அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
14.12.2015 அன்று நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டம், அரசூர் நல்லாளக்குப்பம் மற்றும் குமாரமங்கலம் பகுதி வாழ் மக்களுக்கு பாய், போர்வை, புடவை, லுங்கி மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ் மாநிலச் செயலர் தோழர் A.பாபுராதாக்கிருஷ்ணன், மாநில பொருளர் தோழர் K.சீனுவாசன், CGM அலுவலக மாவட்ட செயலர் தோழர் K.V.சிவக்குமரன் மாவட்ட தலைவர் தோழர் S.அன்புமணி CGM அலுவலக தோழர்கள் M.சிவகுமரன் மற்றும் S.குணசேகரன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
நமது மாவட்டத்தின் சார்பில் தோழர்கள் K.T.சம்பந்தம், A.அண்ணாமலை, R.V.ஜெயராமன் மற்றும் கள்ளக்குறிச்சி கிளை செயலர் P.ரத்தினம் நமது மாவட்ட அமைப்புச் செயலர் S.பிரபு கல்லை தோழர்கள் S.V.விஸ்வநாதன், ரமேஷ் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் கல்லை கிளைச் செயலர் தோழர் ரத்தினம் ஆகியோர் பங்கேற்று நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக