அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
22-03-2016 செவ்வாய் அன்று மாலை 6மணியளவில் கடலூர் தொலைபேசி நிலைய வளாகத்தில் BSNLEU 16வது அமைப்பு தினம் மற்றும் 7வது சரிபார்ப்பு தேர்தல் சிறப்புக் கூட்டம் வெகு சிறப்பாகவும் உற்சாகமாகவும் நடைபெற்றது.தோழர் A. அண்ணாமலை மாவட்டத் தலைவர் தலைமையேற்றார். தோழர்R.V.ஜெயராமன் மாவட்ட உதவிச் செயலர் வரவேற்புரையாற்றினார். தோழியர் R.உஷா BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கினைப்பாளர் அஞ்சலியுரையாற்ற, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தோழர் A.பாபுராதாகிருஷ்னன் மாநிலச் செயலர் BSNLEU, தோழர் S.முத்துக்குமரசாமி AIBDPA மாவட்டச் செயலர், தோழர்.S.செல்லப்பா அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் தோழர் P. அபிமன்யு பொதுச் செயலர் BSNLEU,அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் சங்கம் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். BSNL நஷ்டத்தில் இயங்குகிற சூழலிலும் 78.2 சத IDA இணைப்பு, 1.1.2007 பிறகு நியமிக்கப்பட்ட TTA தோழர்களுக்கு அவர்களது ஊதிய இழப்பை சரி செய்தது, JTO Officiatingல் உள்ளவர்களை JTOவாக பணியலமர்த்தியது, கேடர் பெயரில் மாற்றங்களைக் கொண்டு வந்தது ஆகியவற்றைக் குறிப்பிட்டார். BSNL நிறுவனத்தை லாபகரமாக கொண்டு செல்ல FORUM அமைத்து கோரிக்கைகைகளை வைத்துபோராடியது மட்டுமல்லாமல் ஊழியர்களை ஊக்கப்படுத்தி சேவையை மேம்படுத்த திட்டங்களை வகுத்தது, “புன்னகையுடன் சேவை “திட்டத்தை அமல்படுத்தியது ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தார். PLI (போனஸ்) பார்முலாவை உருவாக்குவதில் NFTEயின் எதிர்மறையான அணுகுமுறை குறித்து விமர்சனம் செய்தார். கமிட்டியில் பங்கு வகித்த NFTEயின் தலைவர் தோழர் இஸ்லாம் அகமதுவின் உதவிகரமற்ற போக்கை கடுமையாக சாடினார். நமது சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும் போது நாம் 50 சதத்துக்கும் மேல் பெற்று முதல் சங்கமாக வெற்றி பெறுவது எளிது. எனினும் தோழர்கள் சிறப்பாக பணியாற்றி கூடுதல் வாக்குகளை சேகரிக்கவேண்டும். இம்முறை SNATTA சங்கம் நமது கூட்டணியில் உள்ள சாதகமான சூழலை பயன்படுத்தி நாம் வெற்றி வாகை சூட வேண்டும் என்று குறிப்பிட்டார். முன்னதாக மத்திய சங்க சாதனைகள் குறித்த கையேடு தமிழாக்கம் செய்யப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. தோழர் S.செல்லப்பா புத்தகத்தை வெளியிட நமது பொதுச் செயலர் P.அபிமன்யு முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
கூட்டத்திற்கு விழுப்புரம், திண்டிவனம்,செஞ்சி, கள்ளக்குறிச்சி,நெய்வேலி, விருத்தாசலம் மற்றும் சிதம்பரம் ஆகியகிளைகளிருந்து வேன் வைத்துக் கொண்டும் மற்ற மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பெருமளவில் நமது தோழர்கள் திரளாக வந்திருந்து பங்கேற்றனர். நமது மாவட்டத்தில் இது ஒரு நல்ல துவக்கமாக அமைந்திருந்தது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் தோழர் v.குமார் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவடைந்த்தது.
புகைப்படங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக