தொழிலாளர்
 நலச் சட்டங்கள் அனைத்தும் முதலாளிகள் நலச் சட்டங்களாக மாற்றப்பட்டு 
வருகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை 
உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் குற்றம் சாட்டினார்.நாடாளுமன்ற குளிர்காலக் 
கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.மாநிலங்களவையில் அப்ரண்டிஸ் சட்டத்தில் 
முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமுன்வடிவு 
கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப் பட்டிருக்கிறது. 
அப்போது நடைபெற்ற 
விவாதத்தின்போது டி.கே.ரங்கராஜன் பேசியதாவது:“தொழிலாளர்களுக்கான அப் 
ரண்டிஸ் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான இச்சட்ட முன்வடிவைப் 
படித்துப் பார்க்கையில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் என்னவென்றால், 
இத்திருத்தங்கள் தொழிலாளர்நல அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டதா அல்லது 
முதலாளிகளின் அமைப்பால் உருவாக்கப் பட்டதா என்பதாகும். இத்தகைய 
திருத்தங்களை தொழிலாளர் நல அமைச்சகம் செய்திருப்பதாக நான் நினைக்கவில்லை. 
இந்தத் திருத்தச் சட்டமுன்வடிவை நான் படித்துப் பார்க்கும் இத்தருணத்தில் 
நமது பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.
 
அந்த நாட்டின் அப்ரண்டிஸ் சட் டத்தைப் படித்துப் பார்த்தேன். அதுமிகவும் 
தெளிவாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் அவற்றில் 
இருக்கின்றன. அது 250 அப்ரண்டிஸ்சிப்புகளை சட்டரீதியாக 
அங்கீகரித்திருக்கிறது. பின்னர் அவற்றிற்கு வரையறை 
உருவாக்கப்பட்டிருக்கிறது. எவரொரு வரையும் நீங்கள் விரும்பியதுபோல 
அப்ரண்டிஸ்ஸாக நீண்ட காலத் திற்கு வைத்திருக்க முடியாது. சில பகுதிகளில் 
ஓராண்டு, சில பகுதிகளில் ஈராண்டுகள் அல்லது மூன்றாண்டு கள். அப்படித்தான் 
அச்சட்டம் இருக் கிறது.
 இப்போது கொண்டுவரப்பட விருக்கும் திருத்தச் 
சட்டமுன்வடிவின்  பிரதான நோக்கம் என்ன? நிரந்தரத் தொழிலாளர்களுக்குப் 
பதிலாக அப்ரண்டிஸ் தொழிலாளர்களையே வைத்து உதவித்தொகை என்ற பெயரில் மிகவும் 
குறைந்த ஊதியத் தைக் கொடுத்து  தொழிற்சாலைகளை நடத்திட வழிவகுப்பதாகவே தெரி 
கிறது. இச்சட்டத்திருத்தத்தின் பொருள் இதுதான். இன்றையதினம் நாம் எந்தத் 
தொழிற்சாலைக்குப்போனாலும் தற் காலிகத் தொழிலாளர்கள், கேசுவல் தொழிலாளர்கள்,
 அப்ரண்டிஸ்சுகள், பயிற்சிபெறுபவர்கள் என நிறைய பேரைப் பார்க்கலாம்,  
ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருப்பார்கள். 
 அதே சமயத்தில் நிரந்தரத் 
தொழி லாளர்கள் என்பவர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள். இதுதான் இன்றைய 
நிலை.நாங்கள் தொழிற்சங்கத்தில் பணியாற்றுவதால் இது எங்களுக்கு நன்கு 
தெரியும். இவ்வாறு இந்தஅரசு தொழிலாளர்கள் மத்தியில்பிரச்சனைகளை உருவாக்கிக்
 கொண் டிருக்கிறது. இத்தகைய நடைமுறை சட்டவிரோதமானது.  இவ்வாறு சட்டவிரோதமான
 நிலையை சட்டரீதியாக மாற்றுவதற்காக இந்தச்சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட் 
டிருக்கிறது.  அதனால்தான் இச்சட்டமுன்வடிவு தொழிலாளர்அமைச்சகத்தால் 
கொண்டுவரப்பட வில்லை மாறாக முதலாளிகளின் சங்கங்களால் கொண்டுவரப்பட்டது 
என்று  கூறுகிறேன்.ஹரியானா மாநிலத்தில் மானேசர் என்னுமிடத்தில் இயங்கிவரும்
 மாருதி சுசுகி தொழிற்சாலைக்குச் சென்று பார்த்தோமானால் இதனை நன்கு 
தெரிந்துகொள்ள முடியும். அங்கே ஆயிரக்கணக்கான அப்ரண்டிஸ் தொழிலாளர்கள் 
நிரந்தரத் தொழிலாளர்களின் பணிகளை பல ஆண்டுகாலமாக செய்து கொண்டிருப்பதைப் 
பார்க்க முடியும்.  உதவித்தொகை என்ற பெயரில் மிகவும் குறைந்த ஊதியமே 
அவர்கள் பெற்றுக் கொண் டிருக் கிறார்கள். 
 குறைந்தபட்ச ஊதியம் 
கிடையாது. சேமநல நிதி கிடையாது. நிரந்தரத் தொழிலாளர்கள் செய்யும் வேலையைச் 
செய்யும் இவர்கள் அவர்கள் பெறும் ஊதியத்தில் நான்கில்ஒரு பங்கினைக் கூட 
பெறுவதில்லை. தமிழ்நாட்டில் செயல் படும் டெக்ஸ்டைல் தொழிற்சாலை களிலும் 
இதேபோன்ற நிலைமை கள்தான். அங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் 90 
சதவீதத்தினர் அப்ரண்டிஸ் மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள்தான். இவ்வாறு சட்ட
 விரோதமாக தொழிற்சாலைகள் இயங்கிவருவதை சட்டரீதி யாக மாற்றிடத்தான் 
இத்திருத்தச் சட்டமுன்வடிவு கொண்டுவரப் பட்டிருக்கிறது.இந்தத் திருத்தச் 
சட்டமுன்வடிவு முதலாளிகளுக்குத் தங்கள் இஷ்டம் போல் செயல்பட அனுமதி அளிக் 
கிறது.  தொழிலாளர்கள் எத்தனை மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது இனி 
முதலாளிகளின் விருப்ப மாக இருக்கும். 
ஒரு தொழிலாளர் திருமணம் 
செய்துகொள்ள விரும் பினாலும் விடுப்பு கிடையாது, அவர்வீட்டில் ஒரு துக்க 
சம்பவம் என்றா லும் விடுப்பு கிடையாது. தற்போது அமலில் உள்ள சட்டத்தில் 
விதிமுறைகளை மீறும் முதலாளிகளுக்குத் தண்டனை பெறும் ஷரத்துக் கள் உண்டு. 
அவர்களைக் கைது செய்துசிறையில் அடைக்க முடியும். இப் போது 
கொண்டுவரப்பட்டுள்ள திருத்தச் சட்டமுன்வடிவில் அது நீக்கப் பட்டுவிட்டது. 
கைது செய்ய முடி யாது, எதுவும் செய்ய முடியாது. மாறாக அவர்களுக்கு இந்த 
அரசு பத்மபூஷன் விருது வழங்கும்போல் தெரிகிறது. சட்டத்தை மீறினால் 
அவர்களுக்கு பத்மபூஷன் விருது.  இச்சட்டத்திருத்தத்தில் உள்ள தொழிலாளர் 
விரோத அம்சங்களை திமுக மற்றும் அதிமுக நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும் 
என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். 2008ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றப்
 பேரவையில் அப்ரண்டிஸ்கள் குறித்து ஒரு சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
 கடந்த ஆறு ஆண்டுகளாக அதற்குக்குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காமல் 
கிடப்பில் போடப் பட்டுக் கிடக்கிறது. அச்சட்டத்தில் அப்ரண்டிஸ் 
தொழிலாளர்கள் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கு மேல்இருக்கக்கூடாது என்று 
வரையறுக்கப் பட்டது. அதற்கு இன்னமும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க
 வில்லை. இதுதான் மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் முறை. 
அப்ரண்டிஸ்சுகள் நிரந்தரத் தொழில்களைச் செய்யப் பணிக்கப் பட்டால் 
அவர்களுக்கு முழு ஊதியம்வழங்கப்பட வேண்டும். ஸ்டைபண்ட் என்னும் உதவிப் 
பணத்தைக்கொடுத்து வேலையை முடித்துக் கொள்ளக்கூடாது. குறிப்பிட்ட 
நேரத்திற்கு மேல் அப்ரண்டிசுகள் பணியாற் றக் கூடாது. எனவேதான் நாங்கள் 
இந்தத் திருத்தச் சட்டமுன்வடிவை எதிர்க்கிறோம்.நான் சில திருத்தங்களை 
இச்சட்டமுன்வடிவிற்குக் கொண்டுவந்திருக் கிறேன். அவற்றை நிறைவேற்ற வேண் 
டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசி னார். 
எனினும் பின்னர் நடந்த வாக்கெடுப்பில் இத்திருத்தச் சட்டமுன் வடிவு 
நிறைவேறியது. வாக்கெடுப்பு நடைபெற்ற சமயத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் 
உறுப்பினர்கள் எவரும் அவையில் இல்லை.     (ந.நி.)
நன்றி:தீக்கதிர் 2.12.2௦14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக