வெள்ளி, 18 ஜூலை, 2014

ரு 39458 கோடி முதலீடு




அடுத்த ஐந்து ஆண்டுகளில்
பீ.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். நிறுவனங்களில் ரூ.39,458 கோடி முதலீடு
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு


புதுடெல்லிபொதுத்துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்களில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.39,458 கோடி முதலீடு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இழப்பை சந்தித்து வரும் இந்த நிறுவனங்களை இதன் வாயிலாக மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.கடன் சுமைஜூன் மாத இறுதி நிலவரப்படி, இந்த இரண்டு நிறுவனங்களின் மொத்த கடன் ரூ.21,208 கோடியாக உள்ளது. வருவாய் குறைந்தது மற்றும் செலவினம் அதிகரித்தது போன்ற காரணங்களால் இந்த நிறுவனங்களுக்கு கடன் சுமை ஏற்பட்டுள்ளது என்று மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


கடந்த 2012 மார்ச் மாதத்தில் இருந்து இந்த இரண்டு நிறுவனங்களின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. 2014 மார்ச் மாதத்தில் பீ.எஸ்.என்.எல்-ன் கடன் ரூ.6,448 கோடியாக உயர்ந்துள்ளது. 2012 மார்ச் மாதத்தில் கடன் ரூ.3,335 கோடியாக இருந்தது. இதே ஆண்டுகளில் எம்.டி.என்.எல். நிறுவனத்தின் கடன் சுமை ரூ.9,648 கோடியிலிருந்து ரூ.14,760 கோடியாக உயர்ந்துள்ளது.இரண்டு நிறுவனங்களின் சந்தைப் பங்களிப்பு குறைந்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டில் மொத்த தொலைபேசி வாடிக்கையாளர்களில் 15 சதவீதத்தினர் பீ.எஸ்.என்.எல். இணைப்புகளை பெற்றிருந்தனர். இது, மே மாதத்தில் 11 சதவீதமாக குறைந்துள்ளது. அதுபோல், எம்.டி.என்.எல். சந்தைப் பங்கு 11 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாக சரிந்துள்ளது.கடும் சரிவுபீ.எஸ்.என்.எல் நிறுவனத்தின் லேண்டுலைன் மற்றும் மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையாக சரிவடைந்துள்ளது. எம்.டி.என்.எல்-ன் மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது.

கருத்துகள் இல்லை: