சனி, 12 ஜூலை, 2014

மத்திய பட்ஜெட் - 2014 : குறி வைப்பது யாரை !- க.சுவாமிநாதன்

 அதிகம் தொடர்ச்சியே . . . மாற்றத்தை விட . . . இது இந்து நாளிதழின் தலையங்கத்தின் தலைப்பு. ஆனால் தலையங்கத்தின் உள்ளடக்கமும் மாற்றத்தை நாடியதாக இல்லை என்பது வேறு கதை.ற பட்ஜெட்டின் முதல் குறியாக இன்சூரன்ஸ் துறை உள்ளது. 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக அந்நிய முதலீடு உயருமென அறிவிக்கப்பட்டுள்ளது. 2000லிருந்து அந்நிய முதலீடுகள் இந்திய இன்சூரன்ஸ் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. டாடாவோடு கைகோர்த்து வந்த அமெரிக்க நிறுவனமான ஏஐஜி இப்போது வெளியேறிவிட்டது. சன்மார் உடன் கைகுலுக்கிய ஆஸ்திரேலிய நிறுவனமான ஏஎம்பியும் குட்பை சொல்லிவிட்டது.

10 ஆண்டுகள் கூட தொழிலில் நிலைக்காத அந்நிய முதலீடுகளை ஊக்குவித்து இந்தியாவில் இன்சூரன்ஸ் பயன் கிடைக்காதவர்களுக்கெல்லாம் அதனை விரிவாக்கப் போவதாக அருண் ஜெட்லி கூறியுள்ளார். இதன் மூலம் ரூ.18,000 கோடி அந்நிய முதலீடு கிடைக்குமென்கிறார்கள். ஆனால் 2000லிருந்து இதுவரையிலான 13 ஆண்டுகளில் வந்திருப்பது 6,300 கோடிகள்தான்.ற பட்ஜெட்டின் இன்னொரு குறி பொதுத்துறை நிறுவனங்கள். நிகர வரி வருமானம் 17 சதவீதம் அதிகரிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அதீத மதிப்பீடு என பட்ஜெட் ஆதரவாளர்களே கூறுகின்றனர்.

அப்படியெனில் வரவுகள் வராவிட்டால் செலவுகளில்தான் கை வைப்பார்கள். திட்டச் செலவினத்திற்காக ஒதுக்கப்பட்டதிலோ, மானியங்களிலோதான் வெட்டு விழக்கூடும். இல்லாவிட்டால் யார் தலைமீது கை வைக்கலாம்!. பொதுத் துறை பங்கு விற்பனை மூலமே இடைவெளியை நிரப்ப முடியும் என்பார்கள். அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ.43,000 கோடி, பொதுத்துறை அல்லாத நிறுவனங்களில் உள்ள அரசுப் பங்குகளில் ரூ.15,000 கோடியை விற்கலாம் என்கிறது பட்ஜெட். ற மூன்றாவது வங்கித் துறையை நோக்கி அம்பை வீசியுள்ளார்கள். பொதுத்துறை வங்கிகள் பங்குத் சந்தையில் மூலதனம் திரட்டுவது ஊக்குவிக்கப்படும் என்கிறார் அருண்ஜெட்லி. 2018க்குள்ளாக பேசல் ஐஐஐ விதிமுறைகளுக்கு ஏற்ப இந்திய வங்கிகளுக்கு 2.8 லட்சம் கோடி கூடுதல் மூலதனம் தேவைப்படுமாம்.

எங்கே போவது! இப்போதே ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, அலகாபாத் வங்கி, தேனா வங்கி ஆகிய வங்கிகளில் அரசின் பங்கு 58 சதவீதம்தான். பரோடா வங்கியிலோ 56 சதவீதம்தான். இருப்பது இவ்வளவுதான். ஆனால் பங்கு விற்பனை தொடருமென்றால் என்ன அர்த்தம்! பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு 51 சதவீதம் இருக்க வேண்டுமென்ற வரம்பும் தளர்த்தப்படும் என்பதுதான்.ற பீடிகையே பட்ஜெட்டைவிட பெரிசாக இருக்கிறது என்று விமர்சித்துள்ளார் பொருளாதார நிபுணர் சி.பி.சந்திரசேகர். பட்ஜெட்டின் பகுதி - ‘அ’ வெறும் அறிவுப்புகள்தான். பகுதி - ஆ பட்ஜெட்டின் விவரங்களை தாங்கியது. ஆனால் ‘அ’ பகுதிக்கான பக்கங்கள் அண்மை ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பட்ஜெட்டுக்கு சம்மந்தமில்லாத அறிவிப்புகள், மிக சிறுசிறு தொகையிலான திட்டங்கள் பூதாகரமாய் அ பகுதியில் காட்டப்படுகின்றன. 28 திட்டங்களுக்கு ரூ.100 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டச் செலவு, திட்டமில்லாத செலவினங்கள் மொத்தம் 18 லட்சம் கோடிகளைத் தொடுகிறது.

அதில் 28 திட்டங்களுக்கான 2800 கோடி ரூபாய் என்பது டீ குடிக்கிற செலவு மாதிரி. இதை கவர்ச்சிகரமாய்க் காட்ட பகுதி - அ-வில் பலூன் ஊதப்படுகிறது.ற பலியாடுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு போவது போல பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய கணக்குகளைப் போட ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு சதவீதம் பங்குகளை ஒவ்வொரு நிறுவனத்திலும் விற்றால் என்ன கிடைக்கும். டீசூழுஊ யின் ஒரு சதவீதம் 3,400 கோடி. கோல் இந்தியா 2,380 கோடி. ஸ்டேட் வங்கி 1923 கோடி. சூகூஞஊ 1,259 கோடி. ஐடீஊ 803 கோடி. க்ஷழநுடு 595 கோடி என பட்டியல் நீள்கிறது.ற நேற்று வரை “பாதுகாத்தவர்” இன்று பாதுகாப்புத்துறையில் அந்நிய முதலீட்டை 49 சதமாக உயர்த்துவது நாட்டின் பாது காப்பிற்கே அச்சுறுத்தல் என்கிறார்.

அவர் யாருமல்ல. மே மாதம் வரை மத்தியபாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தஏ.கே.அந்தோணிதான் இப்படி கூறுகிறார். இம்முடிவு இந்திய பாதுகாப்புத்துறை உற்பத்தி நிறுவனங்களை அந்நிய பன் னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட் டிற்குள் கொண்டு வருமென அலாரம்அடித்துள்ளார். பதவியில் இல்லாவிட் டால்தான் மனசாட்சி இருக்கும் போல.

கருத்துகள் இல்லை: