வியாழன், 7 மார்ச், 2019

அரசாங்கத்தின் இந்த திட்டமிட்ட சதிகளை நாம் ஒன்று பட்டு உறுதியாக நின்று எதிர்த்து போராடி முறியடிப்போம்.

அன்பார்ந்த தோழர்களே !
BSNL ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இதுவரை தரப்படவில்லை. 'எங்களிடம் பணம் இல்லை' என BSNL நிர்வாகம் சொல்கிறது. இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வங்கிகளிடம் இருந்து BSNL நிறுவனம் கடன் வாங்க வேண்டும். ஆனால் ஊதியம் வழங்குவது உள்ளிட்ட செயல்பாட்டு செலவினங்களுக்காக வங்கிகளிடம் இருந்து BSNL நிறுவனம் கடன் வாங்க DoT அனுமதி தருவதில்லை. இதர தனியார் நிறுவனங்கள் பெற்றுள்ள கடன்களை ஒப்பிடுகையில், BSNLஇன் கடன் மிக குறைவானது. பின்னர் BSNL நிறுவனம், வங்கியில் கடன்களை வாங்க DoT ஏன் அனுமதி தர மறுக்கிறது? ஊதியம் தராமல் BSNL ஊழியர்களை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. இந்த அரசாங்கத்தின் திட்டம் தெளிவானது. ஊழியர்களை அச்சுறுத்தி அவர்களை VRS திட்டத்தில் வெளியேற செய்வதற்கான திட்டமிட்ட சதி இது. BSNL ஊழியர்களுக்கு VRS திட்டத்தை DoTயும், BSNLம் பரிசீலித்து வருவதாக ஏற்கனவே பத்திரிக்கை செய்திகள் வெளியாகி உள்ளன. ஆகவே, பெரும்பாலான ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் வெளியேறச் செய்வதற்காக அனைத்து சதிகளும் வடிவமைக்கப் பட்டுள்ளன. குறைந்த அளவிலான ஊழியர்கள் இருந்தார்கள் என்றால், எதிர்காலத்தில் BSNLஐ ஏதாவது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்க இலகுவாக இருக்கும். நாம் இந்த அரசாங்கத்தின் திட்டமிட்ட சித்து விளையாட்டை புரிந்து கொள்வோம். அரசாங்கத்தின் இந்த திட்டமிட்ட சதிகளை நாம் ஒன்று பட்டு உறுதியாக நின்று எதிர்த்து போராடி முறியடிப்போம்.
----தோழர் P.அபிமன்யு பொதுச்செயலாளர்

கருத்துகள் இல்லை: