வியாழன், 31 அக்டோபர், 2013
புதன், 30 அக்டோபர், 2013
வார்த்தை தவறி விட்டாய் தோழா
என்னங்க அண்ணாச்சி
சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
வார்த்தை தவறி விட்டாய் தோழா
நெஞ்சு கொதிக்கிதப்பா !
பண்டிகை என்றாலும் சரிபார்ப்பு தேர்தல் என்றாலும்
முதலில் ஞாபகம் வருவது "போனஸ்"
நமது சங்கத்தை" நையாண்டி " செய்வதற்கு அதிகம்
பயன்படுத்திய வார்த்தை "போனஸ் "
அடைந்தால் " மகாதேவி "
இல்லையேல் "மரணதேவி "
என்ற பாணியில் நங்கள் வந்தால் "போனஸ்"
இல்லை என்றால் "நாசம் "
என்றவர்களுக்கு வீசுவதற்கு "அங்கீகார வாளை " கொடுத்துவிட்டோம் .
நாங்கள் வந்தால் " பாலைகள் சோலைகளாகும் "
"வறட்சி நீங்கி வளம் பெருகும் "
முதல் தேதியில் "முத்தாக GPF பணம் உன் கையில்
பாழாப்போன பாவிகள் "விட்டுகொடுத்த போனஸ் " வரும்
தீப திருநாளில் உன் திருகரங்களில் தவழும் .
அலவன்சுகளை அள்ளித்தர அஞ்சாமல் அலுக்காமல் போராடி
"கோணிப்பை "நிரம்பும்வரை விட மாட்டேன் .
"அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா " போல்
அன்று 5 பைசா வடை
10 பைசா டீ
விண் வெளியில் LTC (அதாங்க விமானத்தில் )
கனவானது போல் இன்று போனசையும் அவ் வரிசையில் சேர்த்து விடாதே
என் தோழா !
தேர்தலுக்காக நீங்கள் வீசிய "போனஸ் " "பூ மராங் ஆயுதம் " இன்று உங்களை தாக்க வருகிறது
காலம் நெருங்கி விட்டது
களம் உங்கள் முன்னே !
எதார்த்தம் புரிகிறது !
தடுமாற்றம் வருகிறது !
நோ ! நோ !
தயக்கத்தை தூக்கி எறி !
1 நாள் வேலை நிறுத்தம் என்ற வாளை தனியாக சுழற்று !
தெரியும் சேதி ! யார் உங்கள் பக்கம் என்று !
உங்கள் வாள் "புதிய வார்ப்புக்கலா "
துரு பிடித்து இத்து போன வாளா என்று !
எதுவும் கிடைத்தால் "நான் தான் என்று மார் தட்டுவது "
கிடைக்காவிட்டால் " ஒற்றுமை இல்லை என்று பீலா விடுவது "
எதுவும் கிடைத்தால் "நான் தான் என்று மார் தட்டுவது "
கிடைக்காவிட்டால் " ஒற்றுமை இல்லை என்று பீலா விடுவது "
கருத்து :- புறம் சொல்வது எளிது
மதுவும் மது சார்ந்த இடமும்!
'மதம் ஒரு அபின்' என்றார் மார்க்ஸ். 'மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்' என்றார் வடலூர் வள்ளலார்.இறை எதிர்ப்பாளர்கள் இன்றும் என்றும் பயன்படுத்தக்கூடிய வாசகங்களாக மேற்கூறியவை அமைந்தன. அந்த சொற்றொடரை இன்றைய காலகட்டத்தில் புகுந்திருக்கும் புதிய நோயான மதுவை உள்ளடக்கி, மது ஒரு மனநோய், மதுவான பேய் பிடியாது இருக்க வேண்டும் என்று திருத்தி எழுத வேண்டியது அவசியமாகிறது.காடும், காடு சார்ந்த நிலமும் முல்லை, மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி, இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை, வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் என ஐந்திணைகளாக பண்டைத் தமிழர் வாழ்ந்த நிலங்கள் அவர்தம் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப பகுக்கப்பட்டன. இன்றோ அவை ஐந்தையும் ஒன்றிணைத்து மதுவும் மதுசார்ந்த இடமும் தமிழகம் எனலாம்.கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில், ஏன் உலகளாவிய அளவில் மிக வேகமாக வளர்ந்த அரசுத்துறை நிறுவனம் எது என கேள்வி எழுமானால், சந்தேகத்திற்கு இடமில்லாமல் டாஸ்மாக் எனலாம். டாஸ்மாக் இணைய தளத்திற்கு (http://tasmac.tn.gov.in/) சென்று பார்த்தால் அரசு மது விற்பனையைக் கையில் எடுத்த பின்னர் டாஸ்மாக்கின் விற்பனைத்திறன் 53.85 சதம் வளர்ந்திருக்கிறது. மதுவின் மூலம் வரும் வருமானம் 115.23 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு குறுகிய காலத்திற்குள் இவ்விதமான அதீத வளர்ச்சியை அடைந்திருக்குமா என்ற கேள்விக்கு எவ்வித ஆதாரங்களும் நமக்கு காணக்கிடைப்பது அரிதினும் அரிது.பெரும்பாலான வெற்றிகரமான நிறுவனங்கள் 10 முதல் 20 சதவித வளர்ச்சியை எட்டவே ஏதேதோ செய்து திக்கு முக்காடுகின்றன. எவராலும் பெறமுடியாத வெற்றியை நாம் பெற்றுவிட்டோம் என அரசு புளகாங்கிதம் அடைய முடியுமா என்றதொரு கேள்வி ஒருபுறம். ஏன் மது விற்பனையைக் குறைக்கக்கூடாது என்ற சமுக ஆர்வலர்களின் கேள்விக்கு “கள்ளச் சாராயம் பெருகிவிடும்” என்றவொரு பதில் மறுபுறம். விற்றவனோ மேனி நிமிர்ந்து வீறு நடை போட, குடித்தவனோ மேனி அழுகி தள்ளாடி சீரழிகிறான். மது எனும் மன நோய் குடிமக்களை கூண்டோடு அழிக்கிறது என உரக்கக் கூறும் நேரமிது. மனிதனைப் பிடித்துவிட்ட மதுவெனும் பேயை விரைந்து அடித்து விரட்ட வேண்டிய காலமிது. மது எனும் அரக்கனை உடனே சூரஹம்சாரம் பண்ண வேண்டிய வேளையிது. நாம் என்ன செய்யப்போகிறோம்?மதுவை மனிதன் குடிக்கிறானா, மனிதனை மது குடிக்கிறதா? இதை இன்னும் நாம் புரிந்து கொள்ள மறுத்தால், எதிர்காலம் புதிர்காலமாகும்... நிகழ்காலம் இருளாகிப் போகும்!. .விரிவாக படிக்க :-Click Here
நன்றி :- தி ஹிந்து
செவ்வாய், 29 அக்டோபர், 2013
மகளிர்பயிலரங்கம்
நவம்பர் 17 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மகளிர்பயிலரங்கம் கோயம்புத்தூரில் பிரதான தொலைபேசி நிலையம் அருகேஉள்ள தாமஸ் மன்றத்தில் நடைபெற உள்ளது.
வரவேற்புரை : தோழியர் K .பங்கஜவல்லி
அறிமுக உரை : தோழியர் P .இந்திரா
காலை அமர்வு
தலைமை : தோழியர் பிரேமா
ஆசிரியர் : தோழியர் கிரிஜா
பொருள் :சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள்
பிற்பகல் அமர்வு
தலைமை : தோழியர் ராஜலட்சுமி
ஆசிரியர் : தோழர் செல்லப்பா , மாநில செயலர்
பொருள் : பொதுத்துறைகள் சந்திக்கும் சவால்கள்
v
புதிய பதவி உயர்வு
திங்கள், 28 அக்டோபர், 2013
ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் பட்டுவாடா
அன்பார்ந்த தோழர்களே !!
நமது மாவட்டத்தில் பணியாற்றிவரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிட நமது இரண்டு சங்கங்களின் சார்பில் (BSNLEU & TNTCWU ) கோரிக்கை வைத்து மாவட்ட நிர்வாகத்துடனும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். நமது கோரிக்கையை தீர்த்துவைப்பதற்கு நமது மாவட்ட நிர்வாகமும் தொழிலாளர் நலத்துறையும் மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக, குறைந்தபட்ச போனஸ் 8.33% அனைவருக்கும் வழங்கிட இன்னோவைட்டி நிறுவனம் ஒத்துகொண்டுள்ளது. அதன்படி முழு நேர ஊழியர்களுக்கு ரூ.3600ம் பகுதி நேர ஊழியர்களுக்கு அவர் அவர் வாங்கும் ஊதியத்தின் அடிப்படையிலும் போனஸ் வழங்கப்படும். 29.10.2013 முதல் தொடங்கி தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அனைத்து பகுதி ஊழியர்களுக்கும் போனஸ் பட்டுவாடா செய்யப்படும். நமது ஒப்பந்த தொழிலாளர்கள் நியாயமான போனஸ் பெற்றிட உரிய நடவடிக்கை மேற்கொண்ட நமது மாவட்ட நிர்வாகத்திற்கும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
கேபிள் பகுதியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நியாயமான போனஸ் பெற்றிட நாம் தொடர் முயற்சி செய்து வருகிறோம். தொழிலாளர் நலத்துறை அதிகாரி (LEO) அவர்கள் தனது முதற்கட்ட விசாரணையை இன்று 28.10.2013 நடத்தி உள்ளார். மேலும் ஒப்பந்ததாரர் திரு.R.சீனுவாசன் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக போனஸ் வழங்க அறிவுறுத்தி உள்ளார். கேபிள் பகுதி ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கும் வரை நமது முயற்சி தொடரும்.
சனி, 26 அக்டோபர், 2013
முகேஷ் அம்பானி
இந்தியாவின் செல்வந்தர்களில் முதலிடத்தை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். இவரது வருவாயில் 2 சதவீதம் இழப்பு ஏற்பட்டபோதும் இந்த முதலிடத்தை இவர் தக்கவைத்துள்ளார். இந்திய செல்வதர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹரூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வரும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டு 2 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது, என்றாலும் அவர் 18.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.ண்டனில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் 15.9 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். திலீப் சங்வி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி 12 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 4-வது இடத்திலும், எச்.சி.எல். நிறுவனத் தலைவர் சிவ் நாடார் 8.6 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். தொழில் அதிபர் குமார் மங்கலம் பிர்லா 8.4 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.பாலிவுட் நடிகரான ஷாருக் கான் 400 மில்லியன் டாலர் சொத்துக்களுடன் இப்பட்டியலில் 114 வது இடத்ததை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கறிஞராக விரும்பும் நரிக்குறவர் மாணவி
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது எச். தொட்டம்பட்டி நரிக் குற வர் காலனி. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள்குடிசை அமைத்து பல ஆண்டுகாலமாக வசித்து வருகின்றனர்.இவர்களது தொழில் ஊசி, பாசிமணி விற்பதும், கிராமங்களில்திருவிழா நடைபெற்றால் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்களும் விற்பது தான். நரிக்குறவர் காலனியைச் நேர்ந்த ராமையா(42) லல்லி (38) தம்பதியினரின் மகன் பிரசாத் (20). பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். அஜித் (15) பத்தாம வகுப்பும் ராகுல்(12)8ம்வகுப்பும் படித்து வருன்றனர். மகள் கல்கி (18) தருமபுரி அரசு கல் லூரியில் பி. காம், (வணிக வியல்) முதலாம் ஆண்டு படித்துவருகிறார்.தருமபுரி மாவட்டத்திலேயே குறவர் சமூகத்தில் கல்லூரி படிப்பிற்கு செல்லும் முதல் மாணவி என்ற பெருமைக் குரியவர் இவர்.தனது விருப்பம் குறித்து தெரிவித்த கல்கி “நான் ஏழ் மையான குடும்பத்தைச்சார்ந்தவள். என் அப்பா, அம்மா ஊசி, பாசிமணி, விற்றுதான் படிக்கவைக் கிறாங்க.என் அம்மாவுக்கு உடம்புசரியில்ல.படிக்க வைக்க பணம் இல்லாத கார ணத்தினால்என் படிப்பை பாதியிலேயே நிறுத்திடச் சொன்னாங்க. கல்யாணம் பண்ணிக்கோன்னுசொன்னாங்க. நான் படிக் கிறேன்னு அடம்பிடிச்சி கல்லூரி சேர்ந்து படிச்சு வர்றேன்.நான் வழக்கறிஞராக ஆசைப்படுறேன். என் சமு தாயத்தில் எல்லோரும் படிக்கனும்னுஆசப்படு றேன். இதற்காக நான் என் சமூக மக்களிடையே விழிப் புணர்வுஏற்படுத்துவேன்” என்று உற்சாகத்துடன் அவர் கூறினார்.நரிக்குறவர் சமூகத்துக்கேமுன் உதாரணமாக இருக்கும் மாணவிக்கு மாவட்ட நிர் வாகமும் அரசும் படிப்பதற்குஉதவி செய்யவேண்டும் என் பதே அனைவரின் எதிர் பார்ப்பாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)