வெள்ளி, 15 மார்ச், 2019

05.04.2019 சஞ்சார் பவன் நோக்கி பெருந்திரள் பேரணி

அன்பார்ந்த தோழர்களே!
ஒட்டுமொத்த தொலை தொடர்பு சந்தையயும் ரிலையன்ஸ் ஜியோ கைப்பற்ற உதவும் வகையில் BSNLஐ ஒழிக்க அரசாங்கம் திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. BSNLன் நிர்வாக அமைச்சகமான DoTம் BSNLஐ ஒழிக்கும் அரசின் முடிவுகளை கடுமையாக அமலாக்குகிறது. அரசாங்கமும், DoTயும் எடுத்து வரும் நடவடிக்கைகள், ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்காத அளவிற்கான சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. தனது செயல்பாட்டு செலவினங்களை சந்திப்பதற்காக வங்கியில் இருந்து BSNL நிறுவனம் கடனை வாங்குவதற்கு DoT அனுமதி தர மறுக்கிறது. அரசாங்கத்திற்காக BSNL நிறுவனம் செய்த பணிகளுக்காக அரசு தர வேண்டிய 2,500 கோடி ரூபாய்களை BSNLக்கு DoT வேண்டுமென்றே தராமல் உள்ளது. நிதிப்பற்றாக்குறை காரணமாக மின்கட்டணங்களை கட்ட BSNLக்கு இயலவில்லை. அதன் காரணமாக டவர்கள் மற்றும் தொலைபேசி நிலயங்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப் பட்டன. இவற்றால் சேவைகளும் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகிறது. கடந்த மூன்று நாட்களாக இதனை விவாதித்த AUAB, மத்திய அரசு மற்றும்DoTயின் சதிகளை நாட்டு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது என உறுதியுடன் முடிவு செய்துள்ளது. எனவே 05.04.2019 அன்று சஞ்சார் பவன் நோக்கிய பெருந்திரள் பேரணியை நடத்த AUABமுடிவு செய்துள்ளது. இந்த பேரணியில் உரையாற்ற அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அழைப்பது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த பேரணியை வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக மாற்றும் வகையில் பெருவாரியான அளவில் ஊழியர்களை திரட்ட அனைத்து மாவட்ட, மாநில சங்கங்களையும் மத்திய சங்கம் கேட்டுக் கொள்கிறது
- தோழர் P.அபிமன்யு, பொதுச்செயலாளர்

கருத்துகள் இல்லை: