இந்தியாவில் பெரிய 
நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு 378 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதாக
 ஜனநாயக சீர்திருத்ததுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. ஜனநாயக 
சீர்திருத்ததுக்கான சங்கம் சார்பில், 2004 முதல் 2012 ஆம் ஆண்டு வரை 
அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் குறித்து ஆய்வு 
நடத்தப்பட்டது. அதில், அரசியல் கட்சிகளுக்கு பெரிய நிறுவனங்கள் தாராளமாக 
நன்கொடை அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆய்வின்படி, அரசியல் கட்சிகளுக்கு
 அளிக்கப்பட்ட நன்கொடையில் 87 சதவீதம், தேசிய கட்சிகளுக்கு கிடைத்துள்ளது.
 கடந்த ஒன்பது ஆண்டுகளில் அரிசயல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.435 கோடி 
நன்கொடைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அதில் 378 கோடி ரூபாயை பெரிய 
நிறுவனங்கள் அளித்துள்ளன. ஆதித்யா பிர்லா குழுமம் அதிகபட்சமாக ரூ.36 கோடியை
 நன்கொடையாக அளித்துள்ளது. ஆய்வில், பாரதிய ஜனதா கட்சிக்கு, அதிகபட்சமாக 
மொத்தம் 192 கோடி ரூபாயை பல்வேறு நிறுவனங்கள் நன்கொடையாக வழங்கியுள்ளன. 
காங்கிரசுக்கு 172 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. 
           < நன்றி ஒன் இந்தியா >
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக