அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது முயற்சியால் நமது மாவட்டத்தில் பணியாற்றிவரும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் வெள்ளநிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி 24.12.2015 அன்று மாலை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தோழர் அண்ணாமலை தலைமையேற்றார். தோழர் பால்கி விழாவினை தொகுத்து வழங்கினார்.தோழர் R.V.ஜெராமன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிவாரண பொருட்களை "கடலூர் எழும் உதவவேண்டும் " என்கின்ற இணையதள அமைப்பினை துவக்கி, ஒருங்கிணைத்து அதன்மூலம் கொடையாளர்களை கண்டறிந்து கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 35 ஆயிரம் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியவரும், CITU சங்கத்தின் கடலூர் மாவட்ட உதவிச் செயலாளருமான தோழர் S.G.ரமேஷ்பாபு மூலம் தஞ்சையைச் சேர்ந்த கொடையாளர்கள் திரு.திவாகர், திரு.பிரபு, திரு.கார்த்திக், திரு.லெனின் மற்றும் ராஜேஷ் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியினை நமது மாவட்ட செயலர் தோழர் K.T.சம்பந்தம் துவக்கிவைத்து உரையாற்றினார்.நமதுDGM(CM)திருமதி.ஜெயந்திஅபர்னா, திரு.சாந்தகுமார் DGM(FIN), தோழர்.அசோகன்SNEA(I), தோழர்.சிவக்குமரன் SNEA(I) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நமது மாவட்ட பொருளாளர் தோழர் .V.குமார் நன்றியுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் வெள்ளநிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான அனைத்து பணிகளையும் ஒப்பந்ததொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செலாளர் தோழர் M.பாரதிதாசன் தலைமையில் தோழர்கள் பீம்சிங், ராஜா, முரளி, நாகமணி, கந்தன், முர்த்தி,சங்கர் ஆகிய ஒப்பந்த தொழிலாள தோழர்களும் ஓய்வுபெற்ற தோழர் V.மணி அவர்களும் தோழர் M.ஜெயச்சந்திரன் ஆகியோர்களும் விழா சிறக்க உதவினர்.அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.
நிவாரணை உதவிகளில் தனது பங்காக 250 கைத்தறி துண்டுகளை திரு.சாந்தகுமார் DGM(FIN அவர்களும், 250 பிஸ்கட் பாக்கட்டுகள், 250 குடிநீர் பாட்டில்கள் மற்றும் 25 கிலோ அரிசி ஆகியவற்றை தோழர்R.குணசேகரன் வழங்கினர். மளிகைப் பொருட்கள், அரிசி, மற்றும் போர்வை போன்றவற்றை வழங்கிய தஞ்சை நண்பர்களுக்கும் நமது நெஞ்சுநிறை நன்றியினை உரித்தாக்கிக்கொள்கிறோம்.
புகைப்படங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக