வெள்ளி, 17 ஜூன், 2016

எழுச்சிகரமான மாவட்டச் செயற்குழு

அன்பார்ந்த தோழர்களே!தோழியர்களே!!
நமது மாவட்டச் சங்கத்தின் செயற்குழு திருக்கோயிலூரில் 03-06- 2016 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. அரகண்டநல்லூர் கிளை பொறுப்பேற்று செயற்குழுவை அனைவரும்பாராட்டும்படி நடத்திக் காட்டியது. மேலும் செயற்குழுவைத் தொடர்ந்து அரகண்டநல்லூர் BSNLEU மற்றும் TNTCWU கிளைகளின் 8வது இணைந்த மாநாடும் நடைபெற்றது.
 துவக்க நிகழ்ச்சியாக தேசியக் கொடியை அரகண்டநல்லூர் கிளையின் தோழர்R.ராஜேந்திரன் STM எற்றி வைத்தார். BSNLEU சங்கக்கொடியை நமது மாநிலச் செயலர் தோழர் A.பாபு ராதாகிருஷ்னன் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். பின்னர் தோழர்A.அண்ணாமலை மாவட்டத் தலைவர் தலைமை தாங்க செயற்குழு துவங்கியது. வரவேற்புரைஅரகண்டநல்லூர் கிளைச் செயலர் தோழர் D.பொன்னம்பலம் நிகழ்த்தினார். அஞ்சலி உரையை தோழர் R.V. ஜெயராமன் வாசிக்க அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட நேரம் மௌன அஞ்சலிசெலுத்தினர். பின்னர் தோழர் K.T.சம்பந்தம் மாவட்டச் செய்லர் 7 வது சரிப் பார்ப்பு தேர்தலில் நமது மாவட்டச் சங்கம் ஆற்றிய பணிகள் மற்றும் நமது மாவட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து பரீசலனை அறிக்கை வைத்து விவாதத்தை துவக்கி வைத்தார். கிளைச் செயலர்களும் மாவட்டச்சங்க நிர்வாகிகளும் அறிக்கை மீதான விவாதத்தை நடத்தினர். விவாதத்தின் மீதானதொகுப்புரையை மாவட்டச் செயலர் ஆற்றினார்.
     தோழர் S.முத்துகுமரசாமி மாவட்டச் செயலர் AIBDPA அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் நமது மாநிலச்செயலர்  தோழர் A.பாபு ராதாகிருஷ்னன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் 7வது சரிபார்ப்புத் தேர்தலில் நமது சங்கம் அகில இந்திய அளவில் நாம்  பெற்ற வெற்றி என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்தியாவில் எந்த ஒரு பொதுத் துறையிலும் எந்த ஒரு தொழிற்சங்கமும் 6 வது முறையாக தொடர் வெற்றி பெற்றதில்லை.BSNLEU இத்தகைய வெற்றி பெற்றிருப்பதற்கு காரணம் ஊழியர் பிரச்சினைகளிலும் நிறுவனத்தை லாபகரமாக நடத்துவதகான போராட்டத்தையும் நமது சங்கம் தொடர்ந்து நடத்தி வருவதே காரணமாகும் என்று குறிப்பிட்டார். பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இறுதியாக தோழர்  V.குமார் மாவட்டப் பொருளாளர் அவர்கள் நன்றி கூற செயற்குழு இனிதே நிறைவுற்றது. 
தீர்மானங்கள் 
1) ஜுன் மாத இறுதிக்குள் டெலிகாம் டெக்னீசியன் சுழல் மாற்றலை மாவட்ட நிர்வாகம் அமுல்படுத்திட வேண்டும்.
2) கடலூர் மாவட்டத்தில் BSNL சேவை மேம்படவும்,பழுதில்லா சேவையினை உத்திரவாதப் படுத்திடவும்,மேலும் நமது  நிறுவனத்தின் வருமானம் பெருகிடவும் நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் BSNL ஊழியர் சங்கம் தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கிடும்.
3)நெய்வேலி துணைக் கோட்டத்தில் இந்திராநகர் பகுதியில் திட்டமிடப்பட்ட புதிய தொலைபேசி நிலைய நிர்மாணப் பணிகளை விரைந்து முடித்திட இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
4)ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரதிமாதம் ஏழாம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
5)ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒப்பந்ததாரர் மூலமாக அடையாள அட்டை வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6)கடலூர் CSC உள்ளிட்ட பல பகுதிகளில் வேலை செய்த நாட்களுக்கு மறுக்கப்பட்ட ஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு மேலும் தாமதமின்றி  வழங்கிட வேண்டும்.
7)ஒப்பந்த ஊழியர்களைக் குறைத்தால் நிறுவனம் லாபம் அடைந்துவிடும் என்ற நிர்வாகத்தின் நிலைபாட்டினை BSNL ஊழியர் சங்கம் ஏற்காது. நிரந்தர ஊழியர்கள் கொத்துக்கொத்தாய் பணிஓய்வு பெற்றுவரும் இக்காலகட்டத்தில் நிர்வாகத்தின் இத்தகைய நிலைப்பாடு, சேவையை பெருமளவிற்கு பாதிக்கும்  என்பதை இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
8)மிக நீண்டநாட்களாக தீர்வடையாமல் இருக்கின்ற ஊழியர் பிரச்சனைகளை  மேலும் தாமதமின்றி மாவட்ட நிர்வாகம் தீர்த்து வைக்க வேண்டும் என்று இச்செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.நிவாகத்தின் போக்கில் மாற்றமில்லை எனில் போராட்டப்பாதையை தேர்வு செய்திடும் அதிகாரத்தை மாவட்ட செலகத்திற்கு இச்செயற்குழு வழங்குகிறது.
9)கிளை  மாநாடு நடத்தி ஓராண்டு முடிந்த அனைத்து கிளைசங்கங்களும் ஜுலை 2016 க்குள் கிளைமாநாடுகளை கட்டாயம் நடத்தி முடிக்க வேண்டும். அவ்வாறு நடத்தவில்லை என்றால் மாவட்டச்சங்கமே அதற்கான அறிவிப்பை வெளியிட்டு நடத்தும். 
10)கடலூர் GM(O) மற்றும் கடலூர் EXTL கிளைகள் நிர்வாக அமைப்பின்படி புனரமைக்கப்படும்.   
தோழர்களே மேற்கண்ட முடிவுகளை  முழுமையாக அமுல்படுத்திடு மாறு  தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
                                                                                 தோழமையுள்ள 
                                                                             K.T.சம்பந்தம் 
                                                                               மாவட்ட செயலர் 

கருத்துகள் இல்லை: