மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 11 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும்40-க்கும் மேற்பட்ட தொழில்வாரி சம்மேள னங்களும் இணைந்து, உழைக்கும் வர்க் கத்தின் பொது கோரிக்கைகளை முன் வைத்து, கடந்த 5 ஆண்டுகளாக ஒன்று பட்ட போராட்டங்களை நடத்தி வருகின் றன.1990-ல் நரசிம்மராவ் அரசு துவக்கி வைத்த நவீன தாராளமயக் கொள்கை களுக்கு எதிராக நாடு தழுவிய 16 அகில இந்திய வேலைநிறுத்தங் கள் நடந்துள்ளன. கடைசியாக 2015 செப்.2-ல்நடைபெற்ற பொது வேலைநிறுத்தத் தில் 15 கோடிக்கும் மேற்பட்டோர்பங்கேற்றனர்.இந்த வேலைநிறுத்தத்தி ற்கு முன்னதாக 4 மத்திய அமைச்சர் கள்,சங்கங்களுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், வேலைநிறுத்தத்தில் பி.எம்.எஸ். தவிர மற்ற சங்கங்கள் இறங்கின.செப்.2 வேலைநிறுத்தத்திற்கு பிறகு6 மாதங்கள் கடந்த பின்னரும், மத்திய அரசு தொழிற்சங்கங்களை நேரடி பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை.
மத்திய பட்ஜெட் குறித்த கருத்துக்களை கேட் டறிய மட்டும் சங்கங்களை அழைத்து அரசு பேசியது. சங்கங்கள் சார்பில் கொடுக் கப்பட்ட பொது மகஜரில் உள்ள கருத்துக் கள், கோரிக்கைகள் அருண்ஜெட்லி யின் பட்ஜெட்டில் உதாசீனப்படுத்தப் பட்டுள்ளன. 43,44,45-வது இந்திய தொழிலாளர்மாநாடுகளின் ஏகமனதான பரிந்துரை களான குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.15000/- காண்ட்ராக்ட் தொழிலாளர் களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் மற்றும் அங்கன்வாடி போன்ற அரசின்திட்டப்பணியாளர்களை தொழிலாளர் களாக அங்கீகரித்து,சமூக பாதுகாப்பு வழங்குவது ஆகியவை பட்ஜெட்டில் கணக்கில் கொள்ளப்படவில்லை.தொழிலாளி வர்க்கத்தின் மீது, அவர்தம் உரிமைகள் மீது தொடர் தாக்குதல்களை அரசு ஏவி வருகிறது.இப்பின்னணியில் தான், பி.எம்.எஸ் உட்பட 11 மத்திய சங்க தலைவர்களும்,ஜனவரி 27-ல் தில்லியில்கூடி, மார்ச் 10-ல் மத்திய அரசின் மக்கள்விரோத, தொழிலாளர் விரோத நடவடிக் கைகளை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என முடிவு செய்தனர். மார்ச் 30-ல் தில்லியில் அனைத்து சங்கங்கள்/ சம்மேளனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் அகில இந்திய சிறப்பு மாநாட்டை நடத்தி,அடுத்த கட்டபோராட்ட நடவடிக்கைகளுக்கு திட்டமிடு வது எனவும் முடிவு செய்தனர்.
தொழிற்சங்கங்கள் முன்வைத்த 12 அம்ச கோரிக்கைகளில்,போனஸ் சட்ட வரம்புகள் மட்டும், போனஸ் கணக்கிடு வதற்கான மாத ஊதியம் ரூ.7000 எனவும், போனஸ் பெற தகுதி வரம்பு ரூ.21,000 எனவும் உயர்த்தி அரசாணை பிறப்பித் துள்ளது. முதலாளிகளின் லாபத்திற்கு, சொத்திற்கு எந்த வரம்பும் இல்லை.போனஸ் சட்டத்திற்கு மட்டும் வரம்புகள் ஏன்? என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து எனக் கோரினால்,அரசு பட்ஜெட்டில் மறை முக வரிகள்ரூ.20,600 கோடி உயர்த்தி விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.அதானி முதலாளி பருப்பு பதுக்கலில் ஈடுபட்டதால் உயர்ந்த பருப்பு விலை, 75,000 டன் பதுக்கல் பருப்பு கைப்பற்றப் பட்ட பின்னரும், பழைய விலைக்கு திரும்பவில்லை.
சர்வதேச ரீதியாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவின் (பேரல் விலை115 டாலரிலிருந்து 30 டால ராக) பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. எக்சைஸ் வரிகளை உயர்த்தி அரசே ஆதாயம் அடைந்தது.76 உயிர்காக்கும் மருந்துகளின் இறக்குமதி வரி விதிவிலக்கு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.இதனால் மாற்று இந்திய மருந்துகளும் இல்லாத நிலையில் புற்று நோய், எச்ஐவி நோய் எதிர்ப்பு மருந்துகளின் விலை 22 சதவீதம் உயர்ந்துள்ளது.உணவு தானியங்களின் கொள் முதலை மத்திய அரசு கைவிட்டு மாநில அரசு மேற்கொள்ளலாம் என பட்ஜெட் அறிவிப்பு. இதைத்தான் பன்னாட்டு கம்பெனிகள் எதிர்பார்த்தன. விவசாய விளை பொருட்களின் சந்தையில் நேரடி அந்நிய மூலதனம் நுழைய பட்ஜெட் அனு மதித்துள்ளது.மலிவான விலைக்கு வாங்கி,பற்றாக்குறை உள்ள இடங்களில் கொண்டுபோய் பன்னாட்டு கம்பெனிகள் விற்று கொள்ளை லாபம் அடிக்கும். அரசு கொள்முதலை கைவிட்டால், பொது வினியோகம் கேள்விக்குறியாக மாறும். விவசாய விளைபொருட் களுக்கு, டாக்டர்.சாமிநாதன் கமிஷன் கூறியவாறு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூட்டி கொள்முதல் விலை தீர்மானிக்கப்படவேண்டும் என்பதை அரசு ஏற்கவில்லை.விவசாய இடு பொருட்களின் விலைகளும் குறைய வில்லை.ஆனால் விவசாயிகளின் வருமா னம் 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என வாய்ச்சவடால் அடிக்கிறது மோடி அரசு!ஹரியானாவில் உள்ள மாருதி கம்பெனி யில் மொத்த காண்ட்ராக்ட் தொழிலாளர் களும் நிறுத்தப்பட்டு விட்டனர்.அதற்கு பதிலாக தற்காலிக ஊழியர் என நிர்வாகமே நேரடியாக நியமித்து 7 மாதம் வேலை வாங்கிவிட்டு நிறுத்திவிடுவார்கள். 5 மாதஇடைவேளைக்குப் பிறகு திரும்பவும் 7 மாதம் தற்காலிக ஊழியர் ஆக்குவார்களாம்.சங்கம் அமைத்து போராடுவது குற்றமா?47 மாருதி தொழிலாளர்கள் இன்னமும் 3ஆண்டுகளாக ஜாமீனில் வெளிவரமுடியா மல், பொய்வழக்கில் சிறையில் வைக்கப் பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்தால் அந்நிய மூலதனம் வராதாம்என முதலாளித்துவ அரசின் நீதிமன்றம்தேசவிரோத நிலை எடுத்து வருகிறது.
கோவை பிரிக்காலில் எட்டு தொழிலாளர் களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங் கப்பட்டது கொடூரமானது.கிராமப்புற 100நாள் வேலை உறுதி யளிப்பு திட்டத்திற்கு2010-11 பட்ஜெட் டில் ஒதுக்கிய அளவு இன்றைய ரூபாய் மதிப்பீட்டில் ரூ.60,000 கோடி ஆகும். ஆனால் 2016 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டி ருப்பதோ வெறும் ரூ.38,000 கோடி மட்டு மே. 100 நாள் வேலை யாருக்கும் இல்லை. திரிபுராவில் மட்டும் 90 நாள் வேலை உத்தரவாதம்.நாடு தழுவிய சராசரி வேலைநாட்கள் வெறும் 38 நாட்கள் மட்டுமே.தொழிலாளர் சட்டங்களை கறாராக அமலாக்கு என்றால், புதிதாக துவங்கும் ஆலைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு 9 பிரதான தொழிலாளர் சட்டங்களை அம லாக்க விதிவிலக்கு நிர்வாக உத்தரவு மூலம் வழங்கப்படுகிறது. தொழிற்சாலை ஆய்வா ளர் இந்த ஆலைகளை ஆய்வு செய்ய மாட்டார்களாம்!ரூ.56,500 கோடிக்கு பொதுத்துறை பங்கு விற்பனை -பட்ஜெட் இலக்கு! பெல், ஐ.ஓ.சி., போன்ற லாபம் ஈட்டக் கூடிய நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களின் மீது தனியார் கட்டுப் பாட்டை உறுதிப்படுத்தும் அளவு பங்கு விற்பனை செய்யப்படுமாம்! நேருவால் ‘நவீன கோவில்கள்’ என வர்ணிக்கப்பட்ட பொதுத்துறை கம்பெனிகளை இடித்து விட்டு, ராமருக்கு கோவில் கட்டப் போகி றார்களாம் இந்த நவீன தேசபக்தர்கள்.ரயில்வேக்கு சொந்தமான காலி இடங் களை விற்கப்போகிறார்களாம்!முறைசாரா உடலுழைப்பு தொழிலா ளர் 43 கோடி பேருக்கான சமூக பாது காப்புச் சட்டத்தை அமலாக்க எந்த ஒதுக்கீ டும் பட்ஜெட்டில் இல்லை.
வேலைக் கோ, சமூகபாதுகாப்பிற்கோ உத்தரவாத மின்றி அவதிப்படும் இவர்களுக்கு தொழி லாளர்களின் எந்த பங்களிப்பும் இன்றி, மாத ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு கிஞ்சித்தும் செவிசாய்க்கவில்லை.ரூ.42 முதல் ரூ.1454 வரை மாதா மாதம் பங்களிப்பு செலுத்தினால், 18 வயது முதல் 40 வயது வரை உள்ள தொழிலாளர் அடல் பென்சன் திட்டத்தில் இணைந்து, 60வயதில் ரூ.1000 முதல் ரூ.5000 வரை பென்சன் பெறலாம் என்பதற்கு மக்களின் வரிப்பணத்தில் வண்ண வண்ண விளம் பரங்களை அரசு செய்கிறது. பஸ் வழித்தடங்களுக்கு பெர்மிட் வழங்கும் முறை ரத்து செய்து, தனியார் பஸ்களை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. பஸ் கட்டணம் இனி எகிறும்! சாலை போக்குவரத்துப் பாது காப்பு மசோதா முற்றிலும் தொழிலாளர் களுக்கும் மக்களுக்கும் எதிரானது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ரயில்வே தொழிலாளர்களுக்கு 7வது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகள் வந்துள் ளன.
குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.26,000க்கு பதில் ரூ.18,000 எனவும்,நடைமுறையில் உள்ள பல அலவன்ஸ்கள் திரும்ப பெறும் வகையிலும் பரிந்துரைகள் தொழிலாளர் நலனுக்கு விரோதமானவை.நேரடி வரிகள் ரூ.1060 கோடி குறைப்பு! கருப்புப் பணம்,கள்ளப்பணம், கணக்கில்வராத பணத்தை 45 சதவீத வரி செலுத்தி வெள்ளையாக்கிக் கொள்ள வாய்ப்பு! வழக்கம்போல் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை மழை! ‘மார்ச்10-ல்’ அகில இந்திய கண்டன நாள்’ மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்!
கட்டுரையாளர்:சிஐடியு மாநில நிர்வாகி நன்றி தீக்கதிர் 09.03.2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக