவர்களை பணிக்கு எடுக்க மறுத்து விட்டார் என்றும் நமது மாநிலச்சங்கத்திடம் தெரிவித்தது..மேலும் தங்களால் ஏதும் செய்ய இயலாது என்றும் தெரிவித்தது தமிழ்மாநில நிர்வாகம். நமது மாநிலச்சங்கம் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணிக்கு எடுப்பதை தவிர வேறு எந்த உடன்பாட்டிற்கும் வர இயலாது என்பதை மிகத் தெளிவாக தெரிவித்தது. எனவே நமது மாநிலச்சங்கம் ஏற்கனவே திட்டமிட்டபடி 25.10.2016 அன்று அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் மாலைநேர தர்ணாபோராட்டமும்,18.11.16 அன்று சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்த்திற்கும்  அறைகூவல் விடுத்தது.

18.11.16 அன்று பணி நீக்கம் செய்யப்பட்ட 11 தோழர்களை மீண்டும்  பணிக்கு எடுக்க  வலியுறுத்தி தமிழகம் முழுவதிலிருந்தும் 2௦௦௦ -ற்கும் மேலான தோழர்கள் ஆர்ப்பரித்து பங்கேற்றனர்.நமது மாவட்டத்திலிருந்து 176 தோழர்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர்.கார்ப்பரேட் அலுவலக உத்திரவைக் காட்டி அலட்சியம் செய்த மாநில நிர்வாகம்,பேசமறுத்த நிர்வாகம் நமது  பெருந்திரள் பங்கேற்பால் பணிந்தது சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில், கடந்த 15ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தேசமணி, பாரதி, மங்கா, பூங்கொடி, கலா, ஜெயா, வரலட்சுமி, அமுதா,ஜெனிபர், தாரா, ஆசிர்வாதம் ஆகிய பணிநீக்கம் செய்யப்பட்ட 11 ஒப்பந்த ஊழியர்களுக்கும் மீண்டும் பணிவழந்கப்பட்டது.
  ஒப்பந்ததாரர் மாறினாலும் ஒப்பந்த ஊழியர் மாறக்கூடாது  என்ற நமது கொள்கைக்கு கிடைத்திட்ட மாபெரும் வெற்றி இது.இதில் பங்கேற்ற அனைத்து தோழர்களையும் மாவட்ட சங்கத்தின் சார்பில் மனதார பாராட்டுகிறோம். அனைத்து கிளைகளிலும் வாயிற்கூட்டங்கள் நடத்தி இவ்வெற்றியை கொண்டாடிட வேண்டுகிறோம்.
                                                                                                                                         தோழமையுடன் 
                                                                                                                                            K.T.சம்பந்தம் 
                                                                                                                                 மாவட்டசெயாலாளர்





                                                                                                                                       

கருத்துகள் இல்லை: